ஆசிரியர்: Truth for Christ Ministries
தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்
மகா தேவனும், நம்முடைய இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் என்னுடைய கிறிஸ்தவ சகோதர மற்றும் சகோதரிகளுக்கு அன்பின் வாழ்த்துக்கள். வேதம் முன்னறிவித்தபடி, இந்த கடைசி காலத்தில் பல கள்ள தீர்க்கதரிசிகள் வந்து பல கிறிஸ்தவர்களை வஞ்சிப்பார்கள். இப்படி வஞ்சித்த பல கள்ள தீர்க்கதரிசிகளில் முக்கியமானவர் “வில்லியம் மரியன் பிரென்ஹாம்” என்பவர். இவர் 1909-ல் அமெரிக்காவிலுள்ள “கென்டிகே” என்ற நகரத்தில் பிறந்தார். இவர் 1943 -ல் “வில்லியம் ஹீலிங்” என்ற ஊழியத்தைத் தொடங்கினார். குறுகிய காலத்திலேயே வில்லியம் பெரும் புகழை பெற்றார். பல நாடுகளுக்குப் பயணம் செய்தார். ஒருபுறம் கிறிஸ்தவத்தில் உள்ள பொய்யான போதனைகளை கண்டித்தும், மறுபுறம் தவறான போதனைகளை கிறிஸ்துவ சமுகத்திற்கு அதிகமாக கொடுத்து பிரபலமடைந்தார். ஆதி திருச்சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எப்படியோ! அதேபோல இந்த கடைசி கால திருச்சபைக்கு தானும் அப்படிப்பட்ட அதிகாரமுடையவன் என்றும், தன்னை மக்கள் தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர்கள் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்றும், தன்னைப் பற்றி முன்பே வேதத்தில் தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டுள்ளது என்றும் சொல்லத் தொடங்கினார்.
அவர் பிறந்தபோது, அவருடைய அறையில் ஒளி பிரகாசித்ததாகவும், அந்த ஒளி அவரது தலைக்கு மேல் நின்றதாகவும், அவர் குழந்தையாக இருந்தபோதே பறவைகள் அவரோடு பேசியதாகவும், அவருடைய ஏழாவது வயதில் ஒரு சூறாவளி காற்றிலிருந்து தேவன் அவருடன் பேசினார். என்று சொல்லி மக்கள் மத்தியில் அவர் ஒரு தீர்க்கதரிசியென்று அவரே அறிவித்துக்கொண்டார். வேதத்தின் இரகசியங்களை விளக்குவதற்கு லவோதிக்கியா கால கட்டத்திற்கு தேவன் தன்னை ஒரு தூதனாக அனுப்பியதாக சொல்லிக்கொண்டார். ஏழு சபை காலகட்டங்கள், ஏழு முத்திரைகள் இவைகளை குறித்து புத்தகங்களை எழுதும்போது ஒரு தேவதூதன் தன்னுடன் இருந்து தனக்கு போதித்ததாகவும் சொல்லிக்கொண்டார், மேலும் அவருடைய ஊழிய பணி அனைத்திலும் அந்த தேவதூதனே வழி நடத்துகிறதாக என்று சொல்லிக்கொள்வார். ஆனால் உண்மை என்னவென்றால் அவர் 1919 -ல் “கிளாரன்ஸ் லார்கின்” அவர்கள் வெளியிட்ட 'தி புக் ஆஃப் ரிவிலேஷன்' என்ற புத்தகமும், மற்றும் “சார்லஸ் ரஸல்” எழுதிய ‘சபைகாலங்கள்’ என்ற இரு புத்தகங்களின் அடிப்படையில் இந்த காரியங்களை எழுதினார்.
