ஆசிரியர்: ஜெ.சி. ரைல் 1816 - 1900
பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து.
அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் - நீதி 22:6
வேதவசனங்களில் தேர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்த வசனத்தை நன்கு அறிந்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். நன்கு பழக்கப்பட்ட ஒரு இனிய பாடலைப் போல அது உங்களுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இவ்வசனத்தை நீங்களே அநேகம் முறை கேட்டிப்பீர்கள், படித்திருப்பீர்கள், இதைக் குறித்துப் பேசியிருப்பீர்கள், இதை மேற்கோளாகவும் காட்டியிருப்பீர்கள். இல்லையா?
ஆனால், இதனுடைய கருத்தானது எவ்வளவுக்கு மதித்துப் பின்பற்றப்பட்டிருக்கிறது? இவ்வசனத்தில் அடங்கியுள்ள கொஞ்சமே. இவ்வசனம் சுட்டிக் காட்டுகின்றதான கடமையை நடைமுறையில் செயல்படுத்தியவர்கள் எத்தனை பேர் என்று சற்று சிந்தித்துப் பார்க்கையில் அது நமக்கு அதிர்ச்சியைத் தான் தருவதாக இருக்கிறது. இதை வாசிக்கும் வாசகர்களே, நான் கூறுவது உண்மைதானே?
இந்த விஷயம் யாருமே இதுவரை அறிந்திராத புதிதான விஷயம் என்று சொல்லவில்லை, இந்த உலகம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமை வாய்ந்த விஷயம் இது. ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகள் கடந்து போயிருக்கின்றன. அது நமக்கு விட்டுச் சென்றிருகும் அனுபவ பாடங்கள் அவ்வளவு ஏராளம்! பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ள காலங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமெங்கிலும் புதிது புதிதான பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும், படிப்பு முறைகளும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. சிறுபிள்ளைகளுக்கு முதற்கொண்டு புதுவிதமான கற்பிக்கும் முறைகளும், புதுவிதமான பாடத்திட்டங்களும் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன இவ்வளவு இருந்த போதிலும் பிள்ளைகளை நடத்த வேண்டிய திட்டமான இந்த வழியிலே நடத்துவதற்கான எந்தவித திட்டமும் ஏற்பட்டாதற்போல் தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது யாருமே தேவனோடு இணைந்து நடக்கிறவர்களாகக் காணப்படவில்லை.
அப்படி இருப்பதற்கு நாம் என்ன காரணத்தைக் காண்பிக்க முடியும்? இந்த வசனத்தில் காணப்படுகின்றதான தேவனின் கட்டளை, மதித்துப் பின்பற்றப்படவில்லை என்பதைத் தவிர்த்து வேறு என்ன சொல்ல முடியும்? ஆகவே, இந்த வசனத்தில் காணப்படுகின்றதான தேவனின் வாக்குத்தமும் நிறைவேறாமலே போய்விடுகிறது. மெய்யான கிறிஸ்தவர்களின் பிள்ளைகளும், அவர்கள் நடக்க வேண்டிய வழியிலே நடத்தப்பட்டிருந்தால் முதிர்வயது மட்டும் அவர்கள் அதை விடாமல் பற்றிக் கொண்டிருப்பார்கள்
இதை வாசிப்பவர்களை, இந்த வசனத்தைக் கொண்டு நீங்கள் உங்கள் இருதயங்களை மிகவும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பிள்ளைகளை நடத்த வேண்டிய வழியிலே நடத்துவதைக் குறித்தான இந்த புத்திமதியை சிந்தித்துப் பாருங்கள். இந்த சிந்தனையானது உங்கள் ஒவ்வொருவருடைய இருதயத்திற்குள்ளும் புகுந்து உங்கள் வீட்டிற்கும் இது உங்களோடு கூட வர வேண்டும். ஒவ்வொருவரும் நல் மனசாடசியோடு, "இவ்விஷயத்தில் நான் செய்ய வேண்டியவைகளை செய்திருக்கிறேனா?" என உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள்.
எல்லோருக்குமே இவ்விஷயத்தில் சம்பந்தம் இருக்கிறது. எல்லா வீட்டிற்குள்ளும் இது பிரவேசிக்கிறது. பெற்றோர்கள், பிள்ளைகளை வளர்ப்பவர்கள், ஆசிரியர்கள், ஞானத் தககப்பன்மார், ஞானத் தாய்மார், மாமாக்கள், அத்தைகள், சகோதரர்கள், சகோதரிகள் ஆகிய எல்லோருக்கும் இதில் சம்பந்தம் இருக்கிறது. ஒரு சிலரைத் தவிர்த்து, ஏறக்குறைய மற்ற எல்லாருமே ஏதாவதொரு வகையில் பிள்ளைகளுக்கு நோடியாகவோ அல்லது மறைமுகமாகவோ புத்தி புகட்டி அவர்களை வழி நடத்தக்கூடும் எனறு நான் நம்புகிறேன். இதை நீங்கள் அனைவருமே எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் படியாக உங்களுக்கு நினைப்பூட்டுகிறேன்.
