1 | மக்கள் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தனர். ஏனைய மக்களில் பத்தில் ஒருவர் புனித நகரான எருசலேமில் வாழ்வதற்குக் கொண்டு வரப்படச் சீட்டுப் போட்டார்கள். மற்ற ஒன்பது பேர் தங்கள் நகர்களிலேயே வாழ்ந்தார்கள். |
2 | எருசலேமில் மனமுவந்து வாழ முன்வந்த மனிதர்கள் அனைவரையும் மக்கள் வாழ்த்தினர். |
3 | இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர்கள், கோவில் பணியாளர்கள், சாலமோனின் பணியாளரின் வழிமரபினர் ஆகியோர் யூதாவின் நகர்களில், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மனைகளில் சொந்த நகர்களில் வாழ்ந்து வந்தார்கள். |
4 | எருசலேமில் வாழ்ந்து வந்த மாநிலத் தலைவர்கள் பின்வருமாறு: இவர்கள் யூதா புதல்வர் சிலரும், பென்யமின் புதல்வா சிலரும் ஆவர். யூதாவின் புதல்வர் பின்வருமாறு: உசியா மகன் அத்தாயா-உசியா செக்கரியாவின் மகன்: இவர் அமரியாவின் மகன்: இவர் செபற்றியாவின் மகன்: இவர் மகலலேலின் மகன். பேரேட்சின் வழிமரபினர்: |
5 | மாவேசியா பாரூக்கின் மகன்: இவர் கொல்கோசியின் மகன்: இவர் அசாயாவின் மகன்: இவர் அதாயாவின் மகன்: இவர் யோயாரிபின் மகன்: இவர் செக்கரியாவின் மகன்: இவர் சீலோனியின் மகன். |
6 | எருசலேமில் குடியிருந்த பேரேட்சியின் புதல்வர் நானூற்று அறுபத்து எட்டு மாபெரும் வீரர்கள். |
7 | பென்யமினின் புதல்வர் இவர்களே: சல்லூ மெசுல்லாமின் மகன்: இவர் யோபேதுவின் மகன்: இவர் பெத்யாவின் மகன்: இவர் கொலயாவின் மகன்: இவர் மாசேயாவின் மகன்: இவர் இத்தியேலின் மகன்: இவர் ஏசாயாவின் மகன். |
8 | அவருக்குப் பின் கபாயும் சல்லாயும். இவர்கள் மொத்தம் தொள்ளாயிரத்து இருபத்தெட்டுப் பேர். |
9 | சிக்ரியின் மகன் யோவேல் அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். அசனுவாவின் மகன் யூதா மற்றோர் ஊருக்குத் தலைவராக விளங்கினார். |
10 | குருக்கள்: யோயாரிபு மகன் எதாயா, யாக்கின்: |
11 | செராயா: இவர் இல்க்கியாவின் மகன்: இவர் மெசுல்லாவின் மகன்: இவர் சாதோக்கின் மகன்: இவர் மெரயோத்தின் மகன்: இவர் கோவில் மேற்பார்வையாளரான அகித்தூபின் மகன். |
12 | கோவில் திருப்பணி செய்துவந்த இவர்களுடைய சகோதரர் எண்ணூற்று இருபத்திரண்டு பேர். அதாயா எரோகாமின் மகன்: இவர் பெலலியாவின் மகன்: இவர் அம்சியின் மகன்: இவர் செக்கரியாவின் மகன்: இவர் அம்சியின் மகன்: இவர் பஸ்கூரின் மகன்: இவர் மல்கியாவின் மகன். |
13 | குலத்தலைவர்களான இவர் சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டு பேர். அமசசாய் அசரியேலின் மகன்: இவர் அகிசாயின் மகன்: இவர் மெசில்ல மோத்தின் மகன்: இவர் இம்மேரின் மகன். |
14 | படைவீரர்களான அவர்களுடைய சகோதரர் நூற்று இருபத்து எட்டு. அக்கெதோலியின் மகன் சப்தியேல் அவர்களுக்குத் தலைவராக இருந்தார். |
15 | லேவியர்: செமாயா: இவர் அசூபாவின் மகன்: இவர் அசபியாவின் மகன்: இவர் பூனியின் மகன். |
