கட்டுரைகள்

WhatsApp Image 2025 01 23 at 21.21.50 8e3840c6

 

ஆசிரியர்: ஜே.சி. ரைல்

நீங்கள் உண்மையான திருச்சபையை சேர்ந்தவராக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். திருச்சபைக்கு வெளியே இரட்சிப்பு என்பது இல்லை. நீங்கள் ஞாயிற்றுக்கிழமை எங்கே செல்லுகிறீர்கள் என்று நான் கேட்கவில்லை. “நீங்கள் ஒரு உண்மையான திருச்சபையைச் சேர்ந்தவரா? என்பதை மட்டுமே நான் கேட்கிறேன்.

அந்த ஒரு உண்மையான திருச்சபை எங்கே இருக்கிறது? அந்த ஒரு உண்மையான திருச்சபை என்பது என்ன? அந்த ஒரு உண்மையான திருச்சபையை அறியக்கூடிய அடையாளங்கள் என்ன? நீங்கள் இது போன்ற கேள்விகளைக் கேட்கலாம். உங்கள் கவனத்தை தாருங்கள், நான் உங்களுக்கு சில பதில்களைத் தருகிறேன்.

அந்த ஒரு உண்மையான திருச்சபை கர்த்தராகிய இயேசுவிலுள்ள அனைத்து விசுவாசிகளாலும் ஆனது. இது தேவனால் தேர்தெடுக்கப்பட்ட அனைத்து மக்களாலும் - மனந்திரும்பின அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களாலும் - அனைத்து உண்மையான கிறிஸ்தவர்களாலும் ஆனது. எவரில் பிதாவாகிய தேவனின் தெரிந்தெடுப்பும், குமாரனாகிய தேவனின் இரத்தம் தெளிக்கப்படுதலும், பரிசுத்த ஆவியாகிய தேவனின் பரிசுத்தமாகுதலின் பணியும் காணமுடிகிறதோ, அந்த நபரே கிறிஸ்துவின் உண்மையான திருச்சபையின் உறுப்பினராக இருப்பார்கள்.

இந்த ஒரு திருச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒரேவிதமான அடையாளங்களைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்கள்; அவர்கள் அனைவரும் “தேவனை நோக்கி மனந்திரும்பினவர்கள், விசுவாசத்தினால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை கிட்டிச் சேர்ந்தவர்கள்” மற்றும் பரிசுத்தமான வாழ்க்கையும், அவர்களுடைய சொல்லாடல் கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைவரும் பாவத்தை வெறுத்து, கிறிஸ்துவை நேசிப்பார்கள். பல்வேறு நாகரீகளுக்கு அப்பால், அவர்கள் வித்தியாசமான ஆராதனையைக் கொண்டிருப்பார்கள். சிலர் ஒரு ஜெபத்தின் வடிவில் ஆராதிக்கிறார்கள், சிலர் அவ்விதமான முறைகள் எதுவும் இல்லாமல் ஆராதிக்கிறார்கள்; சிலர் முழங்காலிட்டு ஆராதிக்கிறார்கள், சிலர் நின்று கொண்டு ஆராதிக்கிறார்கள்; ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே இருதயத்தோடு ஆராதிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஆவியினால் வழிநடத்தப்படுகிறார்கள்; அவர்கள் அனைவரும் ஒரே அஸ்திபாரத்தின் மேல் கட்டப்படுகிறார்கள்; அவர்கள் அனைவரும் தங்கள் மத பக்தியிலிருந்து ஒரு ஒற்றை புத்தகத்தின் பக்கம் இழுக்கப்படுகிறார்கள், அது தான் பரிசுத்த வேதாகமம். அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே பெரிய மையத்திற்கு வருகிறார்கள், அது தான் இயேசு கிறிஸ்து. அவர்கள் அனைவரும் இப்பொழுதும் ஒரே இருதயத்தோடு “தேவனுக்கு மகிமை உண்டாவதாக” என்றும், அவர்கள் அனைவரும் ஒரே இருதயத்தோடு, ஒரே சத்தத்தோடு “ஆமென், ஆமென்” என்று சொல்லுகிறார்கள்.

