ஆசிரியர்: டி. யஷ்வந்த் குமார்
தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்
"பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக..." (மத்தேயு 6:9).
உலமெங்கிலும் உள்ள கிறிஸ்துவ திருச்சபையின் வரலாற்றில் எத்தனை பேர் இந்த பரலோக ஜெபத்தை செய்தார்களோ நம்மால் கணக்கிட முடியாது. கர்த்தர் கற்பித்த இந்த ஜெபத்தை பலர் செய்திருக்கலாம், ஆனாலும் எப்படி நாம் ஜெபிக்கக்கூடாது என்பதையும் கர்த்தர் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். எனவே கர்த்தர் ஜெபத்தை எப்படி செய்யக்கூடாது என்பதை சொல்லிவிட்டு, அதன்பிறகு எப்படி ஜெபிக்க வேண்டும் என்பாதை சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
1. பரிசேயரின் ஜெபம் - ஆர்ப்பாட்டமான ஜெபம்
முதலாவதாக, பரிசேயரின் மாய்மாலத்தை குறிப்பிட்டு பேசிய கர்த்தர், 'பரிசேயன் தேவனிடம் ஜெபிப்பது அவன் விருப்பமல்ல, தான் ஜெபிப்பதை அனைவரும் பார்க்கவேண்டும் என்பதே அவனின் விருப்பம் என்று சொன்னார். ஒரு பறவை சக பறவையுடன் இணைந்து நடனம் ஆடுவதற்கு அந்த பறவையை உற்சாக படுத்த சில பறவைகள் ஒரு பகுதியாக பாடுகின்றன. சில பறவைகள் நடனம் ஆடுகின்றன. ஆனால் எங்கயோ பாடிவிட்டு வேறு எங்காவது நடனமாடினால் எப்படி? எங்கு ஆடுகிறார்களோ அங்கு தான் இவையெல்லாம் முன் செய்யப்பட வேண்டும். அதுப்போலவே, பரிசேயர்களும், மக்கள் எல்லோரும் எங்கே கூட்டம் கூடி இருக்கிறார்களோ, அப்படியே எந்த தெருவின் முனைகளில் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஜெபிகிறார்கள். இது வெளிப்படையாக செய்கிற ஜெபம். கர்த்தர் இவர்களை சுட்டிக்காட்டி எப்படி ஜெபிக்கக்கூடாது என்பதை அவர்களுக்குக் காண்பிக்கிறார்.
கர்த்தர் இவ்விதம் சொல்கிறார், "அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்;" (மத்தேயு 6:5) இப்படி பரிசேயர்களைப் போல ஜெபிப்பவர்கள், மக்கள் தங்களை பாராட்ட வேண்டுமென்றும், புகழ வேண்டுமென்றும் அவர்கள் இத்தகைய ஜெபம் செய்கிறார்கள். எனவே அவர்கள் தங்களின் அனைத்து மொழித் திறங்களையும், பயன்படுத்தி மேடையிலும், முடிந்தால், ஒலிபெருக்கில் அதாவது (மைக்கில்) அவர்களுக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்தி தங்களை ஒரு பெரிய பக்திமான் போன்ற ஒரு தோற்றத்தை எல்லோருக்கும் முன்பாக காட்டிக்கொள்வதற்கு மிகவும் முயற்சிப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் பார்ப்பவர்களை ஏமாற்றலாம் ஆனால், தேவனை ஏமாற்றமுடியாது.
2. ஜெபத்திற்கு ஒரு நல்ல உதாரணத்தை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்னார்.
"இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்தில் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்." (லூக்கா 18:10-12)
இந்த பரிசேயன் தன்னைச் சுற்றி யாரும் இல்லாவிட்டாலும் தன்னை எவ்வளவு உயர்த்திக் கொள்கிறான் என்பதை பார்க்கிறீர்களா? அவனுடைய என்ணம் இவ்விதமாக இருக்கிறது, தேவனே, நான் உம்முடைய பார்வைக்கும், என்னுடைய பார்வைக்கும் நான் எவ்வளவு உயர்ந்தவனாக இருக்கிறேன். இந்த வரி வசூலிப்பவனை யூதர்களும், புறஜாதிகளும் அனைவரும் அவனை வெறுபார்கள். இவனைப்போல அல்லாமல், என்னை ஒரு அதிசயத்தைப் போல செய்தீர். வாரத்திற்கு இரண்டு முறையாவது உமக்காக என் வயிறு பசியாயிருக்கிறது. நான் சம்பாதித்தயவற்றில் தவறாமல் தசமபாகம் கொடுக்கிறேன். இதுவே அந்த பரிசேயரின் ஜெபம்.
