Dr. Rev. தியோடர் வில்லியம்ஸ் அவர்களைப் பற்றி:
ஒவ்வொருவர் அந்நிய பாஷைக்கு வக்காலத்து வாங்கி வசன ஆதாரம் இல்லாமல் பலருடைய அனுபவங்களையும், தங்களுடைய அனுபவங்களையும் குறித்து எழுதி பலர் எழுதிய புத்தகங்களை மேற்கோள் காட்டினார்களே தவிர வேத வசனத்தில் ஆதாரம் காட்டவில்லை. அப்படி ஆதாரம் காட்டிய வசனங்களுக்கு இவர்களின் சொந்த வியாக்கியானங்களைத்தான் எழுதினார்கள். உண்மையான வசன விளக்கத்தை யாரும் எழுதவில்லை. இவர்கள் யாவரும் குறிப்பிடுகிற வசனம் 1 கொ. 14:1,2 வரம் அடையாளம் இவைகளை என்னுடைய முடிவரையில் கூறுகிறேன்.
அதற்கு இந்த மூன்று பிரதான பெத்தேகோஸ்தே பண்டிதர்கள் எழுதிய கட்டுரையை பிரபல வேத பண்டிதரும் வேதாகம கல்லூரி விரிவுரையாளரும் உலகின் பெரும்பாலான நாடுகளில் பெரும் பண்டித்துவம் பெற்றவர்களின் கலந்துரையாடலில் பங்கெடுத்து பல அரிய பட்டங்களை பெற்றவருமான சுநஎ.னுச. தியோடர் வில்லியம்ஸ் அவர்களிடம் காட்டி வாசித்து உங்கள் விளக்கங்களையும் விமர்சனங்களையும் ஜாமக்காரன் வாசகர்களுக்காக எழுதும்படி கோட்டுகொள்கிறேன் என கேட்டேன்.
இவர்களின் மூன்று பேர்களின் கட்டுரைகளை கொடுத்து மூன்று வாரங்களில் எனக்கு நீண்ட பதிலை கட்டுரையாக ஜாக்காரனில் வெளியிட அனுமதி தந்தார்.
BIBLE TEACHING MINISTRIES Rev.Dr. Theodore Williams, 64, Mahalakshmi Nagar. Chennai-600073 Ph.2375863
திருமறை காட்டும் சில உண்மைகள்
திருமறையில் காட்டும் தெய்வீகம் (Godliness) என்பது தேவனோடு உள்ள உறவு சம்பந்தப்பட்டவை ஆகும். ஆதலால் கீழ்ப்படிதல்,அவரை விசுவாசித்தல் என்பதுதான் மிக முக்கியமானவை ஆகும். கீழ்ப்படிதல்: தேவனைக்கனம் பண்ணுவது, அவருக்குப் பயப்படுவது. அவருடைய சித்தத்தை செய்வது :
அவரை விசுவாசித்தல்: அவரை சார்ந்திருப்பது அதோடு முழுவதும் நாம் அவருக்கு இணங்கி அவர் கையில் நம்மை ஒப்புவித்து, அவர் நமக்காக செயலாற்ற எதிர்பார்ப்பது என்பதாகும். ஆனால் இந்து மதத்தில்: பக்தியும், தெய்வீகமும் ஒருவர் பெற்ற அல்லது பெறுகிற பரவச அனுபவங்களாக உள்ளது. இந்த மாதிரியான புறமதத்தினரின் பரவச அனுபவங்கள் எப்படியோ, இதுவரை கட்டுரை எழுதிய மூவரின் சபைகளிலும், இவர்கள் தனிப்பட்ட அனுபவங்களிலும் நுழைந்துவிட்டது. துக்கமான விஷயமே? வெளிப்பாடுகள், தரிசனங்கள்: இயற்கைக்கு அப்பாற்பட்டு மனிதரைப் பிரமிக்க வைக்கும் அனுபவங்கள் செயல்கள் இவற்றை சார்ந்தவை ஆகும். உதாரணம் : சாய்பாபா, முக்தானந்தா, ராமகிருஷ்ணர், கிறிஸ்தவ வேதத்தில் சீமோன் (அப். 8) ஆகிய உதாரணமாககூறலாம்.
கிறிஸ்தவ பக்தி என்பது வித்தியாசமானதாகும்:
ஆதலால் கிறிஸ்தவ பக்திக்குத் திருமறையைப் படித்துக் கடவுளின் கட்டளைகளையும், வழிகளையும், சித்தத்தையும் அறிதல் மிக அவசியம் ஆகும். இவைகளுக்குத்தான் கிறிஸ்தவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இந்த திருமறை (வேத வசனம்) வழியில்தான் நாம் பக்தி விருத்தியடைய முடியும்.
