படிப்புகள்: 6
Print

      குறைந்த இறக்கமுள்ள மேலாடைகள் அல்லது அகலக் கழுத்துள்ள மேலாடைகளை அணிவது ஆண்களின் கண்களுக்கு ஒரு மிகப்பெரிய சோதனை என்று முழு உலகத்துக்கும் நன்றாகவே தெரியும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நீங்கள் ஒரு தேவபக்தியுள்ள பெண்ணாக இருந்தால், வேண்டுமென்றே குறைந்த இறக்குமுள்ள மேலாடைகள் அல்லது அகலக் கழுத்துள்ள மேலாடைகளை அணிவதைக் குறித்து நீங்கள் கனவு காணமாட்டீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் கவனக்குறைவாகவோ அல்லது ஏதேச்சையாகவே இத்தகைய ஆடைகளை அணிந்துகொண்டிருக்கலாம். இது இறக்கம் குறைந்த மேலாடைகளுக்கு மட்டுமின்றி, அளவுக்கு மீறிய தொள தொள மேலாடைகளுக்கும் பொருந்தும்.  இத்தகைய ஆடைகளை அணிந்துகொண்டு உங்கள் கண்ணாடியின் முன் நிமிர்ந்து நின்று பார்க்கும்போது, இவை அடக்கமான ஆடைகளைப் போன்று தோன்றலாம். ஆனால் சற்றுக் குனிந்த நிலையில் பாருங்கள், உங்கள் மேலாடை உங்கள் உடலிலிருந்து விலகுவதைக் காண்பிர்கள். உங்கள் உடலிலேயே மிகவும் ஆபாசமான அல்லது கவர்ச்சியான பகுதி அதன் வழியாக வெளியே தெரியும். அது உங்கள் முன் நிற்கும் எந்த ஆணின் பார்வைக்கு வெளிப்பட்டு சோதனைக்குள்ளாக்கும். உங்கள் ரவிக்கையின் இரண்டு அல்லது மூன்று பொத்தான்களை அவிழ்த்துவிட்டு ஆடை அணியும் போதும் இவ்விதமான நிலையே உண்டாகும். உண்மையில் நீங்கள் வேண்டுமென்றே எதையும் வெளிப்படுத்தாவிட்டாலும்கூட இது கவர்ச்சியாகவும் ஆபாசமாகவும் தெரியும். உங்களது உடல் பாகத்தை வெளிப்படுத்தி, ஒருவனுடைய உணர்வைத் துண்டி, அவனை ஏக்கத்துள்ளாக்குவதற்காகவே இத்தகைய ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை இது அவனுக்கு ஏற்படுத்தும்.

இதைக் காட்டிலும் அவர் வேறு எவ்வாறு யோசிக்க முடியும்? வேறு எந்த நோக்கத்திற்காக உங்கள் மேலாடை அல்லது ரவிக்கையின் இரண்டு அல்லது மூன்று பொத்தான்களை அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள்? இவ்வாறு செய்தால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா? இறுக்கமாக இருந்தால் மூச்சு முட்டுகிறதா? ஆண்கள் தங்களது கட்டுமஸ்தான மார்புப் பகுதியை வெளியே காட்டும் வண்ணமாக உடை அணிவதைப் பார்த்து, நீங்களும் அவ்வாறு செய்ய முயற்சிக்கிறீர்களோ என்று நம்புகிறேன்.

உங்கள் வசதிக்காக ரவிக்கையின் கழுத்துப் பகுதியில் சற்று திறந்து வைப்பது முறையானதாக இருக்கலாம் அல்லது ஒரு பொத்தானை மட்டும் அவிழ்த்துவிட்டால் அது அடக்கமாகவும் இருக்கலாம் (இது ஆடையைப் பொறுத்து). ஆனால் இரண்டு அல்லது மூன்று பொத்தான்களைத் திறந்து வைப்பதற்கு என்னவிதமான காரணம் இருக்க முடியும் அல்லது அதற்கான சாத்தியம் என்ன? இது நிச்சயமாக உங்கள் வசதிக்காக அல்ல, இது ஒரு பொல்லாத உலகத்தின் ஒரு பொல்லாத நாகரீகத்தைப் பின்பற்றுவது மட்டுமே ஆகும். ஆடையின் கழுத்துப் பகுதியிலுள்ள மூன்று பொத்தான்களைத் திறப்பதைக் காட்டிலும், ஒரு பொத்தானைத் திறந்தால் அது உங்களை மூச்சுமுட்ட வைக்காது. ஒரு பொத்தான்களைத் திறந்தாலே அது நீங்கள் எதிர்பார்க்கிற வசதியைக் காட்டிலும் அதிக வசதியைக் கொடுக்கும். உங்கள் மேலாடையின் மேல் பொத்தானைத் திறந்து வைத்திருக்கும்போது, நீங்கள் குனிய நேரிட்டால், ஆடைக்கும் உடலுக்கும் இடைவெளி ஏற்பட்டு, உடலின் பாகங்கள் வெளியே தெரியாவண்ணம் இருந்தால் அதுவே நல்லது.  இது உங்களது ரவிக்கையின் தன்மை மற்றும் உடல்வாகைப் பொறுத்தது. ஆயினும் இவ்வாறு இருப்பதை அசௌரியமாக உணர்ந்தாலோ, அல்லது பாதுகாப்பின்மையை உணர்ந்தாலோ அனைத்துப் பொத்தான்களையும் போட்டுக்கொள்வதே சிறந்தது. இன்னும் உங்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், மேலாடையின் முதல் பொத்தானை ஒரு இஞ்ச் அளவுக்கு கீழே இறக்கி வைத்துத் தைத்துக்கொள்ளுங்கள், இது உங்களுக்கு சௌகரியத்தையும் தரும், கண்ணியமான வகையில் உடை அணிந்த வசதியையும் ஏற்படுத்தித் தரும்.

