கட்டுரைகள்

WhatsApp Image 2025 01 14 at 07.34.15 5b0a1fd6

 

ஆசிரியர் : A.W. பிங்க்.

தமிழாக்கம் : ஜோசப் கோவிந்த்.

"இழிவானவன்" என்ற இந்த தலைப்போடு கூடிய கட்டுரையை வாசிக்கவிடாமல் உங்களை தடுக்கலாம். அப்படி நடக்க கூடாது என்று நான் விரும்புகிறேன். உண்மைதான் இந்த கட்டுரை உங்களைப் பிரியப்படுத்தாது. இதுபோன்ற பிரசங்கங்கள் உங்கள் திருச்சபையில் கேட்பது மிகவும் அரிதானது என்று சொல்லாலாம்.  இருப்பினும், இந்த செய்தி வேத வசனத்தின்படியானது. வீழ்சியடைந்த மனிதன் "இழிவானவன்" எந்த அளவுக்கென்றால் "பாதி மிருகம், பாதி சாத்தான்" என்று சொல்லக்கூடிய அளவுக்கு இழிவானவன். இந்த விளக்கம் உண்மைக்கு மாறானது அல்ல. “மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும்” (யோபு 11:12),

மேலும் "பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிறான்" (2 தீமோத்தேயு 2:26). ஒரு மனிதன் மறுபிறப்பு அடையாதவனுடைய நிலை அவ்விதமாக இருக்கலாம், ஆனால், மறுபிறப்படைந்த (மீட்கப்பட்ட) மனிதனுக்கு அது பொருந்தாது என்ற பதிலை நீங்கள் சொல்ல தயாராக இருக்கலாம். ஒரு வகையில் அது உண்மை தான். ஆனால் மற்றொரு வகையில் அது உண்மை அல்ல, சங்கீதகாரன் இவ்விதமாக சொல்லுகிறார். "நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்". (சங்கீதம் 73:22) என்று சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லையா? நான் கற்றுக் கொள்ளாதவனும், கீழ்ப்படியாதவனும் மற்றும் தேவனின் கட்டளைகளுக்கு எதிராக மாறுகிறவனும், பரிசுத்தவானகவும் இல்லாமல் குறைந்தபட்சம் மனிதனைப் போல கூட நடந்துக் கொள்ளவில்லை, என்று சங்கீதக்காரன் ஒப்புக்கொள்கிறான்.

மேலும், "மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை". என்று யாக்கேயின் குமாரனாகிய ஆகூர் என்பவன் ஒப்புக்கொள்கிறான். (நீதிமொழிகள் 30:2) இப்படிப்பட்ட புலம்பல்கள் உண்மை தான். ஆனால்  "பெந்தகோஸ்தே" அல்லது "இரண்டாம் ஆசீர்வாதம்" பெற்று விட்டதாகச் சொல்பவர்களிடமும், நாங்கள் "வெற்றியான வாழ்க்கை" வாழ்கிறோம் என்று தங்களின் பெருமைகளை சொல்பவர்களிடமிருந்து. மேற்சொல்லப்பட்ட புலம்பல்களை கேட்க முடியாது. ஆனால் யாரவது ஒருவர் தங்கள் இதயங்களில் உள்ள கொடிய நோயை அடையாளம் கண்டு, துக்கப்படுவார்களோ அவர்களின் நிலையை இந்த புலம்பல்கள் தெளிவாக விவரிக்கின்றன.