சகோ. ஸ்டான்லியும் மற்றவர்களும் சொல்வதுபோல் அந்நிய பாஷையில் பேசுவதாலோ, பரவச அனுபவங்களாலோ பக்தி விருத்தியடையவே முடியாது என்று திட்டவட்டமாக கூறுகிறேன். பேதுரு, யோவான், யாக்கோபு, யூதா ஆகியவர்கள் பக்தி விருத்திக்காக அந்நிய பாஷையில் பேச வேண்டுமென்று ஏன் கூறவில்லை? பேதுரு நாம் யாவரும் வேத வசனத்தில் தான் ஆவியில் வளருவோமென்று தெளிவாகக் கூறுகிறார். (1 பேதுரு 2:23). சமாரியர்கள் அந்நிய பாஷையில் பேசினார்களென்று கூறப்படவில்லை. பவுலும் அந்நிய பாஷை வரத்தை பெற்றிருந்தானேயொழிய அதை அவன் அடையாளமாக பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
ரோம. 8:26ல் குறிப்பிட்ட வசனத்தில் வாக்குக்கடங்காத பெரும் மூச்சுகளோடு என்று குறிப்பிட்டுள்ளது, அந்நிய பாஷையில் ஜெபித்தல் என்று அர்த்தம் அல்ல. அப்படி வேதத்தில் எழுதப்படவும் இல்லை. அந்நிய பாஷையில் பேசாத விசுவாசிகளும் இவ்விதமாக ஜெபிக்கும் அனுவத்தை பெற்றிருக்கிறார்கள் என்பதை அறியவேண்டும்.
TPM பாஸ்டர் ராஜன் அவர்களின் விமர்சனத்தில் (பக்கம் 2) பாஸ்டர் அவர்கள் சுட்டிக்காட்டி எழுதிய எபேசி 1:13 KJV வேதாகம மொழிபெயர்ப்பு (After that Ye Believed) என்பது சரியான மொழிபெயர்ப்பல்ல. (Having belived) விசுவாசித்த பொழுது என்பதுதான் சரி.
ஒரு சந்தேகமுள்ள விஷயத்தின் சரியான அர்த்தத்தை அரிய வேண்டுமானால் கூடியவரை எல்லா மொழிபெயர்புகளையும் ஒப்பிட்டு பார்த்து மூல மொழியில் என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியது அவசியம். அப்போதுதான் சரியான அர்த்தத்தை விளங்கிக்கொள்ளமுடியும். மூல மொழி அகராதியில் ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை கவனித்து அந்த பதத்துக்கு சரியான வார்த்தையை தேர்ந்தெடுத்து பொருத்தி அர்த்தம்கொள்ள வேண்டும். இயேசுவை ஏற்றுக்கொண்ட விசுவாசிகள் யாவருக்கும் பரிசுத்த ஆவி உண்டு என்பது தவறு என்பதாக பாஸ்டர் ராஜன் அவர்கள் எழுதியுள்ளார். பாஸ்டர்.ராஜன் அப்படி கூறுவது மிகமிக தவறு. ரோம 8:9ல் தேவனுடைய ஆவி உங்களில் வசமாயிருந்திருந்தால் நீங்கள் மாமிசத்துக்கு உட்பட்டவர்களாக இராமல் ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல என்று மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. பாஸ்டர் அவர்கள் வேதவசனத்தை மிக தவறாக உபயோகிக்கிறார்.
இயேசு உள்ளத்தில் வருவதும் ஆவியானவர் உள்ளத்தில் வருவதும் ஒன்றுதான். அதோடு பிதாவும் கூட நமக்குள் வருகிறார். (யோ .14:23,24) இயேசுவானவர் சீஷர்கள்மேல் தம் ஆவியைத்தான் ஊதினார். அது பரிசுத்தாவியை அல்ல! என்று பாஸ்டர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது மிகவும் தவறு. கிறிஸ்துவின் ஆவிதான் பரிசுத்தாவியானவர் ஆகும். ரோ. 8:2ம் வசனத்தை பாஸ்டர் அவர்களை எடுத்து வாசிக்க சொல்லுங்கள். மேலும் அதே பக்கத்தில் சீமோன் என்பவன் பணத்தினால் பெற நினைத்தது அந்நிய பாஷை அடையாளத்தோடு உள்ள பரிசுத்தாவி என்று பாஸ்டர் குறிப்பிட்டுள்ளார், இது முற்றிலும் தவறு. அப்படி வேதத்தில் எழுதப்படவே இல்லை. எழுதப்படாத வசனத்தை இவர்கள்ஏன் இப்படி மாற்றி,திரித்து மக்களை குழப்புகிறார்கள்!
சீமோன் பணத்தினால் பெற நினைத்தது பரிசுத்தாவியின் வல்லமையைதானே தவிர அந்நிய பாஷையை அல்ல. ஏற்கனவே இந்த சீமோன் மாய வித்தைகாரனாக ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை கவனிக்க வேண்டும். தன் மாய வித்தைக்கு இந்த வல்லமை இருந்தால் மக்களை இன்னும் ஏமாற்றி பணம் சம்பாதிக்க நினைத்தான். அந்நிய பாஷையை பெற்றுக்கொள்ள அவன் விலை பேசவில்லை.
