படிப்புகள்: 276
Print

தேவன் உங்களுக்குக் கொடுத்த உங்கள் சரீர அழகில் எவ்விதத் தவறும் இல்லை; அவ்வாறே அதில் தீமையும் இல்லை. இது தேவனால் படைக்கப்பட்டது. தேவனால் படைக்கப்பட்டதெல்லாம் மிகவும் நன்றாயிருந்தது போலவே, உங்கள் சரீரமும் நன்றாயிருக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தேவனால் வடிவமைக்கப்பட்டது: பெண் "ஆணுக்காகவே" உருவாக்கப்பட்டாள் என்று வேதம் கூறுகிறது (1 கொரிந்தியர் 11:9). உங்கள் சரீர அழகும் அதன் வடிவமைப்பும் ஓர் ஆணின் இருதயத்தைத் திருப்திப்படுத்த வேண்டுமே தவிர, எல்லா ஆண்களையும் அல்ல. தேவன் உங்களை அந்த ஓர் ஆணுடன் இணைத்திருந்தால், எல்லா வகையிலும் அந்த அழகை அவரிடம் மட்டுமே வெளிப்படுத்துங்கள்.

அப்பொழுது அவர் பிற பெண்களின் அழகுக்கும் கவர்ச்சிக்கும் ஆட்படாதவராக அல்லது குறைந்த சோதனையைச் சந்திப்பவராக இருப்பார். இவ்வாறு நீங்கள் உங்கள் சரீர அழகைப் பயன்படுத்தினால், அது உங்களுக்கு அதை அருளிய தேவனை மகிமைப்படுத்தும்; மேலும், அது யாருக்காகக் கொடுக்கப்பட்டதோ அந்த ஆணுக்கு மட்டுமே பயன்படும். இதற்கு மாறாக, உங்கள் சரீரத்தை முழு உலகமும் பார்க்கும்படி காட்சிப்பொருளாக்கினால் நீங்கள் விபசாரம் செய்கிறீர்கள். இப்படிச் செய்வதன் மூலமாக நீங்கள் உங்களையே மகிமைப்படுத்துவது மட்டுமின்றி, பிசாசுக்குச் சேவை செய்கிறவர்களாகவும் மாறிவிடுவீர்கள்.