ஆசிரியர்: ஜி. பிபு
தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்
இன்றைய கிறிஸ்தவ சமூகத்தில் சில போதகர்கள் அந்தந்த வேதவசனங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு, இரட்சிப்பு, பாவ மன்னிப்பு மற்றும் பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கு ஞானஸ்நானம் மட்டுமே ஒரே வழி என்று போதிக்கிறார்கள்.
“என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.” (ரோமர் 10:9,10).
இதயத்தில் விசுவாசம் வைப்பதும், வாயால் அறிக்கையிடுவதினால் ஒருவனுக்கு நீதியையும் இரட்சிப்பையும் கிடைகிறது என்பதை மேற்கண்ட வசனப்பகுதி நமக்கு தெளிவாகப் போதிக்கிறது.
அதேபோல்; “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். (எபேசியர் 2:8-10).
மேலே சொல்லப்பட்ட வசனத்தில், நாம் எந்தவித நற்செயல்களினால் நாம் இரட்சிக்க படுவதில்லை, ஆனால் நாம் இரட்சிக்கப்படுவது தேவன் முன்பே ஏற்படுத்தியிருக்கிற நற்செயல்களைச் செய்வதற்காக என்று வாசிக்கிறோம். எனவே ஞானஸ்நானம் நற்கிரியைனால் நாம் இரட்சிக்கப் படுவதில்லை, இரட்சிக்கப்பட்ட பிறகு நாம் நற்காரியத்தில் பங்கு பெறவேண்டும். ஆனால் இரட்சிப்பு என்பது கிருபையினால் விசுவாசத்தின் மூலமாக மட்டுமே! ஞானஸ்நானம் மூலமாகவோ, வேறு எந்த நற்செயல்களினாலோ இரட்சிப்பு இல்லை.
விருத்தசேதனத்தினால் தான் இரட்சிப்பு என்று முதல் நூற்றாண்டு கால திருச்சபையில் குழப்பத்தை ஏற்படுத்திய யூத கிறிஸ்தவர்களைப் போல, ஞானஸ்நானத்தால் தான் இரட்சிப்பு என்று இன்றைய சமக்கால திருச்சபையில் சில போதகர்கள் குழப்பத்தை எற்படுத்திகிரார்கள். அவர்கள் இரட்சிப்புக்கும், பாவ மன்னிப்புக்கும் ஞானஸ்நானம் அவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டு காட்டும் வேதவசனங்களைப் பற்றி என்ன? என்பதை பார்ப்போம்.
அவர்கள் காட்டும் வேத வசனங்கள் ஞானஸ்நானத்தின் மூலம் தான் இரட்சிப்பு என்று சொல்லுவது உண்மையா? என பார்த்தால் இல்லை! சந்தர்ப்பத்தின் படி வேதத்தின் விரிவான போதனைகளின் வெளிச்சத்தில் அந்தந்தப் பகுதிகளை நாம் வாசிக்கும்போது, ஞானஸ்நானத்தின் மூலம் இரட்சிப்பும், பாவ மன்னிப்பும் போன்றவை கிடைக்கும் என்று வேதத்தில் திட்டவட்டமான ஒரு வசனம் கூட இல்லை என்ற முடிவுக்கு நாம் நிச்சயமாக வருவோம்.
அந்த வசனப் பகுதிகளை ஒவ்வொன்றாக கருத்தில் கொண்டு ஆராய்வோம்.
1. “இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.” (யோவான் 3:5).
இங்கு ஜலத்தினால் (தண்ணீரினால்) என்ற வார்த்தையைப் பார்த்தவுடனேயே, இது தண்ணீர் ஞானஸ்நானம் பற்றிப் பேசுவதாகவும், மீண்டும் பிறப்பதற்கு இந்தத் ஜலத்தின் (தண்ணீர்) ஞானஸ்நானம் தேவை என்றும் சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.” “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.” “வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.” (யோவான் 4:14 , 7:37,38) இயேசு இந்த சுவிஷேசத்தில் தண்ணீரை அடையாள வார்த்தையாக பலமுற பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் தண்ணீரை எதற்கு அடையாளமாக பயன்படுத்தப்பட்டது. வேதத்தை கவனமாக வாசித்தால் அதற்கான பதிலை கண்டுபிடிப்பது கடினமல்ல. இங்கு "தண்ணீர்" என்பது மறுபிறப்பு அடைவதற்கு ஒப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான். சொல்லப்போனால் எதற்கு அது ஒப்பானது? தண்ணீர் ஞானஸ்நானமா? அவ்விதம் நாம் எடுத்துக்கொள்வதற்கு வேதத்தில் ஒரே ஒரு வசனம் கூட இல்லை. இதற்கு நேர்மாறாக, மறுபிறப்பு அடைவதற்கு குறிப்பிடும் மற்ற எல்லா வேத வசனங்களும் தேவனுடைய வார்த்தையே ஒப்பானது என்பதை தெளிவாகிறது.