பாஸ்டர் சபை விசுவாசிகளாகிய உங்களை நோக்கி அந்நிய பாஷையில் பேசுங்கள் என்று சொன்னால் பேசுகிறீர்கள்! நிறுத்துங்கள் என்று சொன்னால் நிறுத்துகிறீர்கள். ஆகவே பரிசுத்தாவியானவராலேயே நீங்கள் (ஜனங்கள்) பேசவில்லை. பாஸ்டர் கட்டளை இடுவதால் மட்டுமே பேசுகிறீர்கள் என்று நான் குறிப்பிட்டது தவறு என்று பாஸ்டர் ராஜன் அவர்கள் எழுதியுள்ளார். மேலும் பாஸ்டர் ராஜன் அவர்கள் ஆராதனை நடத்தும் பாஸ்டருக்குள் இருக்கிற ஆவியானவர் அவர் மூலம் நிறுத்த சொல்கிறார். பேச சொல்கிறார் அதனால் ஜனங்களும் செய்கிறார்கள் என்று பாஸ்டர் கூறியுள்ளார்கள். மேலும் இதிலே தவறு என்ன இருக்கிறது என்று பாஸ்டர் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேதத்தில் எங்காவது பேதுருவோ (அப.; 10) பவுலோ இப்படி பேச சொல்கிறார்களா? அப் 19:1. கொரி 14 ஆகிய இந்த வேத பகுதிகளிலும் எங்கும் இப்படி சொல்லப்படவில்லையே!வேதத்தில் எங்கும் கூறப்படாததை தன் சொந்த அனுபவத்திலிருந்து இந்த பாஸ்டர்கூறுகிறார்! இது ஆபத்து! பாஸ்டர் ராஜன் அவர்கள் எழுதிய விமர்சனத்தை வாசிக்கும்போது அவருக்கு வேத வியாக்கியானத்தில் பல குழப்பங்கள் காணப்படுகிறது என்பது மிகத் தெளிவாக அறிய முடிகிறது. இவர் எல்லா மொழிப்பெயர்ப்புகளையும் படிக்க வேண்டும் அல்லது மூல மொழிகளையாவது இவர் நன்றாக அறிந்திருக்கவேண்டும். அதன்பிறகு மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும்.
பாஸ்டர் ராஜமணி புதிய ஏற்பாட்டில் அந்நிய பாஷைகள் பேசப்பட்ட 3ம் இடம் குறிப்பிடுகிறார். 1) எருசலேம் அப். 2:4, 2) செசரியா 10;:45 3) எபேசு 19:16 இந்த மூன்று இடத்தில் பேசப்பட்ட அந்நிய பாஷையில் ஒவ்வொன்றிலும் வேறுபாடுகள் உண்டு. அப்.2ல் திட்டவட்டமான மொழிகளில் அந்தந்த மொழிக்குறியவர்கள் புரிந்து கொள்ளதக்கதாக தேவனுடைய மகத்துவமான செயல்களை சொன்னார்கள் என்று தெளிவாக எழுதியிருக்கிறது. தேவனுடைய மகத்துவமான செயல்கள் என்றால் என்ன? அது கிறிஸ்துவின் மரணம். உயிர்த்தெழுதல் என்பவைகளாகும்.
எபேசுவில் ஞானஸ்நானம் பெற்ற சீடர்கள் யாவரும் யோவான் ஞானஸ்நானத்தை பெற்றிருந்தார்கள். அவர்கள் யாவரும் பரிசுத்தாவியானவரைபற்றி அறிந்திருக்கவில்லை. ஆக பாஸ்டர் ராஜாமணி அவர்கள் ஒரு விஷயம் மூன்று சாட்சியங்களால் உறுதிப்படும் என்று எழுதியது போல, சகல காரியங்களும் உறுதிபடுத்த பயன்படும் மூன்று சாட்சியங்களாக ராஜாமணி அவர்கள் இந்த மூன்று இடங்களையும் ஒப்பிடுவது பொருந்தாது. ஒவ்வொரு இடங்களிலும் பேசப்பட்ட அந்நிய பாஷையின் வேறுபாடுகளை கவனிக்க சொல்லுங்கள்.
பவுல் அதிகமான பாஷைகளை பேசியதாக குறிப்பிடும் விஷயத்தில் பவுல் அந்நிய பாஷையை அடையாளமாக பெற்றுக்கொள்ளவில்லை. வரமாகத்தான் பெற்றுக்கொண்டார். அடையாளம் என்பது வேறே. வரம் என்பது வேறே. மேலும் அப் 2ல் பரிசுத்தாவியில் நிறைந்து பற்பல பாஷைகளில் தேவனை புகழ்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தார்கள் என்றும். அவர்கள் பேசியதை மற்றவர்கள் குடித்து, வெறித்து, கும்மாளம் போடுவதாக எண்ணினார்கள்; என்று பாஸ்டர் ராஜாமணி அவர்கள் எழுதியுள்ளார். இது தவறு. அப்படி வேத புத்தகத்தில் எழுதப்படவேயில்லையே. இவர்களெல்லாம் வேதத்தில் இல்லாத வார்த்தைகளை, எப்படி இவ்வளவு தைரியமாக எழுதுகிறார்கள். அப்படியே பிரசங்கத் செய்கிறார்கள். இவர் எழுதியதை வாசிக்கும் யாரும் வேதத்தை திறந்து வாசிக்க மாட்டார்கள் என்று இவர் நினைக்கிறாரோ!
அந்த வசனங்களில் கூடியிருந்த அவர்கள் புகழ்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தார்கள் என்றோ 13ம் வசனத்தில் குடித்து வெறித்து கும்மாளம் போடுவதாக மற்றவர் எண்ணினார் என்றோ எழுதப்படவில்லையே . ஜெபத்தில் தேவனை புகழ்ந்துகொண்டிருந்தனர் என்று மறுபடியும் மற்றொரு இடத்திலும் வேதத்தில் எழுதப்படாத வார்த்தையை இவர் தவறாக எழுதியுள்ளார். தயவுசெய்து அவரை அப். 2:11ஐ மறுபடியும் வாசிக்க சொல்லுங்கள். கிரேக்கரும் அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களை பேச கேட்கிறோமே என்கிறார்கள் என்று மட்டுமே எழுதியிருக்கிறது.வேதத்தில் எழுதப்படாததை எழுதியதாக கூறுவது தேவ கோபத்தை உண்டாக்கும். பாஸ்டர்.ராஜமணி அவர்களுக்கும், பாஸ்டர்.ராஜன் அவர்களுக்கும் ஆபத்தை உண்டாக்கும்.
