நற்செய்தி கைப்பிரதிகள்
ஆசிரியர்: பெயர் அறியப்படாதவர்.
தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்.
 
ஒலி வடிவில் கேட்பதற்கு,
 

ஒரு பள்ளத்தாக்கில் நில உரிமையாளர் ஒருவர் இருந்தார். அவருக்கு பரந்துபட்ட விவசாய நிலங்களும், பல தோட்டங்களும் மற்றும் மரங்களும் வயல் நிலங்களும் இருந்தன. அந்த “நில உரிமையாளர்” தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி வயல்களையும் அவற்றின் பயிர்களையும் பார்வையிடுவது வழக்கம். அந்த சுத்து வட்டாரத்திலே அவன் மிகப்பெரிய செல்வந்தன். அவனுடைய நிலத்தில் பல கூலியாட்கள் உழைத்தனர். அவர்களில் “ஜான்” என்ற தேவ பக்தியுள்ள ஒரு முதியவரும் இருந்தார். அந்த முதியவர் பல வருடங்களாக அந்த செல்வந்தனின் தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார். ஒரு நாள் மதியவேளையில் முதியவரான ஜான் தனது தலைக்கட்டு துண்டை கழற்றி வைத்து விட்டு, உட்கார்ந்து ஒரு பழைய தூக்கு பாத்திரத்தை தன் முன்பாக வைத்து, கண்களை மூடிக்கொண்டு, அந்த உணவுக்காக அந்த முதியவர் தேவனுக்கு நன்றி சொன்னார்.

அந்த தூக்கு பாத்திரத்தில் குளிர்ந்த நிலையில் இருந்த உணவின் அளவு குறைவாக தான் இருந்தது. அந்த சமயத்தில் செல்வந்தன் அங்கு வந்து முதியவரைப் பார்த்து, 'ஜான், நீ ஏன் தேவனுக்கு நன்றி சொல்லுகிறாய்? உனக்கு தேவன் என்ன கொடுத்தார்? ஒன்றுமில்லையே! பின்பு ஏன் அவருக்கு நன்றி சொல்லுகிறாய்?' என்று கேட்டார். அதற்க்கு அந்த முதியவர்: 'ஐயா, தேவன் எனக்கு எண்ணற்ற உதவிகளையும், நன்மைகளையும் செய்துள்ளார். பல கோடி செலவழித்தும் கிடைக்காத பாவ மன்னிப்பும், ஏன் இருதயத்தில் சமாதானத்தையும், பரோலோகப் பிரவேசமும் தந்துள்ளார். எனக்கு தினமும் உணவளித்து என்னை போஷித்து காக்கிறார். எனவே அவருக்கு நன்றி சொல்லுவது எனக்கு உத்தமம், என்று அந்த செல்வந்தருக்கு பணிவாகப் பதிலளித்தார்,

அதற்கு அந்த செல்வந்தன் முதியவரை மேலும் கீழுமாக பார்த்து 'பைத்தியக்காரன்' என்று மனதிற்குள்ளாக சொல்லிக்கொண்டு, தன்னுடைய, குதிரையின் மீது ஏறி அந்த இடத்திலிருந்து புறப்பட்டான். அந்த செல்வந்தனின் குதிரையும் சற்றுத் தூரம் சென்றிருந்தது. "ஐயா, ஒரு நிமிடம் நில்லுங்கள் என்ற சத்தத்தோடே அழைத்தார் அந்த முதியவரான ஜான். அப்போது அந்த செல்வந்தர் திரும்பி வந்து குதிரையின் கடிவாளத்தை கையில் இழுத்து, வெறுப்போடு 'என்ன?' என்று முதியவரிடம் கேட்டான்..

அப்போது அந்த முதியவர் அந்த செல்வந்தனிடம், நேற்று 'இரவு நான் ஒரு கனவு கண்டேன்' என்றார். அதற்கு ‘என்ன கனவு அது? என்று செல்வந்தன் கேட்டான். அந்த முதியவர் 'இன்று இரவு 12 மணியளவில் இந்தப் பள்ளத்தாக்கில் வசிக்கும் ஒரு பெரிய செல்வந்தன் மரணமடைவதாக நான் கனவு கண்டேன்’ என்று அந்த முதியவர் உறுதியாகக் சொன்னார். அப்போது செல்வந்தன், சிரித்தப் படியே 'வயதானவர்களுக்கு இதுபோன்ற கனவுகள் தான் வரும் என்று அந்த முதியவரிடம் சொல்லிவிட்டு, அலட்சியமான முக சுழிப்போடு குதிரையை ஓட்டிக்கொண்டு சென்று விட்டான். குதிரை அந்த நிலப்பகுதியில் உள்ள அழகான மரங்களையும் மற்றும் வயல்களையும் கடந்து வெகுதூரம் ஓடியது, ஆனால் அந்த முதியவர் கனவைக் குறித்து சொன்ன வார்த்தைகள் மட்டும் செல்வந்தனை விட்டு விலகவில்லை. "பள்ளத்தாக்கில் உள்ள செல்வந்தன் இன்று இரவு 12 மணிக்கு இறந்துவிடுவார்" இந்த வார்த்தைகள் அவரது மனதையும், இருதயத்தையும் சமாதனம் இல்லாமல் செய்தது. எவ்வளவு முயன்றும் அதை அந்த செல்வந்தனால் மறக்க முடியவில்லை.