முதலாவதாக, பிள்ளைகளுக்கு சரியான விதத்தில் பயிற்சி அளிப்பதென்பது, அவர்கள் விரும்புகிற வழியில் அல்ல, அவர்கள் நடக்க வேண்டிய வழியிலே அவர்களை நடத்துவதாகும். பிள்ளைகள் பாவம் செய்யக்கூடிய நிலைமையிலே தான் பிறந்திருக்கிறார்கள் என்பதை மறந்து போகாதிருங்கள் தங்கள் வழியைத் தாங்களே தெரிந்து கொள்ளத்தக்கதாக நீங்கள் அவர்களை விட்டுவீர்களானால் அவர்கள் தவறான வழியைத்தான் தெரிந்துக்கொள்ளுவார்கள்.
பிறந்த குழந்தையப் பார்த்து அவன் பெரியவனாகும் போது உயரமாகவோ, குட்டையாகவோ, ஒல்லியாவோ, குண்டாகவோ, புத்திசாலியாகவோ, அறிவற்றவனாகவோ அவன் எப்படிவருவான் என்பதை ஒரு தாயால் கூற முடியாது. தோற்றத்தில் அவன் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் ஒன்றை மாத்திரம் ஒரு தாயார் நிச்சயமாகக் கூறலாம். அவனுக்குள்ளாக பாவத்தை நாடுகிற ஒரு கெட்டுப்போன இருதயம் இருக்கும் என்பதே அந்த உண்மை. தவறு செய்வது மனிதனுடைய இயல்பாக இருக்கிறது. "பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்" (நீதி 22:15) என்று சாலமோன் கூறகிறார். தன் இஷ்டத்துக்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்" (நீதி 29:15). நமது இருதயங்கள் பூமியின் நிலங்கள் போன்றவை. அவைகளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவோமானால் அது நிச்சயமாகக் களைகளைத்தான் பிறப்பிக்கும்.
ஆகவே, சிறுபிள்ளையை அவர்கள் போக்கிலேயே விடுவது ஞானமான செயல் அல்ல. அவனுக்காக நீங்கள் சிந்தியுங்கள், எது சரி எது தவறெனத் தீர்மானியுங்கள். பலவீனமாகவும், குருடாகவும் இருக்கிற ஒருவனைப் போல எண்ணி அவர்களுடைய விருப்பங்களுக்கும் உணர்வுகளுக்கும் செவி சாய்க்காதிருங்கள். கேட்டு அதற்கேற்ப தீர்மானிக்காதிருங்கள். தன்னுடைய உடலுக்கு எது நல்லது என்பது குழந்தையாகிய அவனுக்குத் தெரியாதது போலவே, தனது ஆத்துமாவுக்கும் மனதுக்கும் எது நல்லதென்று முடிவெடுக்க அவனுக்குத் தெரியாது. குழந்தை என்ன ஆகாரம் சாப்பிட வேண்டும், எதைக் குடிக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்று நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள்.
அதைப் போலவே அவனுடைய மனதுக்கும் ஆத்துமாவக்கும் எது நல்லதென்கிற தீர்மானத்தை நீங்கள் எடுங்கள் வேதம் காட்டுகின்ற வழி எதுவோ, வேதத்தின் பிரகாரமாக எது சரியோ அதிலே அவனுக்குப் பயிற்சி கொடுங்கள். அவன் கற்பனை பண்ணிக் கொள்கிற விதத்தில் அவன் நடக்க இடங்கொடாதிருங்கள். மென்மையோடும், அன்போடும், பொறுமையோடும் குழந்தைக்குப் பியிற்சி கொடுங்கள். அவனுக்கு செல்லம் கொடுத்துக் கெடுக்கும் படியாக நான் கூறவில்லை. நீங்கள் அவனை நேசிப்பதை அவன் அறிந்து கொள்ளும் வகையில் அவனுக்குப் பயிற்சி கொடுகள். நீங்கள் அவனை வழி நடத்துகிற. சகல காரியத்திலும் அன்பானது இழையோடியிருக்க வேண்டும். அன்பு, சாந்தம், பொறுமை, விடாமுயற்சி, இரக்கம், குழந்தைத்தனமான அவனுடைய துன்பங்களிலும் சந்தோஷங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளுதல் ஆகிய இவைகளை உபயோகித்து பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிப்பது காரியத்தை சுலபமாக்கும். அவனுடைய நம்பிக்கையை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் இம்மாதிரியான வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
நம்முடைய மனதைப் போலவே தான் பிள்ளைகளுடைய மனதும் உருவாக்கப்பட்டுள்ளது. கடுமையாகவும், கொடூரமாகவும் அவர்களிடம் நடந்து கொண்டால் அவர்கள் ஒருபோதும் உங்களிடம் வரவை மாட்டார்கள். அவர்கள் ஒருப்போதும் உங்களிடம் வரவே மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய இருதயத்தை அடைத்துக் கொள்வார்கள் என்ன செய்தாலும் பின்னர் அவர்கள் இருதயத்தைத் திறக்க வழி தெரியாமல் நீங்கள் சோர்ந்து போவீர்கள்.