ஜெப மொழியாக அந்நிய பாஷை குறிப்பிட்டுள்ளதாக வசனம் மூலம் அறியலாம் என்றும் அனைவரும் அந்நிய பாஷை பேசியதாக வசனம் கூறுவதாகவும் பாஸ்டர் அவர்கள் மறுபடியும் வேத வசனத்தை தவறாக குறிப்பிட்டுள்ளார். இவர் குறிப்பிட்ட வசனங்கள் பெரும்பாலும் எல்லாமே தவறாக இருக்கிறது. மேலே இவர் குறிப்பிட்டபடி ஒரு வசனமும் வேதத்தில் இல்லை! 11ம் பக்கத்தில் கடைசி பத்தியில் இவர் குறிப்பிட்ட 1 கொரி. 12:10 வசனத்தில் கூட இவர் குறிப்பிட்டபடி எல்லோரும் அந்நிய பாஷை பேசியதாக எழுதப்படவில்லையே? எந்த தைரியத்தில் லட்சக்கணக்கான மக்கள் வாசிக்கும் பத்திரிக்கையில் இப்படி பொய்யாக எழுதத் துணிந்தார். இவருடைய சபை விசுவாசிகளே இவருடைய தவறான விளக்ககங்களை இவர் குறிப்பிட்ட பொய்யான வசனங்களை தங்கள் வேத புத்தகத்தில் எடுத்து வாசித்தால் பாஸ்டரைப்பற்றி என்ன நினைப்பார்கள்? அந்த பயம் கூட அவருக்கும் இல்லாமல் போனதென்ன?
அந்நிய பாஷையை நம்பாத எந்த போதகராவது சiபாராவது தீர்க்கதரிசனம் சொல்லி சபையை பக்தி விருத்தி அடைய செய்கிறார்களா?என்று பாஸ்டர் ராஜாமணி அவர்கள் கேள்வியை எழுப்பியுள்ளார். ஆம் அந்நிய பாஷை பேசாத உண்மை போதகர்களின் ஊழியத்திலும் வசன போதனையும் தீர்க்கதரிசன வரமும் ஒன்றாய் செயல்படுகின்றன என்பதை பாஸ்டர் ராஜாமணி அவர்கள் அறிய வேண்டும்.
பக்தி விருத்தி என்றால் என்ன? பக்தி விருத்தி என்பது பரவச அனுபவங்களால் வருவதல்ல.யோவான், பேதுரு, யாக்கோபு, யூதா போன்ற நிருபங்களில் ஏன் அந்நியபாஷை பற்றி அவர்கள் ஒரு வசனத்திலும் குறிப்பிடவில்லை, யோசித்து பாருங்கள். பேதுரு தன் நிருபத்தில், வசனம் ஆவிக்குரிய வளர்ச்சியை தரும் என்று கூறுகிறாரே (1 பேதுரு. 2:2,3) இதுவல்லவா பக்தி விருத்தி!
பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் பெந்தேகோஸ்தே சபைகளை சேராத வேத பண்டிதர்கள் எழுதியது என்று 2 பேர்களை குறிப்pட்டுள்ளார். அதில் இவர் குறிப்பிட்ட டாக்டர் பீட்டர் வேக்னர் என்பவர் பெந்தேகோஸ்தே சபையை சார்ந்தவர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். காரணம் நான் அவரைக்குறித்து அறிந்தவன். இவருடைய தவறான உபதேசத்துக்கு சாதகமாக டாக்டர் பீட்டர் வேக்னர் அவர்களை ஒரு பெந்தேகோஸ்தே சபையை சாராத நபராக பாஸ்டர் ராஜாமணி அவர்கள் ஆக்கிவிட்டார்.
சகோ. ராஜசேகர் (பெங்களூர்) (SABC- வேதகாம கல்லூரி ஆசிரியர்) அவர்கள் எழுதிய விமர்சனத்தில் பக்கம் 16ல் மூன்று இடங்களில் அந்நிய பாஷை குறித்து சொல்லிவிட்ட காரியத்தை வேத்தில் மற்ற இடத்தில் ஒவ்வொரு இடத்திலும் திரும்ப திரும்ப வரி பிசகாமல் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று எழுதியுள்ளார்.
இவர் கூறியபடி அந்நிய பாஷை அவ்வளவு முக்கியமானால், கட்டயமாக எல்லா இடங்களிலும் குறிப்பிட்டுருக்க வேண்டியது. அவசியமானதல்லவா? இவரும்பாஸ்டர் ராஜாமணி அவர்களை போல எருசலேம் செசரீயா. எபேசு ஆகிய இடங்களில் அந்நிய பாஷை பேசப்பட்டதை ஒரே மாதிரியான அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார். இல்லை அவைகள் யாவும் ஒரே மாதிரி அனுபவங்கள் அல்ல! அந்த மூன்று அனுபவங்களில் வேறுபாடுகள் உள்ளன.
