1 | ஆண்டவரே, எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்? இறுதிவரை மறந்துவிடுவீரோ? இன்னும் எத்தனை நாள் உமது முகத்தை எனக்கு மறைப்பீர்? |
2 | எத்தனை நாள் வேதனையுற்று எனக்குள் போராடுவேன்? நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது: எத்தனை நாள் என் எதிரி எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்? |
3 | என் கடவுளாகிய ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கி எனக்குப் பதில் அளித்தருளும்: என் விழிகளுக்கு ஒளியூட்டும். |
4 | அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில் ஆழ்ந்து விடமாட்டேன்: என் எதிரி, 'நான் அவனை வீழ்த்திவிட்டேன்' என்று சொல்லமாட்டான்: நான் வீழ்ச்சியுற்றேன் என்று என் பகைவர் அக்களிக்கவுமாட்டார். |
5 | நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்: நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும். |
6 | நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்: ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார். |