சமீபத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் எனக்கு இவ்விதமாக எழுதினார், எனக்குள் பட்சபாதமும், தீய எண்ணமும் இருப்பாதால் கீழ்படியாமல் இருக்கிறேன். சில சமயங்களில் அவை என் காயங்கள் அழுக்காகவும், தீய வழியாகவும் உள்ளது என்றார். எனவே வாசகரே! சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் ஆகியவற்றின் இந்த விளக்கத்தை நீங்கள் ஏற்காமல், நாம் புதிய ஏற்பாட்டு காலத்தை சேர்ந்தவர்கள் நாம் சிறந்த நிலையில் இருக்கிறோம் என்று சொல்கிறீர்களா? ஒருவேளை யாராவது உங்களிடம் அவ்விதமாக சொல்லியிருக்கலாம், ஆனால் தேவனுடைய வசனமும் அதையே சொல்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அப்படியானால் ஒரு உன்னதமான கிறிஸ்தவனின் கூக்குரலைக் கேளுங்கள்; "நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரிய ஆனாயிருக்கிறேன்". (ரோமர் 7:14) நீங்கள் எப்போதாவது இப்படி உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையென்றால், உங்களுக்காக நான் உண்மையாகவே வருந்துகிறேன். வீழ்ந்த மனிதன் பாதி 'சாத்தான்' என்று விளக்குவதையும் நியாயப்படுத்தி, இயேசு கிறிஸ்து மறுபிறப்படைந்த பேதுருவிடம், இவைதமாக சொல்லுகிறார்; "எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்;" என்று சொல்லவில்லையா? (மத்தேயு 16:23) உங்களுக்கும் எனக்கும் பொருந்தக்கூடிய இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லையா? இதே கேள்வியை என்னிடம் கேட்டால் நான் வெட்கத்துடன் தலை குனிந்து, "ஐயோ! என்னிடம் உண்டு என்பேன்.

"இதோ, நான் நீசன்; (இழிவானவான்)" (யோபு 40:4) -என்பது ஆபேலைக் கொன்ற பிறகு வேதனையில் காயீன் சொல்லவில்லை, இயேசு கிறிஸ்துவை எதிரிகளின் கைகளில் ஒப்புக்கொடுத்த பிறகு யூதாஸ்காரியோத்து சொன்ன வார்த்தைகள் அல்ல, "உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்று" தேவனே யோபுவை குறித்து சாட்சிக் கொடுத்தார். (யோபு 1:8) இந்த வார்த்தைகள் யோபுவின் ஆழ்ந்த சோகத்தின் காரணமாகவும், மிகுந்த துன்பங்களிலிருந்து பிறந்ததா? அல்லது தன்னை தானே குற்றம் சாட்டும் மொழி நடையா? அப்படியென்றால் இன்றைய கிறிஸ்தவர்கள் அவற்றையே எதிரொலிப்பது சரியா? இந்தக் கேள்விக்கான சரியான பதிலைத் தெரிந்துகொள்ள, மற்றுமொரு கேள்வியைக் கேட்க வேண்டும்.

"நான் இழிவானவான்" என்று யோபு எப்போது சொன்னார்? அவருடைய செல்வத்தின் அழிவுப் பற்றிய செய்தி முதலில் வந்தப்போதா? இல்லை, அதற்கு யோபு, "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்று பதிலளித்தார். யோபுவினுடைய நண்பர்கள் அவனிடம் தர்க்கம் செய்துப்போது யோபு சொன்ன வார்த்தைகளா? இல்லை, பின்னர் அவன் தன்னை தான் அப்பாவியை போல் காண்பித்து, தனது நல்ல குணத்தை பெருமை பாரட்டினார், அப்படியானால், "நான் கேவலமானவன்" என்று யோபு எப்போது அறிவித்தார்? கர்த்தர் அவருக்குத் தரிசனமானப் போது, தேவனுடைய தமது அற்புதமான பரிபூரணங்களை ஆச்சரியமூட்டும் விதத்தில் வெளிப்படுத்தியபோது யோபு சொன்ன வார்த்தைகள் அவை. தேவனின் மாசற்ற பரிசுத்தத்தின் ஒளியில் நின்று அவருடைய மாபெரும் வல்லமையை உணர்ந்தபோது யோபு கூறிய வார்த்தைகள் அவை.

