1 | லேவியின் புதல்வர்: கேர்சோன், கோகாத்து, மெராரி. |
2 | கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல். |
3 | அம்ராமின் புதல்வர்: ஆரோன், மோசே, மிரியாம். |
4 | ஆரோனின் புதல்வர்: நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர். எலயாசருக்குப் பினகாசு பிறந்தார்: பினகாசுக்கு அபிசூவா பிறந்தார். |
5 | அபிசூவாவுக்குக் புக்கி பிறந்தார்: புக்கிக்கு உசீ பிறந்தார். |
6 | உசீக்கு செரகியா பிறந்தார்: செரகியாவுக்கு மெரயோத்து பிறந்தார். |
7 | மெரயோத்துக்கு அமரியா பிறந்தார்: அமரியாவுக்கு அகித்தூபு பிறந்தார்: |
8 | அகித்தூபுக்குச் சாதோக்கு பிறந்தார்: சாதோக்குக்கு அகிமாசு பிறந்தார். |
9 | அகிமாசுக்கு அசரியா பிறந்தார்:அசரியாவுக்கு யோகனான் பிறந்தார். |
10 | யோகனானுக்கு அசரியா பிறந்தார்: சாலமோன் எருசலேமில் கட்டிய திருக்கோவிலில் குருவாகப் பணி புரிந்தவர் இவரே. |
11 | அசரியாவுக்கு அமரியா பிறந்தார்: அமரியாவுக்கு அகித்தூபு பிறந்தார். |
12 | அகித்தூபுக்குச் சாதோக்கு பிறந்தார்: சாதோக்குக்கு சல்லூம் பிறந்தார். |
13 | சல்லூமுக்கு இல்க்கியா பிறந்தார்: இல்க்கியாவுக்கு அசரியா பிறந்தார். |
14 | அசரியாவுக்குச் செராயா பிறந்தார்: செராயாவுக்கு யோசதாக்கு பிறந்தார். |
15 | ஆண்டவர் நெபுகத்னேசரின் கைவன்மை கொண்டு எருசலேமையும் யூதாவையும் சிறைப்படுத்தியபோது யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டார். |
16 | லேவியின் புதல்வர்: கேர்சோம், கோகாத்து, மெராரி, |
17 | கேர்சோமின் புதல்வர் பெயர்கள் இவையே: லிப்னி, சிமயி, |
18 | கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல். |
19 | மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி: இவர்கள் அவர்களின் மூதாதை வழி வந்த லேவியர் குடும்பங்கள். |
20 | கேர்சோமின் புதல்வர்: லிப்னி: அவர் மகன் யாகத்து: அவர் மகன் சிம்மா: |
21 | அவர் மகன் யோவாகு: அவர் மகன் இத்தோ: அவர் மகன் செராகு: அவர் மகன் எயத்தராய். |
22 | கோகாத்தின் புதல்வர்: அம்மினதாபு: அவர் மகன் கோராகு: அவர் மகன் அசீர்: |
23 | அவர் மகன் எல்கானா: அவர் மகன் எபியசாபு: அவர் மகன் அசீர்: |
24 | அவர் மகன் தாகத்து: அவர் மகன் ஊரியேல்: அவர் மகன் உசியா: அவர் மகன் சாவூல். |
25 | எல்கானாவின் புதல்வர்: அமாசாய், அகிமோத்து, |
26 | அவர் மகன் எல்கானா: அவர் மகன் சோப்பாய்: அவர் மகன் நாகத்து, |
27 | அவர் மகன் எலியாபு: அவர் மகன் எரோகாம்: அவர் மகன் எல்கானா. |
28 | சாமுவேலின் புதல்வர்: தலை மகன் யோவேல், இரண்டாமவர் அபியா. |
29 | மெராரியின் புதல்வர்: மக்லி: அவர் மகன் லிப்னி: அவர் மகன் சிமயி: அவர் மகன் உசா, |
30 | அவர் மகன் சிமயா, அவர் மகன் அகியா:அவர் மகன் அசாயா. |
31 | ஆண்டவரின் இல்லத்தில் பேழை தங்கியிருந்தபோது அங்கே திருப்பாடல் பணிக்கெனத் தாவீது நியமித்திருந்தவர்கள் இவர்களே. |
32 | எருசலேமில் சாலமோன் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டியெழுப்பும் வரை, அவர்கள் சந்திப்புக்கூடாரத் திருஉறைவிடத்தின்முன் திருப்பாடல்கள் பாடிப் பணியாற்றினார்கள். அவர்கள் தங்கள் பணிமுறையின்படி ஊழியம் செய்து வந்தார்கள். |
33 | அங்குத் திருப்பணியாற்றியவர்களும் அவர்களின் புதல்வரும் இவர்களே: கோகாத்திய மக்களுள் ஏமான் என்னும் பாடகர்: அவர் யோவேலின் மகன்:அவர் சாமவேலின் மகன்: |
34 | அவர் எல்கானாவின் மகன்: அவர் எரோகாமின் மகன்: அவர் எலியேலின் மகன்: அவர் தோவாகின் மகன்: |
35 | அவர் சூப்பின் மகன்: அவர் எல்கானாவின் மகன்: அவர் மாகாத்தின் மகன்: அவர் அமாசாயின் மகன்: |
