1 | ஆரோனின் புதல்வர்தம் பிரிவுகளாவன: ஆரோனின் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர். |
2 | நாதாபும், அபிகூவும் புதல்வரின்றி அவர்கள் தந்தைக்கு முன்னரே இறந்து போயினர். எலயாசரும், இத்தாமரும் குருக்களாகப் பணி செய்தனர். |
3 | தாவீது எலயாசரின் குடும்பத்தைச் சார்ந்த சாதோக்கு, இத்தாமர் குடும்பத்தைச் சார்ந்த அகிமெலக்கு ஆகியோரின் துணைகொண்டு பதவிவாரியாகவும் பணிவாரியாகவும் அவர்களில் பிரிவுகளை ஏற்படுத்தினார். |
4 | இத்தாமரின் குடும்பத்தை விட எலயாசரின் குடும்பத்தில் மிகுதியான தலைவர்களைக் கொண்டிருந்தது. எனவே எலயாசரின் புதல்வரில் பதினாறு பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும், இத்தாமரின் புதல்வரிலும் எட்டுப்பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். |
5 | எலயாசர், இத்தாமர் ஆகிய இரு குடும்பங்களின் புதல்வரிலும் திருத்தலத் தலைவர்களும் இறைப்பணித் தலைவர்களும் இருந்தமையால், சீட்டுக் குலுக்கல் முறையில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. |
6 | நெத்தனியேலின் மகனும் லேவியனும் எழுத்தனுமான செமாயா, அரசர் அலுவலர்கள், குருக்களாகிய சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் முன்னிலையில் பதிவுசெய்தான். எலயாசரின் குடும்பத்திற்கும், இத்தாமரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது. |
7 | சீட்டு விழுந்த முறை: முதல் சீட்டு யோயாரிபுக்கு: இரண்டாம் சீட்டு எதாயாவுக்கு: |
8 | மூன்றாவது ஆரிமுக்கு: நான்காவது செயோரிமுக்கு: |
9 | ஐந்தாவது மல்கியாவுக்கு: ஆறாவது மியாமினுக்கு: |
10 | ஏழாவது அக்கோட்சுக்கு: எட்டாவது அபியாவுக்கு: |
11 | ஒன்பதாவது ஏசுவாவுக்கு: பத்தாவது செக்கனியாவுக்கு: |
12 | பதினொன்றாவது எலியாசிபுக்கு: பன்னிரண்டாவது யாக்கிமுக்கு: |
13 | பதின்மூன்றாவது உப்பாவுக்கு: பதினான்காவது எசேபயாவுக்கு: |
14 | பதினைந்தாவது பில்காவுக்கு: பதினாறாவது இம்மேருக்கு: |
15 | பதினேழாவது ஏசீருக்கு: பதினெட்டாவது அப்பிசேசுக்கு: |
16 | பத்தொன்பதாவது பெத்தகியாவுக்கு: இருபதாவது எசக்கேலுக்கு: |
17 | இருபத்தொன்றாவது யாக்கினுக்கு: இருபத்திரண்டாவது காமுலுக்கு: |
18 | இருபத்து மூன்றாவது தெலாயாவுக்கு: இருபத்து நான்காவது மாசியாவுக்கு. |
19 | இவர்களே தங்கள் மூதாதையாகிய ஆரோன் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தந்த விதிமுறைகளை, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கேற்ற வரிசை முறைப்படி ஆண்டவரின் இல்லம் சென்று, அங்கு நிறைவேற்றுவதற்காகப் பதிவு செய்யப்பட்டவர்கள். |
20 | எஞ்சிய லேவியின் மக்களுள், அம்ராமின் புதல்வருள் சூபாவேல்: சூபாவேலின் புதல்வருள் எகதியா: |
21 | இரகபியாவின் புதல்வர்களுள் இசியா தலைவராய் இருந்தார். |
22 | இசுராகியரில் செலமோத்தும், செலமோத்தின் புதல்வருள் யாகாத்தும்: |
23 | இவருடைய புதல்வருள் முதல் மகன் எரிய்யா, இரண்டாம் மகன் அமரியா, மூன்றாம் மகன் யாகசியேல், நான்காவது மகன் எகமயாம். |
24 | உசியேலின் புதல்வர், மீக்கா: மீக்காவின் புதல்வர் சாமீர்: |
25 | மீக்காவின் சகோதரர் இசியா: இசியாவின் புதல்வருள் செக்கரியா: |
26 | மெராரியின் புதல்வர் மக்லி, மூசி: மற்றும் அவர் மகன் யகசியா: |
27 | மெராரியின் மகனான யகசியாவின் புதல்வர்கள்: சோகாம், சக்கூர், இப்ரி. |
28 | மக்லியின் புதல்வர்: புதல்வர்கள் இல்லாத எலயாசர்: |
29 | மற்றும் கீசு, கீசின் புதல்வர் எரகுமவேல். |
30 | மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரிமோத்து தங்கள் மூதாதையர் வீட்டு லேவியரின் புதல்வர் இவர்களே. |
31 | இவர்களும், தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் புதல்வர் செய்ததுபோல, தாவீது அரசர், சாதோக்கு, அகிமலேக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர், லேவியர் குடும்பங்களின் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் அவர் இளைய சகோதரருள் ஒருவருமாகச் சீட்டுப் போட்டு, தங்கள் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டனர். |