1 | இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் தலைமுறை அட்டவணையின்படி புதிவு செய்யப்பட்டனர். இவை இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்று நூலில் எழுதப்பட்டுள்ளன. யூதா மக்கள் அவர்களது துரோகத்தை முன்னிட்டு பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர். |
2 | தங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் நகர்களிலும் முதன் முதலாகக் குடியேறியவர்கள் இஸ்ரயேலரும் குருக்களும் லேவியரும் கோவில் பணியாளருமே. |
3 | யூதா, பென்யமின் எப்ராயிம் மனாசே மக்களுள் எருசலேமில் குடியிருந்தவர்: |
4 | ஊத்தாய்: இவர் அம்மிகூதின் மகன்: இவர் ஓம்ரியின் மகன்: இவர் இம்ரியின் மகன்: இவர் பானியின் மகன்: இவர் பெரேட்சியின் புதல்வருள் ஒருவர்: இவர் யூதாவின் மகன். |
5 | சீலோன் மரபில் தலைமகன் அசாயாவும் அவர் புதல்வரும். |
6 | கேராகின் புதல்வருள் எகுவேல்: அவர் உறவினர் அறுநூற்றுத் தொண்ணூபேர். |
7 | பென்யமின் புதல்வருள் சல்லூ: இவர் மெசுல்லாமின் மகன்: இவர் ஓதவியாவின் மகன்: இவர் அஸ்னுவாவின் மகன்: |
8 | எரோகாமின் மகன் இப்னயா: மிக்ரீயின் புதல்வராகிய உசீயின் மகன் ஏலா: இப்னயாவின் புதல்வராகிய இரகுவேலுக்குப் பிறந்த செபத்தியாவின் மகன் மெசுல்லாம். |
9 | தலைமுறை அட்டவணைப்படி அவர்கள் உறவினர் தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறுபேர். இந்த ஆள்கள் அனைவரும் தங்கள் மூதாதையர் மரபில் குடும்பத் தலைவர்களாயிருந்தனர். |
10 | குருக்கள் எதாயா, யோயாரிபு, யாக்கின்: |
11 | அசரியா: இவர் இல்க்கியாவின் மகன்: இவர் மெசுல்லாமின் மகன்: இவர் சாதோக்கின் மகன்: இவர் மெராயோத்தின் மகன்: இவர் கடவுளின் இல்லப் பொறுப்பளாரான அகித்தூபின் மகன். |
12 | அதாயா: இவர் மல்கியாவின் புதல்வரான பஸ்கூருக்குப் பிறந்த எரொகாமின் மகன்: இவர் அதியேலின் மகன்: இவர் யாகிசேராவின் மகன்: இவர் மெசுல்லாமின் மகன்: இவர் மெசில்லேமித்தின் மகன்: இவர் இம்மேரின் மகன். |
13 | அவர்கள் உறவினரும் அவர்கள் மூதாதையர் மரபில் குடும்பத் தலைவர்களுமாயிருந்த ஆற்றல்மிகு வீரர் ஆயிரத்து எழுநூற்று அறுபது பேர். இவர்கள் கடவுளின் இல்லப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர். |
14 | லேவியருள் செமாயா: இவர் அசூபின் மகன்: இவர் அஸ்ரிகாமின் மகன்: இவர் அசபியாவின் மகன்: இவர் மெராரியின் புதல்வருள் ஒருவர். |
15 | பகபக்கர், எரேசு, காலால்: ஆசாவின் புதல்வர் சிக்ரிக்குப் பிறந்த மீக்காவின் மகன் மத்தனியா. |
16 | எதுத்தூனின் புதல்வன் காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா: நெற்றோபாவியரின் சிற்றூர்களில் வாழ்ந்த எல்கானாவுக்குப் பிறந்த ஆசாவின் மகன் பெரக்கியா. |
17 | வாயில் காப்போர் சல்லூம், அக்கூபு, தல்மோன், அகிமான், மற்றும் இவர்கள் உறவினர்: சல்லூம் இவர்களின் தலைவர். |
18 | இவர்கள் இன்றுவரை கிழக்கில் அரச வாயிலைக் காத்து வருகின்றனர். இவர்களே லேவியர் பாளையத்தின் காவலராய் இருந்தவர்கள். |
19 | கோராகின் புதல்வர் எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும் அவர் தந்தையின் வீட்டாரும் உறவினருமாகிய கோராகியரும் கூடார நுழைவாயில் மேற்பார்வைப்பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். முன்பே அவர்களின் மூதாதையர் ஆண்டவரது பாளையவாயிலைக் காத்து வந்தனர். |
20 | எலயாசர் மகன் பினகாசு முற்காலத்தில் அவர்களின் அதிகாரியாக இருந்தார். ஆண்டவர் அவரோடிருந்தார். |
21 | மெசல்லேமியாவின் மகன் செக்கரியா சந்திப்புக் கூடார நுழைவாயிலின் காவலராக இருந்தார். |
