1 | இசக்காரின் புதல்வர்: தோலா, பூவா, யாசபு, சிம்ரோன் என்ற நால்வர். |
2 | தோலாவின் புதல்வர்: உசீ, இரபாயா, எரியேல், யாகுமாய், இபிசாம், செமுவேல். தோலாவுக்குப் பிறந்த அவர்கள் தங்கள் மூதாதை வீட்டுத் தலைவர்களாகவும், தங்கள் தலைமுறைகளில் வலிமைமிகு வீரர்களாயும் திகழ்ந்தார்கள். தாவீதின் நாள்களில் அவர்களின் எண்ணிக்கை இருபத்தி இரண்டாயிரத்து ஐநூறாக இருந்தது. |
3 | உசீயின் புதல்வர்: இஸ்ரகியா, அவர்தம் புதல்வர்களான மிகேல், ஒபதியா, யோவேல், இசியா என்னும் ஐவர். அவர்கள் யாவரும் தலைவர்களாய் இருந்தனர். |
4 | அவர்கள் மூதாதையர் குடும்பங்களின் தலைமுறை அட்டவணைப்படி போர் அணிகளில் முப்பத்தாறாயிரம் வீரர்கள் இருந்தனர். ஏனெனில் அவர்களுக்கு மனைவியரும் புதல்வரும் ஏராளமாய் இருந்தனர். |
5 | இசக்காரின் அனைத்துக் குடும்பங்களின் உறவின்முறையில் வலிமைமிகு வீரர்கள் யாவரும் வழிமரபு அட்டவணையின்படி எண்பத்தேழாயிரம் பேர். |
6 | பென்யிமினின் புதல்வர்: பேலா, பெக்கேர், எதியேல் என்னும் மூவர். |
7 | பேலாவின் புதல்வர்: எட்சபோன், உசீ, உசியேல், எரிமோத்து, ஈரி என்னும் ஐவர். அவர்கள் தங்கள் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாயும் வலிமைமிகு வீரர்களாயும் திகழ்ந்தனர். அவர்களுள் வழமரபு அட்டவணையில் குறிக்கப்பட்டோர் இருபத்து இரண்டாயிரத்து முப்பத்து நான்கு. |
8 | பெக்கேரின் புதல்வர்: செமிரா, யோவாசு, எலியேசர், எல்யோவனாய், ஓம்ரி, எரேமோத்து, அபியா, அனத்தோத்து, அலமேத்து. இவர்கள் யாவரும் பெக்கேரின் புதல்வர். |
9 | அவர்களின் தலைமுறை அட்டவணைப்படி தங்கள் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகவும் வலிமைமிகு வீரர்களாகவும் திகழ்ந்தோரின் எண்ணிக்கை இருபத்து இரண்டாயிரத்து இருநூறு. |
10 | எதியேலின் புதல்வர்: பில்கான்: பில்கானின் புதல்வர்: எயூசு, பென்யமின், ஏகூது, கெனானா, சேத்தான், தர்சீசு, அகிசாகர். |
11 | எதியேலின் புதல்வரான இவர்கள் யாவரும் தம் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகவும், போருக்குச் செல்லத்தக்க வலிமைமிகு வீரர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை பதினேழாயிரத்து இருநூறு. |
12 | சுப்பிமும் குப்பிமும் ஈரின் புதல்வர்கள்: ஊசிம் அகேரின் புதல்வர். |
13 | நப்தலி புதல்வர்: யாட்சியேல், கூனி, எட்சேர், சல்லூம்: இவர்கள் பில்காவின் பேரப்பிள்ளைகள். |
14 | மனாசேயின் புதல்வர்: அவரின் அரமேயமறுமனைவி பெற்றெடுத்த அஸ்ரியேல், கிலயாதின் மூதாமையான மாக்கீர். |
15 | குப்பிம், சுப்பிம் ஆகியோருக்கு மாக்கிர் பெண்களை மணமுடித்து வைத்தார். அவர் சகோதரியின் பெயர் மாக்கா. மனாசேயின் இரண்டாம் புதல்வர் பெயர் செலோபுகாது. சேலோபுகாதிற்குப் புதல்வியர் இருந்தனர். |
16 | மாக்கிரின் மனைவி மாக்கா ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்து அதற்குப் பெரேட்சு என்று பெயரிட்டார். அவர் சகோதரர் பெயர் செரேசு. பெரேட்சியின் புதல்வர்: ஊலாம், இரக்கேம். |