அந்த ஒரு திருச்சபை இந்த பூமியில் எந்தவொரு ஊழியர்களையும் சார்ந்தது அல்ல. திருச்சபை விசுவாசிகளுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிப்பவர்கள் அதிகமாய் மதிக்கப்படுகிறார்கள். அந்த திருச்சபை விசுவாசிகளின் ஜீவன் சபை அங்கத்துவத்திலோ, ஞானஸ்நானத்திலோ, கர்த்தருடைய பந்தியிலோ இல்லை. இவ்விதமான காரியங்களை கடைபிடிக்கும்போது அதிகமாக மதிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் அவர்களுக்கு ஒரே தலையும், ஒரே மேய்ப்பனும், ஒரே பிரதான போதகனும் உண்டு, அவர் தான் இயேசு கிறிஸ்து. கிறிஸ்துவினால் மட்டுமே, ஆவியானவரால் மட்டுமே இந்த திருச்சபையில் உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஊழியர்கள் கதவை மட்டுமே காட்ட முடியும். அவர் கதவை திறக்கும் மட்டும் இந்த பூமியில் ஒரு மனிதனும் அதை திறக்க முடியாது, ஒருவேளை அவர்கள் பிஷப்பாக இருந்தாலும், அல்லது போதகராக இருந்தாலும், உதவிகாரராக இருந்தாலும் முடியாது. ஒரு மனிதன் மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசிக்கும் போது, அந்த தருணத்தில் இந்த திருச்சபையின் உறுப்பினராக மாறுகிறார்கள். ஒரு சிறைச்சாலை கைதியைப் போல இருந்தாலும், அவர்கள் ஞானஸ்நானம் பெற எந்தவொரு வாய்ப்பும் இல்லாமல் இருக்கலாம்; ஆனாலும் அவர்கள் தண்ணீரினால் எடுக்கும் ஞானஸ்நானத்தை விட பரிசுத்த ஆவியானால் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறார்கள். ஒருவேளை அவர்கள் கர்த்தருடைய பந்தியில் அப்பமும் திராட்ச ரசமும் பெற முடியாமல் இருக்கலாம்; ஆனால் அவர்கள் விசுவாசத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் சரீரத்தைப் புசித்தும், கிறிஸ்துவின் இரத்தத்தை பானம் பண்ணுகிறார்கள். அதை இந்த பூமியில் ஒரு ஊழியனும் தடுக்க முடியாது. ஒருவேளை அவர்கள் நியமிக்கப்பட்ட போதகரால் ஒழுங்கு நடவடிக்கையின் மூலம் வெளியேற்றப்பட்டிருக்கலாம், திருச்சபையின் காரியங்களிலிருந்து புறம் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால்இந்த உலகில் உள்ள எல்லா நியமிக்கப்பட்டவர்களும்  அவர்களை உண்மையான திருச்சபையிலிருந்து வெளியேற்ற முடியாது.

இந்த ஒரு திருச்சபை ஏற்கனவே இருக்கும் எந்தவொரு ஒழுங்கு அமைப்புகளையும் சார்ந்த்தது அல்ல. உதாரணமாக, தேவாலயங்கள், பிசரங்கபீடங்கள், நன்கொடைகள், பணம், அரசாங்கங்கள், நீதிபதிகள் அல்லது மனிதனால் உண்டாகும் எந்த நன்மையையும் சார்ந்தது அல்ல. இந்த காரியங்கள் அனைத்தும் அதிலிருந்து எடுக்கப்பட்டாலும் அது தொடர்ந்து வாழுகிறது. மேலும் வானாந்தரங்களிலோ அல்லது கூடாரங்களிலோ அல்லது பூமியின் குகைகளிலோ தள்ளப்பட்டாலும் அவை நிலைத்திருக்கிறது. இந்த திருச்சபையானது கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தால் மட்டுமே நிலைத்திருக்கிறது. அவர்கள் எப்பொழுதும் அதனுடன் இருப்பதால் திருச்சபையானது மரித்துப்போவதில்லை.