நீங்கள் உண்மையாகவே அவர்களை நேசிக்கிறீர்கள் என்றும், அவர்களுக்கு நன்மை செய்யவும் அவர்களை சந்தோஷப்படுத்தவும் தான் விரும்புகிறீர்கள் என்பதையும் அவர்களுக்குத் தெரியப்படுத்துவீர்களானால் அவர்களை வசியப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் அவர்களுக்கு தண்டனை தருவது கூட உங்களுடைய இருதயத்தையை உடைப்பதாயிருந்தாலும் அவர்கள் சரியானபடி நடக்க வேண்டுமென்பதற்காகவே அதை செய்வதாகவும் அவர்களுக்கு உணர்த்தி விட்டீர்களானால் அவர்கள் மீண்டுமாக உங்களோடு ஒட்டிக் கொள்வார்கள். அவர்களைத் தண்டிப்பதுங்கூட. அன்போடும் இரக்கத்தோடும் தான் செய்யப்பட வேண்டும்.
வெற்றிகரமான கிறிஸ்தவ வளர்ப்பின் மாபெரும் இரகசியம் அன்பு வழி. கோபமும் கடூரமுமாக அவர்களை நடத்தினால் ஒருவேளை அவர்கள் பயந்து உங்களுக்குக்கு கீழ்ப்படியலாம். ஆனால் நீங்கள் சரியாகத்தான் நடக்கிறீர்களா என அவர்கள் உங்களை சந்தேகிக்கத் தொடங்கி விடுவார்கள் நீங்கள் அடிக்கடி கோபம் கொண்டீர்களானால், பிள்ளைகளிடமிருந்து மரியாதையை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும். சவுல், யொத்தானிடம் பேசியது போல (1சாமு 20:30). ஒரு தகப்பன் தன் பிள்ளைகளிடம் பேசவானென்றால், அந்தப் பிள்ளைகளின் மனதை அவனால் ஒருபோதும் கவர முடியாது.
பிள்ளைகளின் அன்பை தக்க வைத்துக் கொள்ள பிரயாசைப்படுங்கள். பிள்ளைகள் உங்களைக் கண்டு அஞ்சும்படியாக நடந்து கொள்வது ஆபத்தானது. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நடுவே மன இறுக்கமோ, இயல்பாக பேசாத நிலையோ ஏற்படுவது சரியல்ல. பயத்தினால் இந்நிலை ஏற்பட்டுவிடும் பயமானது, வெளிப்படையாக. பழகுதலைத் தடை செய்கிறது. பயமானது, ஒருவனை ஒளித்துக் கொள்ளச் செய்யும். மாய்மாலத்தை உண்டாக்கும். அநேகம் பொய்களைப் பேசச் செய்யும். அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசேய சபைக்கு எழுதிய இவ்வசனத்தில் பேருண்மை நிரம்பியிருப்பதை கவனியுங்கள்: "பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப் போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்" (3:21) பவுல் கூறுகிற புத்திமதியை அலட்சியமாக எண்ணிவிடாதீர்கள்.
பிள்ளையினுடைய ஆத்துமாவையே முதலாவதாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை எப்போதும் உங்கள் முன் வைத்தவர்களாக பிள்ளையை வழி நடத்துங்கள். உங்களுடைய கண்களுக்கு உங்கள். பிள்ளை விலையேறப் பெற்றதுதான் சந்தேகமேயில்லை. ஆனால் நீங்கள் உண்மையாகவே அந்தப் பிள்ளையை நேசிப்பீர்களானால், அதன் ஆத்துமாவைக் குறித்து அடிக்கடி நினைத்துப் பாருங்கள் அதனுடைய நித்தியஜீவனைக் காட்டிலும் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டிய மேன்மையான விஷயம் எதுவும் இருக்கப் போவதில்லை அதனிடம் இருக்கின்ற அழியாத விஷசத்தைக் காட்டிலும் அதன் மற்ற எந்த அங்கமும் உங்களுக்கு அதிக விசேஷமாக இருக்க வேண்டியதில்லை. இந்த உலகமும் அதன் எல்லா மகிமையும் ஒரு நாளில் அழிந்து போகும். பர்வதங்கள் யாவும் உருகிப் போகும். வானங்கள் புத்தகச்சுருளைப் போல சுருட்டப்பட்டுவிடும். சூரியன் வெளிச்சம் கொடுக்காமல் போய்விடும். எல்லாம் அழிந்து போகும். ஆனால், நீங்கள் மிகவும் நேசிக்கின்றதான இந்த சிறு பிள்ளையினுடைய ஆத்துமாவானது இவை யாவற்றையும் கடந்து என்றென்றும் வாழும். அதை சரியான பாதையில் வழிநடத்த வேண்டியதான பொறுப்பு உங்கள் கையில் இருக்கிறது.