பின்வரும் வசனங்களை கவனமாகக் வாசியுங்கள்.
"உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது" (சங்கீதம் 119:50).
"கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்.” (1 கொரிந்தியர் 4:15).
"அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்.” (யாக்கோபு 1:18).
"அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.” (1 பேதுரு 1:23).
மேற்குறிப்பிட்ட வசனத்தில் மறுபிறப்புக்கு அடையாளாமாக வேறு எந்த வழியும் வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. எனவே நமது தற்போதைய சூழலிலும், புதிய பிறப்பின் வழிமுறையாகக் குறிப்பிடப்படும் 'தண்ணீர்' (ஜலம்) என்ற அந்தச் சொல்லுக்கு ஒப்பானது என்று எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி சொல்லலாம்.
எபேசியர் 5:27 “அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
திருவசனம் செய்கிற அந்தந்த காரியத்தை சொல்லப்பட்டுள்ளது.
நாம் நடக்க வேண்டிய வழியை அது நமக்கு காட்டுவதால், தேவ வசனத்தை 'ஒளி' என்று விவரிக்கப்படுகிறது. “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 119:105).
கல்லான இதயத்தை உடைப்பதால் வசனத்தை 'சுத்தி' என்று வர்ணிக்கப்படுகிறது. “கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (எரேமியா 23:29).
அதே போல் வேத வசனம் நம்மை சுத்தப்படுத்தி, பரிசுத்தப்படுத்தி, மற்றும் புதுப்பிக்கிறது. எனவே 'நீர்' என்று வர்ணிக்கப்படுகிறது, “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால் தானே.” (சங்கீதம் 119:9), “நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.” (யோவான் 15:3), “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவான் 17:17), “அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,” எபேசியர் 5:25,26). பரிசுத்த ஆவியானவரே புதிய பிறப்புக்குக் காரணம்; தண்ணீர் (ஜலம்) & (வசனம்) அதற்கு அடையாளாமாக உள்ளது.
இந்த சுத்திகரிப்பு, பரிசுத்தமாக்குதல், புதிதாக்கி, மறுபிறப்பு அடைதல், போன்றவை செய்யகூடியவையை தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டது.
எசேக்கியேல் 36: 25-27 வது வசனத்தில் சொல்லப்பட்டது. “அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள். உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.”
இந்த வசனத்தை இன்னும் விரிவாக ஆராய்வதற்க்கு இந்த இணைப்பின் மூலம் வரும் கட்டுரையை வாசியுங்கள் "நீர் மற்றும் ஆவியின் பிறப்பு" என்ற கட்டுரை.
2. “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.” (மாற்கு 16:16).
'ஞானஸ்நானத்தின் மூலம் இரட்சிப்பு' என்ற தவறான சுவிஷேசத்தை உறுதிபடுத்திக் கொள்ள சிலர் தவறாகப் பயன்படுத்திய மற்றொரு வேத வசனம் இது. ஆனால் அத்தகைய சுவிஷேசத்தை இந்த வசனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த வசனத்தின் பிற்பகுதியில் "விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.” என்று உள்ளது. ஆனால் விசுவாசியாத ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளாதவனுக்கு ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான், என்று சொல்லப்படவில்லை.
எனவே ஒரு நபர் ஞானஸ்நானம் (திருமுழுக்கு) பெற்றுக்கொண்டாலும் அவனுடைய உள்நிலையில் மாற்றமில்லை என்றால் அது வீண். எனவே இரட்சிப்பது கிருபையை பெருக வைக்கிற விசுவாசம் மட்டுமே! இவிதமாக ஞானஸ்நானம் எனபது வெளிபிரகரமான அடையாளம் மட்டுமே, “மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுப் போல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.” (ரோமர் 6:4,5)
எனவே ஒவ்வொரு உண்மையான விசுவாசியும் நிச்சயமாக ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வார்கள். கர்த்தர் அருளுகிற இரட்சிப்பை அவர்கள் பகிரங்கமாக அவர் கட்டளையிடும் விதத்தில் அதாவது ஞானஸ்நானத்தின் மூலமாக சாட்சியளிப்பார்கள். மாறாக பகிரங்கமாக சாட்சியளிக்காத & கீழ்ப்படியாத ஒருவர், கர்த்தர் அருளிய இரட்சிப்பை உண்மையாக விசுவாசித்தார் என்று கருதுவதற்கு எந்த உறுதியுமில்லை. ஆனால் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; அதினாலே, ஞானஸ்நானம் தான் இரட்சிப்பின் காரணம் அல்லது ஞானஸ்நானம் தான் இரட்சிப்புக்கு ஒரே வழி என்று கற்பிப்பது வேதத்தின் சுவிஷேசத்திற்கு முரணானது.
