நீண்ட காலத்திற்கு முன்பு கிரேக்க நாட்டை “ஆர்க்யாஸ்” என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் சுயநலவாதியாக இருந்தான். மக்களின் தேவைகள், பிரச்சனைகள் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. எப்போதும் உல்லாசமாக இருந்து பல வகையான விருந்துகளை உண்பதிலும், மது அருந்துவதுமே அவனுடைய எண்ணமாக இருந்தது. எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது அவனுடைய பார்வையில் முட்டாள்தனமாக இருந்தது. அதினாலே நாட்டு மக்கள் அந்த அரசனை வெறுத்தனர். இறுதியாக அரசனை கொல்வதற்கு அவர்களில் சிலர் ஒரு சதி திட்டம் தீட்டினார்கள்.
அந்த சதி திட்டத்தை குறித்து அரசனான ஆர்க்யாஸ்க்கு எதுவும் தெரியாது, ஆனால் தொலைதூர நகரமான “ஏதென்ஸ்” என்ற பட்டணத்தில் உள்ள அவரது நண்பருக்கு தெரிந்தது. உடனே அரசனனுக்கு ஒரு கடிதத்தை எழுதினார், அதில்: அரசனே, உனக்கு ஆபத்து! எனவே நீ எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். நாளைய தினத்தில் உன்னைக் கொல்வதற்கு ஒரு பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கவனமாக இருந்து, உடனே அந்த சதியிலிருந்து தப்பித்து கொள்ளுங்கள்" என்று கேட்டுக்கொண்டான். மேலும் அந்த கடிதத்தில் அந்த சதி திட்டத்தில் இருந்து தப்பிக்க ஒரு வழியையும் எழுதி இருந்தான். அந்த கடித்திதை ஒரு ஒற்றனிடம் கொடுத்து அனுப்பினான். அந்த ஒற்றன் அரசனான ஆர்க்யாஸின் அரண்மனைக்கு புறப்பட்டான்.
அந்த சமயத்தில் ஆர்க்யாஸ் அரசன் ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்து, தனது நண்பர்களுடன் உல்லாசமாக விருந்து உண்டு, குடித்துக்கொண்டிருந்தான். ஒற்றன் மிக நீண்ட தூரமாக பயணம் செய்த பிறகு அரண்மனையை வந்தடைந்தான். அந்த ஒற்றன் அரண்மனை கவாலளியிடம் அரசனுக்கு முக்கியமான கடிதம் ஒன்றை கொடுப்பதற்காக ஏதென்ஸ் பட்டணத்திலிருந்து நான் வந்துள்ளேன் என்றான். காவலாளிகள் அரசனிடம் செல்வதற்கு உடனே அந்த ஒற்றனுக்கு அனுமதி வழங்கினார்கள். அந்த ஒற்றன் அரசனிடம் வந்து "என் அருமை மன்னரே, எத்தேன்ஸ் பட்டணத்திலிருந்து உமது நண்பர் என்னை அனுப்பியதற்கு காரணம் இந்த கடிதத்தை உடனடியாக நீங்கள் வாசிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதில் மிகவும் முக்கியமான ஆபத்தான செய்தி இருக்கிறது!" என்று பணிவுடன் சொன்னான். மது போதையில் இருந்த அரசன், கடிதத்தைப் வாசிக்க விரும்பாமல், "ஹாஹா, என அழச்சயமான சிரிப்புடன் ஆபத்தான காரியங்களா, நாளை பார்ப்போம்" என்று கூறிவிட்டு மீண்டும் விருந்து பரிமாறும் இடத்துக்குச் சென்றான்.
சோகம் என்னவேன்றால் அரசனுக்கு "நாளை" என்பது மீண்டும் வரவில்லை. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சதிகாரர்கள் திடீரென விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அங்கே, அரசனும், மற்றும் அவரது நண்பர்களும், குடிபோதையில் மூழ்கியிருந்தார்கள். அவர்கள் ஒன்றும் அறியாதிருந்தார்கள் சதிகாரர்கள் கடுங்கோபமாய் விரைந்து வந்து, அவர்களுடைய வாள்களால் அரசனையும் அவனது நண்பர்களையும் கொன்றனர்.