இந்த எண்ணத்தைக் கொண்டவர்களாகத் தான் நீங்கள் பிள்ளைகளுக்கு எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டும். இந்த எண்ணமே உங்களுடைய மனதில் பிரதானமான இடத்தை ஆக்ரமித்திருக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்காக செய்கிற காரியம் எதுவாக இருந்தாலும், என்ன திட்டம் வகுத்தாலும் இந்தக் சமம். ஏனென்றால் மிருகம்தான் இவ்வுலக வாழ்வோடு அழிந்து விடப் போகிறது. மறுஉலகத்தைக் குறித்த எண்ணம் இல்லாமல் வாழ்ந்து மடிகிறது. பிள்ளையை அப்படி வாழவிடுவது, ஒரு பெரும் உண்மையை அதனிடமிருந்து மறைத்து வைப்பதற்கு சமமாகிறது. அதாவது, தனக்கொரு ஆத்துமா இருக்கிறது என்பதையும், அது இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே தனது வாழ்நாளின் குறிக்கோள் என்பதையும் சிறுபிராயம் தொடங்கி கற்றுக் கொள்ள வேண்டியதை மறைத்து வைப்பதாகிறது.
உண்மையான கிறிஸ்தவன் நாகரீகத்திற்கு அடிமையாகி வாழக்கூடாது. மோட்சவாழ்க்கைக்கு தனது பிள்ளைகளை அவன் பயிற்சிவிக்க வேண்டுமானால் அவன் உலகம் போகிற போக்குகளுக்கு கவனமாயிருக்க வேண்டும். உலகத்தார் செய்கின்ற விதமாகவே தானும் செய்ய வேண்டும் என்கிற மனப்பாங்கோடு திருப்தியடைந்துவிடக் கூடாது. மற்ற நண்பர்கள், அக்கம்பக்கத்தார் தங்கள் பிள்ளைகளை வளர்க்கின்ற விதமாகவே தாங்களும் வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் உடையவர்களாக இருக்கக் கூடாது. மற்றவர்களின் பிள்ளைகள் வாசிக்கின்றார்களே என்பதற்காக சரியில்லாத புத்தகங்களை தங்கள் பிள்ளைகளும் வாசிப்பதற்கு கிறிஸ்தவ பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. சந்தேகத்துக்கிடமான பழக்க வழக்கங்களை மற்றவர்களைப் பார்த்து பழகிக் கொள்ளும்படியாக அனுமதிக்கக் கூடாது. உலகத்தில் எல்லாரும் இப்படித்தானே நடந்து கொள்ளுகிறார்கள் என்பதற்காக கிறிஸ்தவப் பெற்றோரும் உலகத்தோடு ஒத்துப் போய்விடக் கூடாது. பிள்ளைகளை வளர்க்கும் போது அவர்களின் ஒரு கண் பிள்ளையின் ஆத்துமாவை நோக்கியதாக இருக்க வேண்டும். யாராவது அப்படி வளர்ப்பதைக் குறித்து, ஏன் நீங்கள் மாத்திரம் உங்கள் பிள்ளைகளை வித்தியாசமாக வளர்க்கிறீர்கள் என கேலி பேசினால், அதைக் குறித்து வெட்கப்படாதீர்கள். அப்படி வளர்ப்பதால் என்ன தவறு நேர்ந்துவிடப் போகிறது? காலம் மிகவும் குறுகியது. உலகத்தின் நாகரீகங்களும் பழக்கவழக்கங்களும் விரைவாக மாறிப் போய்விடக் கூடியவை. உலகத்துக்கென இல்லாமல் மோட்சத்துக்கென தன் பிள்ளைகளை வளர்ப்பவன் முடிவில் புத்திசாலியாக மதிக்கப்படுவான். மனிதர்களுக்காக இல்லாமல்
தேவனுக்கென பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் வெட்கப்பட்டுப் போவதில்லை.