தற்போதைய மதிப்பு மற்றும் சிலாக்கியங்கள் எதிர்கால மகிமையின் வாக்குறுதிகள் என அனைத்திற்கும் அது வேதத்தை சார்ந்த திருச்சபையாகும். இது கிறிஸ்துவின் சரீரம்; இது கிறிஸ்துவின் மந்தையாகும்; இது விசுவாச வீடு, இது தேவனின் குடும்பம்; இது தேவனின் கட்டிடம், தேவனின் அஸ்திபாரம், பரிசுத்த ஆவியின் ஆலயம்; இது பரலோகத்தில் பெயர் எழுதப்பட்ட முதல் பிறந்தவர்களின் திருச்சபை; இது ராஜரீக ஆசாரியக்கூட்டம், தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததி, தனித்துவமான மக்கள், விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள், தேவனின் வாழ்விடம், உலகத்தின் ஒளி, பூமியின் கோதுமை மற்றும் உப்பு; இது அப்போஸ்தலர்களின் நம்பிக்கையாகிய “பரிசுத்த உலகளாவிய திருச்சபை”; இது கர்த்தராகிய இயேசு “நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” மற்றும் “உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடனே இருப்பேன்” (மத்தேயு 16:18; 28:20) என்று வாக்களித்த திருச்சபை.

இது உண்மையான ஒற்றுமையைக் கொண்ட ஒரே திருச்சபை. இந்த சபையின் உறுப்பினர்கள் தங்கள் மதத்தின் அனைத்து காரியங்களிலும் உடன்படுகிறார்கள், ஏனெனில் அவைகள் அனைத்தும் ஒரே ஆவியினால் கற்பிக்கப்படுகிறார்கள். அவர்கள் தேவனைப் பற்றியும், கிறிஸ்து, பரிசுத்த ஆவி, பாவம், தங்களது சொந்த இருதயம், விசுவாசம், மனதிரும்புதல், பரிசுத்தத்தின் அவசியம், வேதத்தின் மதிப்பு, ஜெபத்தின் முக்கியத்துவம், உயிர்த்தெழுதல், வரப்போகிற நியாயத்தீர்ப்பு என இவை அனைத்திலும் அவர்கள் ஒரே சிந்தையோடு இருக்கிறார்கள். அவர்களில் மூன்று அல்லது நான்கு பேரை ஒருவருக்கொருவர் முற்றிலும் அந்நியர்களாக பூமியின் தொலைதூர மூலையிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்; மேற்சொன்ன காரியங்களில் அவர்களை தனித்தனியாக பரிசோதித்துப் பாருங்கள்; அவர்கள் அனைவரும் ஒரே விதமாக சிந்திக்கிறார்கள் என்பதை  நீங்கள் கண்டுகொள்ளலாம்.

இது உண்மையான பரிசுத்தத்தைக் கொண்ட ஒரே திருச்சபை. அதன் உறுப்பினர்கள் அனைவரும் பரிசுத்தமானவர்கள். அவர்கள் வேலையில் மாத்திரம் பரிசுத்தமானவர்கள் அல்ல, பெயரில் பரிசுத்தமானவர்கள் மற்றும் நற்கிரியைகள் செய்வதிலும் பரிசுத்தமானவர்கள்; அவர்கள் அனைவரும் தங்கள் செயலிலும், வாக்குறுதியிலும், நிஜத்திலும், வாழ்விலும், உண்மையிலும் பரிசுத்தமானவர்கள். அவைகள் அனைத்தும் ஏறக்குறைய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்துப்போகிறது. பரிசுத்தமற்ற ஒரு நபரும் இந்த திருச்சபைக்கு சொந்தமானவன் அல்ல.

இது உண்மையான உலகளாவிய ஒரே திருச்சபை. இது எந்தவொரு தனிப்பட்ட தேசத்தின் அல்லது மக்களின் திருச்சபை அல்ல. சுவிசேஷம் பெறப்பட்டு விசுவாசிக்கும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அதன் உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள். இது எந்தவொரு நாட்டின் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை அல்லது ஒரு குறிப்பிட்ட நிலைக்குள் அல்லது வெளிப்புற அரசாங்கத்தினால் அடைத்து வைக்கப்படவில்லை. இதில் யூதர்கள், கிரேக்கர்கள், கறுப்பின மக்கள், வெள்ளையின மக்கள் என வித்தியாசங்கள் ஏதுமில்லை, ஆனால் கிறிஸ்துவின் மீதான விசுவாசம் மட்டுமே அதன் சாரம்சமாகும். அதன் அங்கத்தினர்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய பகுதியிலிருந்து ஒன்று சேர்க்கப்பட்டு ஒவ்வொரு பெயரிலும் மொழியிலும் இருப்பார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவில் இருப்பார்கள்.

