எங்கு பார்த்தாலும் கைபிரதிகளே...!
"வணக்கம் ஐயா" என்று சொல்லியபடியே ஒரு முதியவரை நோக்கி ஒரு நபர் வந்தார். அந்த நபர் ஒரு கரத்தில் வேதாகாமமும், மற்றொரு கரத்தில் சுவிசேஷ கைபிரதிகளை ஏந்திய படியே, ஒரு கைப்பிரதியை அந்த முதியவருக்கு கொடுத்தார். அந்த முதியவர் இந்த நபரைப் பார்த்து “இது என்ன?” என்று கேட்டார். அந்த நபர் முதியவரைப் பார்த்து: இது, "தேவனுடைய அன்பைக் குறித்து சொல்லும் கைபிரதி ஐயா!” என்றார். அதற்கு அந்த முதியவர்: எங்குப் பார்த்தாலும் இதுப்போன்ற மதபிரச்சார கைபிரதிகள் தான் என்று வெறுப்போடு சொன்னார். அதற்கு அந்த நபர்: ஐயா! நரகத்தில் இப்படிப்பட்ட கைபிரதியே இருக்காது. என்று அந்த நபர் சொன்ன வார்த்தையை கேட்டவுடனே! அந்த முதியவர் சற்று சிந்தனைக்கு உள்ளனர். “நரகம் என்ற வார்த்தை அவர் உள்ளத்தில் ஊடுருவி சென்றது. மீண்டும் மீண்டும் அவரின் நினைவுக்கு வந்துக் கொண்டே இருந்தது. அந்த முதியவரின் இருதயம் திறக்கப்பட்டது. ஆம்! “நரகத்தில்” கைபிரதி இருக்காது என்ற உண்மையை ஏற்றுக்கொண்ட அந்த முதியவர், அந்த நபர் கொடுத்த கைபிரதியை வாங்கி படிக்கத் தொடங்கினார். அந்த கைபிரதியில்; “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3:16) என்று எழுதியிருந்தது!
“அன்பு கூர்ந்தார்” என்ற இனிமையான அந்த வேத வசனம் முதியவரை மிகவும் கவர்ந்தன. “மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே." (யாக்கோபு 4:13). "இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்." (பிரசங்கி 12: 7, 14). “வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.” என்று இயேசுகிறிஸ்து சொன்னார். (லூக்கா 21:33) "எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?" (எரேமியா 17:9).
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மனித இருதயத்தை பின்வருமாறு விவரித்தார்: "எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்." (மாற்கு 7:21,22), சகல பாவங்களும் முதலில் இருதயத்தில் இரகசியமாக பிறந்து பிறகு வெளிப்படும். "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." (ரோமர் 6:23). "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி," (ரோமர் 3:23).
பாவத்தின் பலனைப் பொறுத்து நரகத்திற்கு செல்கிறார்கள், "பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்." (வெளிப்படுத்துதல் 21:8). அந்த முதியவர் இந்த வசனங்களை வாசித்துக் கொண்டிருக்கும் போது தேவன் அவருடைய இருதயத்தில் பேசினார். பரிசுத்தமான தேவனுக்கு முன்பாக தான் ஒரு பாவி என்பதை உணர்ந்தார். தனக்கு உண்டான யாவும் தன்னுடைய ஆத்துமாவை பரலோகத்திற்கு கொண்டு செல்லாது என்பதையும், அவருடைய கல்வியோ, கலாச்சாரமோ, புத்தியோ, ஞானமோ இவையெல்லாம் தன் பாவப் பழக்க வழக்கங்களால் உண்டான இவைகளிலிருந்து விடுவிக்க முடியாது என்பதையும் அவர் உணர்ந்தார். இந்த முதியவர் எல்லா மக்களாலும் மதிக்கப்படுபவர். மேலும், அவருக்கு தேவையான சாப்பாடும், உடுத்த உடை என எல்லா வற்றையும் பெற்று சுகபோகத்துடன் வாழ்ந்தார். ஆனால் இருதயத்தில் மட்டும் அமைதியான பயமும், எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் அவரை சூழ்ந்துக்கொண்டது.
"மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?" (மாற்கு 8:36). ஏழையானாலும், பணக்காரனாலும் யாராக இருந்தாலும் ஒரு நாள் மரிக்க வேண்டும்! அவ்வாறு மரித்த பிறகு இந்த உலகத்திலிருந்து தன்னுடைய சரீரத்தை விட்டு செல்லும்போது நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளவேண்டும் தேவனின் நோக்கத்தையும், அவருடைய அன்பான விருப்பத்தையும் உணர வேண்டும். நம் பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலமாக, “பாவ மன்னிப்பும், தேவ சமாதமானமும் நம்முடைய வாழ்க்கையில் கிடைக்கும், ஆனால் உலக செல்வம், உலக அறிவு மற்றும் உலகத்துக்குரிய நற்காரியங்கள் நம்மை பரலோகத்திற்கு கொண்டு செல்லாது. "பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல, என்று இயேசுகிறிஸ்து சொன்னார். (லூக்கா 12:15).
அந்த கைபிரதியை வாசித்த முடித்த அந்த முதியவர் இப்படியாக தன்னுடைய இருதயத்தில், பரிசுத்த ஆவியனவாரால் சிந்தனைக்கு உள்ளனார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை இரட்சிக்க முடியும். என்னுடைய பாவங்களை மன்னித்து தேவனுடைய இராஜ்யத்தில் அவரால் சேர்க்க முடியும் என்ற விசுவாசம் அவருக்கு வந்தது. அந்த முதியவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, அவர் தேவ சமாதானத்தைப் பெற்றார். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." (1 யோவான் 1:9). "இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." (1 யோவான் 1:7). "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.” (அப்போஸ்தலர் 16:31).