வேதாகமத்தை அறிந்து கொள்ளும்படியாக உங்கள் பிள்ளைகளை வளருங்கள். பிள்ளைகள் வேதாகமத்தை மிகவும் விரும்பி நேசிக்கும்படியாக உங்களால் செய்ய முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். பரிசுத்த ஆவியானவரைக் தவிர்த்து வேறு யாராலும் ஒருவனுக்கு வேதாகமத்தில் வாஞ்சை ஏற்படும்படியாக செய்ய முடியாது. ஆனால், வேதாகமத்திலுள்ள காரியங்களையும் சம்பவங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பிள்ளைகள் அறிந்து கொள்ளும்படி நீங்கள் பழக்கப்படுத்தலாம். வேதாகமத்தை சீக்கிரமாகவோ அல்லது மிகவும் நன்றாகவோ அவர்களால் அறிந்து கொள்ள இயலாது என்பதையும் நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
வேதாகமத்தில் நல்ல பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள பிற்காலங்களில் சரியான பக்தியை பெற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு நல்ல அஸ்திபாரமாக இருக்கும். வசனமாகிய கற்பாறையின் மேல் அஸ்திபாரம் இடப்பட்டவன், பலவிதமான போதகமாகிய காற்றுகளினாலே அலைக்கழிக்கப்பட மாட்டான். வேதாகமத்தில் பழக்கம் இல்லாமல் எவ்வளவு தான் சிறப்பான விதங்களில் பிள்ளைகளை வளர்த்தாலும் அதனால் உண்மையான பாதுகாப்பில்லை. அது ஆரோக்கியமான வளர்ப்பும் இல்லை.
நீங்கள் இந்த விஷயத்தில் மிகுந்த ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். ஏனென்றால் சாத்தான் எல்லா இடங்களிலும் நுழைந்துவிட்டான். தவறுகளும் ஏராளமாகப் பெருகிவிட்டன சில பேர் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்கள் இயேசுக்கிறிஸ்துவைக் காட்டிலும் சபைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலபேர், புனிதநியமங்கள்தான் (sacraments) ஒருவனை நித்திய ஜீவனுக்கு அழைத்துச் செல்லக்கூடிய பயணச்சீட்டாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
மற்றும் சிலா வேதாகமத்தைக் காட்டிலும், போதனைகளை உள்ளடக்கிய வினா - விடை புத்தகத்திற்கு (catechism) அதிகமான மரியாதையை தந்து கொண்டிருப்பார்கள். தங்களுடைய குழந்தைகளின் மனதை சத்தியவசனத்தினால் நிரப்பாமல், விதவிதமான கதைகளாலும் நிரப்பிக் கொண்டிருப்பார்கள். ஆனால், நீங்கள் உங்கள் பிள்ளைகளை உண்மையாகவே நேசிப்பீர்களானால், அவர்களுடைய ஆத்துமாவை வேதாகமத்தைக் கொண்டு ஒழுங்குபடுத்துங்கள். குழந்தைகளை ஒழுக்கத்துக்கு உட்படுத்துவதற்கு வேதாகமமே முதலாவது பயன்படட்டும். மற்ற எந்தப் புத்தகங்களும் வேதாகமத்திற்கு அடுத்தபடியான இடத்திற்கே செல்லட்டும்.
வேதாகம வினா - விடை புத்தகத்தில் அவர்கள் அதிகத் தேர்ச்சி பெறாவிட்டாலும் பரவாயில்லை, வேதவசனங்களில் தேர்ச்சி பெறும்படிக்கு அவர்களை பழக்குங்கள். இந்தவிதமான பயிற்சியையே தேவன் சிறந்ததாகக் கருதுவார். "உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்” (சங் 138:2) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார். மனிதர்களின் மத்தியிலே அவருடைய வார்த்தையை மகிமைப்படுத்துகிற எல்லாரையும் தேவன் விசேஷித்தவிதமாக ஆசீர்வதிப்பார் என நான் நம்புகிறேன்.
உங்கள் பிள்ளைகள் வேதாகமத்தை மரியாதையோடு படிக்கும்படியாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். வேதாகமம் மனிதனுடைய வார்த்தையல்ல, அது தேவனே அருளிய வார்த்தைகள் என்பதை அவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள். பரிசுத்தஆவியானவரின் ஏவுதலினாலே எழுதப்பட்ட அந்த வார்த்தைகளைக் கொண்டு தேவன் நம்மை இயேசுக்கிறிஸ்துவை விசுவாசிக்கச் செய்கிறார் என்பதை அவர்களுக்கு விவரியுங்கள். அவை நமக்கு மிகுந்த பிரயோஜனமுள்ள என்றும், அது நம்மை அறிவுள்ளவர்களாக்கும் என்றும், அந்த வார்த்தைதான் நம்மை இரட்சிப்பை நோக்கி.
நடத்தும் என்பதையும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். வேதாகமத்தைத் தினமும் படிக்கும்படியாக அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அது அவர்களுடைய ஆத்துமாவுக்கு வேண்டிய அனுதின ஆகாரமாகும் என்பதை அவர்கள் அறியும்படி செய்யுங்கள். ஆத்துமா ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த ஆகாரமானது அவர்களுக்கு தினமும் தேவை என்பதை உணரச் செய்யுங்கள். இது அவர்களுக்கு ஒரு தினசரி கடமை போலத்தான் இருக்குமென்றாலும், இந்த தினசரி எவ்வளவு பாவங்களைத் தடுத்து நிறுத்தக் கூடும் என்பதை நம்மால் அளவிட முடியாது. கடமையானது.