22 | நுழைவாயில்களைக் காப்பதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களின் எண்ணிக்கை இருநூற்றுப் பன்னிரண்டு பேர். இவர்கள் தங்கள் சிற்றூர்களில் தலைமுறை அட்டவணைப்படி பதிவு செய்யப்பட்டவர்கள். அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்ததால், தாவீதும், திருக்காட்சியாளர் சாமுவேலும் அவர்களை இப்பணியில் அமர்த்தினார்கள். |
23 | அவர்களும் அவர்கள் புதல்வரும் கடவுளின் இல்லக் கூடாரத்தின் வாயில்களைக் காத்து வந்தனர். |
24 | வாயில் காப்போர், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு பக்கங்களிலும் இருந்தனர். |
25 | சிற்றூர்களில் இருந்த அவர்களின் உறவின் முறையினர் ஏழு நாள்கள் இவர்களோடிருக்க மாறி மாறி வரவேண்டும். |
26 | தலைமை வாயில் காவலராகிய நான்கு லேவியரும் கடவுளின் இல்லப் பண்டக சாலைகளுக்கும், கருவூலங்களுக்கும் பொறுப்பாளர்களாய் இருந்தனர். |
27 | காவல் காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருந்ததால் அவர்கள் கடவுளின் இல்லத்தைச் சுற்றிலும் இரவில் தங்கியிருந்து காலைதோறும் கதவுகளைத் திறந்து விடுவார்கள். |
28 | அவர்களில் சிலரிடம் வழிபாட்டுக்குரிய கலங்களின் பொறுப்பு இருந்தது. அவற்றை உள்ளே கொண்டு போகும் போதும் வெளியே கொண்டு வரும்போதும் எண்ணிச் சரிபார்ப்பர். |
29 | மற்றும் சிலரிடம் தட்டுமுட்டுகள், எல்லாப்புனித கலங்கள், மிருதுவான மாவு, திராட்சை ரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப்பொருள்கள் ஆகியவற்றின்மேல் பொறுப்பு தரப்பட்டிருந்தது. |
30 | குருக்களின் புதல்வர் சிலர் நறுமணப் பொருள்களில் இருந்து நறுமணக் கலவை தயாரித்தனர். |
31 | கோராகியரான சல்லூமின் தலைமகன் மத்தித்தியா என்ற லேவியருக்குத் தட்டைச் சட்டியில் பண்டங்கள் சுடும் பொறுப்பு விடப்பட்டிருந்தது. |
32 | அவர்கள் உறவினராகிய கோகாத்தியரின் புதல்வருள் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் திருமுன் அடுக்கும் அப்பங்களைத் தயாரிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. |
33 | இவர்களில் லேவியரின் மூதாதையருள் பாடகர் கடவுளின் இல்ல அறைகளிலேயே தங்கயிருந்தனர். ஏனெனில் அவர்கள், இரவும் பகலும், பணி செய்ய வேண்டியிருந்ததால், பிற பணியின்றிக் கடவுளின் இல்ல அறைகளிலேயே தங்கியிருந்தனர். |
34 | தலைவராகிய இவர்களே தலைமுறை அட்டவணைப்படி லேவியருள் குடும்பத் தலைவர்கள்: எருசலேமில் குடியிருந்த தலைவர்கள். |
35 | கிபயோனில் கிபயோனின் தந்தை எயியேல் வாழ்ந்து வந்தார். அவர் மனைவியின் பெயர் மாக்கா. |
36 | அவர் தலைமகன் அப்தோன்: மற்றவர்கள் சூர், கீசு, பாகால், நேர், நாதாபு, |
37 | கெதார், அகியோ, செக்கரியா, மிக்லோத்து. |
38 | மிக்லோத்திற்கு சிமயாம் பிறந்தார். இவர்கள் எருசலேமில் தங்கள் உறவின்முறையாரோடு வாழ்ந்து வந்தார்கள். |
39 | நேருக்குக் கீசு பிறந்தார்: கீசுக்கு சவுல் பிறந்தார்: சவுலுக்கு யோனத்தான், மல்கிசூவா, அபினதாபு, எஸ்பாகால் ஆகியோர் பிறந்தனர். |
40 | யோனத்தானின் மகன் மெரிபு பாகால்: மெரிபு பாகாலுக்கு மீக்கா பிறந்தார். |
41 | மீக்காவின் புதல்வர்கள் பித்தோன், மெலேக்கு, தகரேயா, ஆகாசு. |
42 | ஆகாசுக்கு யாரா பிறந்தார்: யாராவுக்கு அலமேத், அஸ்மாவேத், சிம்ரி பிறந்தனர். சிம்ரிக்கு மோட்சா பிறந்தார். |
43 | மோட்சாவுக்கு பினேயா பிறந்தார்: இவர் மகன் இரபாயா: இவர் மகன் எலயாசர்: இவர் மகன் ஆட்சேல். |
44 | ஆட்சேலுக்கு ஆறு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் பெயர்களாவன: அசிரிக்காம், பொக்கரு, இஸ்மயேல், செயர்யா, ஒபதியா, ஆனான். இவர்கள் ஆட்சேலின் புதல்வர்கள். |