1 | யோசுவா வயதாகி முதுமை அடைந்தார். ஆண்டவர் அவரிடம்,”உனக்கு வயதாகி, நீ முதுமை அடைந்துவிட்டாய். இன்னும் உடைமையாக்க வேண்டிய நிலம் ஏராளமாக உள்ளது. |
2 | எஞ்சியுள்ள நிலங்கள் இவையே: பெலிஸ்தியர், கெசூரியரின் எல்லாப் பகுதிகள், |
3 | எகிப்துக்கு எதிரில் உள்ள சீகோரிலிருந்து வடக்கில் எக்ரோன் எல்லைவரை, கானானியருடையதாகக் கருதப்பட்ட காசா, அஸ்தோத்து, அஸ்கலோன், காத்து, எக்ரோன் ஆகிய பகுதிகளின் ஐந்து பெலிஸ்திய மன்னர்கள், மற்றும் அவ்வாயர், |
4 | தெற்கிலிருந்து கானான் நாடு முழுவதும்: |
5 | கெபாலியரின் நாடு, லெபனோன் முழுவதும், எர்மோன் மலையின்கீழ் கதிரவன் உதிக்கும் பாகால்காதிலிருந்து ஆமாத்துக் கணவாய் வரை உள்ள பகுதியும். |
6 | லெபனோனிலிருந்து மிஸ்ரபோத்துமயிம் வரை உள்ள அனைத்து மலைவாழ் மக்கள், அனைத்து சீரோனியர் இவர்களை இஸ்ரயேல் முன்னிலையில் நானே வெளியேற்றுவேன். நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீயும் அதை இஸ்ரயேலுக்கு உடைமையாகக் கொடு. |
7 | இப்போது இந்த நாட்டை ஒன்பது குலங்களுக்கும் மனாசேயின் பாதிக் குலத்திற்கும் உடைமையாகக் குறித்துக்கொடு” என்றார். |
8 | அத்துடன் ரூபன், காத்து மக்களுக்கும், மனாசேயின் பாதிக் குலத்திற்கும் யோர்தானுக்கு கிழக்கே ஆண்டவரின் ஊழியர் மோசே குறித்துக் கொடுத்தவாறே உடைமையாக்கப் பெற்றவை: |
9 | அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையில் உள்ள அரோயேரிலிருந்து பள்ளத்தாக்கின் நடுவில் உள்ள நகர்வரையிலும் மெதபா சமவெளி முழுவதும், தீபோன் வரையிலும், |
10 | எஸ்போனில் ஆட்சிசெய்த எமோரியரின் மன்னன் சீகோனின் நகரங்கள் அனைத்தும், அம்மோனியரின் எல்லை வரையிலும், |
11 | கிலயாத்து, கெசூரியர், மாக்காத்தியரின் எல்லைகள், எர்மோன்மலை முழுவதும், சால்காவரை பாசான் முழுவதும்: |
12 | இரபாத்தியரில் எஞ்சியிருந்தவனும், பாசானில் இருந்து அஸ்தரோத்தையும் எதிலேயியையும் ஆட்சி செய்தவனுமாகிய ஓகின் பகுதி முழுவதும், மோசே அவர்களைத் தாக்கிக் கைப்பற்றியிருந்தார். |
13 | கெசூரியர், மாக்காத்தியரின் நாடுகளையோ இஸ்ரயேலர் கைப்பற்றவில்லை.கெசூரியரும் மாக்காத்தியரும் இந்நாள்வரை இஸ்ரயேலர் இடையே வாழ்கின்றனர். |
14 | லேவியர் குலத்திற்கு மட்டும் அவர் உடைமை அளிக்கவில்லை.அவர் அவர்களுக்குக் கூறியபடி அவர்களது உடைமை இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் செலுத்தப்படும் எரிபலியாகும். |
15 | ரூபனின் குலத்திற்கு அவர்களின் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன: |