வேதாகமம் உற்சாகப்படுத்துங்கள். முழுவதையும் எந்த படிக்கும்படியாக வேதசத்தியங்களையும் அவர்களுக்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கிவிட வேண்டாம். அவர்களுக்கு முக்கியமான சத்தியங்களை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாது என நீங்களாக கற்பனை பண்ணிக் கொள்ளாதிருங்கள். நாம் நினைப்பதையும் எதிர்பார்ப்பதையும் காட்டிலும் அதிகமாக அவர்களால் விளங்கிக்கொள்ள முடியும்.
பாவத்தைக் குறித்து அவர்களிடம் பேசுங்கள் ஏற்படுத்தும் குற்ற உணர்வைக் குறித்தும், அது அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைக் குறித்தும், அதனுடைய சக்தியைக் குறித்தும், அதனுடைய பொல்லாத தன்மையைக் குறித்தும் அவர்களிடம் பேசுவதற்குத் தயங்காதீர்கள். அவைகளில் சிலவற்றையாவது அவர்கள் புரிந்து கொள்வதை நீங்கள் உணருவீர்கள். கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவைக் குறித்து அவர்களிடம் பேசுங்கள். நம்மைக் காப்பதற்காக அவர் என்ன செய்திருக்கிறார்.
என்பதையும் விவரியுங்கள். அவருடைய பரிகாரபலி, சிலுவை மரணம், அவருடைய திருரத்தம், அவரது தியாகம், நமக்காக அவர் ஜெபித்துக் கொண்டிருப்பது ஆகிய காரியங்களைக் குறித்து அவர்களிடம் பேசுங்கள். அவர்கள் புத்திக்கு எட்டாததான காரியம் இவைகளில் எதுவும் இருக்காது என்பதை நீங்கள் உணருவீர்கள்.
மனிதனுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் செய்கிற காரியங்களைக் குறித்துப் பேசுங்கள். அவர் ஒருவனை எப்படி மாற்றுகிறார் என்பதையும், அவனை புதுப்பிப்பதையும், பரிசுத்தப்படுத்தி தூய்மைப் படுத்துவதையும் எடுத்துக் கூறுங்கள். நீங்கள் சொல்பவைகளை ஓரளவிற்கு அவர்களும் விளங்கிக் கொள்வதைக் காண்பீர்கள். சுருக்கமாகக் கூறுவோமானால்,
மகத்துவமான சுவிசேஷத்தின் நீள அகலங்களை பிள்ளைகளும் எவ்வளவுக்கு உணர்ந்து கொள்கிறார்கள் தெரியுமா? அதைக் குறித்து நாம் சற்றும் அறிந்து வைத்திருக்கவில்லை என்றுதான் நான் சந்தேகிக்கிறேன். நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் புரிந்துகொள்ளக் கூடிவர்களாக
அவர்களுடைய இருதயத்தை வசனங்களால் நிரப்புங்கள். வசனம் அவர்கள் இருதயங்களில் பரிபூரணமாக வாசம்செய்வதாக. அவர்களுக்கென சொந்தமாக ஒரு வேதாகமத்தை வாங்கிக் கொடுங்கள். முழுவேதாகமத்தையும் அவர்களுக்குக் கொடுங்கள். அவர்கள் சிறுவயதினராய் இருக்கும்போதே கொடுங்கள்.
ஜெபிப்பதற்கு அவர்களைப் பழக்கப்படுத்துங்கள். உண்மையான தேவபக்திக்கு ஜெபம்தான் உயிர்மூச்சு. ஒருவன் உண்மையாகவே மறுபடியும் பிறந்திருக்கிறான் என்பதற்கு முதலாவது அடையாளம் ஜெபம்தான். கர்த்தர் அனனியாவை சவுலிடம் அனுப்பும்போது, "அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்” (அப் 9:11) என்று அடையாளம் சொல்லி அனுப்புகிறார். சவுல் ஜெபம் பண்ணத் தொடங்கிவிட்டார் என்பதே அவருடைய மறுபிறப்பை நிரூபிப்பதற்குப் போதுமானதாக இருக்கிறது.
உலகத்தார் ஜெபிப்பதில்லை. ஆனால், தேவனுடைய மக்களோ ஜெபிக்கிறவர்களாக காணப்படுகிறார்கள். "அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்” (ஆதி 4:26).
மெய்யான கிறிஸ்தவர்களின் விசேஷமான குணமாக ஜெபம் இன்றைக்கும் இருக்கிறது. ஜெபத்தின் மூலமாக அவர்கள் தேவனிடம் பேசுகிறார்கள். தங்களுடைய விருப்பங்களையும், உணர்வுகளையும், ஆசைகளையும், பயங்களையும் அவர்கள் உண்மையாக அவரிடம் வெளிப்படுத்துகிறார்கள். பெயர்க் கிறிஸ்தவர்கள் உதட்டளவில் ஜெபங்களை திரும்பத் திரும்ப செய்யக்கூடும். நன்றாகக் கூட அவர்கள் செய்யலாம். ஆனால் அதற்கு மேலாக அவர்களால் முன்னேறிச் செல்ல முடியாது.