(குறிப்பு: சகோ ராஜசேகர் எழுதிய கருத்துக்களை அவர் எழுதிய மற்ற பெரும்பாலான கருத்துக்களை Dr. Rev. தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் விமர்சிக்கும்போது ஒரு பள்ளி மாணவனுக்கு ஆசிரியர் சைபர் மார்க் போட்டதைபோல Dr. Rev. தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் 0000 என்று எழுதி அவருக்கு 000 மார்க்கு குறிப்பிட்டு கருத்து தெரிவித்து உள்ளார் அவர் எழுதிய பெரும்பாலான கருத்துக்களுக்கு பதில் தெரிவிக்க தகுதியற்றவை என்று குறிப்பிட்டுள்ளார்.
சகோ. ஸ்டான்லி அவர்கள் எழுதிய விமர்சனத்தில் பெந்தேகோஸ்தே நிகழ்ச்சியன்று பாஷைகள் மக்களை கவர்ந்தன என்று எழுதியுள்ளார். அவர் எழுதியது நூற்றுக்கு நூறு தவறு! பாஷைகள் மக்களை கவரவில்லை! அங்கு தேவனுடைய மகத்துவங்களை பல பாஷைகளில் அவர்களோடு பேசப்பட்டது. அப். 2:11. அந்த பற்பல பாஷைகள்தான் அந்த மக்களை சிந்திக்க வைத்தது. அவர்களை கவர வைத்ததும் அவைகள்தான் என்று Dr. Rev. தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் எழுதியிருக்கிறார்.
தேவனுடைய மகத்துவங்கள் என்பது கிறிஸ்துவின் சிலுவை மரணம். உயிர்ந்தெழுதல் ஆகியவைகள் அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டது அல்லது பேசப்பட்டது. அந்த வசனத்தை மறுபடியும் வாசித்துப்பாருங்கள். அடுத்தது மாற்கு சுவிசேஷத்தில் நற்செய்தியை விசுவாசிப்பவர்கள் நவமான பாஷைகளைப் பேசுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் அப்படியல்ல. அந்த நற்செய்தியை அறிவிக்கத்தான் இந்த வரம் அருளப்படுகிறது என்பதை சகோ.ஸ்டோன்லி அவர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும்.
மாற்கு 16ல் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளம் என்று இயேசு நவமான பாஷையை மட்டும் குறிப்பிடவில்லையே! அந்த வசனங்களில் குறிப்பிட்ட மற்ற அடையாளங்களை அந்நிய பாஷை பேசும் எல்லா விசுவாசிகளும் செய்கிறார்களா? அந்நியபாஷையை மட்டும் முக்கியப்படுத்தி மற்ற அடையாளங்களைப்பற்றி இவர்கள் பேசுவதே இல்லை. ஆகவே நற்செய்தியை அறிவிக்கும் சூழ்நிலையில் நவமான பாஷைகள் முதல் இயேசு கூறின மற்ற எல்லா அடையாளங்களும் செயல்படுகின்றன.
சகோ.ஸ்டாலின் அவர்களும் அந்நிய பாஷையானது நம்மை நாமே பக்தி விருத்தியடைய செய்கிறதாக எழுதியுள்ளார். பக்தி விருத்தி எந்த வர்னிப்பினாலும் உண்டாவதில்லை. வசனத்தினால் மட்டுமே பக்தி விருத்தி உண்டாகும். இது கீழ்படிதலுக்குறியது, உணர்ச்சிக்கல்ல. இவரும் ரோம 8:26ல் ஆவியானவரின் பெருமூச்சு என்று குறிப்பிடுவதை அந்நிய பாஷை என்பதைப்போல் காண்பிக்கிறார். திட்டமாக அது அந்நிய பாஷையை குறிப்பிடுவனல்ல.
பெந்தேகோஸ்தே சபையினர் செய்யும் இப்படிப்பட்ட பயித்தியக்கார கேலி கூத்துகளை அப்படியே ஐ இராஜாக்கள் புஸ்தகத்தில் பாகால் தெய்வத்துக்கு பலியிட்ட தீர்க்கதரிசிகளின் செயலோடு வாசித்துப் ஒப்பிட்டு பாருங்கள். பலிபீடத்தின் விறகின்மேல் வைக்கப்பட்ட மாமிசத்தை, நெருப்பு பற்ற வைக்காமல் அதை எறிய வையுங்கள் பார்க்கலாம் என்று உண்மை ஊழியனான எலியா அவர்களோடு சவால் விடுகிறான். அப்போது நானூற்றுஐம்பது பாகாலின் (ஊழியக்காரர்கள்) தீர்க்கதரிசிகள் தங்கள் தெய்வமான பாகாலை அழைத்து நெருப்பில்லாமல் பலி பீடத்தில் வைத்துள்ள விறகை பற்றவைக்க பாகாலிடம் வேண்டினார்கள் பதில் இல்லை! அப்போது அந்த நானூற்று ஐம்பது தீர்க்கதரிசிகளும் அவர்கள் தெய்வமான பாகாலை நோக்கி வேண்டிக்கொண்ட அவர்களின் ஆராதனை முறையை பைபிளில் வாசித்துப்பாருங்கள் 1இராஜாக்கள் 18:26 அவர்கள் தெய்வமான பாகாலை கூப்பிட சத்தம் போட்டார்கள், கூக்குறலிட்டார்கள். பலி பீடத்துக்கு அருகே சென்று குதித்து ஆடினார்கள் என்று வேதம்கூறுகிறது. இதே ஆட்டத்தைதான் இன்று அனைத்து பெந்தேகோஸ்தே சபைகளிலும் ஆராதனையில் நீங்கள் காணலாம்.
