வேதாகமத்தை வாசி

சங்கீதம் 13

                   
புத்தகங்களைக் காட்டு
1ஆண்டவரே, எத்தனை நாள் என்னை மறந்திருப்பீர்? இறுதிவரை மறந்துவிடுவீரோ? இன்னும் எத்தனை நாள் உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?
2எத்தனை நாள் வேதனையுற்று எனக்குள் போராடுவேன்? நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது: எத்தனை நாள் என் எதிரி எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?
3என் கடவுளாகிய ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கி எனக்குப் பதில் அளித்தருளும்: என் விழிகளுக்கு ஒளியூட்டும்.
4அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில் ஆழ்ந்து விடமாட்டேன்: என் எதிரி, 'நான் அவனை வீழ்த்திவிட்டேன்' என்று சொல்லமாட்டான்: நான் வீழ்ச்சியுற்றேன் என்று என் பகைவர் அக்களிக்கவுமாட்டார்.
5நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்: நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும்.
6நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்: ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.