16 | அவர்களது எல்லை அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்தில் அரோயேரிலிருந்து சமவெளியின் நடுவில் உள்ள நகர்வரை, மற்றும் மேதபாவில் உள்ள சமவெளி முழுவதும்: |
17 | சமவெளியில் உள்ள எஸ்போனும் அதன் எல்லா நகர்களும், தீபோன் பாமோத்துபாகால், பெத்பாகால்மெகோன்: |
18 | யாகசு, கெதமோத்து, மேபாத்து: |
19 | கிரியத்தாயிம், சிப்மா, கர் சமவெளியில் உள்ள செரெத்துசாகர்: |
20 | பெத்பெகோர், பிஸ்கா பள்ளத்தாக்கு, பெத்தசிமோத்து: |
21 | அதாவது, சமவெளியில் உள்ள எல்லா நகர்களும், எஸ்போனில் ஆண்டு வந்த எமோரிய அரசன் சீகோனின் எல்லா அரசுகளும், மோசே அவனையும், மிதியான், ஏவி, இரக்கேம், கூர், இரபா ஆகியவற்றின் தலைவர்களையும், அந்நாட்டில் வாழ்ந்த சீகோன் தலைவர்களையும் தாக்கினார். |
22 | இஸ்ரயேல் மக்கள் வாளால் கொன்றவர்களில் நிமித்திகள் பெகோரின் மகன் பிலயாமும் ஒருவன். |
23 | ரூபன் மக்களின் எல்லை யோர்தான் நதிக்கரை.அப்பகுதியின் நகர்களும், குடியிருப்புகளும், அவர்கள் குடும்பங்களுக்கேற்ப ரூபன் மக்களின் உடைமையாகியது. |
24 | காத்தின் குலத்தைச் சார்ந்த மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன: |
25 | யாசேர், கிலயாதின் எல்லா நகர்கள், இரபாவின் கிழக்கில் அரோயேர்வரை, அம்மோனியரின் நிலத்தில் பாதி, |
26 | எஸ்போனிலிருந்து இராமத்து மிட்சப்பே வரை, பெத்தோனிம் மகனயிம் இவற்றிலிருந்து தெபீரின் எல்லைவரை. |
27 | பெத்தோராம் பள்ளத்தாக்கில் பேத்நிம்ரா, சுக்கோத்து, சாபோன், எஸ்போனின் மன்னன் சீகோனின் எஞ்சியிருந்த அரசுகள், யோர்தான் எல்லையாக கினரேத்துக் கடல் முடிவு வரை. யோர்தானுக்கு அப்பால் கிழக்குவரை உள்ள பகுதிகள். |
28 | காத்தின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி இப்பகுதி நகர்களும் குடியிருப்புகளும் உடைமையாயின. |
29 | மனாசேயின் பாதிக் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன: |
30 | அவர்களுடைய எல்லை, மகனயிமிலிருந்து பாசான் முழுவதும், பாசானின் அரசன் ஓகின் அரசு முழுவதும், பாசானில் உள்ள அறுபது நகர்களும் யாயிரின் குடியிருப்புகள் முழுவதும்: |
31 | கிலயாதில் பாதி, அஸ்தரோத்து, எதிரேயி, பாசானில் இருந்த ஓகின் அரசு நகர்கள்.இவை மனாசேயின் மகன் மாக்கிருக்கும், மாக்கிரின் பாதி மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் அளிக்கப்பட்டன. |
32 | எரிகோவிற்குக் கிழக்கே யோர்தானுக்கு அப்பால் மோவாபுச் சமவெளியில் இருந்தபோது, மோசே இப்பகுதிகளை உடைமையாகக் கொடுத்தார். |
33 | ஆனால், லேவியர் குலத்திற்கு மோசே உடைமை அளிக்கவில்லை.அவர்களுக்கு அவர் கூறியபடி இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே அவர்களின் உடைமை. |