கருத்து துணுக்குகள்
ஆசிரியர்: டேவிட் தன்ராஜ் 

1. இவர் கிறிஸ்தவர், பொய் பேசமாட்டார்.

2. இவர் கிறிஸ்வதர், கெட்ட வார்த்தை பேசமாட்டார்.

3. இவர் கிறிஸ்தவர், தெருவில் சண்டை போட மாட்டார்.

4. இவர் கிறிஸ்தவர், வட்டிக்கு கடன் கொடுக்கமாட்டார்.

5. இவர் கிறிஸ்தவர், அரசு அதிகாரி லஞ்சம் வாங்க மாட்டார்.

6. இவர் கிறிஸ்தவர், குடி, போதை எதிலும் ஈடுபட மாட்டார்.

7. இவர் கிறிஸ்தவ வியாபாரி, நியாயமாக வியாபாரம் செய்வார்.

8. இவர் கிறிஸ்தவ மருத்துவர், நியாயமாக கட்டணம் வாங்குவார்.

9. இவர் கிறிஸ்தவ காவல் அதிகாரி, சட்டப்படி நடப்பார்.

10. இவர் கிறிஸ்தவ அரசு அதிகாரி, ஒருநாளும் தாமதமாக அலுவலகம் வர மாட்டார்.

11. இவர் கிறிஸ்தவர், வரதட்சணை வாங்க மாட்டார்.

12. இவர் கிறிஸ்தவர், ஜாதி பார்க்கமாட்டார்.

13. இவர் கிறிஸ்தவ சட்ட மன்ற உறுப்பினர், லஞ்சம் ஊழலில் ஈடுபட்டதில்லை.

14 இவர் கிறிஸ்தவர், மற்றவர்களை ஏமாற்றமாட்டார்.

15. இவர் கிறிஸ்தவர், திருடமாட்டார்.

16. இவர் கிறிஸ்தவர், நேர்மையான அரசியல்வாதி.

17. இவர் கிறிஸ்தவர், இவருடைய குடும்பத்தில் சண்டை போட்டதேயில்லை.

18. இவர் கிறிஸ்தவர், நீதிக்காக மட்டுமே வழக்காடும் வழக்கறிஞர்.

19. இவர் கிறிஸ்தவர், இவருடைய தீர்ப்பு நீதி தவறியதில்லை.

20. இவர் கிறிஸ்தவர், அதனால் பக்கத்து வீட்டுக்கு பிரச்சனையில்லை.

21. இவர் கிறிஸ்தவர், அநேகருக்கு உதவி செய்வார் (ஏமாளி அல்ல).

22. இவர் கிறிஸ்தவர், பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்.

23. இவர் கிறிஸ்தவர், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்.

24, இவர் கிறிஸ்தவர், சமூகப் பிரச்சனைகளில் சமாதானம் செய்வார்.

25. இவர் கிறிஸ்தவர், இவருடைய வீட்டில் ஜெபமும், பாடல் சத்தமும் கேட்கும்.

26. இவர் கிறிஸ்தவ செவிலியர், அவருடைய அன்பின் விசாரணையிலேயே நோய் குணமாகிவிடும்.

27. இவர்கள் கிறிஸ்தவர்கள், இவர்களுக்குள் ஆயிரம் பிரிவுகள் இருந்தாலும் ஒற்றுமையாக இருப்பார்கள்.

28. இவர் கிறிஸ்தவர், நேர்மையாக வருமான வரி கட்டிவருகிறார்.

29. இது கிறிஸ்தவ நிறுவனம், உள்ளே நுழைந்தாலே மோட்சம் போல இருக்கும்.

 

இப்படி கிறிஸ்தவர்களைப் பற்றி பல நற்செய்தியை மக்களே கூறினால், கிறிஸ்தவர்களாகிய நாம் நற்செய்தி அறிவிக்க வேண்டிய அவசியமே இல்லையே!

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.