36 | அவர் எல்கானாவின் மகன்: அவர் யோவேலின் மகன்: அவர் அசரியாவின் மகன்: அவர் செப்பனியாவின் மகன்: |
37 | அவர் தாகத்தின் மகன்: அவர் அசீரின் மகன், அவர் எபியாசாபின் மகன்: அவர் கோராகின் மகன்: |
38 | அவர் இஸ்காரின் மகன், அவர் கோகாத்தின் மகன்: அவர் லேவியின் மகன்: அவர் இஸ்ரயேலின் மகன். |
39 | ஏமானின் வலப்புறம் பணியாற்றியவர் அவர் சகோதரர் ஆசாபு. ஆசாபு பெரக்கியாவின் மகன்: அவர் சிமயாவின் மகன். |
40 | அவர் மிக்கேலின் மகன்: அவர் பாசேயாவின் மகன்: அவர் மல்கியாவின் மகன்: |
41 | அவர் எத்னியின் மகன்: அவர் செராகின் மகன்: அவர் அதாயாவின் மகன்: |
42 | அவர் ஏத்தானின் மகன்: அவர் சிம்மாவின் மகன்: அவர் சிமயியின் மகன்: |
43 | அவர் யாகாத்தின் மகன்: அவர் கேர்சோமின் மகன், அவர் லேவியின் மகன். |
44 | ஏமானின் இடப்புறம் பணியாற்றிய அவர்களின் சகோதரரான மெராரியின் புதல்வர்: அவர் ஏத்தான், அவர் கீசியின் மகன்: அவர் அப்தியின் மகன்:அவர் மல்லூக்கின் மகன், |
45 | அவர் அசபியாவின் மகன்: அவர் அமட்சியாவின் மகன், அவர் இல்க்கியாவின் மகன்: |
46 | அவர் அம்சியின் மகன்: அவர் பானியின் மகன்: அவர் செமேரின் மகன்: |
47 | அவர் மக்லியின் மகன்: அவர் மூசியின் மகன்: அவர் மெராரியின் மகன்: அவர் லேவியின் மகன். |
48 | அவர்கள் சகோதரராகிய பிற லேவியர் கடவுளது இல்லத்தின் திருஉறைவிடத்து அனைத்துப் பணிகளுக்குமென்று நியமிக்கப்பட்டனர். |
49 | ஆரோனும் அவர் புதல்வரும் எரி பலி பீடத்தில் பலியிட்டு, தூபப் பீடத்தில் தூபம் காட்டினர். அவர்கள் திருத்தூயகத் தொடர்பான அனைத்துத் திருப்பணிகளையும், செய்து ஆண்டவரின் ஊழியன் மோசேயின் கட்டளைப்படி இஸ்ரயேலுக்கெனப் பாவம் போக்கும் பலி செலுத்தி வந்தார்கள். |
50 | ஆரோனின் புதல்வர் இவர்களே: பினகாசின் மகன் எலயாசர்: அவர் மகன் அபிசூவா: |
51 | அவர் மகன் புக்கி: அவர் மகன் உசி: அவர் மகன் செரகியா: |
52 | அவர் மகன் மெரயோத்து: அவர் மகன் அமரியா: அவர் மகன் அகித்தூபு |
53 | அவர் மகன் சாதோக்கு, அவர் மகன் அகிமாசு. |
54 | லேவியரின் எல்லைகளுக்குள் விழுமாறு குறிக்கப்பட்ட குடியிருப்புகள் இவையே: ஆரோன் புதல்வருள் கோகாத்தியக் குடும்பத்தாருக்கு முதல் சீட்டு விழுந்தது. |
55 | அதன்படி யூதா நாட்டிலுள்ள எபிரோனும் அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் அளிக்கப்பட்டன. |
56 | அந்நகரின் வயல்வெளிகளும் அதன் சிற்றூர்களும் எபுன்னேயின் மகன் காலேபுக்கு அளிக்கப்பட்டன. |
57 | ஆரோனின் புதல்வருக்கு வழங்கப்பட்ட புகலிடங்கள்: எபிரோன், லிப்னா, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள்: யத்தீர், எஸ்தமோவா, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள்: |
58 | ஈலேன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: தெபீர் அதன் மேய்ச்சல் நிலங்கள்: |
59 | ஆசான், அதன் மேய்ச்சல் நிலங்கள்: பெத்-செமேசு அதன் மேய்ச்சல் நிலங்கள். |
60 | பென்யமின் குலத்தினின்று கிடைத்தவை: கேபா, அதன் மேய்ச்சல் நிலங்கள்: ஆலமேத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்: அனத்தோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள். இந்த நகர்கள் பதின்மூன்றும் அவர்கள் குடும்பங்கள் வாரியாகக் கோகாத்தியருக்கு வழங்கப்பட்டன. |
61 | எஞ்சியருந்த கோகாத்தின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக மனாசேயின் பாதிக்குலத்தின் பத்து நகர்கள் சீட்டுக் குலுக்கி வழங்கப்பட்டன. |