சமீபத்தில் சேலம் AG சபையில் வாலிபர்களுக்காகவும் வாலிப பெண்களுக்காகவும் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். ஆவிக்குரிய வளர்ச்சி அடையாத அந்த வாலிப பிள்ளைகளை வேத அறிவில் வளர்ந்துகொண்டிருக்கும் அந்த இளம் வாலிப பிள்ளைகளை ஜெப வேளையில் குதிக்க வைத்து, கதற வைத்து வேடிக்கை பார்த்தார்களே. இந்த சின்ன வயதிலேயே இப்படிப்பட்ட தவறான அனுபவத்தை அந்த வாலிப பிள்ளைகளின்மூளையில் செலுத்தினால் இவர்கள் இந்த சபையில் தொடர்ந்து ஆராதிப்பார்களேயானால் இவர்கள் ஆவிக்குரிய வளர்ச்சி வசனத்தில் காணப்படாது. பரவச அனுபவத்தோடு நின்றுபோகும். அந்த அனுபவமும் அவர்களின் சபை ஆராதனையுடன் நின்றுபோகும்.
இப்படி போலி பாஷைகளை பேசுகிறவர்களின் வீட்டில் சாட்சியிருக்காது! தொழிலில் சாட்சியிருக்காது! பெற்றோர்க்கு பிள்ளைகள் அடங்க மாட்டார்கள். பல பாவ சம்பவங்கள் பாவதொடர்புகள் இவர்கள் வாழ்கையில் நிச்சயம் காணப்படுமே! இதை தான் AG சபையின் அடிப்படை தவறான உபதேசம் என்று குறிப்பிடுகிறேன். சபை ஆராதனையில் சபை மக்கள் இடும் சப்தங்கள்.ஊளைகள், கைதட்டல்கள், கதறல்கள் யாவும் பாஸ்டர்களையும் சபையில்உள்ள குட்டி பாஸ்டர்களையும் சபை மக்களையும் ஊக்கப்படுத்துகிறது. அந்த கதறலை அவர்கள் ரசிக்கிறார்கள். வல்லமை வந்துவிட்டதாக அந்த வாலிப உள்ளங்களை நம்ப வைக்கிறார்கள்.
சிலர் பரிசுத்த ஆவியானவரைப்பற்றி டாக்டர்.புஷ்பராஜ் ஆகிய நீங்கள் நக்கலாக, கிண்டலாக பேசி அவமானப்படுத்திவிட்டீர்கள் என்ற குற்றச்சாட்டை எழுப்பினார்கள். நான் பரிசுத்தாவியானவரை நக்கலாக கிண்டலாக பகடியாக பேசவில்லையே! அப்படி பேச துணிவேனா? நான். பரிசுத்த ஆவியானவர் பெயரில் ஜெபவேளையில் இவர்கள் கூத்தடிக்கிறார்களே அதைத்தான் கிண்டலாக பகடியாக குறிப்பிட்டேன்.
பாகாலின் பூசாரிகள் ஆடிய நடனம்:
எலியா பலிபீடத்தின்முன் குதித்தவர்களை நடனடமாடியவர்களை பார்த்து என்ன சொன்னான் வாசித்து பாருங்கள் (27ம் வசனம்). மத்தியான வேளையில் எலியா அவர்களை பரியாசம் பண்ணி இன்னும் உரத்த சத்தமாக கூப்பிடுங்கள் என்றான். பெந்தேகோஸ்தே சபை ஆராதனையிலும் பாஸ்டர்கள் இவ்வாரு கூறுவதை கவனித்திருப்பீர்ளே! இந்த சப்தம் போதாது! அல்லேலூயா! அல்லேலூயா! இன்னும் சத்தம் இன்னும் கூட அதிக சத்தம் வேண்டும்! இப்படி கூறித்தானே சபை மக்களைகூக்குரலிட வைத்து ஆராதனையை பைத்தியமாக்குகிறார்கள். சில பாஸ்டர்கள் ஆராதனை ஆராதனை என்று சத்தம் போட வைக்கிறார்கள். இப்படி ஆராதனை ஆராதனை என்று கூக்குரலிட்டால் அது ஆராதனை ஆகுமா? என்ன விளையாட்டு இது? எலியா இப்படிப்பட்டவர்களை பார்த்து கூறியது என்ன? உங்கள் தெய்வம் தியானத்தில் இருப்பான் அதனால் காது கேட்கவில்லை போலும்! இன்னும் சத்தமாக கத்துங்கள் என்றான். அடுத்து ஒருவேளை உங்கள் தெய்வத்துக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் உங்கள் தெய்வம் பிஸியாக இருப்பான். இன்னும் கெஞ்சம் கத்தி கூப்பிட்டு பாருங்களேன்! என்றான். அதோடு நிற்கவில்லை ஒரு வேளை உங்கள் தெய்வம் எங்கோ பிரயாணம் பண்ணிக்கொண்டிருப்பான். அதனால் உங்கள் சத்தம் அவனுக்கு கேட்கவில்லை . வெகு தூரம் போகிறவரை கைதட்டி சத்தமாக கூப்பிடுவதைப்போல கூப்பிட்டு பாருங்களேன். இதுதான் எலியா கூறியதின் விவரிப்பு. அடுத்த வார்த்தை தான் மிகவும் தமாஷான வார்த்தை, உங்கள் தெய்வம் ஒருவேளை தூங்கிக்கொண்டிருப்பான். சின்ன சத்தத்துக்கு எழுந்திருக்கமாட்டான்! ஆகவே இன்னும்கூக்குரலிடுங்கள் என்று என்னமாய் எலியா நக்கலடிக்கிறான் பாருங்கள்.