இது உண்மையான அப்போஸ்தலிக்க ஒரே திருச்சபை. இது அப்போஸ்தலர்களால் போடப்பட்ட அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் பிரசங்கித்த கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்த சபையின் உறுப்பினர்கள் இரண்டு பெரிய குறிக்கோள்களைக் கொண்டுள்ளனர். அவைகள் அப்போஸ்தலர்களின் விசுவாசம் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றை கடைபிடிப்பதே. இந்த இரண்டு பெரிய குறிக்கோளைக் கொண்டிராமல் அப்போஸ்தலர்களை பின்பற்றுவதைப் பற்றி பேசுகிற மனிதன், சத்தமிடுகிற வெண்கலம் மற்றும் ஓசையிடுகிற கைத்தாளங்களை விட மேலானவர்கள் கிடையாது.

இது  இறுதிவரை நிலைத்திருக்கும் ஒரே திருச்சபை. எதுவும் அதை முற்றிலுமாக வீழ்த்தி அழிக்க முடியாது. அதன் உறுப்பினர்கள் துன்புறத்தப்படலாம், ஒடுக்கப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம், அடிக்கப்படலாம், தலை துண்டிக்கப்படலாம், எரிக்கப்படலாம்; ஆனால் உண்மையான திருச்சபை முற்றிலுமாக அழிக்கப்பட முடியாது; அது தன் துன்பங்களிலிருந்து மீண்டு எழுகிறது; அது அக்னி மற்றும் தண்ணீரினால் வாழுகிறது. அது ஒரு நிலத்தில் நசுக்கப்படும் போது மற்றொரு நிலத்தில் துளிர்விடும். பார்வோன்கள், ஏரோதுக்கள், நீரோக்கள், இரத்தம் தோய்ந்த மேரிகள், இந்த திருச்சபையை வீழ்த்துவதற்கு வீணாக உழைக்கிறார்கள்; அவர்கள் ஆயிரக்காணவர்களை கொன்றுவிட்டு தங்கள் இடத்திற்கு செல்லுகிறார்கள். உண்மையான திருச்சபை அவர்கள் எல்லோரையும்விட அதிகமாக வாழுகிறது, மேலும் அவை அவரவர் முறைப்படி புதைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறது. இந்த உலகில் பல சுத்தியல்களை உடைத்த பட்டறைக்கல் (Anvil) இன்னும் பல சுத்தியல்களை உடைக்கும்; இது ஒரு புதர் அடிக்கடி எரிந்துகொண்டிருக்கும், இன்னும் நுகரப்படுவதில்லை.

இது ஒரு உறுப்பினரும் அழிக்கப்பட முடியாத ஒரே திருச்சபை. இந்த திருச்சபையில் ஒருமுறை பட்டியலில் பதிவு செய்துவிட்டால், பாவிகள் நித்தியத்திற்கும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்; அவர்கள் ஒருபோதும் வெளியே எறியப்படுவதில்லை. பிதாவாகிய கடவுளின் தெரிந்தெடுத்தலும், குமாரனாகிய கடவுளின் தொடர்ச்சியான பரிந்துரைத்தலும், பரிசுத்த ஆவியான கடவுளின் அனுதின புதுப்பிக்கும் மற்றும் பரிசுத்தப்படுத்தும் ஆற்றலும், மூடப்பட்ட தோட்டம்போல வேலியடைத்து  அவர்களை சூழ்ந்து கொள்கிறது.  கிறிஸ்துவில் பிறந்த ஒருவரும் உடைக்கப்பட முடியாது. கிறிஸ்துவின் மந்தையின் ஒரு ஆட்டுக்குட்டியும் அவர் கையிலிருந்து பறிக்கப்படுவதில்லை.

இந்த பூமியில் கிறிஸ்துவின் வேலையைச் செய்யும் திருச்சபை. அதன் உறுப்பினர்கள் சிறிய மந்தை, மற்றும் உலகின் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான எண்ணிக்கை உள்ளவர்கள்: இங்கே ஒன்று அல்லது இரண்டு பேர், அங்கே இரண்டு அல்லது மூன்று பேர், இந்த திருச்சபையில் ஒரு சிலர் அதில் ஒரு சிலர் உள்ளனர். ஆனால் இவர்கள்தான் உலகத்தை உலுக்குகிறார்கள்; இவர்கள் தங்கள் ஜெபங்களால் ராஜ்ஜியத்தின் நிலைகளை மாற்றுகிறார்கள். தூய்மையான மார்க்க அறிவை பரப்புவதற்கும், மாசற்றவர்களாகவும் செயலில் உள்ள வேலையாட்கள் இவர்கள்தான்; இவையே ஒரு தேசத்தின் உயிர்நாடி, கவசம், பாதுகாப்பு, தங்குதல் மற்றும் அவர்கள் சார்ந்த எந்த தேசத்திற்கும் ஆதரவு இதுதான்.