அன்பான வாசகரே, நீங்களும் நாளை தினத்தைப் பற்றி கவலை இல்லாமல் இவ்வுலக இன்பமே முக்கியம் என்று நினைக்கிறீர்களா? நன்றாக சம்பாத்தியம் செய்து மகிழ்ச்சியாக வாழ்வதே இந்த வாழ்வின் குறிக்கோள் என்று எண்ணுகிறீர்களா? நீங்கள் விரும்பியதைச் செய்து அதை மட்டுமே மகிழ்ச்சி என்று இருக்கிறீர்களா? தேவ பக்தி, ஆத்தும இரசிப்பு, பாவ மன்னிப்பு போன்ற அவசியமான விஷயங்களைப் பற்றி நீங்கள் சிந்திக்க விரும்பமால், அவற்றை நாளை பார்ப்போம், என்று ஆர்க்யாஸ் அரசனைப் போல சொல்லுகிறவர்களா? ஒரு நொடி காத்திரு! உனக்கும் “நாளை” என்பது வராமல் போகாலம், ஒருவேளை இன்றே உங்கள் வாழ்க்கைப் பயணம் முடிவடையலாம், யாருக்குத் தெரியும்?
நாம் எதிபார்க்காத சமயத்தில் நம்முடைய மரண நாள் எப்படி நம்மைச் சந்திக்கும் என்பதை விளக்குவதற்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த உவமையைச் சொன்னார்: "ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்." (லூக்கா 12:16-20)
உன் ஆத்மாவுக்கு ஒரு எதிரி உண்டு. அவன் தேவனின் எதிரியாகிய சாத்தான். அவன் எந்த வகையிலாவுது உன்னை ஏமாற்றி, உன் ஆத்துமாவை நரகத்திற்கு போகும்படி செய்து, உன்னை தேவனுக்குரிய காரியங்களைப் பற்றி சிந்திக்க விடாமல் தடுக்கிறான். இந்த கைபிரதியின் செய்தியைக் கூட உன்னை ஏற்றுக்கொள்ள தடைசெய்வான். ஆனால், ஒரு உண்மையை தெரிந்துக்கொள்! உன் ஆத்துமாவை நேசிக்கும் உயிருள்ள தேவன் இன்று உன்னை எச்சரிக்கிறார். பாவத்தின் சம்பளம் மரணம், அதாவது நரகம். தேவனின் நியாயத்தீர்ப்பு உங்கள் மீது உள்ளது. வரப்போகும் நியாயத்தீர்ப்பிலிருந்து நீ தப்பித்துக் கொள்ள தேவன் ஒரு வழியையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.
தேவன் ஏற்படுத்தியிருக்கும் அந்த வழி என்னவென்றால், உனக்காக சிலுவையில் உயிர் தியாகம் செய்த இயேசுகிறிஸ்து உன் பாவங்களுக்காக நீ அடையவேண்டிய தேவனின் கோபத்தையும், நியாயத் தீர்ப்பையும் உனக்கு பதிலாக இயேசுகிறிஸ்து ஏற்றுக்கொண்டார். அவர் மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இன்று அவர் தேவனின் வலது பாரிசத்தில் உயர்ந்த சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார். தான் ஒரு பாவியென்றும் தன்னுடைய பாவத்தை போக்கிக்கொள்ள தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து தேவனிடம் சரணடையும் நபருக்கு அவர் பாவ மன்னிப்பு, ஆதாவது நரகத்திலிருந்து விடுதலையை விசுவாசிக்கும் அனைவருக்கும் வழங்குகிறார். "ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப் படுகிறதென்றும், விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே (இயேசுகிறிஸ்து) விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது." (அப்போஸ்தலர் 13:38,39).
நாளை என்ன நடக்குமென்று நமக்குத் தெரியாது. எனவே இன்றே உங்கள் பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்து மனந்திரும்பு; உன் பாவத்திற்குப் பரிகாரமாக இரத்தம் சிந்தி மரித்து உயிர்தெழுந்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இன்றே விசுவாசி.
“மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக் காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே.” (யாக்கோபு 4:13,14) “இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்.” (2 கொரிந்தியர் 6:2). "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." (ரோமர் 10:9). "கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31).