இது சிறிய காரியம்தானே என்று நீங்கள் அலட்சியமாக இருந்துவிட முடியாது. ஒரு பெரிய நெருப்பைப் பற்றவைப்பதற்கு ஒரு சிறிய காரியம் மட்டுமே போதுமானது. எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரண்டு மூன்று பொத்தான்கள் திறந்திருக்கிற ஒரு மேலாடையை அணிந்திருக்கிற ஒரு பெண்ணை ஓர் ஆண் காணும்போது, ஆண்களைக் கவர்ந்திழுப்பதும் அவர்களது உணர்ச்சியைத் தூண்டிவிடுவதுமே இப்பெண்ணின் நோக்கமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு அவன் வந்துவிடுவான். உங்களைக் குறித்து நீங்கள் அவனிடத்தில் உண்டுபண்ண விரும்புகிற தாக்கம் இதுதானா? இவ்வாறு விரும்பவில்லையெனில், ஆடையின் பொத்தான் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிற பொத்தானாக இருக்கட்டும், ஆடையின் கொக்கி உங்கள் ஆளுகையின் கீழ் இருக்கிற கொக்கியாக இருக்கட்டும், ஆடையின் இணைபல்பட்டிகையின் (ஷிப்) திறப்பு உங்கள் வசமாக இருக்கட்டும். நீங்கள் இறக்கமுள்ள, தொளதொள, அகலக் கழுத்துள்ள மேலாடையை அணிந்திருக்கும் போது, ஓர் ஆணுக்கு முன்பாக நீங்கள் குனிய நேரிட்டால், அவன் ஆதீதமான நல்லொழுக்கமுள்ள ஒரு நபராக இல்லாவிட்டால், உங்களுடைய நோக்கம் அதுவாக இல்லாவிட்டாலும் கூட, உங்கள் சரீரத்தின் மறைவான அவயவத்தைப் பார்த்து, அவன் மிகுந்த உணர்ச்சிக்குள்ளாகி, பாவ சோதனைக்கு ஆட்படுவான் என்பதில் சந்தேகமில்லை.

எனவே உலத்கதார் செய்வது போல விசுவாசிகளாகிய நீங்கள் செய்ய முடியாது. உங்கள் மேலாடையின் கழுத்துப் பகுதி போதுமான அளவு உயரமாகவும், சரியானதாகவும் இருக்கட்டும். உங்கள் மேலாடையின் கழுத்துத் திறப்பு, உண்மையிலே கழுத்துத் திறப்பாகவே இருக்கட்டும், அது மார்பகத்தின் திறப்பாகவோ, தோள்பட்டையின் திறப்பாகவோ இருக்க வேண்டாம். அப்பொழுது நீங்களும் மிகுந்த பாதுகாப்பாக இருப்பீர்கள். நன்றாகக் கவனியுங்கள்: உங்கள் மேலாடை கழுத்து வழியாகப் போடும்படியானதாக இருக்க வேண்டாம், அப்படி இருந்தால் அதனுடைய திறப்பு பெரியதாக இருக்கும். அகவே உங்கள் மேலாடையை அணிந்த பின்னர், பொத்தான்கள், கொக்கிகள், இணைபல்பட்டிகையால் மூடக்கூடியதாக இருக்கட்டும். அப்பொழுது அது சிறிய கழுத்து திறப்பைக் கொண்டதாகவும் உங்களுக்கு சௌகரியமானதாகவும் இருக்கும்.