இதுவே முடிவில் உண்மையிலேயே மகிமை வாய்ந்ததாக இருக்கும் திருச்சபை. பூமிக்குரிய மகிமை அனைத்தும் அழிந்துவிட்டால், இந்த திருச்சபை பிதாவாகிய கடவுளின் சிம்மாசனத்தின் முன் களங்கமின்றி ஒப்படைக்கப்படும். பூமியில் உள்ள சிம்மாசனங்கள், அதிபர்கள் மற்றும் அதிகாரங்கள் எதுவும் இல்லாமல் போகும், கௌரவங்கள் மற்றும் அலுவலகங்கள், கொடைகள் மறைந்து போகும். ஆனால் முதற்பேறானவர்களின் திருச்சபை கடைசியில் பிரகாசிக்கும், மேலும் கிறிஸ்து தோன்றும் நாளில் பிதாவின் சிம்மாசனத்திற்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாகும். கடவுளின் நகைகள் உருவாக்கப்பட்டு, கடவுளின் குமாரன் வெளிப்படும்போது எபிஸ்கோப்பசி, பிரஸ்பைடிரியனிசம் மற்றும் பாப்டிஸ்ட்கள் என்று குறிப்பிடப்படாது; ஒரு திருச்சபை மட்டுமே பெயரிடப்படும், அது தெரிந்தேடுக்கப்பட்டவர்களின் திருச்சபை.

அன்பான வாசகர்களே, ஒரு மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமானால் அவர் சேர்ந்திருக்க வேண்டிய உண்மையான திருச்சபை இதுதான். நீங்கள் இன்னும் இந்த திருச்சபையை சேராதவராக இருந்தால், நீங்கள் இழந்து போன ஆத்துமாவை விட மேலாவர்கள் அல்ல. உங்களிடம் மதத்தின் அடையாளமும், உமியும், தோலும், ஓடும் இருக்கலாம், ஆனால் பொருளும் ஜீவனும் உங்களுக்கு இல்லை. ஆம், உங்களிடம் எண்ணிக்கையற்ற வெளிப்புறமான சிலாக்கியங்கள் இருக்கலாம்: நீங்கள் பெரிய ஒளியையும் அறிவையும் அனுபவிக்கலாம், ஆனால் நீங்கள் கிறிஸ்துவின் சரீரத்தை சேராதவராக இராவிட்டால் , உங்கள் ஒளியும் அறிவும் சிலாக்கியங்களும் உங்கள் ஆத்துமாவை காப்பாற்றாது. இந்த நிலையில் இருக்கும் மக்களுக்கு ஐயோ! சிலர் இந்த திருச்சபையிலோ அல்லது அந்த திருச்சபையிலோ சேர்ந்து, தகவல்களை பரிமாறிக்கொண்டு, குறிப்பிட்ட காரியங்களை கடைபிடித்துவிட்டு, இதனால் தங்கள் ஆத்துமா சரியாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இது ஒரு முழுமையான மாயை; இது மிகப்பெரிய தவறு. இஸ்ரவேல் என்று அழைக்கப்பட அனைவரும் இஸ்ரவேலர் அல்ல, மேலும் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் அனைவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்கள் அல்ல. குறிப்பெடுங்கள்: நீங்கள் ஒரு உறுதியான பாப்டிஸ்டாகவோ, பிரஸ்படேரியானகவோ, சுதந்தரமாகவோ, சகோதரர் சபையாகவோ, இன்னும் வேறெந்த பிரிவாகவோ இருக்கலாம், ஆனால் நீங்கள் உண்மையான திருச்சபையை சேராதவராக இருக்கலாம். நீங்கள் அவ்வாறு இல்லாவிட்டால், நீங்கள் பிறக்காமல் இருந்திருந்தால் முடிவில் நன்றாக இருக்கும்.

Add comment


Security code
Refresh

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.