ஆனால், அந்த ஆயக்காரன் "பாவியாகிய எனக்கு இரக்கமாயிரும்" என்று வேண்டிக்கொண்டான். இறுதியாக அந்த ஆயக்காரனே நீதிமானாக தீர்க்கப்பட்டான். இப்படிப்பட்ட நீதிமான்கள் எல்லாம் “நீதிமான்கள்” என்ற நகரத்தில் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த பரிசேயர் இருக்கும் நகரம் இந்த நரகத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும். பல கிலோமீட்டருக்கு அப்பால் ‘சுய நீதிகாரர்கள்’ என்ற நகரத்தில் பரிசேயர்கள் இருகின்றனர். ;சுய நீதிகாரர்’ என்ற இந்த நகரத்துக்கும் ‘நீதிமான்கள்’ என்ற அந்த நகரத்துக்கும் அதிகமான தூரம் உள்ளது. பரிசேயர் அந்த நகரத்தை விட்டு கிறிஸ்துவிடம் திரும்பினால் ஒழிய 'நீதிமான்களின்' இந்த நகரத்தை அடைய முடியாது.
அன்புள்ள வாசகரே, உன்னுடைய ஜெப வாழ்க்கையைப் ஆராய்ந்து பாருங்கள். மற்றவர்களை பிரியப்படுத்தவும், அவர்கள் முன்பாக நீ உன்னை உயர்ந்த பக்திமானை போல காண்பித்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறாயா? உன் தனிப்பட்ட ஜெப வாழ்க்கை எப்படி உள்ளது? திருச்சபைகளிலும், மற்ற பொது கூட்டங்களில் நடக்கிற ஜெபங்களில் உன்னுடைய இருதயம் எப்படி உள்ளது? மற்றவர்கள் உன்னை கவனிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறாயா? கர்த்தராகிய இயேசு கூறுகிறார்: “அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 6:5) தேவன் இனி அவர்களுக்குக் கொடுப்பதற்கு எதுவுமில்லை, அவர்கள் எதைப் பெறவேண்டும் என விரும்புகிறார்கள் என்றால் அது மக்களிடமிருந்து பாராட்டுகள். அதை அவர்கள் இந்த உலகிலே பெற்றிருக்கிறார்கள். பின்பு அவர்கள் தேவனிடம் என்ன எதிர்பார்க்க முடியும். மேலும், “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.” (மத்தேயு 6:6)
3. புறவினத்தாரின் ஜெபம் - அர்த்தமற்ற ஜெபம்.
சிலர் நீண்ட நேரம் ஜெபித்து ஆமென் சொல்லிவிட்ட பிறகு, அவர்கள் எந்த காரியத்துக்காக ஜெபித்தார்கள் என்பதை மறந்துவிடுவார்கள், அவர்கள் உதடுகளால் மட்டும் கர்த்தரை மகிமைப்படுத்துகிறீர்கள், அவர்களின் இருதயம் தேவனுக்கு துரமாக இருக்கிறது. எதோ மனபாடம் செய்து ஒப்பிவித்தது போல ஜெபத்தில் பலவிதமான வார்த்தைகளை சொல்கிறீர்கள் அவ்வளவுதான். நீங்கள் எப்படி ஜெபிக்கக்கூடாது என்று இயேசுகிறிஸ்து இவ்விதமாக கூறுகிறார்.
“அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்;" (மத்தேயு 6:7) “வீண்வார்த்தைகள்” என்றால் மூல மொழியான கிரேக்கத்தில் 'அர்த்தமற்ற வார்த்தைகள்' என்று பொருள். பிற மதத்தவர்கள் மந்திரங்களை உச்சரிப்பது போலவும், அவற்றின் அர்த்தம் தெரியாமல் திரும்பத் திரும்ப உச்சரிப்பது போலவும் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட ஜெபங்களை செய்கிறார்கள். அத்தகைய ஒரு ஜெபத்தை பழைய ஏற்ப்பாட்டு காலத்தில் பார்ப்போம். “தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்;” (1 இராஜாக்கள் 18:26)
நாமும், அதுப்போல ஜெபிக்கக்கூடாது என்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார். கல்லையோ, மரத்தையோ, சூரியனையோ, மிருகங்களையோ, திசைகளையோ நாம் வணங்கவில்லை என்றாலும், உண்மையான தேவனை ஆராதிக்கிறோம் என்பதற்காக, நாம் வீண் வார்த்தைகளைக் கொண்டு ஜெபத்தை செய்யக்கூடாது. சில சமயங்களில் உணவை உண்ணும்போது செய்யும் ஜெபத்தில் நம்முடைய உதடுகள் பக்தியான வார்த்தைகளை உச்சரித்தாலும், நம்முடைய எண்ணம் வேறு எங்கோ இருக்கும். அப்படிப்பட்ட ஜெபத்தை தேவன் ஏற்றுக் கொள்வதில்லை, சொல்லப்போனால் அது ஜெபமே அல்ல.
இத்தகைய ஜெபங்களின் மற்றொரு அம்சம் என்னவென்றால், மீண்டும் மீண்டும் ஜெபத்தில் கேட்பதினால், தேவன் தங்களின் விண்ணப்பங்களை கேட்ப்பார் என்றும், தங்களின் ஜெபத்திற்கு பதிலளிப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். புறஜாதிகளின் தேவன் யாரென்றும், அவர் எப்படி இருக்கிறார் என்றும், அவருடைய எதிர்பார்ப்பு எப்படிப்பட்டது என்றும், அவர்களுக்கு தெரியாது, அதனால்தான், அவர்கள் பலவிதமான வார்த்தைகளால் ஜெபிக்கிறார்கள். கடுமையான துறவறம் செய்தாவது, விரதம் இருந்தாவது, பல மந்திரங்களை சொல்லியாவது, தங்களின் உடல்களை வருத்திக் கொண்டாவது, அவர்களின் தேவன் விண்ணப்பத்தைக் கேட்கும்படியாகவும், அவருடைய கவனத்தை ஈர்க்கும்படி ஏதாவது செய்கிறார்கள். எனவேதான் அவர்களின் பிரார்த்தனை, முறைகள் ஏராளமாக உள்ளது. மேலும் புறஜாதிகள் எங்களுடைய விண்ணப்பங்கள் அவருக்கு கேட்கிறதோ கேட்கவில்லையா என்ற சந்தேக உணர்வும் அவர்களுக்கு உண்டு. சில கிறிஸ்துவர்கள் ஒரு காரியத்துக்காக பலமுறை ஜெபிப்பதும், எப்போதும் அந்த காரியத்தை குறித்தே ஜெபத்தை செய்துக் கொண்டிருந்தால் என்னுடைய விண்ணப்பத்தை கேட்கப்படும் என்று நம்புவார்கள்.
“அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.” (மத்தேயு 6:7,8). நீங்கள் உங்கள் பிதாவின் சிம்மாசனத்திற்கு அருகில் செல்வதற்கு முன்பே, அவர் உங்களுடைய தேவைகள் அனைத்தையும் நன்கு அறிவார். அவருடைய பார்வை உன்னை விட்டு விலகாது. புறஜாதிகள் அறியப்படாத தேவனை வணங்குகிறார்கள், ஆனால் நீங்கள் உங்கள் பரம பிதாவை வணங்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படியாக இயேசுகிறிஸ்து எப்படி ஜெபிக்ககூடாது. என்று சொல்லிய பிறகு எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தார்.
4. கிறிஸ்தவவானின் ஜெபம் - கிறிஸ்துவைப் பிரியப்படுத்தும் ஜெபம்
இயேசு கிறிஸ்து நீங்கள் ஜெபிக்க வேண்டிய விதமாவது என்று சொல்ல ஆரம்பித்து, அதற்கு முன்பு, பரிசேயர்களைப் போலவும், புறஜாதிகளைப் போலவும் செய்யகூடாது, என்று சொன்ன கர்த்தர், நிச்சயமாக, முற்றிலும் மாறாக ஜெபக்க சொல்லியிருப்பார். எனவே கர்த்தர் கற்பித்த இந்த ஜெபத்தை, அவர் கற்பித்த விதமாகவே புரிந்துகொள்வோம். முதலில், மாயகாரனின் ஜெபத்திற்கு மாறாக ஜெபிக்க கற்றுக்கொடுத்தார். "நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக." (மத்தேயு 6:9-10).