ஒரு நபர் ஜீவனுள்ள தேவனின் முன்னிலையில் இருக்கும் போது, "நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்". (தானியேல் 10:8). "ஐயோ! அதமானேன்," (ஏசாயா 6:5) மேற்சொல்லப்பட்ட வசனத்தின் படி நம்முடைய நிலை புலம்புவதாக இருக்கிறது. தேவன் தம்முடைய மகிமையுள்ள பரிபூரணங்களை ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தும்போது, அந்த மனிதன் தன்னுடைய பாழ்ப்பட்ட, இழிவான நிலையை அவன் உணருகிறான்.

தேவனின் விவரிக்க முடியாத மகிமையை எவ்வளவு அதிகமாக நம்முடைய சிந்தனையில் ஈடுபடுத்துகிறோமோ, அவ்வளவு அதிகமாக நம்மைப் பற்றிய மென்மையான எண்ணத்தை நாம் இழக்கிறோம். அது தேவனுடைய ஒளியில் மட்டுமே! "உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்." (சங்கீதம் 36:9) தேவன் நம் மனதிலும், இதயத்திலும் பிரகாசித்து, "மறைக்கப்பட்டுள்ள இருளை" வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்போது, அப்போதே நம் நம்முடைய இயழ்பான தீய குணத்தை அறிந்து, நம்மை வெறுக்கிறோம். "உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்". (ரோமர் 12:3) தேவனுடைய குணாதிசியத்தின் பரிசுத்தத்தின் மேன்மையை பார்க்கும் போது "இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன்." (ஆதியாகமம் 18:27). உண்மையான மனந்திரும்புதல் என்பது ஒரு மனிதனுடைய வீழ்ந்த நிலையை அவனுக்கு புரிய வைக்கிறது.

அப்படியானால், இன்று ஒரு கிறிஸ்தவன் "நான் இழிவானவான்" என்று சொல்வது நியாயமானதா? கிறிஸ்துவில் தனக்கிருக்கும் நீதியை விசுவாசத்தினால் பார்க்கும்போது அல்ல, மனிதன் சுபாவத்தோடு என்னவாக இருக்கிறனோ! என்பதை வேத வசனத்தின் வெளிச்சத்தில் கண்டறியும்போது, அத்தகைய ஒப்புதல் வாக்குமூலம் சரியானது. மிகுந்த பணிவை வெளிப்படுத்துவதன் மூலம் மிக தாழ்மையானவன் என்ற பெயரைப் பெறுவதற்காக அல்ல, அப்படிப்பட்ட வார்த்தைகளை இதயப்பூர்வமான கீழ்படிதலுடன் சொல்ல வேண்டும். குறிப்பாக உடைந்து நொறுங்கிய இதயத்துடன் தேவனிடம் வரும்போது கீழ்படிதலாக இருக்க வேண்டும். மேலும், அப்போஸ்தலனாகிய பவுல் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது போல் விசுவாசிகளுக்கு முன்பாக நாமும் ஒப்புக்கொள்ளகிறவர்களாக இருக்க வேண்டும், "நிர்ப்பந்தமான மனுஷன் நான்!" (ரோமர் 7:24). தேவன் நமக்குச் தெரியப்படுத்தியதை ஒப்புக்கொள்வதும், அதிலும், தேவ பயமுள்ளவர்களுக்கு முன் ஒத்துக்கொள்வதும் நமது சாட்சியின் ஒரு பகுதியாகும். "நான் இழிவானவன்" என்பது கட்டுரை ஆசிரியரின் வெளிப்படையான மற்றும் சோகமான ஒப்புதல் வாக்குமூலம் ஆகும்.

