1 | ஆதாம், சேத்து, ஏனோசு: |
2 | கேனான், மகலலேல், எரேது, |
3 | ஏனோக்கு, மெத்தூசேலா, இலாமேக்கு, |
4 | நோவா, சேம், காம், எப்பேத்து. |
5 | எப்பேத்தின் மைந்தர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராசு, |
6 | கோமேரின் மைந்தர்: அஸ்கெனாசு, இரிப்பாத்து, தோகர்மா. |
7 | யாவானின் மைந்தர்: எலிசா, தர்சீசு, இத்திம், தோதானிம். |
8 | காமின் மைந்தர்: கூசு, எகிப்து, பூத்து, கானான். |
9 | கூசின் மைந்தர்: செபா, அவிலா, சப்தா, இரகமா, சப்தக்கா: இரகமாவின் மைந்தர்: சேபா, தெதான். |
10 | கூசுக்கு நிம்ரோது பிறந்தார்: அவர் உலகில் ஆற்றல் மிக்கவர் ஆனார். |
11 | எகிப்தின் வழிவந்தோர்: லூதியர், அனாமியர், இலகாபியர், நப்துகியர், |
12 | பத்ரூசியர், பெலிஸ்கியரின் மூல இனத்தவரான கஸ்லுகியர், கப்தோரியர். |
13 | கானானின் வழிவந்தோர்: தலை மகன் சீதோன், இரண்டாம் மகன் கேத்து, |
14 | மற்றும் எபூசியர், எமோரியர், கிர்காசியர், |
15 | இவ்வியர், அர்க்கியர், சீனியர், |
16 | அர்வாதியர், செமாரியர், ஆமாத்தியர். |
17 | சேமின் மைந்தர்: ஏலாம், அசூர், அர்ப்பகசாது, லூது, ஆராம், ஊசு, ஊல், கெத்தேர், மேசெக்கு, |
18 | அர்ப்பகசாதுக்குச் சேலா பிறந்தார். சேலாவுக்கு ஏபேர் பிறந்தார். |
19 | ஏபேருக்கு இரண்டு மைந்தர் பிறந்தனர்: ஒருவர் பெயர் பெலேகு, ஏனெனில் அவருடைய நாள்களில் மண்ணகம் பிரிவுற்றது. அவர் சகோதரர் பெயர் யோக்தான். |
20 | யோக்தானுக்குப் பிறந்தோர்: அல்மோதாது, செலேபு, அட்சர்மாவேத்து, எராகு, |
21 | ஆதோராம், ஊசால், திக்லா, |
22 | ஏபால், அபிமாவேல், சேபா, |
23 | ஓபீர், அவிலா, யோபாபு: இவர்கள் அனைவரும் யோக்தானின் புதல்வர். |
24 | சேம், அர்பகசாது, சேலா, |
25 | ஏபேர், பெலேகு, இரெயு, |
26 | செருகு, நாகோர், தெராகு, |
27 | ஆபிராம் என்ற ஆபிரகாம். |
28 | ஆபிரகாமின் மைந்தர்: ஈசாக்கு, இஸ்மயேல்: அவர்களுடைய தலைமுறைகள் பின்வருமாறு: |
29 | இஸ்மயேலின் தலைமகன் நெபயோத்து, மற்றும் கேதார், அத்பியேல், மிப்சாம், |
30 | மிஸ்மா, தூமா, மாசா, அதாது, தேமா, |
31 | எற்றூர், நாபிசு, கேதமா: இவர்களே இஸ்மயேலின் மைந்தர். |
32 | ஆபிரகாமின் மறுமனைவி கெற்றூரா பெற்றெடுத்த மைந்தர்: சிம்ரான், யோக்சான், மெதான், மிதியான், இஸ்பாக்கு, சூவாகு, யோக்சானின் மைந்தர்: சேபா, தெதான். |
33 | மிதியானின் மைந்தர்: ஏப்பாகு, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா: இவர்கள் அனைவரும் கெற்றூராவிடம் பிறந்த புதல்வர். |
34 | ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார்: ஈசாக்கின் மைந்தர்: ஏசா, இஸ்ரயேல். |
35 | ஏசாவின் புதல்வர்: எலிப்பாசு. இரகுவேல், எயூசு, யாலாம், கோராகு. |
36 | எலிப்பாசின் புதல்வர்: தேமான், ஓமார், சேபி, காத்தாம், கெனாசு, திம்னா, அமலேக்கு. |
37 | இரகுவேலின் புதல்வர்: நாகத்து, செராகு, சம்மாகு, மிசா. |
38 | சேயிரின் மைந்தர்: லோத்தான், சோபால், சிபயோன், அனா, தீசோன், ஏட்சேர், தீசான். |
39 | லோத்தானின் புதல்வர்: ஓரி, ஓமாம்: லோத்தானின் சகோதரி திம்னா, |
40 | சோபாலின் புதல்வர்: அலயான், மானகாத்து, ஏபால், செப்பி, ஓனாம்: சிபயோனின் புதல்வர்: அய்யா, அனா. |
41 | அனாவின் மகன் தீசோன்: தீசோனின் புதல்வர்: அம்ரான், எஸ்பான், இத்ரான், கெரான். |
42 | ஏட்சேரின் புதல்வர்: பில்கான், சகவான், யாக்கான்: தீசானின் புதல்வர்: ஊசு, ஆரான். |
43 | இஸ்ரயேல் மக்களை அரசர் ஆட்சி செய்யுமுன் ஏதோம் நாட்டை ஆண்ட அரசர் பெகோரின் பேலோ: இவரது நகரின் பெயர் தின்காபா. |
44 | பேலோ இறந்தபோது, போஸ்ராவைச் சார்ந்த செராகு மகன் யோவாபு அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார். |
45 | யோவாபு இறந்தபோது, தேமானியர் நாட்டைச் சார்ந்த ஊசாம் அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார். |
46 | ஊசாம் இறந்தபோது, மோவாபு நாட்டில் மிதியானியரை முறியடித்த பெதாதின் மகன் அதாது அரசர் ஆனார். இவரது நகரின் பெயர் அவித்து. |
47 | அதாது இறந்தபோது மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா அவருக்குப் பதிலாக ஆட்சி புரிந்தார். |
48 | சம்லா இறந்தபோது நதியோர இரகபோத்தியர் சாவூல் அரசர் ஆனார். |
49 | சாவூல் இறந்தபின் அக்போரின் மகன் பாகால் அனான் அவருக்குப் பதிலாக அரசர் ஆனார். |
50 | பாகால் அனான் இறந்தபின், அதாது அவருக்குப் பதிலாக அரசர் ஆனார். அவரது நகரின் பெயர் பாயி: மேசகாபின் பேத்தியும் மத்ரேத்தின் மகளுமான மெகேற்றபேல் என்பவரே அவர் தம் மனைவி. |
51 | அதாது இறந்தார். ஏதோமின் குடும்பத் தலைவர்கள்: திம்னா, அலியா, எத்தேத்து, |
52 | ஓகோலிபாமா, ஏலா, பீனோன். |
53 | கெனாசு, தேமான், மிபுசார், |
54 | மக்தியேல், ஈராம்: இவர்களே ஏதோமின் குடும்பத் தலைவர்கள். |