இந்த புதிய ஏற்பாட்டு காலத்தில் மக்களை, பரிசுத்த ஆவியானவாரே வழிநடத்துவாறே தவிர ஒரு தேவதூதன் மூலமாக அல்ல. மேலும், நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன். என்று தேவவசனம் எச்சரிக்கிறது. (கலாத்தியர் 1:8) பிரென்ஹாமின் பல தீர்க்கதரிசனங்கள் மற்றும் தரிசனங்கள் நிறைவேறவில்லை என்றாலும், அவரைப் பின்பற்றுபவர்கள் தொடர்ந்து அவரைப் பின்தொடர்ந்தனர் அவர்களை பிரென்ஹமைஸ்ட்டுகள் என்று அழைக்கப்பட்டார்கள். பிரென்ஹாம் வேதத்தை விளக்குவதில் பல வசனங்களை வசனத்தோடு சேர்த்தும், பல வசனங்களிலிருந்து வசனங்களை நீக்கினார். அவர் தவறான பாதையில் செல்கிறார் என்றும், விரைவில் தேவன் அவரை தண்டிப்பார் என்றும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் எச்சரித்தாலும், அதை அவர் பொருட்படுத்தவில்லை,
இறுதியாக, 1965 டிசம்பர் 18 –ம் தேதி அன்று, பிரென்ஹாம் காரில் பயணம் செய்கையில் விபத்துக்கு உள்ளாகி அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் தன்னுடைய சுயநினைவை இழந்தார். மற்றும் அதே மாதம் 24-ம் தேதி இறந்தார். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரை நான் உயிரோடு இருப்பேன் என்று உறுதியளித்த தங்கள் தீர்க்கதரிசி திடீரென இறந்துவிடுவார் என்பதை பிரென்ஹாமை பின்பற்றுகிற அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே! அவர் நிச்சயமாக மீண்டும் உயிரோடுயெழுவார் என்ற மூட நம்பிகையோடு அவரின் உடலை சுமார் நான்கு மாதங்கள் வைத்திருந்தனர். ஆனால் அவர் உயிரோடு எழவில்லை இனி நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என உணர்ந்த அவரை பின்பற்றுபவர்கள் 1966, ஏப்ரல் 11-ம் தேதி அவருடைய உடல் அடக்கம் செய்யதனர். அவர் எழுதிய புத்தகங்களையும், அவரது பிரசங்க உரைகளின் பதிவுகளையும் உலகம் முழுவதும் பிரென்ஹமை பின்பற்றுகிறவர்கள் பரப்புகிறார்கள். ஒரு விளையாட்டு அரங்கில் அவரை புகைப்படம் எடுக்கப்பட்ட போது, அவருக்குப் பின்னால் இருந்த மின்விளக்கு வெளிச்சத்தினால் ஒரு நிழல்ப்போன்ற வடிவம் இருந்தது. பெரும்பாலான புகைப்படங்கள் அப்படித்தான் வெளிவரும். அந்த புகைப்படத்தை எடுத்த “டக்ளஸ் ஸ்டுடியோ” நிறுவனர் உங்கள் புகைப்படத்தில் விளக்கு நிழல்ப்பட்டது என்று பிரென்ஹாமிற்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். ஆனாலும் அது தன்னை பின்தொடரும் அக்கினி தூண் என்று பிரென்ஹாம் அவரைப் பின்பற்றுபவர்களை நம்ப வைத்தார்.
ப்ரென்ஹாமின் பல புகைப்படங்கள் உள்ளன. ஆனால் அந்த புகைப்படத்தில் இந்த அக்கினி தூண் ஏன் காணப்படவில்லை? கண்ணால் பார்க்க முடியாத அமானுஷ்யத்தை எப்படி கேமராவால் படம் பிடிக்கமுடிந்தது? இதற்கு முன் எந்த தீர்க்கதரிசியாவது அக்கினித்தூண் பின் தொடர்ந்ததா? இதைப் பற்றி யோசிக்காமல் அனைவரும் அவருடைய அந்த புகைபடத்தை தங்கள் வீடுகளில் வைத்து வணங்குகிறார்கள். (மல்கியா 4:5,6) வசனத்தில் சொல்லப்பட்ட எலியா நான்தான் என்று கூறிக்கொள்கிறார். யோவான் ஸ்நானகன் இந்த தீர்க்கதரிசனத்தின் பாதியை மட்டுமே நிறைவேற்றியதாகவும், மற்றொரு பாதியை நிறைவேற்ற எலியாவின் ஆவியோடு தான் வந்ததாகவும் கூறுகிறார். சொல்லபோனால், அந்த தீர்க்கதரிசனம் யோவானில் முழுமையாக நிறைவேறியது. காபிரியேல் என்ற தேவதூதன் இவிதமாக கூறினார், “அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்.” (லூக்கா 1: 16,17)
“நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.” (மத்தேயு 11:14) சொல்லப்போனால் இந்த தீர்க்கதரிசனம் இஸ்ரவேலர்களுக்காக எழுதப்பட்டது. “மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம்.” (மல்கியா 1:1), “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.” (மல்கியா 4:4,5). அவர் சொன்னபடியே யோவானை இஸ்ரவேலர்களிடம் அனுப்பினார்.
