இணை வசன வேதாகமம்

யாத்திராகமம் 3

                   
புத்தகங்களைக் காட்டு
1மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான்.சங் 78:70-72 ஆமோ 1:1 ஆமோ 7:14 ஆமோ 7:15 மத் 4:18 மத் 4:19 லூக் 2:8
2அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜூவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.யாத் 3:4 யாத் 3:6 ஆதி 16:7-13 ஆதி 22:15 ஆதி 22:16 ஆதி 48:16 உபா 33:16 ஏசா 63:9 ஓசி 12:4 ஓசி 12:5 மல்கி 3:1 லூக் 20:37 அப் 7:30-35
3அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதக்காட்சியைப் பார்ப்பேன் என்றான்.யோபு 37:14 சங் 107:8 சங் 111:2-4 அப் 7:31
4அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.உபா 33:16
5அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.யாத் 19:12 யாத் 19:21 லேவி 10:3 எபிரெ 12:20
6பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.யாத் 3:14 யாத் 3:15 யாத் 4:5 யாத் 29:45 ஆதி 12:1 ஆதி 12:7 ஆதி 17:7 ஆதி 17:8 ஆதி 26:24 ஆதி 28:13 ஆதி 31:42 ஆதி 32:9 1இரா 18:36 எஸ்தர் 3:4 சங் 132:2 எரே 24:7 எரே 31:33 எரே 32:38 எசே 11:20 சகரி 8:8 மத் 22:32 மாற் 12:26 லூக் 20:37 அப் 7:32 அப் 7:32
7அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.யாத் 2:23-25 யாத் 22:23 ஆதி 29:32 1சாமு 9:16 சங் 22:24 சங் 34:4 சங் 34:6 சங் 106:44 சங் 145:19 ஏசா 63:9 எபிரெ 4:15
8அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.ஆதி 11:5 ஆதி 11:7 ஆதி 18:21 ஆதி 50:24 சங் 18:9-19 சங் 12:5 சங் 22:4 சங் 22:5 சங் 34:8 சங் 91:15 ஏசா 64:1 யோவா 3:13 யோவா 6:38
9இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன்.யாத் 3:7 யாத் 2:23
10நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.1சாமு 12:6 சங் 77:20 சங் 103:6 சங் 103:7 சங் 105:26 ஏசா 63:11 ஏசா 63:12 ஓசி 12:13 மீகா 6:4 அப் 7:34 அப் 7:36
11அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.யாத் 4:10-13 யாத் 6:12 1சாமு 18:18 2சாமு 7:18 1இரா 3:7 1இரா 3:9 ஏசா 6:5-8 எரே 1:6 அப் 7:23-25 2கொரி 2:16 2கொரி 3:5
12அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.யாத் 4:12 யாத் 4:15 ஆதி 15:1 ஆதி 31:3 உபா 31:23 யோசு 1:5 ஏசா 41:10 ஏசா 43:2 மத் 28:20 மாற் 16:20 அப் 11:21 ரோம 8:31 எபிரெ 13:5
13அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.யாத் 3:14 யாத் 15:3 ஆதி 32:29 நியா 13:6 நியா 13:17 நீதி 30:4 ஏசா 7:14 ஏசா 9:6 எரே 23:6 மத் 1:21 மத் 1:23
14அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.யாத் 6:3 யோபு 11:7 சங் 68:4 சங் 90:2 ஏசா 44:6 மத் 18:20 மத் 28:20 யோவா 8:58 2கொரி 1:20 எபிரெ 13:8 வெளிப் 1:4 வெளிப் 1:8 வெளிப் 1:17 வெளிப் 4:8
15மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.யாத் 3:6 யாத் 4:5 ஆதி 17:7 ஆதி 17:8 உபா 1:11 உபா 1:35 உபா 4:1 2நாளா 28:9 மத் 22:32 அப் 7:32
16நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,யாத் 4:29 யாத் 18:12 யாத் 24:11 ஆதி 1:7 மத் 26:3 அப் 11:30 அப் 20:17 1பேது 5:1
17நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு.யாத் 3:9 யாத் 2:23-25 ஆதி 15:13-21 ஆதி 46:4 ஆதி 50:24
18அவர்கள் உன் வாக்குக்குச் செவிகொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.யாத் 3:16 யாத் 4:31 யோசு 1:17 2நாளா 30:12 சங் 110:3 எரே 26:5
19ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.யாத் 5:2 யாத் 7:4
20ஆகையால், நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.யாத் 6:6 யாத் 7:5 யாத் 9:15 எசே 20:33
21அப்பொழுது இந்த ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கப்பண்ணுவேன்; நீங்கள் போகும்போது வெறுமையாய்ப் போவதில்லை.யாத் 11:3 யாத் 12:36 ஆதி 39:21 நெகே 1:11 சங் 106:46 நீதி 16:7 அப் 7:10
22ஒவ்வொரு ஸ்திரீயும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்கள் குமாரருக்கும் உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பித்து, எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.யாத் 11:2 யாத் 12:35 யாத் 12:36 ஆதி 15:14 சங் 105:37

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.