ஜெபமானது மனிதனுடைய ஆத்துமாவைத் திருப்புவதாக இருக்கிறது. உங்களை முழங்காலில் நின்று ஜெபிக்கச் செய்யாவிட்டால் எங்கள் ஊழியமும் உழைப்பும் வீணானதுதான். நீங்கள் ஜெபிக்கத் தொடங்கும் வரைக்கும் உங்களைக் குறித்து எங்களுக்கு நம்பிக்கை இருக்காது.
ஆவிக்குரிய பொக்கிஷங்களைப் பெற்றுக் கொள்ளும் இரகசியம் ஜெபத்தில் இருக்கிறது. கடவுளோடு நீங்கள் அடிக்கடி தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொள்கிறவர்களாக இருந்தீர்களானால் உங்கள் கொள்கிறவர்களாக ஆத்துமாவானது மழைக்குப் பிற்பாடு காணப்படும் புல்லைப் போல செழிப்பாக இருக்கும் ஜெபம் குறைந்து போனால் அது காய்ந்து போன நிலையிலே காணப்படும். உங்கள் ஆத்துமாவை உயிரோடு வைக்க சிரமமாக இருக்கும். கர்த்தரோடு அடிக்கடி பேசுகிறவன், வளருகின்ற கிறிஸ்தவனாகவும், முன்னேறிச் செல்கிற கிறிஸ்தவனாகவும், உறுதியான கிறிஸ்தவனாகவும், செழிப்பான கிறிஸ்தவனாகவும் காணப்படுவான். அவன் தேவனிடம் அதிகமாகக் கேட்கிறான், அவரிடமிருந்து அதிகமாகப் பெற்றுக் கொள்ளுகிறான். தன்னுடைய சகல காரியங்களையும் அவன் இயேசுக்கிறிஸ்துவிடம் தெரிவிக்கிறான். ஆகவே எந்த சூழ்நிலையிலும் எப்படி செயல்பட வேண்டும் என்பது எப்போதும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது.
நமது கரங்களில் தேவன் கொடுத்திருக்கும் மகத்தான கருவி ஜெபமாகும். எந்த கஷ்டத்திலும் உபயோகிக்கக்கூடிய கருவியாக அது இருக்கிறது. துன்பத்தினைப் போக்கும் மருந்தாகவும் இருக்கிறது. கடவுளின் வாக்குத்தத்தங்கள் அடங்கிய பொக்கிஷ அறையைத் திறக்கும் சாவியாக இருக்கிறது. கிருபையைப் பெற்றுத் தரும் கரமாக இருக்கிறது. ஆபத்தில் உதவும் நண்பனாக செயல்படுகிறது. நமது தேவையின் போது ஒலி எழுப்பும் படியாக தேவன் நமது கரங்களில் தந்திருக்கும் வெள்ளி எக்காளமாக இருக்கிறது. தாயானவள் தன் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அதை கவனிப்பது போல, ஜெபத்தின் மூலமாக நாம் எழுப்பும் அழுகுரலை தேவன் கேட்டு நமக்கு உதவி செய்கிறார்.
தேவனிடம் வருவதற்கு மனிதன் உபயோகிக்கக்கூடிய எளிமையான சாதனம் ஜெபம். தேவனை கிட்டி சேருவதற்கு எல்லாருமே உபயோகித்துக் கொள்ளக்கூடிய அருமையான சாதனம் ஜெபம் தான். வியாதி உள்ளவரும், வயதானவர்களும், பலவீனரும், வாதநோய் ஏற்பட்டவர்களும், குருடரும், ஏழைகளும், படிக்காதவர்களும் கூட ஜெபத்தின் மூலமாக தேவனிடம் நெருங்க முடியும். ஜெபிப்பதற்கு பெரிய திறமைகள் தேவையில்லை, படிப்பு தேவையில்லை, புத்தகங்கள் தேவையில்லை. ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை உங்களுடைய ஆவிக்குரிய நிலமையைப் பற்றி தேவனிடம் கூறுவதற்கு உங்களுக்கு ஒரு நாவு இருந்தால் போதுமானது. அதைக் கொண்டு நீங்கள் ஜெபிக்கலாம். ஜெபிக்க வேண்டும். ஜெபிக்காதவர்களைக் குறித்து, "நீங்கள் விண்ணப்பம் பண்ணாமல் இருக்கிறதினால் உங்களுக்கு சித்திக்கிறதில்லை” (யாக் 4:2) என்கிற பயங்கரமான ஆக்கினைத் தீர்ப்பை நியாயத்தீர்ப்பின் நாளிலே அநேகர் கேட்பார்கள்.
பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுக்கு ஜெபிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முழு முயற்சி எடுங்கள். எப்படி ஆரம்பிப்பது என அவர்களுக்குக் காண்பியுங்கள். ஜெபத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள். விடாமல் செய்யும்படிக்கு உற்சாகப்படுத்துங்கள். அலட்சியமாகவோ, கவலையீனமாகவோ அவர்கள் இருந்தார்களானால் அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள். அவர்கள் தேவனிடம் ஜெபிக்காதவர்களாக இருந்தார்களானால் அது ஒருபோதும் உங்களுடைய குற்றமாக இராதபடிக்கு பார்த்துக் கொள்ளுங்கள்.
சிறுபிள்ளையானது தனது பக்திவழியில் எடுத்து வைக்கக் கூடிய முதலாவது அடி ஜெபிப்பது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அக்குழந்தை வாசிப்பதற்கு அறியும் முன்னதாகவே நீங்கள் குழந்தையை அதன் தாயின் அருகில் முழங்கால்படியிட வைத்து, தேவனைக் குறித்து புகழக்கூடிய சிறு வார்த்தைகளையும், சிறு விண்ணப்பங்களையும் அதன் மழலை மொழியில் கூற வைக்க உங்களால் முடியும். எந்தக் காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதன் ஆரம்பம் மிகவும் முக்கியமானதாகும். அதுபோலத்தான் பிள்ளைகளின் ஜெபவாழ்க்கையின் ஆரம்ப ஜெபமும் முக்கியமானது.
குழந்தையின் ஜெபத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இது எவ்வளவு அவசியமானது என்பதை ஒரு சிலரே அறிந்து வைத்திருக்கிறார்கள். குழந்தை பருவத்தில் சரியாக பழக்கப் படுத்தாவிட்டால், அவர்கள் அலட்சியமாகவும், செலுத்தாமலும் ஜெபிக்க கற்றுக்கொண்டு விடுவார்கள். அவர்கள் தாங்களாகவே ஜெபிக்க பழகிக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுவதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். தனது பிள்ளையின் தினசரி வாழ்வின் முக்கியமான இந்த பகுதியில் அக்கறை காட்டாத தாய்மார்களைக் குறித்து நான் குறைவாகத்தான் மதிப்பிட முடியும். குழந்தைக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுப்பதான நற்பழக்கம் உங்களுடைய சொந்த முயற்சியினால் ஏற்படக்கூடியது. உங்கள் பிள்ளைகள் ஜெபிப்பதை கேளாத பெற்றோராக நீங்கள் இருப்பீர்களானால் தவறு உங்களுடையதுதான்.
ஜெபிக்கும் பழக்கம் மட்டும் தான் வெகுகாலத்துக்கு தொடர்ந்து நிலைத்திருக்கும். அநேக முதியவர்கள், தாங்கள் சிறுவயதில் எப்படி தங்கள் தாயாரிடமிருந்து ஜெபிக்கக் கற்றுக் கொண்டார்கள் என்பதை சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். மற்ற எல்லா விஷயங்களும் அவர்களுடைய நினைவில் இருந்து அகன்று போயிருக்கலாம். ஆராதனைக்கு அவர்கள் பெற்றோர் கூட்டிச் சென்ற சபை, அங்கு பிரசங்கித்த பிரசங்கியார், தங்களுடைய சிறுவயது விளையாட்டுத் தோழர்கள் ஆகிய எல்லா விஷயங்களையும் அவர்கள் மறந்து போயிருக்கலாம். அதன் தடயம் கூட ஞாபகத்தில் சற்றும் இல்லாமல் அழிந்து போயிருக்கலாம். ஆனால் அதற்கு நேர்மாறாக, தங்களுடைய சிறு வயது ஜெபத்தைக் குறித்து அவர்கள் நன்றாக ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். அவர்கள் எவ்விடத்திலே முழங்கால் படியிட்டார்கள், என்ன வார்த்தைகளை சொல்லும்படி தாயார் அவர்களுக்குக் கற்பித்துக் கொடுத்தார்கள் என்பதெல்லாம் அவர்கள் நினைவில் தெளிவாக இருக்கும். தாங்கள் ஜெபிக்கும்போது, தாயாரின் கண்கள் அன்போடு நோக்கிக் கொண்டிருந்ததைக் கூட நினைவில் வைத்திருப்பார்கள். நேற்றுதான் நிகழ்ந்த விஷயம் போல அது மிகவும் தெளிவாக அவர்கள் மனக்கண்களில் தோன்றும்.
பெற்றோரே, நீங்கள் உங்கள் பிள்ளைகளை நேசிப்பவர்களாக இருந்தால், ஜெபிக்கும் பழக்கமாகிய விதையை அந்தப் பருவத்திலேயே விதைக்க மறவாதீர்கள். சரியானபடி ஜெபிப்பதற்கு இளம் வயதிலிருந்தே கற்றுக் கொடுங்கள். நீங்கள் அவர்களுக்கு எதைக் கற்றுக் கொடுக்காமல் போனாலும், ஜெபிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுக்காமல் விட்டுவிடாதீர்கள்.