நாம் ஆராதிக்கும் தெய்வம் பாகாலை போலவா? இல்லையே! யோசித்துப் பாருங்கள். சங். 121:4 இஸ்ரவேளை காக்கிறவர் உறங்குவதுமில்லை. தூங்குவதுமில்லை. உன் வலது பக்கத்திலே நிழலாயிருக்கிறார். உறங்குவதில்லை என்பதற்கு ஓய்வு எடுப்பதில்லை என்பதுதான் சரியான மொழியெர்ப்பு. இப்படி கண்மணிபோல் நம்மை காக்கும் நம் தெய்வத்தை ஒழுங்கீனமான முறையில் ஆராதிக்கும் இப்படிப்பட்ட சபையிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டாமா? நடனமாட சொல்லும் ஊழியர்களிடமிருந்து நம் வாலிபர்களை காப்பாற்ற வேண்டாமா?. ஆகவே தான் நான் சகோ.ஸ்டேன்லி, சகோ.லைனல். AG, TPM சபைகளின் தவறான உபதேசத்தை விமரிசிக்கிறேன். பரிசுத்த ஆவியானவரைப்பற்றி இவர்கள்தான் தவறாக புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். தவறாக என்பதைவிட அப்படிபட்ட ஆரதனையில் பல வருடங்கள் பழகிவிட்டார்கள் என்று கூறுவதுதான் பொருந்தும். அது தவறு என்று இவர்கள் விளங்கிக்கொண்டாலும் அதை நிறுத்துவது இவர்களுக்கு அத்தனை எளிதல்ல .
சகல ஜனங்களே, கைக்கொட்டி தேவனுக்கு முன்பாக கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள். சங் 47, இதுபோல கர்த்தரை உரத்த சத்தமாக கூப்பிடுங்கள். அடக்கிக்கொள்ளாதே. தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாக அவன் கத்தினான். தேவன் அவன் சத்தத்தை கேட்டு குணமாக்கினார். மற்றவர்களோ அவன் சத்தமிடுகிறதை அடக்கினார்கள். இப்படிப்பட்ட வசனங்களை தெரிந்தெடுத்து வேதம் சத்தம்போட்டு ஜெபிக்க சொல்கிறது. ஆகவே நீங்கள் மௌனமாக நிற்காதீர்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு சத்தம் போட்டு துதிக்கிறீர்களோ அந்த அளவு பரிசுத்த ஆவியானவர் வல்லமையாய் இறங்குவார், அக்கினி அபிஷேகம் இறக்கம் என்று கூறி அக்கினி, அக்கினி அக்கினி என்று ஆராதனை நடத்துகிறவர்கள் சபை மக்களை மூளை சலவை செய்து கதற வைக்கிறார்கள். இவைகள் யாவும் பழைய ஏற்பாட்டு மக்கள் கைக்கொண்டது, புதிய ஏற்பாட்டு சபை ஆராதனை போதிப்பது வேறு. அதனால்தான் சொல்கிறேன். பெந்தேகோஸ்தே சபை உபதேசம் உள்ளவர் யாவரும் பழைய ஏற்பாட்டு கிறிஸ்தவர்கள் என்று குறிப்பிடுவதில் தவறென்ன?
அந்நிய பாஷையைப்பற்றி பாஸ்டர் ராஜாமணி . சகோ.ஸ்டர்னலி, சகோ.லைனல் ஆகியவர்கள் எழுதிய தவறான வியாக்கியானத்தைபற்றி அவ்வளவு தெளிவாக ஜாமக்காரனில் நான் எழுதியும் சேலம் AG சபை பாஸ்டர்.ராபர்ட் சிங் அவர்கள் 18-9-2016 ஆராதனை அன்று பரிசுத்தாவியானவரிடம் நீங்கள் கேட்கும்போது அவர் அந்நிய பாஷையை நம் வாயில் கொடுக்கிறார். அந்நிய பாஷை என்றால் ஹிந்தி, மராத்தி போன்ற பாஷை அல்ல! அந்நிய பாஷை உங்களுக்கு கிடைத்தால் உங்கள் ஒருவருக்கும் கோபம் வந்தால் கெட்டவார்த்தையில் திட்டமாட்டீர்கள் அது பரிசுத்த வார்த்தையாக மாறும். அதற்குத்தான் பெயர் அந்நிய பாஷை என்று கூறினார். இப்படி ஒரு புது சொந்த வியாக்கியானத்தை இவர் ஆராதனையில் பேசியதை நானே கேட்டேன். இப்படியெல்லாம் அவரவர் இஷ்டம்போல பிரசங்கித்து வேத வசனத்துக்கு உண்மையான, சரியான விளக்கத்தை கொடுக்காமல், சபை மக்களை இப்படியா குழப்புவது? யாராவது நீங்கள் ஆராதனையில் பிரசங்கித்த இந்த தவறான விளக்கத்துக்கு வேத வசன ஆதாரம் காண்பிக்க முடியுமா? என்று பாஸ்டரை நோக்கி கேட்டார்களா? கேட்க மாட்டார்கள். எல்லா பெந்தேகோஸ்தே மக்கள் நிலையும் இனி அவ்வளவுதான். வசனத்தில் வளர்ந்து வசனத்தை தங்கள் வாழ்க்கையில் சாட்சியின்மூலம் நடைமுறைபடுத்தும்போது அதனால் அனுபவிக்கும் விசேஷ இன்பத்தை இவர்கள் யாரும் ருசிக்க வழியில்லை. இவர்கள் யாரும் இதை சொல்லித்தர மாட்டார்கள்.
