1 | ஆண்டவரே, காத்தருளும்: ஏனெனில் உலகில் இறையன்பர்கள் அற்றுப் போயினர்: மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர். |
2 | ஒருவர் அடுத்திருப்பாரிடம் பொய் பேசுகின்றனர்: தேனொழுகும் இதழால் இருமனத்தோடு பேசுகின்றனர். |
3 | தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும் ஆண்டவரே, துண்டித்துவிடுவாராக! பெருமையடித்துக் கொள்ளும் நாவை அறுத்துவிடுவீராக! |
4 | 'எங்கள் நாவன்மை எங்கள் வலிமை: எங்கள் பேச்சுத்திறனே எங்கள் பக்கத் துணை: எங்களுக்குத் தலைவர் வேறு யார்?' என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக! |
5 | 'எளியோரின் புலம்பலையும் வறியோரின் பெருமூச்சையும் கேட்டு இப்பொழுதே எழுந்து வருகின்றேன்: அவர்கள் ஏங்குகின்றபடி அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்' என்கின்றார் ஆண்டவர். |
6 | ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்: மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை: ஏழுமுறை புடமிடப்பட்டவை. |
7 | ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்: இத்தகைய தலைமுறையிடமிருந்து எம்மை என்றும் காப்பாற்றும். |
8 | பொல்லார் எம்மருங்கும் உலாவருகின்றனர்: மானிடரிடையே பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது. |