1. "என் கற்பனையில் நான் இழிவானவான்":

உணர்வுகள் எனக்குள் கொதித்தெழும் போது எத்தனையோ துக்கமான காட்சிகள் என் கற்பனையில் காணப்படுகின்றன, எத்தனையோ தவறான எண்ணங்கள் உள்ளுக்குள் கிளர்ந்து எழுகின்றன. தேவனின் பரிசுத்த வேதத்தில் நம்முடைய சிந்தனையை ஈடுபடுத்திக் கொண்டாலும், மனம் அலைந்து திரிந்து, எண்ணங்கள் துர்நாற்றம் வீசுகின்றன. கட்டுரையின் ஆசிரியர் இவ்விதமாக சொல்லுகிறார்: "உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது." (ஏசாயா 1:6) "அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்." (சகரியா 13:1)

2. "என் சொந்த விருப்பத்தினால் நான் இழிவானவன்":

தேவன் என் திட்டங்களை சீர்குலைக்கும்போது நான் எவ்வளவோ வருத்தப்படுகிறேன். தேவனின் தீர்மானங்களை நான் விரும்பாதபோது, என் பொல்லாத இதயத்தில் கலகம் எவ்வளவாய் பொங்கி எழுகிறது. குயவன் கையில் களிமண்ணைப் போல் இல்லாமல், எத்தனை முறை பின்னங்கால்களில் முரண்டுபிடிக்கிற கழுதையைப் போல் என்னுடைய வழியைத் தேர்ந்தெடுக்கிறவனாக இருந்தேன். ஐயோ! ஐயோ! சாந்தமும், மற்றும் மனத்தாழ்மையும் கொண்ட தேவனிடமிருந்து நான் கற்றுக்கொண்டது எவ்வளவு குறைவு! "உடல்" சுத்திகரிக்கப் படுவதற்கு பதிலாக அழுகுகிறது. ஆத்துமாவின் மீதான அதன் வைராக்கியம் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக, அது ஒவ்வொரு ஆண்டும் உறுதி படுவதுப்போல் காண்கிறது. "ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.! (சங்கீதம் 55:6)

3. "என் மாறுபாடான நிலையில் நான் இழிவானவன்":

"மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள்" (கலாத்தியர் 6:12) மற்றவர்களால் உயர்த்தப்படுவதற்கு நான் எத்தனையோ முறை ஆர்வமாக இருந்துள்ளேன்! ஆவிக்குரிய காரியங்களில் உயர்ந்தவனாக வேண்டும் என்ற விருப்பத்தால் நான் ஏமாற்றுக்காரனாய் இருந்தேன்! உண்மையை மறைத்து, நான் சிறந்தவன் என்று மற்றவர்கள் நினைக்கும்படி நான் எத்தனை முறை செயல்பட்டிருக்கிறேன்! தற்பெருமையும், சுயநலமும் என்னுள் நிறைந்திருக்கின்றன. பிரசங்க பீடத்தில் நான் எவ்வளவு நேர்மையற்றவனாக இருக்கிறேன். தேவனுக்குப் பதிலாக மனிதர்களின் பார்வையில் மெச்சிக் கொள்ளும்படியான ஜெபத்தை ஏறேடுக்கிறேன், ஆவிக்குரிய உள்ளத்தில் சுத்தமாக இராமல் வெளி வேடத்தில் சுத்தமாக இருப்பது போல் நடிக்கிறேன், நான் அனுபவிக்காத மற்றும் உணராத விஷயங்களைப் பற்றி போலியாக பேசினேன்! தொழுநோயாளியின் இடத்திற்கு தகுதியான நான், என் உதடுகளை மூடிக்கொண்டு, "அசுத்தன், அசுத்தன்" என்று சத்தமாக அழுவதற்கு நான் மேலும் மேலும் காரணங்கள் என்‌‌‌னில் கண்டுபிடித்தேன்.

4. ''என் நம்பிக்கையின்னால் நான் இழிவானவன்'':

