நற்செய்தி கைப்பிரதிகள்

Logopit 1734714675770

ஆசிரியர்: பெயர் அறியப்படாதவர்.

தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்.

 

 

இன்றைய நாட்களில் செல்வந்தர்களாகவும், தொழிலாதிபராகவும் இருக்கிற பலர் அவர்களுடைய ஆரம்ப நாட்களில் ஏழைகளாகவே தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். அப்படிப்பட்டவர்களில் “சர் டைட்டஸ் சால்ட்” என்பவரும் ஒருவர். இவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அவருடைய குழந்தை பருவத்தில் தொழிலாளியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். கடினமாக உழைக்க வேண்டும் என்ற உறுதியும், சுறு சுறுப்பான செயல்பாடு கொண்டவர் டைட்டஸ், அவர் கரடு முரடான கம்பளியை தரமாக மாற்றும் முறையைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரடு முரடான கம்பளியை, மிருதுவான கம்பளியாக மாற்றக்கூடிய நுட்பத்தின் மூலம், அவர் பல லட்சக் கணக்கான பவுண்டுகளை அதாவது (லண்டன் பணம்) சம்பாதித்து பெரிய தொழிளதிபர் ஆனார். ஆனால் டைட்டஸ் இன்னும் வளரவேண்டும் என்ற ஆர்வம் அவரை அதோடு விடாமல், இன்னும் மேன்மேலும் வளர வேண்டும் என்ற அரவம் அவருக்குள் இருந்தது.

இரவும் பகலும் கடுமையாக உழைத்து, 'அல்பாகா' என்ற மற்றொரு செயலியைக் கண்டுபிடித்து, அவருடைய துறையில் அவர் உச்சத்தை தொட்டார். கோடி கோடியான பணத்தை சம்பாதித்த பிறகு, “டைட்டஸ் சால்ட்” என்பவர் தனது பெயரில் தொழிலாளர்களுக்கு ஒரு சிறந்த தொழிற்பேட்டையைக் கட்டினார். அதுவே இப்போது "சால்தாரே" என்ற நகரமாக அழைக்கப்படுகிறது, அதன் பிறகு அவர் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது கண்டுபிடிப்புகளும், அவரது முன்னேற்ற பாதைக்கான சிந்தனைகளும், தொழில் வளர்ச்சிக்கும் நாடு முன்னேற்றத்திற்கும் மிகவும் உதவியாக இருந்தது எனவே, அந்நாட்டின் அரசியான விக்டோரியா மகாராணி டைட்டஸுக்கு "சர்" என்ற பட்டத்தை அளித்து "பரோன்" என்ற அந்தஸ்தையும் வழங்கி அவரை கௌரவித்தார்.

கனத்துக்கும், மரியாதைக்கும் உரிய “சர் டைட்டஸ் சால்ட்” என்பவர் பல சாதனைகளை அடைந்த பிறகு உண்மையான மகிழ்ச்சியைக் கண்டறிந்தரா? "காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை." (பிரசங்கி 1:8). ஞானியான சாலோமன் கூறியது போல், செல்வந்தன் மனதில் மகிழ்ச்சியும் நிறைவும் காணமால் இருக்கிறான். பணத்தின் மூலம் அனைத்து சுகங்களையும் அனுபவித்தாலும், பல நாடுகள் சென்று அனைத்து பொழுது போக்குகளையும் கண்டு கழித்தாலும், அவர்களுடைய மனது வறண்ட பாலைவனம் போல்தான் உள்ளது. “டைட்டஸ் சால்ட் மனதுக்கு இளைப்பாறுதல் இல்லாமல் ஓயாத சோகமாக இருந்தார்.

இதற்கிடையில், ஒரு திருச்சபையில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் டைட்டஷும் கலந்துக் கொண்டார். அன்று செய்தியில், போதகர் கம்பளிப்பூச்சியைப் பற்றி பேசினார், அதை டைட்டஸ் கவனமாக கேட்டார். அந்த போதகர் இவ்விதமாக சொன்னார்: 'என் வீட்டு தோட்டத்தை அலங்காரத்துக்காக சில மரபலகை துண்டுகளை நட்டு, அதற்கு வெவ்வேறு விதமான வண்ணங்களை தீட்டியிருந்தேன். ஒரு நாள் ஒரு கம்பளிப்பூச்சி வேகமாக வந்து வண்ணம் பூசப்பட்ட அந்த மர பலகையின் மேல் ஏறி ஏதாவது சாப்பிட கிடைக்குமா? என்ற நம்பிக்கையில் அங்குமிங்குமாக சுற்றிப் திரிந்தது. அதன் கண்களுக்கு இந்த மர பலகைகள் மிகவும் அழகாக இருந்ததால், அங்கு ஏதாவது ஒரு நல்ல உணவு இருக்கவேண்டும் என்று கம்பளிபுச்சி நம்பியது,

