1 | மதிலைக் கட்டி முடித்தபின், நான் கதவுகளை அமைத்தேன்: வாயிற் காவலர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் அமர்த்தினேன். |
2 | என் சகோதரர் அனானியிடமும், கொத்தளத் தலைவர் அனனியாவிடமும், எருசலேமின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தேன். ஏனெனில் அனானி மற்றவர்களை விட உண்மையானவர்: கடவுளுக்கு அஞ்சியவர். |
3 | நான் அவர்களைப் பார்த்து, “வெயில் ஏறும்வரை எருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம்: காவலர்கள் போகுமுன் கதவுகளை மூடித் தாழிடுங்கள்: புதல்வர் எருசலேமில் வாழ்வோரைக் காவலராய் நியமியுங்கள்: அவர்களுள் சிலர் குறிக்கப்பட்ட இடங்களிலும் மற்றும் சிலர் தங்கள் வீட்டிற்கு எதிரேயும் காவல் புரியட்டும்” என்று சொன்னேன். |
4 | எருசலேம் நகர் பரந்ததும் பெரியதுமாய் இருந்தது. ஆனால் அதனுள் வாழ்ந்து வந்த மக்கள் வெகு சிலரே. வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை. |
5 | அப்பொழுது கடவுள் என்னைத் தூண்டியபடி, தலைவர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரையும் வழிமரபு வாரியாகப் பதிவு செய்தேன். அப்பொழுது அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தவர்pன் தலைமுறைப் பதிவேட்டைக் கண்டுபிடித்தேன். அதில் எழுதியிருக்கக் கண்டது பின்வருமாறு: |
6 | பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்படுத்தப்பட்டு, பின்னர் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு, எருசலேமுக்கும் யூதாவில் அவரவர் நகருக்கும் திரும்பி வந்த மாநில மக்கள் இவர்களே: செருபாபேல், ஏசுவா, நெகேமியா, அசரியா, இரகமியா, நகமானி, மோர்தக்காய், பில்சான், மிசுபெரேத்து, பிக்வாய், நெகூம், பானா. |
7 | இவர்களோடு வந்த இஸ்ரயேல் மக்களில் ஆடவரின் எண்ணிக்கை: |
8 | பாரோசின் புதல்வர் இரண்டாயிரத்து நூற்றுமுப்பதிரண்டு பேர்: |
9 | செபாற்றியாவின் புதல்வர் முந்நூற்று எழுபத்திரண்டு பேர்: |
10 | அராகின் புதல்வர் அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்: |
11 | பாகாத் மோவாபின் புதல்வரான ஏசுவா, யோவாபு ஆகியோரின் புதல்வர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப் பேர்: |
12 | ஏலாமின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்: |
13 | சத்தூவின் புதல்வர் எண்ணூற்று நாற்பத்தைந்து பேர்: |
14 | சக்காயின் புதல்வர் எழுநூற்று அறுபது பேர்: |
15 | பின்னூயின் புதல்வர் அறுநூற்று நாற்பத்தெட்டு பேர்: |
16 | பேபாயின் புதல்வர் அறுநூற்று இருபத்தெட்டு பேர்: |
17 | அசகாதின் புதல்வர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டு பேர்: |
18 | அதோனிக்காமின் புதல்வர் அறுநூற்று அறுபத்தேழு பேர்: |
19 | பிக்வாயின் புதல்வர் இரண்டாயிரத்து அறுபத்தேழு பேர்: |
20 | ஆதினின் புதல்வர் அறுநூற்று ஐம்பத்தைந்து பேர்: |
21 | எசேக்கியாவின் வழிவந்த அற்றேரின் புதல்வர் தொண்ணூற்றெட்டுப் பேர்: |