இவர்களுக்கு துதி ஆராதனை போதும் துதி மட்டுமே இவர்களை பரலோகத்திற்கு அழைத்து சென்றுவிடும் என்ற தவறான எண்ணத்தை சபை மக்கள் மனதில் பதிய வைக்கிறார்கள். ஒருவர் மின்னஞ்சலில் பெந்தேகோஸ்தே சபையினர் ஜெபத்தில் பேசும் பாஷையை ஆராய்ந்து எழுதியுள்ளார். இவரும் பல வருடங்கள் பெந்தேகோஸ்தே சபையில் ஆராதித்து இப்போது தெளிவு பெற்று அந்த சபையைவிட்டு விலகி தன்னை காப்பாற்றிக்கொண்டவர். அவர்தான் இப்படி எழுதினார். கீழே வாசிக்கும் இந்த வார்த்தைகள்தான் பெரும்பாலும் எல்லா பெந்தேகோஸ்தே சபைகளிலும் கேட்கப்படும் உளரல் சத்தமாகும். இந்த வார்த்தைகளை தவிற வேறு வார்த்தைகள் இவர்களின் அந்நிய பாஷை என்று கூறப்படும் உளரலில் கேட்க முடியாது. சரபல சங்கர பல இரபல தூர்க்கா பல ரிக்கல பல ரிப்பா ஊரிபா ரிவ லிபா ஒரி ப பா பா ம பரஜல தராக்க ரிமா பல சந்திரிகல பாம பௌதி க ர ம பலா ஆலோபாம ஷா மா சத்திரிக்கயாம்
பெரும்பாலான பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள், சபை விசுவாசிகள் யாவரலும் மேலே வாசித்த வார்த்தைகளை போலதான் எல்லாரும் பேசுவார்கள். மேலே குறிப்பிட்ட வார்த்தைகளில் ஏதாவது ஒரு வார்த்தையாவது எல்லா பெந்தேகோஸ்தே சபை பாஸ்டரும்,சபை மக்களும் பேசும் பாஷையில் நீங்கள் நிச்சயம் கேட்கலாம்.
அந்நிய பாஷை பேசும் பெரும்பாலானவர்கள் சப்தத்தை கவனித்தால் சங்கரபல என்ற வார்த்தை அடிக்கடி கூறுவதைபெரும்பாலும் அனைத்து பெந்தேகோஸ்தே சபைகளிலும் கேட்கலாம். தமாஷாக இல்லை?
இந்த குறிப்பிட்ட 1 கொரி 14:26ம் வசனத்தை பெந்தேகோஸ்தே சபையினர் சுட்டிக்காட்டிதான் தாங்கள் பேசும் அந்நிய பாஷைக்கு அர்த்தம் தேவை இல்லை. அர்த்தம் கேட்டக்கூடாது என்று கூறி, இதை வைத்தே தன் சபையினரை எல்லாரும் வாய்க்கு வந்;தபடி உளருங்கள். அதுதான் தேவன் தரும் அந்நியபாஷை என்று நம்ப வைக்கிறார்கள். அந்நிய பாஷையில் ஜெபத்தில் பேசுவதால் அது தேவனோடு பேசுவதாகும் என்று ஒரு போடு போட்டால் யாரும் எதிர்; கேள்வி கேட்கமாட்டார்கள். இதைக்கூறித்தான் சபை மக்களை ஏமாற்றுகிறார்கள். இது தெவ தூஷணமாகும். இதற்கு கிடைக்கும் தண்டனையை பாஸ்டர்கள் உணரவில்லை.
அந்நியபாஷையை இவர்கள் சபை மக்களுக்கு சொல்லித் தருகிறதை கவனித்திருக்கிறீர்களா?. நாக்கை தளர்த்திவிடுங்கள், வாயை மூடிக்கொண்டால் ஆவியானவர் உங்கள் வாயை உபயோகிக்கமாட்டார். பலரின் நாக்கை பிசாசு கட்டி வைத்திருக்கிறான். அதனால்தான் அந்நியபாஷை உங்கள் வாயிலிருந்து வருவதில்லை. இப்படி கூறினால் பயமுறுத்தினால் ஆராதனையில் உள்ளவர்களில அந்நிய பாஷை பேச தெரியாதவர்கள் வெட்கப்பட்டு நெளிந்து கொண்டிருப்பவார்கள். அப்படிப்பட்டவர்கள்கூட வாயை திறந்து வெறுமனே ஸ்தோத்திரம் என்ற வார்த்தையாவது கூறுவார்கள். ஆராதனையில் தங்கள் அருகே நிற்பவர்கள் தங்களைக் குறித்து தவறாக நினைத்துவிடுவார்களோ என்று கூச்சத்தில் ஸ்தோத்திரம் மட்டும்கூறுவார்கள். இப்படிப்பட்ட காட்சிகள்தான் இன்று அனைத்து பெந்தேகோஸ்தே சபைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.