1 | தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது. | ஆதி 19:29 ஆதி 30:22 யாத் 2:24 1சாமு 1:19 நெகே 13:14 நெகே 13:22 நெகே 13:29 நெகே 13:31 யோபு 14:13 சங் 106:4 சங் 132:1 சங் 136:23 சங் 137:7 ஆமோ 8:7 ஆபகூ 3:2 வெளிப் 16:19 வெளிப் 18:5 |
2 | ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோயிற்று. | ஆதி 7:11 நீதி 8:28 யோனா 2:3 |
3 | ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது. | ஆதி 7:11 ஆதி 7:24 |
4 | ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று. | ஆதி 7:17-19 |
5 | பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன. | ஆதி 7:11 |
6 | நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, | ஆதி 6:16 தானி 6:10 |
7 | ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது. | லேவி 11:15 1இரா 17:4 1இரா 17:6 யோபு 38:41 சங் 147:9 |
8 | பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான். | ஆதி 8:10-12 உன்ன 1:15 உன்ன 2:11 உன்ன 2:12 உன்ன 2:14 மத் 10:16 |
9 | பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான். | உபா 28:65 எசே 7:16 மத் 11:28 யோவா 16:33 |
10 | பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான். | சங் 40:1 ஏசா 8:17 ஏசா 26:8 ரோம 8:25 |
11 | அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்தான். | நெகே 8:15 சகரி 4:12-14 ரோம 10:15 |
12 | பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை. | சங் 27:14 சங் 130:5 சங் 130:6 ஏசா 8:17 ஏசா 25:9 ஏசா 26:8 ஏசா 30:18 ஆபகூ 2:3 யாக் 5:7 யாக் 5:8 |
13 | அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது. | ஆதி 7:11 |
14 | இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது. | ஆதி 7:11 ஆதி 7:13 ஆதி 7:14 |
15 | அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: |
16 | நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள். | ஆதி 7:1 ஆதி 7:7 ஆதி 7:13 யோசு 3:17 யோசு 4:10 யோசு 4:16-18 சங் 91:11 சங் 121:8 தானி 9:25 தானி 9:26 சகரி 9:11 அப் 16:27 அப் 16:28 அப் 16:37-39 |
17 | உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார். | ஆதி 7:14 ஆதி 7:15 |
18 | அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள். | சங் 121:8 |
19 | பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன. |
20 | அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். | ஆதி 4:4 ஆதி 12:7 ஆதி 12:8 ஆதி 13:4 ஆதி 22:9 ஆதி 26:25 ஆதி 33:20 ஆதி 35:1 ஆதி 35:7 யாத் 20:24 யாத் 20:25 யாத் 24:4-8 ரோம 12:1 எபிரெ 13:10 எபிரெ 13:15 எபிரெ 13:16 1பேது 2:5 1பேது 2:9 |
21 | சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை. | லேவி 1:9 லேவி 1:13 லேவி 1:17 லேவி 26:31 உன்ன 4:10 உன்ன 4:11 ஏசா 65:6 எசே 20:41 ஆமோ 5:21 ஆமோ 5:22 2கொரி 2:15 எபே 5:2 பிலிப் 4:18 |
22 | பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார். | ஏசா 54:8 |