உடலின் அங்கங்கள் வெளியே தெரியும் அளவுக்கு கண்ணாடி இழை போன்ற மெல்லிய துணியால் ஆன ஆடைகளைப் பற்றி எதாவது கூறுவது தேவையற்ற ஒன்றதாக நமக்கு இருக்க வேண்டும். அப்பட்டமான முறையில் மிகவும் மோசமானதாக இருக்கிற இத்தகைய ஆடைகளின் வடிவமைப்பானது, ஆடை அணிவதன் நோக்கங்களை மறுத்து, உடலை மறைப்பதற்குப் பதிலாக அதை அம்பலப்படுத்துகிறது. இதை நீங்கள் உணராமல் இருக்க முடியாது. ஒரு மனிதன் இத்தகைய உடை அணிந்திருக்கிற ஒரு பெண்ணைப் பார்க்கும்போது, உங்கள் உடலைக் காட்டுவதுதான் உங்களது நோக்கம் என்பதைத் தவிர வேறு என்ன அவனால் சிந்திக்க முடியும். இது அவன் மட்டுமல்ல அனைவருமே இவ்வாறுதான் அறிந்துகொள்வார்கள்.
இன்று சபைகளில் பெண்களின் ஆடை பற்றிய தரநிலைகள் மிகவும் கீழாக உள்ளன. கிறிஸ்தவ பெண்கள் இத்தகைய மெல்லிய ஆடைகளை அணிவதைப் பார்ப்பது அசாதாரணமானது அல்ல. நான் கூறுவது உங்களைக் குற்றப்படுத்தினால் உங்கள் முதல் வேலை மனந்திரும்புவது மட்டும்தான். கண்ணாடி போன்று மிகவும் மெல்லியதாக இருக்கிற ஆடைகள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, அவற்றை இனிமேலும் அணியாமல் இருப்பதுதான் உங்களது முதல் காரியம். சன்னலிருந்து வரும் சூரிய வெளிச்சத்தில் உங்களது அங்கங்களைப் பார்க்கிற அளவுக்கு மெல்லியதாக இருக்கிற அனைத்து உடைகளையும் நீங்கள் அணியாமல் இருக்க வேண்டும். இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்: நூல்களுக்கு இடையே மிகுந்த இடைவெளி விட்டும், ஒரே சீராக இல்லாமல் ஆங்காங்கே தடிமனாகவும் மெல்லியதாகவும் நெய்யப்படுகிற எந்தவொரு துணியால் செய்யப்படுகிற ஆடைகளை கட்டாயமாக நிராகரியுங்கள். நீங்கள் வலையினால் செய்யப்பட்ட ஆடைகளை அல்ல, நல்ல துணியால் செய்யப்பட்ட ஆடைகளை அணியுங்கள்.