அப்படியென்றால், இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டு, விசுவாசித்து மனந்திரும்பிய திருடன் ஞானஸ்நானம் பெறாமல் பரதீசில் பங்கடையவில்லையா? இதற்கு மாறாக, ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டாலும் அவனுடைய விசுவாசம் உண்மையானதாக இல்லாததினால், மாயவித்தைக்காரனாயிருந்த சீமான் "உன் பணம் உன்னோடே கூட நாசமாய்ப் போகக்கடவது.” என்ற சாபத்தை அனுபவிக்கவில்லையா? இரட்சிப்பை அருளும் வெளிப்புற சடங்கான ஞானஸ்நானம் அல்ல என்பதை நிரூபிக்க இந்த சான்று போதுமானதாக இல்லையா?
(அப்போஸ்தலர் 8:36-38) “இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான். அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி; இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான்.” இந்த சந்தர்ப்பத்திலும் மற்றும் (அப்போஸ்தலர் 16:31-33) “அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.” சிறைக்காவலரின் வீட்டார் சந்தர்ப்பத்திலும் தயக்கமின்றி விசுவாசித்த உடனேயே ஞானஸ்நானம் பெறுவதற்கான கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்.
ஆனால் ஒரு கிறிஸ்தவன் எந்த நன்மையான காரியத்தை செய்தாலும் (அது ஞானஸ்நானம், கர்த்தருடைய பந்தி போன்றவையை அனுசரிப்பதும் அல்லது வேறு எதுவாக இருந்தாலும்) அதை அவன் இரட்சிக்க படுவதற்காக அல்ல, மாறாக அவன் இரட்சிக்கப்பட்டதால் அதை செய்கிறான். “அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே.” (ரோமர் 11:6) எனவே, 'விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்' என்ற வார்த்தைகளில், ஞானஸ்நானம் என்பது அவனுடைய இரட்சிப்பின் நிரூபணமே தவிர அதுதான் இரட்சிப்புக்கு காரணமென்ற அர்த்தத்தை கொடுக்காது.
3. “அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;” (1 பேதுரு 3:21)
ஞானஸ்நானத்தின் மூலம் இரட்சிப்பு என போதிப்பவர்கள் தவறாகப் பயன்படுத்தும் மற்றொரு வேத வசனப்பகுதி இது.
இந்த வசனத்திலும், அதற்குப் பிறகு வரும் பகுதிகளையும் கவனமாகப் வாசித்தால், அங்கு ஞானஸ்நானம் என்று குறிப்பிட்டது எதுவோ தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது, அது (ஸ்நானம் என்று குறிப்பிடப்படுவது) உடலின் அழுக்குகளை அகற்றுவதல்ல, (அது தண்ணீரில் மூழ்குவதன் மூலமல்ல) மாறாக இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலமாக தேவன் பரிசுத்தமாக்கும் மனசாட்சியின் பிரதிபலிப்பு (இது உள்ளான நிலையில் ஏற்படும் மாற்றத்தால் மட்டுமே சாத்தியமாகும்). எனவே நாம் சற்று ஆழமாக சிந்தித்தால் புரியும் இரட்சிப்பது, தண்ணீரில் மூழ்கும் செயல் அல்ல, ஆனால் அது உருவகப்படுத்தும் உள்ளான மாற்றம் மட்டுமே என்பது தெளிவாகும்.
"கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.” (ரோமர் 6:4-5)
ஞானஸ்நானம் என்பது இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலில் ஒன்றுபட்டிருப்பதன் இரட்சிப்பின் அனுபவத்திற்கான ஒரு அடையாளம் மட்டுமே. இந்த உள்ளான இரட்சிப்பின் அனுபவத்தை தான் (1 பேதுரு 3:21) - இல் குறிப்பிடப்பட்டுள்ள ஞானஸ்நானம் ஆகும். இவை உள்க்குள் நடந்தபிறகு, வாய்ப்புள்ள ஒவ்வொரு நபரும் தாமதமின்றி இதேபோன்ற தண்ணீர் ஞானஸ்நானத்தை தவறாமல் பெற வேண்டும். ஆனால் அத்தகைய இரட்சிப்பின் அனுபவம் இல்லாமல் தண்ணீர் (முழுக்கு) ஞானஸ்நானம் எடுத்தால், அது "உடல் அழுக்கு நீக்குவதாக" மட்டுமே இருக்கும். ஆனால் "இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலமாகவும், தேவன் தருகிற பரிசுத்தாமான மனசாட்சி தரும் பதில்" என்று அழைக்க முடியும்."? அதனால்தான் ஞானஸ்நானத்தினால் இரட்சிப்பு வருகிறது என்ற அவர்களின் தவறான புரிதலுக்கு இந்த வசனத்திலும் இடமில்லை.