கர்த்தர் கற்றுக்கொடுத்த இந்த ஜெபத்தில் 'உம்முடைய நாமம்' ‘உம்முடைய இராஜ்யம்' ‘உம்முடைய சித்தம்' என்ற வார்த்தைகளால் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு கற்பிக்க விரும்புகிற காரியம் என்னவென்றால் உங்களைப் பற்றி அல்ல, உங்களுக்குரியதை குறித்து அல்ல, எல்லாவற்றையும் விட தேவனையே அதிகமாக மகிமைப்படுத்துவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வளவு காலம் நம்மை உயர்த்திக் கொள்வதிலும், நம்முடைய இராஜ்யங்களைக் கட்டிக்கொள்வதிலும், நம்முடைய நீதியை நிலை நிறுத்துவதிலும், நமது எண்ணங்கள் அவைகளில் இல்லாமல், தேவனை அதிகமாக மகிமைப்படுத்துவதிலும், அவரைத் துதிப்பதிலும், நமது ஜெபங்கள் இருக்கவேண்டும். வெறும் வார்த்தைகளாலும், உதடுகளாலும் அல்ல, இருதயத்திலிருந்து நம்முடைய ஜெபங்கள் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஜெபத்தை மாயக்காரர்கள் கேட்டால் ஒருவேளை தேவனை ஆராதிக்கிரவர்களாக மாற்றப்படலாம். நம்முடைய ஜெபங்கள் எப்போதும் நம்மை குறித்து அல்ல, தேவனை குறித்தே இருக்கவேண்டும், நீங்கள் கர்த்தரை மட்டுமே மகிமைப்படுத்த விரும்பினால், உங்கள் தனிப்பட்ட ஜெபத்தை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்.
இரண்டாவதாக, புறஜாதிகளின் ஜெபத்திற்கு மாறாக ஜெபிக்கும்படி இயேசுகிறிஸ்து சொன்னார்.
“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்கள் கடன்களை மன்னியுங்கள். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்," (மத்தேயு 6:11-13). ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் தேவனை எழுப்புவது போலவும், அல்லது புறஜாதி மக்கள் அவர்களின் தேவனிடம் மன்றாடுவது போலவும் இல்லமால், உங்கள் பரலோக பிதாவிடம், கேட்பதுப்போல் கேட்கவேண்டும். பலமுறை கேட்டால், நாம் கேட்பதை தேவன் தருவார் என்றும், அதிகமான வார்த்தைகளால் தேவனைப் பிரியப்படுத்த முடியும் என்று அல்லாமல், சிறு குழந்தைகளைப் போல, நாம் செய்யும் சுருக்கமான ஜெபங்களைக் கூட அவர் கவனிக்கிறார். (கிரேக்க மொழியில் மத்தேயு சுவிஷேசத்தில் வருகிற பரோலோக ஜெபம் மொத்தம் 57 வார்த்தைகள் கொண்டுள்ளது, லூக்கா சுவிஷேசத்தில் வருகிற பரோலோக ஜெபம் மொத்தம் 38 வார்த்தைகள் கொண்டுள்ளது. அவர் நம்முடைய தேவைகள் அனைத்தையும் முன்கூட்டியே அறிந்தவர் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆனால், தன்னுடைய பிள்ளைகள் அவர்களின் மன விருப்பங்களுக்காகவும், தேவைகளுக்காகவும், அவர்களின் இக்கட்டான சுழ்நிலைகளிலும், தன்னிடம் வரவேண்டும் என்பது அவர் விரும்புகிறார்.
முற்றும்
எப்படி ஜெபிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், எப்படி ஜெபிக்கக்கூடாது என்பதையும் கற்றுக்கொள்வது மிக அவசியம். நம்முடைய சுய நீத்க்காக நம்மை உயர்த்திக் கொள்வதற்காக அல்லாமல் தேவனை உயர்த்தும், படியாக நாம் அந்தரங்கத்தில் ஜெபிப்போம். அவரை மட்டும் மகிமைப்படுத்துவோம். வீண் வார்த்தைகளால் அல்ல, பலவிதமான வார்த்தைகளாலும் அல்ல, அன்றாட உணவுக்காகவும், பாவ மன்னிப்புக்காகவும் ஜெபிப்போம். தேவன் நம்முடைய தேவைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறார், கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு பாவ மன்னிப்பைக் கொடுத்திருக்கிறார் என்ற புரிதலுடன் நாம் அவரிடம் ஜெபிப்போம்.