22 | ஆசுமின் புதல்வர் முந்நூற்று இருபத்தெட்டுப் பேர்: |
23 | பேசாயின் புதல்வர் முந்நூற்று இருபத்து நான்கு பேர்: |
24 | ஆரிப்பின் புதல்வர் நூற்றுப்பன்னிரண்டு பேர்: |
25 | கிபயோனின் புதல்வர் நூற்றுத் தொண்ணூற்றைந்து பேர்: |
26 | பெத்லகேம், நேற்றோபாவின் ஆண்கள் நூற்று எண்பத்தெட்டுப் பேர்: |
27 | அனத்தோத்தின் ஆண்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்: |
28 | பெத்தசுமாவேத்தின் ஆண்கள் நாற்பத்திரண்டு பேர்: |
29 | கிரியத்து எயாரிம், கெபிரா, பெயரோத்து ஆகியவற்றின் ஆண்கள் எழுநூற்று நாற்பத்திமூன்று பேர்: |
30 | இராமா, மற்றும் கேபாவின் ஆண்கள் அறுநூற்று இருபத்தொரு பேர்: |
31 | மிக்மாசின் ஆண்கள் நூற்று இருபத்திரண்டு பேர்: |
32 | பெத்தேல், மற்றும் ஆயினின் ஆண்கள் நூற்று இருபத்து மூன்று பேர்: |
33 | மற்றொரு நெபோவின் ஆண்கள் ஐம்பத்திரண்டு பேர்: |
34 | மற்றொரு ஏலாமின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்திநான்கு பேர்: |
35 | ஆரிமின் புதல்வர் முந்நூற்று இருபது பேர்: |
36 | எரிகோவின் புதல்வர் முந்நூற்று நாற்பத்தைந்து பேர்: |
37 | லோது, ஆதிது, ஓனோ ஆகியோரின் புதல்வர் எழுநூற்று இருபத்தொரு பேர்: |
38 | செனாவின் புதல்வர் மூவாயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது பேர். |
39 | குருக்கள்: ஏசுவாவின் வீட்டைச் சார்ந்த எதாயாவின் புதல்வர் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்: |
40 | இம்மேரின் புதல்வர் ஆயிரத்து ஐம்பத்திரண்டு பேர்: |
41 | பஸ்கூரின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர்: |
42 | ஆரிமின் புதல்வர் ஆயிரத்துப் பதினேழு பேர். |
43 | லேவியர்: ஓதவாவின் புதல்வரில், கத்மியேலின் வழிவந்த ஏசுவாவின் புதல்வர் எழுபத்து நான்கு பேர்: |
44 | பாடகர்: ஆசாபின் புதல்வர் நூற்று நாற்பத்தெட்டுப் பேர்: |
45 | வாயிற்காவலர்: சல்லூம், ஆற்றேர், தல்மோன், அக்குபு, அத்தித்தா, சோபாய் ஆகியோரின் புதல்வர் நூற்று முப்பத்தெட்டுப் பேர். |
46 | கோவில் ஊழியர்: சிகாவின் புதல்வர்: அசுப்பாவின் புதல்வர்: தபாயோத்தின் புதல்வர்: |
47 | கேரோசின் புதல்வர்: சீயாவின் புதல்வர்: கிதோனின் புதல்வர்: |
48 | இலபனாவின் புதல்வர்: அகாபாவின் புதல்வர்: சல்மாயின் புதல்வர்: |
49 | அனானின் புதல்வர்: கிதேலின் புதல்வர்: ககாரின் புதல்வர்: |
50 | இரயாயாவின் புதல்வர்: இரசினின் புதல்வர்: நெக்கோதாவின் புதல்வர்: |
51 | கசாமின் புதல்வர்: உசாவின் புதல்வர்: பாசயாகின் புதல்வர்: |
52 | பேசாயின் புதல்வரான மெயோனிமின் புதல்வர்: நெபுசசிமின் புதல்வர்: |
53 | பக்புகின் புதல்வரான அகுப்பாவின் புதல்வர்: அர்குரின் புதல்வர்: |
54 | பட்சிலித்தின் புதல்வர்: மெகிதாவின் புதல்வர்: அர்சாவின் புதல்வர்: |
55 | பர்கோசின் புதல்வர்: சீசாவின் புதல்வர்: தேமாகின் புதல்வர்: |
56 | நெட்சியாகின் புதல்வர்: அற்றிப்பாவின் புதல்வர்: |