4. “பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” (அப்போஸ்தலர் 2:38). மற்றும் “இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.” (அப்போஸ்தலர் 22:16) இந்த இரண்டு வசனத்தின் அடிப்படையில், ஞானஸ்நானத்தினால் மட்டுமே பாவ மன்னிப்பைப் பெற முடியும். மற்ற எந்த வகையிலும் பாவ மன்னிப்பை பெறமுடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1 யோவான் 1:7) – என்ற வசனத்தை பொருட்படுத்துவதில்லை, தண்ணீரில் மூழ்கினால் பாவங்கள் கழுவப்படுகிறது என்றால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் மரித்தது வீண். ஒருவேளை அப்படியென்றால் தேவன் தம்முடைய குமாரனை பாவமன்னிப்புக்காக இந்த உலகத்திற்கு அனுப்பாமல், யோவான் ஸ்நானகனை அனுப்பி இந்த உலகத்திற்கு பாவமன்னிப்பை கொடுத்திருப்பார்.
அவர்கள் மேற்கோள் காட்டிய (அப்போஸ்தலர் 2:38) வது வசனத்தின் பொருள் என்ன? இந்த வசனத்தில் உள்ள "பாவமன்னிப்புக்கென்று" εἰς (ஏஸ்) என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த 'Ais' என்ற சொல்லை சூழலுக்கு ஏற்ப 'காரணமாக', 'உள்ளே', 'அடிப்படையில்' என மொழிபெயர்க்கலாம். எனவே “நீங்கள் மனந்திரும்பி, பாவமன்னிப்புக்கென்று ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்" என்ற வார்த்தைகளை, “நீங்கள் மனந்திரும்பி, பாவமன்னிப்பின் காரணமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
இவ்விதமாக மொழிபெயர்க்கப்பட்டால் இந்த வசனத்திற்கு முற்றிலும் ஒரு புதிய அர்த்தத்தை பெறுகிறது. எனவே, "ஏய்ஸ்" என்ற வார்த்தைக்கு “பாவமன்னிப்புக்கென்று” மொழிபெயர்ப்பின் அடிப்படையில் பாவ மன்னிப்புக்கு ஞானஸ்நானம் அவசியம் என்று முடிவு செய்து, இரட்சிப்பு கிரியைகளால் அல்ல என்ற தெளிவான வேதாகம உண்மையை மாற்றுவது ஏற்கமுடியாது. ஏனென்றால், ஒருவேளை அப்படியென்றால் தேவன் தம்முடைய குமாரனை பாவமன்னிப்பிர்க்காக இந்த உலகத்திற்கு அனுப்பாமல், யோவான் ஸ்நானகனை அனுப்பி இந்த உலகத்திற்கு பாவமன்னிப்பை கொடுத்திருப்பார்.
இதேபோல், (அப்போஸ்தலர் 22:16) வசனத்தில் உள்ளபடி “உன் பாவங்கள் போகக் கழுவப்படு” என்ற வார்த்தையையும் “ஞானஸ்நானம்பெற்று” என்ற வார்த்தையோடும் “கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு” என்ற வார்த்தையோடு இணைத்து புரிந்துக்கொள்ள வேண்டுமென்று ஆங்கில “கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பைப் படிக்கும் யாவரும், எளிதில் புரிந்துக்கொள்ள முடியும். “arise, and be baptized, and wash away thy sins, calling on the name of the Lord.” (K J V) தமிழில் வெளிவந்த சில மொழிபெயர்ப்புகள் இந்த கருத்தையே வெளிப்படுத்துகிறது. "என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.” (ரோமர் 10:9) இயேசு கர்த்தரென்று அறிக்கையிடுவதே! மனமாற்றம் அடைந்த நபர் செய்யும் விண்ணப்பம். (அப்போஸ்தலர் 2:21) “அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.” "ஞானஸ்நானத்தினாலே மறுபிறப்பு" அல்லது “ஞானஸ்நானத்தினாலே இரட்சிப்பு” என்பது முற்றிலும் வசனத்திற்கு எதிரானது. இது அப்போஸ்தலர்களின் சுவிஷேசதிற்கு முற்றிலும் முரணானது.
(கலாத்தியர் 1:8) “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.”
ஆனால் இரட்சிக்கப்பட்டவர்களுக்கு ஞானஸ்நானம் தேவையில்லை என்ற உபதேசமும் வேதத்திற்கு எதிரான போதனை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வேண்டுமென்றே ஞானஸ்நானத்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது தேவனுடைய கீழ்படியாதா ஒரு செயலாகும்.
“பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாகத் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.” (லூக்கா 7:30).