16 | கடவுளின் இல்லத்தின் வெளிப்புற வேலைக்குப் பொறுப்பானவர்களாகவும், லேவியருக்குத் தலைவர்களாகவும் இருந்த சபத்தாய்: யோசபாத்து: |
17 | மன்றாட்டில் நன்றிப்பண் ஆரம்பிக்கும் தலைவர் மத்தனியா: இவர் மீக்காவின் மகன்: இவர் சப்தியின் மகன்: இவர் ஆசாபின் மகன்: பக்புக்கியா அவருடைய சகோதரரில் இரண்டாம் இடத்தை வகித்தார். அப்தா சம்முவாவின் மகன்: இவர் காலாயின் மகன்: இவர் எதுத்தூனின் மகன். |
18 | புனித நகரில் வாழ்ந்த லேவியர் மொத்தம் இருநூற்று எண்பத்துநான்கு பேர். |
19 | வாயிற்காவலர்: வாயில் காக்கும் அக்கூபு, தல்மோன், இவர்களுடைய சகோதரர் மொத்தம் நூற்று எழுபத்திரண்டு பேர். |
20 | ஏனைய இஸ்ரயேல் மக்களும், குருக்களும், லேவியரும், யூதாவின் எல்லா நகர்களிலும் அவரவர் தம் உரிமைச் சொத்தில் குடியிருந்தனர். |
21 | கோவில் பணியாளர் ஒபேலில் குடியிருந்தனர். சிகாவும் கிஸ்பாவும் கோவில் பணியாளருக்குத் தலைவர்களாக இருந்தனர். |
22 | எருசலேமில் வாழ்ந்துவந்த லேவயிருக்குத் தலைவராயிருந்த உசி, பானின் மகன்: இவர் அசபியாவின் மகன்: இவர் மத்தனியாவின் மகன்: இவர் மீக்காவின் மகன்: இவர் கடவுளின் கோவில் பணிசெய்கின்ற பாடகர்களாகிய ஆசாபின் மக்களில் ஒருவர். |
23 | பாடகர்களைக் குறித்து அரச கட்டளை ஒன்று இருந்தது. அதன்படி அவர்களின் அன்றாடப் படி வரையறுக்கப்பட்டிருந்தது. |
24 | மேலும் யூதாவின் மகனான செராகின் வழித்தோன்றிய மெசசபேலின் மகன் பெத்தகியா மக்களைக் குறித்த எல்லாக் காரியங்களிலும் அரசருக்கு உதவியாக இருந்தார். |
25 | சிற்றூர்கள், அவைகளைச் சார்ந்த நிலங்களைப்பற்றிய குறிப்பு பின்வருமாறு: யூதா மக்கள் கிரியத்து அர்பாவிலும் அதன் குடியிருப்புகளிலும், தீபோனிலும் அதன் குடியிருப்புகளிலும் எக்கபட்சவேலிலும் அதன் நிலங்களிலும் குடியிருந்தனர்: |
26 | மேலும் ஏசுவாபிலும், மோலதாவிலும், பெத்பலேத்திலும் |
27 | அட்சர்சூவாவிலும் பெயேர்சபாவிலும் அதன் குடியிருப்புகளிலும், |
28 | சிக்லாசிலும், மெக்ககோனாவிலும், அதன் குடியிருப்புகளிலும், |
29 | ஏன்ரிம்மோனிலும், சோராவிலும், யார்முத்திலும், |
30 | சானோவாகிலும், அதுல்லாமிலும், அதன் குடியிருப்புகளிலும், இலாக்கிசிலும் அதன் நிலங்களிலும், அசோக்காவிலும் அதன் குடியிருப்புகளிலும், ஆகப் பெயேர்செபா முதல் இன்னோம் பள்ளத்தாக்கு வரை குடியிருந்தனர். |
31 | பென்யமின் மக்கன் கெபா முதல் மிக்மாசிலும், அயாவிலும், பெத்தேலிலும் அதன் குடியிருப்புகளிலும், |
32 | அனத்தோத்திலும், நோபிலும் அனனியாவிலும் |
33 | ஆட்சோரிலும், இராமாவிலும், சித்தயிமிலும் |
34 | ஆதிது, சேபோயிம் நேபல்லாற்று, |
35 | லோது, ஒனோ என்ற ஊர்களிலும், தொழிலாளர் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர். |
36 | லேவியரில் சில பிரிவினர் யூதாவிலும் பென்யமினிலும் குடியிருந்தனர். |