1 | கர்த்தர் மோசேயை நோக்கி: |
2 | இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார். | யாத் 13:12-15 யாத் 4:22 யாத் 22:29 யாத் 22:30 யாத் 23:19 யாத் 34:19 யாத் 34:20 லேவி 27:26 எண் 3:13 எண் 8:16 எண் 8:17 எண் 18:15 உபா 15:19 லூக் 2:23 எபிரெ 12:23 |
3 | அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம். | யாத் 12:42 யாத் 20:8 யாத் 23:15 உபா 5:15 உபா 15:15 உபா 16:3 உபா 16:12 உபா 24:18 உபா 24:22 1நாளா 16:12 சங் 105:5 லூக் 22:19 1கொரி 11:24 |
4 | ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள். | யாத் 23:15 யாத் 34:18 உபா 16:1-3 |
5 | ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக. | யாத் 3:8 யாத் 34:11 ஆதி 15:18-21 உபா 7:1 உபா 12:29 உபா 19:1 உபா 26:1 யோசு 24:11 |
6 | புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவாய்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கப்படுவதாக. | யாத் 12:15-20 யாத் 34:18 லேவி 23:8 |
7 | அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம். | யாத் 12:19 மத் 16:6 |
8 | அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல். | யாத் 13:14 யாத் 12:26 யாத் 12:27 உபா 4:9 உபா 4:10 சங் 44:1 சங் 78:3-8 ஏசா 38:19 எபே 6:4 |
9 | கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; | யாத் 13:16 யாத் 12:14 எண் 15:39 உபா 6:6 உபா 6:8 உபா 11:18 உபா 11:19 நீதி 1:9 நீதி 3:21 நீதி 6:20-23 நீதி 7:23 உன்ன 8:6 ஏசா 49:16 எரே 22:24 மத் 23:5 |
10 | ஆகையால், நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை ஆசரித்து வருவாயாக. | யாத் 12:14 யாத் 12:24 யாத் 23:15 லேவி 23:6 உபா 16:3 உபா 16:4 |
11 | மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது, |
12 | கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள். | யாத் 13:2 யாத் 22:29 யாத் 34:19 லேவி 27:26 எண் 8:17 எண் 18:15 உபா 15:19 எசே 44:30 |
13 | கழுதையின் தலையீற்றையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக. | யாத் 34:20 எண் 18:15-17 |
14 | பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். | யாத் 12:26 உபா 6:20-24 யோசு 4:6 யோசு 4:21-24 சங் 145:4 |
15 | எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள்வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். | யாத் 12:29 |
16 | கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான். | யாத் 13:9 யாத் 12:13 |
17 | பார்வோன் ஜனங்களைப் போகவிட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல், | யாத் 14:11 யாத் 14:12 எண் 14:1-4 உபா 20:8 நியா 7:3 1இரா 8:47 லூக் 14:27-32 அப் 15:38 |
18 | சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள். | யாத் 14:2 எண் 33:6-8 உபா 32:10 சங் 107:7 |
19 | மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான். | ஆதி 50:24 ஆதி 50:25 யோசு 24:32 அப் 7:16 |
20 | அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள். | எண் 33:5 எண் 33:6 |
21 | அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். | யாத் 14:19-24 யாத் 40:34-38 எண் 9:15-23 எண் 10:34 எண் 14:14 உபா 1:33 நெகே 9:12 நெகே 9:19 சங் 78:14 சங் 99:7 சங் 105:39 ஏசா 4:5 ஏசா 4:6 1கொரி 10:1 1கொரி 10:2 |
22 | பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை. | சங் 121:5-8 |