அவன் தன் வீட்டுக்கு சென்றதும் நகர் புறத்திலிருந்து தன்னுடைய குடும்ப மருத்துவரை வரவழைத்து, அவரிடம் இவ்விதமாக சொன்னான் ‘டாக்டர், என் உடல் முழுவதையும் பரிசோதனை செய்யுங்கள் என்று சொன்னான். செல்வந்தன் சொன்ன வார்த்தைகள் மருத்துவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நீண்ட நேரமாக அனைத்து உபகரணங்களின் உதவியால் அவரைப் பரிசோதித்த மருத்துவர், செல்வந்தனை பார்த்து 'உன் உடல்நிலை மிகவும் நன்றாக தான் இருக்கிறது, நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார். அவ்விதமாக சொல்லிவிட்டு. அப்போ நான் கிளம்பலாமா? என்று கேட்டார் அந்த மருத்துவர், ஆனால் அதற்கு சம்மதிக்காத செல்வந்தன், 'நீங்கள் இன்று இரவு முழுவதும் என்னுடனே இருக்கவேண்டும்' என்று அந்த மருத்தவரிடம் கேட்டுக் கொண்டான். மருத்துவரும், செல்வந்தனும் இரவு முழுவதும் விழித்திருக்க ஏற்பாடு செய்தான்.

அவர்கள் இருந்த கோட்டையில் உள்ள கடிகாரம் மணிக்கொரு முறை ஒய்யாரமாக ஒலித்தது. ஒன்பது, பத்து, பதினொன்று என நேரங்கள் கடந்தது. அந்த செல்வந்தன் எழுந்து அங்கும் இங்குமாக தன்னுடைய படுக்கை அறையைச் சுற்றி சுற்றி வந்தான். நேரம் நெருங்க நெருங்க வியர்வை முகத்தில் வடிந்தது கவலை நிறைந்த முகத்தோடும், உயிரற்ற கண்களோடும், நடுங்கும் உடலோடும் படப்படப்போடு கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த மருத்துவர் அந்த செல்வந்தனை பார்த்து ‘நீங்கள் அமைதியாக இருங்கள், உங்களுக்கு ஒன்றும் ஆகாது’ என்றார் அந்த மருத்துவர். மரண பயத்தாலும், மரணத்தின் நினைவாலும் செல்வந்தன் நிம்மதியை இழந்தான். இப்போது நேரம் பதினொன்றரை கடந்து பன்னிரண்டு மணிக்கு பத்து நிமிடம் குறைவாக இருந்தது. செல்வந்தனின் கால்களும் கைகளும் அதிக நடுக்கத்துடன் இருந்தான். அவர் எழுந்து அந்த பத்து நிமிடங்களை மிகவும் சிரமத்துடன் கழித்தார்.

கோட்டையின் கடிகாரம் 12 முறை ஒலித்தது. 'அப்பாடா' என்று பெருமூச்சு விட்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தான் அந்த செல்வந்தன். கால்களின் நடுக்கமும் இதயத்துடிப்பும் குறைந்தது. கண்டம் கடந்துவிட்டது’ என்று நிம்மதி அடைந்தான்.

12:30 மணியளவில் அவனுடைய வீட்டு கதவை யாரோ தட்டினார்கள். வீட்டில் இருந்த இருவரும், இந்த நேரத்தில் கதவைத் தட்டுவது யாராக இருக்கும், என்று நினைத்தார்கள். அந்த மருத்துவர் கதவைத் திறந்ததும், எதிரே ஒரு தொழிலாளி நின்றிருந்தான், அந்த தொழிலாளி இவ்விதமாக சொன்னான் ‘ஐயா, நம்ம நிலத்தில் வேலை செய்கிற முதியவரான ஜான் என்பவர் 12 மணிக்கு இறந்துட்டார்’ என்றான். அதற்கு அந்த செல்வந்தன் அப்படியா..! என்றான். அந்த பள்ளத்தாக்கில் இருந்த உண்மையான செல்வந்தன் சரியாக 12 மணிக்கு இறந்தார், அந்த முதியவரான ஜான் என்பவர் அளவிட முடியாத கிறிஸ்துவின் ஐஸ்வரியத்தையும், அந்த முதியவர் தேவனின் கிருபையின் மாபெரும் ஐஸ்வரியாத்தையும் பெற்றிருந்தான்.

இன்றைய நாட்களில் நாம் பல செல்வந்தர்களைப் பார்க்கிறோம். ஆனால், அவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சி இருப்பதில்லை. பாவம் அவர்களை நிம்மதி அற்றவர்களாக மாற்றுகிறது. அவர்களில் பலர் மன நிம்மதி இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்கள் இவ்வுலகில் செல்வந்தர்கள் தான், ஆனால் பரலோகத்தில் ஏழைகள். மனிதன் பாவ மன்னிப்பை பெற்று இரட்சிக்கப்பட்டு பரலோகத்தின் செல்வத்தைப் பெற வேண்டும் என்பதை தேவன் விரும்புகிறார். பரலோகத்தின் செல்வம் அழியாதாது, திருடர்களுக்கு கிடைக்காது, பூச்சிகளும் துருவும் அதை அழிக்காது என்று தேவன் வேதத்தில் சொல்லியிருக்கிறார்.

"ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். என்று." (மத்தேயு 6:31-33). "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." (ரோமர் 10:9).

எனவே, அன்பான வாசகரே, "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்." (அப்போஸ்தலர் 16:31). இதனால் தேவனின் ஈடு இனையில்லாத ஐஸ்வரியமான கிருபையும், நித்திய ஜீவனும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.