17 | ஊலாமின் புதல்வர்: பெதான். இவர்கள் மனாசே மகன் மாக்கிருக்குப் பிறந்த கிலயாதின் புதல்வர். |
18 | கிலயாதின் சகோதரி அம்மோலக்கேத்து பெற்றெடுத்தவர்: இஸ்கோது, அபியேசர், மக்லா. |
19 | செமிதாவின் புதல்வர்: அகியான், செக்கேம், இலிக்கி, அனியாம். |
20 | எப்ராயிமின் புதல்வர்: சுத்தெலாகு: அவர் மகன் பெரேது: அவர் மகன் தகாத்து: அவர் மகன் எலயாதா: அவர் மகன் தகாத்து: |
21 | அவர் மகன் சாபாது: அவர் மகன் சுத்தெலாகு: மற்றும் எட்சேர், எலயாது. இவர்கள் கால்நடைகளைக் கவர்ந்து கொள்ளச் சென்றபொழுது அந்நாட்டில் பிறந்து வாழ்ந்த காத்தின் புதல்வரால் கொல்லப்பட்டார்கள். |
22 | அவர்களின் தந்தை எப்ராயிம் பல நாள்களாகப் புலம்பியழுதார். அவர்களின் சகோதரர் அவருக்கு ஆறுதல் கூற வந்தனர். |
23 | எப்ராயிம் தம் மனைவியுடன் உறவு கொண்டார். அவர் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார். அவர் அவருக்குப் பெரியா என்று பெயரிட்டார். ஏனெனில் தீங்கு அவர் வீட்டை வந்தடைந்தது. |
24 | எப்ராயிமின் மகள் செயேரா, கீழ்-மேல் பெத்கோரோனையும் உசேன்செயேராவையும் கட்டியெழுப்பினார். |
25 | எப்ராயிமின் மற்றப் புதல்வர்: அவர் மகன் இரபாகு: மற்றும் இரசேபு: அவர் மகன் தெலாகு: அவர் மகன் தாகான்: |
26 | அவர் மகன் லாதான்: அவர் மகன் அம்மிகூது: அவர் மகன் எலிசாமா: |
27 | அவர் மகன் நூன்: அவர் மகன் யோசுவா. |
28 | அவர்கள் உடைமைப் பகுதிகளும் குடியிருப்புகளும் இவையே: பெத்தேல், அதன் சிற்றூர்கள்: கீழ்ப்புறத்தில் நாரான்: மேற்புறத்தில் கெசேர், அதன் சிற்றூர்கள்: செக்கேம், அதன் சிற்றூர்கள்: அய்யா, அதன் சிற்றூர்கள். |
29 | மனாசேயின் புதல்வரை அடுத்துள்ள பகுதிகளில் பெத்சான், அதன் சிற்றூர்கள்: தானாக்கு, அதன் சிற்றூர்கள்: மெகிதோ, அதன் சிற்றூர்கள்: தோர், அதன் சிற்றூர்கள். இவற்றில் இஸ்ரயேலின் மகன் யோசேப்பின் புதல்வர் வாழ்ந்து வந்தனர். |
30 | ஆசேரின் புதல்வர்: இம்னா, இஸ்வா, இஸ்வீ, பெரியா: அவர்களின் சகோதரி செராகு. |
31 | பெரியாவின் புதல்வர்: எபேர், மல்கியேல், அவர் பிர்சாவித்தின் மூதாதை. |
32 | ஏபேருக்குப் பிறந்தோர்: யாப்லேற்று, சோமேர், ஓதாம், அவர்களின் சகோதரி சூவா. |
33 | யாப்லேற்றின் புதல்வர்: பாசாக்கு, பிம்கால், அஸ்வாத்து: இவர்கள் யாப்லேற்றின் புதல்வர். |
34 | செமேரின் புதல்வர்: அகீ, ரோககா, எகுபா, ஆராம். |
35 | அவர் சகோதரர் ஏலேமின் புதல்வர்: சோப்பாகு, இம்னா, சேலேசு, ஆமால். |
36 | சோப்பாகின் புதல்வர்: சூவாகு, கர்னப்பேர், சூவால், பேரி, இம்ரா. |
37 | பெட்சேர், ஓது, சம்மா, சில்சா, இத்ரான், பெயேரா. |
38 | எத்தேரின் புதல்வர்: எபுன்னே, பிஸ்பா, அரா. |
39 | உல்லாவின் புதல்வர்: ஆராகு, அன்னியேல், ரிட்சியா. |
40 | ஆசேர் புதல்வருள் இவர்கள் யாவரும் தங்கள் மூதாதையர், வீட்டுத் தலைவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வலிமைமிகு வீரர்களும் தலைவர்களுள் முதல்வருமாய் இருந்தார்கள். அவர்கள் தலைமுறை அட்டவணைகளில் போருக்குச் செல்லத்தக்க படை வீரரின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம். |