ஆனால் அங்கு எதுவும் கிடைக்காததால். மன சோர்வுடன் அந்த கம்பளிபுச்சி கீழே இறங்கி மற்றொரு வண்ணம் புசப்பட்ட மர பலகையை கண்டு இந்த முறை கண்டிப்பாக ஏதாவது கிடைக்கும் என்று நம்பி அதன் மேலே ஏறியது கண்களை கவரும் படியான வண்ணத்தை தவிர அங்கு எதுவும் இல்லை. அந்த தோட்டம் முழுவதும் உள்ள மர பலகை அனைத்தின் மீது ஏறி பார்த்த புழுவுக்கு ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இந்த உலகத்தில் பல வண்ணம் பூசிய மர பலகைகள் உள்ளன. அவை: பணம், புகழ், வசதி, பொழுதுபோக்கு, அதிகாரம், ஆடாம்பரம் போன்ற பல நிறங்கள் மக்களை கவரும் படியாக அவை ஈர்க்கின்றன. அந்தந்த துறைகளில் நம்பிக்கையுடன் எவ்வளவுதான் மேலே உயர்ந்தாலும் மனிதனுடைய உள்ளம் திருப்தி அடைவதும் இல்லை, அவனுடைய மனதுக்கு ஓய்வு கிடைப்பதுமில்லை. ஏனென்றால் அவை அனைத்தும் வண்ணம் பூசப்பட்ட மரக் பலகைகள் தான் என்று சொல்லி முடித்தார் அந்த போதகர்.

மறுநாள் காலை நேரத்தில் போதகரின் வீட்டுக் கதவை யாரோ தட்டிக் கொண்டிருந்தார்கள். போதகர் கதவைத் திறந்ததும் வெளியே மரியாதைக்குரிய டைட்டஸ் நின்றுக் கொண்டிருந்தார். டைட்டஸ் போதகரிடம், ஐயா! நேற்று நான் ஞாயிறு ஆராதனையில் கலந்து கொண்டேன். உங்கள் பிரசங்கத்தில் நீங்கள் சொன்னதுப்போல நானும் வண்ணம் பூசப்பட்ட மர பலகைகளில் ஏறுவதும், இறங்குவதுமாக மிக சிரமப்பட்டு கொண்டிருக்கிறேன். என்னுடைய மனதிற்கு மெய்யான இளைப்பாறுதல் எப்படி கிடைக்கும் என்பதை தயவுசெய்து விவரிக்க முடியுமா?' என்று அவர் கேட்டார். அப்போது அந்த போதகர், "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத்தேயு 11:28) வாழ்க்கை என்ற பாலைவனப் பயணத்தில் சோர்ந்து போன மக்களை அன்புடன் அழைத்த இரட்சகர் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், அவர் செய்து முடித்த பாவ பரிகாரத்தையும் விவரமாக சொன்னார்.

"எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது," (எரேமியா 17:9). அந்த பாவம் என்ற நோய் நம்முடைய இருதயத்திலிருந்து நீக்கப்பட்டால், ஒழிய உண்மையான இளைப்பாறுதல் கிடைக்காது. இரத்தம் சிந்தப்படாமல் பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." (1 யோவான் 1:9). “டைட்டஸ்” தனது பாவங்களை ஒப்புக்கொண்டு இயேசு கிறிஸ்துவை தனது இருதயத்தில் இரட்சகராகவும், ஆண்டவராகவும் விசுவாசித்தார். கர்த்தரை விசுவாசித்த அவருடைய இருதயத்தில் இயேசு கிறிஸ்து பிரவேசித்து, பாவத்தைக் கழுவி, இருதயத்தைத் தூய்மையாக்கினார். மேலும், அவருடைய பாவச் சுமையை நீக்கி, "சொல்ல முடியாத மகிமையான மகிழ்ச்சியை" அவருக்கு தந்து ஆசீர்வதித்தார். அந்த செல்வந்தனின் வாழ்வில் முதன் முதலாக மன மகிழ்ச்சியும், தெய்வீக சமாதானமும் நிறைந்து, அந்த செல்வந்தன் இவ்விதமாக தேவனை போற்றி புகழ்ந்தான்.

“அசைக்க முடியாத பாவ சுமைகளில் மூழ்கி இருந்தேன்.

உம்முடைய கரத்தை நீட்டி அனைத்திற் என்னை”

நீக்க முடியாத பாவ பாரத்தை என்னில் அகற்றி,

கொடுத்திரே எனக்கு பாவத்திலிருந்து மா விடுதலை,

பெற்றேனே நான் பரோலோக மகிழ்ச்சியை!

அன்பான நண்பரே, நீங்களும் உண்மையான இளைப்பாறுதல் கொடுக்காத, உங்களுக்கு சமாதனம் இல்லாத வண்ணம் பூசப்பட்ட தூண்களில் ஏறுகிறீர்களா? நீங்கள் தேவனை விட்டு விலகி உலக மாயைகளால் வழி தவறி வாழ்கிறீர்களா? வேத வசனங்கள் இவிதமாக இதைத்தான் எச்சரிக்கின்றன. “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.” (பிரசங்கி 11:9). டைட்டஸைப் போலவே, உங்கள் இதயத்தில் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய வார்த்தைக்கு கீழ்படியுங்கள். அப்பொழுது பாவ மன்னிப்பு, மற்றும் ஆத்தும பாதுகாப்பும் தேவ சமாதானத்தைப் பெறுவீர்கள்.

தாவீது என்ற ராஜா இவிதமாக சொன்னார், “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்." (சங்கீதம் 32:1). “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்,” (அப்போஸ்தலர் 16:31). “இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.” (2 கொரிந்தியர் 6:2).

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.