62 | கேர்சோம் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக இசக்கார், ஆசேர், நப்தலி பாசானிலிருக்கும் மனாசே ஆகிய குலங்களிலிருந்து கிடைத்த நகர்கள் பதின்மூன்று. |
63 | மெராரியின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக ரூபன், காத்து, செபுலோன் ஆகிய குலங்களிலிருந்து விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு நகர்கள் வழங்கப்பட்டன. |
64 | இவ்வாறு இஸ்ரயேல் மக்கள் லேவியருக்கு நகர்களையும் மேய்ச்சல் நிலங்களையும் வழங்கினர். |
65 | இவ்வாறு அவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட நகர்களை குலுக்கல் முறையில் இஸ்ரயேலுக்கு யூதா, சிமியோன், பென்யமின் ஆகிய குலங்களிலிருந்து லேவியருக்கு வழங்கினார்கள். |
66 | கோகாத்தின் புதல்வர்களுள் இன்னும் சில குடும்பங்களுக்கு எப்ராயிம் குலத்தின் எல்லைகளிலிருந்து நகர்கள் கிடைத்தன. |
67 | அவர்களுக்கு அளிக்கப்பட்ட புகலிட நகர்கள்: எப்ராயிம் மலைப்பகுதியில் இருக்கும் செக்கேம், அதன் மேய்ச்சல் நிலங்கள்: கெசேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்: |
68 | யோக்மயாம், அதன் மேய்ச்சல் நிலங்கள்: பெத்கோரோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: |
69 | அய்யலோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: கத்ரிம்மோன் அதன் மேய்ச்சல் நிலங்கள், |
70 | மனாசேயின் பாதிக்குலத்தில் ஆனேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்: பிலயாம், அதன் மேய்ச்சல் நிலங்கள்: இவையே கோகாத்தின் புதல்வரின் எஞ்சிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டவை. |
71 | கேர்சோம் புதல்வருக்கு மனாசே பாதிக்குலக் குடும்பங்களினின்று கிடைத்தவை: பாசானிலுள்ள கோலான், அதன் மேய்ச்சல் நிலங்கள்: அஸ்தரோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள். |
72 | இசக்கார் குலத்திலிருந்து கிடைத்தவை: கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்: தபராத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள். |
73 | இராமோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்: ஆனேம் அதன் மேய்ச்சல் நிலங்கள். |
74 | ஆசேர் குலத்திலிருந்து கிடைத்தவை: மாசால், அதன் மேய்ச்சல் நிலங்கள்: அப்தோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: |
75 | உக்கோக்கு, அதன் மேய்ச்சல் நிலங்கள்: இரகோபு, அதன் மேய்ச்சல் நிலங்கள். |
76 | நப்தலி குலத்திலிருந்து கிடைத்தவை: கலிலேயாவிலிருக்கும் கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்: அம்மோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: கிரித்தாயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள். |
77 | மெராரியின் எஞ்சிய புதல்வருக்குச் செபுலோன் குலத்திலிருந்து கிடைத்தவை: ரிம்மோனோ, அதன் மேய்ச்சல் நிலங்கள்: தாபோர், அதன் மேய்ச்சல் நிலங்கள். |
78 | எரிகோவுக்கு அப்பால், யோர்தானுக்குக் கிழக்கே ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை: பாலை நிலத்திலுள்ள பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்: யாகுசா, அதன் மேய்ச்சல் நிலங்கள்: |
79 | கெதமோத்து அதன் மேய்ச்சல் நிலங்கள்: மேபாத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள். |
80 | காத்து குலத்திலிருந்து கிடைத்தவை: கிலயாதிலுள்ள இராமோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்: மகனயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள்: |
81 | கெஸ்போன், அதன் மேய்ச்சல் நிலங்கள்: யாசேர், அதன் மேய்ச்சல் நிலங்கள். |