வேதாகமத்தை வாசி

சங்கீதம் 14

                   
புத்தகங்களைக் காட்டு
1“கடவுள் இல்லை”என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்: அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்: நல்லது செய்வார் எவருமே இல்லை.
2ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்றுநோக்குகின்றார்: மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார்.
3எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்: ஒருமிக்கக் கெட்டுப்போயினர்: நல்லது செய்வார் யாரும் இல்லை: ஒருவர்கூட இல்லை.
4தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே! அவர்கள் ஆண்டவரைநோக்கி மன்றாடுவதுமில்லை.
5அவர்கள் அஞ்சி நடுங்குவர்: ஏனெனில், கடவுள் நேர்மையாளரின் வழிமரபோடு இருக்கின்றார்.
6எளியோரின் திட்டத்தை அவர்கள் தோல்வியுறச் செய்கின்றார்கள்: ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு அடைக்கலமாய் இருக்கின்றார்.
7சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! ஆண்டவர் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.