நான் பல முறை சந்தேகங்களினாலும் மற்றும் தவறான புரிதல்களினாலும் நிரப்பப் பட்டிருக்கிறேன்! பலமுறை தேவனுக்கு பதிலாக என்னுடைய சுய ஞானத்தை சார்ந்திருக்கிறேன்! நான் கேட்டதை நான் பெற்றுக்கொண்டேன் என்று நம்பி, பல முறை ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். (மாற்கு 11:24) சோதனை நேரம் வரும்போது இதற்கு முன்பு பெற்ற விடுதலையை பலமுறை மறந்துவிட்டேன்! துன்பங்கள் நெருங்கும் போது காணப்படாத அவருக்கு நேராய் கண்ணோக்காமல் காணப்படுகிற சிரமங்களால் பல முறை நான் மூழ்கியிருக்கிறேன்! தேவனால் எல்லாம் கூடும், என்று உணராமல் "இந்த வனாந்தரத்தில் தேவனால் போஜனத்தை கொடுக்க முடியுமா? என்று "தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?" (சங்கீதம் 78:19) என்று நான் பல முறை சொல்லத் தயாராக இருந்தேன், இது ஒவ்வொரு முறையும் நடக்காது என்பது உண்மைதான். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் விசுவாசத்தின் கிருபைக்கு ஜீவனைத் தருகிறார், ஆனால் துன்ப நேரங்களில், தேவன் செயல்படவில்லை என்றால், பலமுறை என் ஆண்டவரை சொல்ல வைப்பேன். "ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். உங்களுக்கு நம்பிக்கை இல்லையா" (மாற்கு 4:40)

பிரியமான வாசகரே! உங்களுடைய அனுபவம் மேற்கூறியவற்றுடன் எந்தளவிற்கு ஒத்துப்போகிறது? "தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்." என்பது உண்மையாகத் தோன்றுகிறதா? (நீதிமொழிகள் 27:19) இந்த நோய்வாய்ப்பட்ட இதயத்தின் அறிகுறிகளை நான் விவரித்திருக்கிறேனா? நீ எப்போதாவது தேவனிடம், "மன்னியும் ஆண்டவரே, நான் "இழிவானவன்" என்று ஒப்புக்கொண்டிருக்கிறாயா? எவ்வளவு தாழ்மையை உண்டாக்கிற இந்த உண்மையை கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதரிகளிடம் நீ ஒப்புக்கொண்டாயா?  அதை வாய்மொழியாக மட்டுமே ஒப்புக்கொள்வது எளிதானது, ஆனால் நீ மனதளவில் உணர்ந்துள்ளாயா? "என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று. (எஸ்றா 9:6) என்று இரகசியமாக தேவனுக்கு முன்பாக புலம்புகிறதா? அல்லது நீ "இழிவானவன்" என்ற வலிமிகுந்த அடையாளம், பரிசுத்தமான தேவனை அடைவதற்கு அது போதுமானது அல்ல என்பதை உணர வைக்கிறதா?

1. நீ தேவனுக்கு நன்றி உள்ளவனாக இருப்பதற்கு பெரிய காரணம் இருக்கிறது: பரிசுத்த ஆவியானவர் உன்னுடைய மோசமான நிலையை காண்பித்ததற்காகவும், உன்னுடைய பாழடைந்த நிலையை நீ உணரும்படி வெளிப்படுத்தியதற்கும், கோடி காணக்கான பெயர் கிறிஸ்தவர்கள் இருளில் இருக்கிறார்கள் அதிலிருந்து என்னை காப்‌‌‌பற்‌‌‌றியதற்‌‌‌கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும். கடலளவு அநியாயத்தை உன்‌‌‌னில்‌‌‌ கண்டு துக்கத்தில் தவிக்கிற என் சகோதரனே! உன் அசுத்தமான உதடுகளால் கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தை உச்சரிப்பதற்கு கூட நான் தகுதியற்றவன் என்று நினைக்கிறாயா? அப்படியனால் அவர்கள் அருவருப்பான செயல்களைச் செய்வதால் வெட்கப்பட வேண்டும், ஆனாலும் அவர்கள் எவ்வளுவேனும் வெட்கப்படுவதில்லை. அவமானம் அடைந்தோம் என்று உணரவில்லை, "ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்." (எரேமியா 8:12) என்று எழுதப்பட்ட சுயநீதியுள்ள மக்களில் நீ ஒருவனாக இல்லாததற்கு தேவனுக்கு நன்றி சொல்வதற்கு கடனாளியாக இருக்கிறாய். பாவத்தால் குருடாக்கப்பட்ட உன் கண்களை இரக்கமுள்ள தேவன் உன் கண்களை அபிஷேகம் செய்தார் என்றும், இப்போது உன் அருவருப்பான அசிங்கத்தை கொஞ்சமாவுது அவருடைய பார்வையில் பார்த்து, "நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்." என்று சொல்லிக்கொண்டு தேவனை துதிப்பாய் (உன்னதப்பட்டு 1:5).

