ஒரு ஒற்றை அடி பாதையில் ஒரு ஆட்டுக்குட்டியும் ஒரு பன்றிக்குட்டியும் நடந்து சென்றன. அந்த ஒற்றை அடி பாதையின் ஒரு பக்கத்தில் ஒரு பெரிய சுவர் இருந்தது. இன்னொரு பக்கத்தில் ஒரு சாக்கடையும் இருந்தது. ஆட்டுக்குட்டியும் பன்றிக்குட்டியும் அந்த வழியாக சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு மிதிவண்டி வந்தது. வேறு வழியில்லாமல் ஆட்டுக்குட்டியும் பன்றிக்குட்டியும் சாக்கடையில் குதித்தது. இரண்டும் சாக்கடையில் உருண்டு விளையாடியது. நேரம் செல்ல செல்ல ஆட்டுக்குட்டியின் உடம்பிலும் , பன்றிக்குட்டியின் உடம்பிலும் நாற்றம் வர ஆரம்பித்தது.
சிறிது நேரம் கழித்து நான் அழுக்கில் கிடக்கிறேன் என்று ஆட்டுகுட்டி உணர்ந்தது. நான் செல்ல வேண்டிய இடம் சாக்கடை அல்ல என்பதை உணர்ந்தது. உடனே சாக்கடையிலிருந்து எழும்பி தன் மேல் படிந்த அழுக்கை உதறிவிட்டு மறுபடியும் தான் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி பயணித்தது. ஆனால் பன்றிக்குட்டியோ , நான் எதற்காக வந்தேன் என்பதை மறந்து அழுக்கான சாக்கடையிலேயே கிடந்தது. அன்பு நண்பர்களே நம்முடைய வாழ்க்கையும் இப்படித்தான். எதோ ஒரு சூழ்நிலையில் நாமும் பாவமாகிய சாக்கடையில் விழுந்து விடுகிறோம். ஆனால் நம்முடைய குறிக்கோள் வேறு. நமக்கு கடவுள் வைத்திருக்கும் இலக்கு வேறு என்று நாம் உணர வேண்டும்.