57 | சாலமோனுடைய பணியாளர்களின் புதல்வர்: சோற்றாவின் புதல்வர்: சொபரேத்தின் புதல்வர்: பெரிதாவின் புதல்வர்: |
58 | ஏலாவின் புதல்வர்: தர்கோனின் புதல்வர்: கித்தேலின் புதல்வர்: |
59 | செபத்தியாவின் புதல்வர்: அற்றிலின் புதல்வர்: பொக்கரேத்து சபாயிமின் புதல்வர்: அம்மோனின் புதல்வர்: |
60 | கோவில் பணியாளரும் சாலமோனின் பணியாளரின் புதல்வர்களும் மொத்தம் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர். |
61 | மேலும் தெல்மெல்லா, தெல்கர்சா, கெருபு, அதோன் இம்மேர் ஆகிய இடங்களிலிருந்து வந்தும், தங்கள் மூதாதையரின் குலத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்கள் என்பதையும் எண்பிக்க இயலாதவர்கள் பின்வருமாறு: |
62 | தெலாயாவின் புதல்வர் தோபியாவின் புதல்வர், நெக்கோதாவின் புதல்வர் ஆகிய அறுநூற்று நாற்பத்திரண்டு பேர். |
63 | குருக்கள்: ஒபய்யாவின் புதல்வர்: அக்கோசின் புதல்வர்: பர்சில்லாயின் புதல்வர். பர்சில்லாய் கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மணந்ததால் அப்பெயரால் அழைக்கப்பட்டார். |
64 | இவர்கள் அனைவரும் தங்கள் தலைமுறை அட்டவணை எழுதப்பட்ட ஏடுகளைத் தேடியும் கிடைக்காததால் குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். |
65 | ஊரிம், தும்மிம் கொண்ட குரு ஒருவர் வரும் வரை திருத்தூயக உணவில் பங்கு கொள்ளக்கூடாது என்று அவர்களுக்கு ஆளுநர் ஆணையிட்டார். |
66 | மக்கள் சபையாரின் மொத்த எண்ணிக்கை நாற்பத்திரண்டு ஆயிரத்து முந்நூற்று அறுபது. |
67 | அவர்களைத் தவிர அவர்களின் ஆண் ஊழியர்களும் பெண் ஊழியர்களும் ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு. மற்றும் அவர்களுக்கு இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும், பாடகிகளும் இருந்தார்கள். |
68 | அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு: கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து: |
69 | அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து: கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்றிருபது. |
70 | இறுதியாக குலத்தலைவர்களில் சிலர் வேலைக்காகச் கொடுத்தது பின்வருமாறு: ஆளுநர், கருவூலத்திற்கு ஆயிரம் பொற்காசுகள், ஐம்பது பாத்திரங்கள், ஐந்நூற்று முப்பது குருத்துவ ஆடைகள் ஆகியவற்றைத் தந்தார். |
71 | குலத்தலைவர்களில் வேறுசிலர், வேலைக்காகக் கருவூலத்திற்கு இருபதாயிரம் பொற்காசுகளும் ஆயிரத்து ஐநூறு கிலோகிராம் வெள்ளியும் கொடுத்தார்கள். |
72 | ஏனைய மக்கள் கொடுத்ததாவது: இருபதாயிரம் பொற்காசுகள், ஆயிரத்து முந்நூற்று எழுபது கிலோகிராம் வெள்ளி, அறுபத்தேழு குருத்துவ உடைகள். |
73 | குருக்களும், லேவியரும், வாயிற்காவலரும், பாடகரும், மக்களுள் சிலரும், கோவில் பணியாளரும் ஆகிய இஸ்ரயேலர் அனைவரும் தம் நகர்களில் குடியேறினர். ஏழாவது மாதம் வந்தபோது இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தம் நகர்களில் இருந்தார்கள். |