2. கர்த்தருக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் நடக்க உனக்கு பெரிய காரணம் இருக்கிறது. உனது இழிவான நிலையை குறித்த உணர்வு, அவருடைய முன்னிலையில் தாழ்மையான பணிவுடன், "தேவனே, பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும். என்று மார்பில் அடித்துக்கொண்டு உன்னை அழ வைக்கிறதா? ஆம், உண்மையான விசுவாசத்தில் உள்ள எவருக்கும் தேவனிடம் அத்தகைய விண்ணப்பமாக இருக்கும். ஏனென்றால், அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கை தொடங்கியதைப் போலவே தொடர வேண்டும். ஆகையால், நீ கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை விசுவாசித்தபடியே, அவருக்குள் வேர்கொண்டவனாகவும், அவர்மேல் கட்டப்பட்டவனாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, (கொலோசெயர் 2:6) ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். (வெளிப்படுத்துதல் 2:5). ஐயோ, எவ்வளவு சீக்கிரமாகவும், எவ்வளவு எளிதாகவும் நமது கீழ்த்தரமான உணர்வு நம்மை விட்டு விலகுகிறது! தாழ்மை என்பது நம்மை அடிக்கடி மேம்படுத்துகிறது! அதனால்தான், "நீ எப்பேர்ப்பட்ட பாறையிலிருந்து செதுக்கப்பட்டாய் என்பதை கருத்தில் கொள், நீ எப்பேர்பட்ட குழியிலிருந்து எடுக்கப்பட்டாய்‌‌‌ என்‌‌‌பதை நினைத்துக்கொள்" இது கவனத்தில் கொள்ளவேண்டும். இதனால் தான் நீ! தேவனுடைய முன்னிலையில் தாழ்மையோடு உன் குறைகளை உணர்த்தும் படி தேவனிடம் கேட்க வேண்டும்.

3. உன்மீது திரியேக தேவனின் உன்னத அன்பைக் கண்டு நீ வியக்க பெரிய காரணம் இருக்கிறது. தேவத்துவம் கொண்ட மூவொரு தேவனான பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய இவர்கள் இப்படிப்பட்ட மோசமான ஒருவரின் மீது தங்கள் இருதயங்களை வைத்தது ஆச்சரியமான அதிசயம். மேலும், நம்முடைய சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் நாம் பாவங்களை செய்வோம் என முன்னறிந்த பிதாவாகிய தேவன் "உங்களை நித்திய அன்பினால் நேசித்தார்" என்ற உண்மை உங்களை ஆச்சரியத்தால் நிரப்ப வேண்டும். பாவ அழுக்கும் துர்நாற்றம் வீசும், உன்னைப் போன்ற ஒரு நபரை மீட்க குமாரனாகிய தேவன் தனது மகிமையான ஆடைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பாவ மாம்சத்தை ஏற்றுக்கொண்டார் என்பது மெய்யான அன்பே" இப்படிப்பட்ட இழிவான மனிதனின் இதயத்தில் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்க வேண்டும் என்பதும், "பாவம் எங்கு பெருகுகிறதோ, அங்கே கிருபை எல்லையில்லாமல் பெருகும்" என்ற வேத சத்தியத்தை நிரூபிக்கிறது. "நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மை கழுவி, நம்மை விடுவித்தவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றும் உண்டாவதாக. ஆமென்." (வெளிப்படுத்துதல் 1:6)

Add comment


Security code
Refresh

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.