வெளிப்படுத்துதல் 10:6 –வது வசனத்தில் "7வது தூதன் பேசும் நாட்களில்" என்று எழுதப்பட்டிருக்கிறது, அந்த ஏழாவது தூதன் நானே என்று பிரென்ஹாம் கூறினார். ஆனால் அந்த தூதன் வானத்தில் எக்காளங்களை வைத்திருக்கும் ஏழு தேவதூதர்களில் கடைசியானவர். ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது என்ற வசனத்தின் மொழிபெயர்ப்பு மேலும், ப்ரென்ஹாம் முதலில் தன்னை யோவான் ஸ்நான் என்று சொன்னார். பலர் அவரைப் பின்தொடரும்போதே அவர் தன்னை எலியாயாவின் ஆவியைவுடைய திர்க்கதரசி என்று அழைத்துக்கொண்டார். 1964 –ல் இருந்து, பிரென்ஹாம் அதிகமான கள்ள போதனைகளை சொல்ல தொடங்கினார். (லூக்கா 17:30) வசனத்தில் மனுஷகுமாரன் தோன்றுவார் என்று உள்ளதை தனக்காக தான் எழுதப்பட்டது என்று கூறினார். சுமார் 32 முறை அவர் தன்னை மனுஷகுமாரன் என்று சொல்லிக்கொண்டார். (மத்தேயு 24:24) வசனத்தில் சொன்னதுப்போல பல கள்ள கிறிஸ்துகள் வருவார்கள் என்று கர்த்தர் முன்னறிவித்ததைப் போலவே, மற்றொரு கள்ள கிறிஸ்து பிரென்ஹாம் வடிவத்தில் வந்தார். உலகமுழுவதும் பிரென்ஹாமை தற்போது ஐந்து மில்லியன் மக்களால் பின்ப்பற்றுகிரார்கள். இவர்கள் அனைவரும் கிறிஸ்துவர்களை பிரென்ஹமை பின்பற்றுகிறவர்களாக மாற்றுவதற்கு இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.
ஏதேன் தோட்டத்தில் சாத்தானும் ஏவாளும் உடல் ரீதியாக உறவு கொண்டதால் காயீன் பிறந்தார் என்றும், நீங்கள் தீர்க்கதரிசியான தன்னை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இரட்சிக்க முடியும் என்றும், ப்ரென்ஹாம் புறஜாதிகளுக்காக வந்த மேசியா என்றும் அவரை பின்தொடர்கிறவர்கள் அனைவருக்கும் கற்பிக்கிறார்கள். அவர்களின் 'தற்போதைய திருச்சபைகளில்' (Message Churches) என்று ஆழைக்கபடுகிறது. அவர்களுடைய திருச்சபைகளில் வேதாகமத்தை விட அவருடைய போதனைகள் அதிகமாகப் பிரசங்கிக்கப்படுகின்றன. அங்கே இயேசுகிறிஸ்துவை விட அதிகமாக அவரையே ஆராதிப்பார்கள். இயேசுகிறிஸ்து தேவனல்ல என்பதை அவர்கள் சகித்துக் கொள்வார்கள், ஆனால் பிரென்ஹாம் ஒரு தீர்க்கதரிசி அல்ல என்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்களை குறித்து மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள்.