ஆசிரியர்: K. வித்யாசாகர்.
தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்.
வேதாகமத்தின் தேவனிடம் பாகுபாடு இருக்கிறதென்று, சில வேதாகமத்தின் வெறுப்பு பிரச்சாரம் செய்பவர்கள் தேவன் மீது சொல்லும் பொய்யான குற்றச்சாட்டு, வெறுப்பு விமர்சனங்கள், அதேப்போல மாற்றுத்திறனாளிகளிடமும் தேவன் பாரபட்சத்தோடு நடந்து கொண்டதாக, சிலர் கூறும் குற்றச்சாட்டுக்கு இந்தக் கட்டுரையில் நான் பதிலாளிக்கப் போகிறேன். எனவே இந்த கட்டுரையை மிகவும் கவனமாக வாசியுங்கள்.
இந்த வசனத்தை பாருங்கள் 2 சாமுவேல் 5:8 “எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு.”
மேலும், மற்றோரு வசனத்தை பார்ப்போம், லேவியராகமம் 21:17-21 “நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது. அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும், காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும், கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது. ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தச் சேரலாகாது.”
நாம் பார்த்த இந்த இரு வசனப் பகுதிகளில், முதலாவது வசனத்தில் தேவனுடைய இருதயத்திற்கு எற்றவனான தாவீதுக்கு குருடனும், சப்பாணியும் அருவருப்பானவர்கள் என்றும், மற்றொரு வசனப்பகுதில் ஊனமுற்றோர் தேவனின் ஆலயத்திற்குள் பிரவேசிப்பதும், அவருக்குப் பலிகளை செலுத்துவதும். தேவனுக்கு அருவருப்பானது என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த இரண்டு வசனத்தின் அடிப்படையில்தான் சிலர் மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டுவதாக வேதத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் கூறுவது போல் இந்த வசனத்தில் ஏதேனும் பாகுபாடு உள்ளதா? அல்லது அது அவர்களின் தவறான புரிதல்களா? என்பதைப் பார்ப்பதற்கு முன், இந்த வேதத்தில் ஊனமுற்றோரைப் பற்றி எழுதப்பட்ட சில வேத வசனங்ககளைப் பார்ப்போம்.
லேவியராகமம் 19:14 “செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.“
உபாகமம் 27:18 “குருடனை வழிதப்பச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
மேற்வாசித்த வசனப்பகுதியில் காது கேளாதவனை அவனுக்கு கேட்காத படி சபித்தாலும், பார்வையற்றவர்களுக்கு தடை செய்யவதும், அல்லது அவனை வழியை தவற விடுவதும், தேவன் அப்படிப்பட்ட செயலை மிகவும் கண்டிக்கிறார். ஊனமுற்றோரின் மீது தவறுகளை செய்யக்கூடாது என்று கண்டிப்புடன் கட்டளையிடும் வேதத்தின் தேவனால் எப்படி அந்த ஊனாமுற்றோரின் மீது பாகுபாடு காட்ட முடியும் என்பதை சிந்தியுங்கள்.
யோவான் 9:1-3 “அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு மனிதன் ஊனத்துடன் இருப்பதை இயேசுவிடம் அவருடைய சீஷர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் இவ்விதமாக பதிலாளித்தார்: இந்த குறை யாருடைய பாவத்தாலும் ஏற்படவில்லை என்றும், தேவனின் செயல்கள் அவனுக்குள் வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே அவன் அவ்வாறு பிறந்தான் என்று இயேசுக் கூறினார்.
உலகில் பல மாற்றுத்திறனாளிகள் பால சாதனைகளை அடைந்த வரலாற்றை நாம் அறிவோம். கிறிஸ்தவ உலகில் கூட ஊனமுற்றார் பல உயர்ந்த ஊழியங்களை செய்து, அவர்கள் மூலம் தேவனின் மகிமையை இந்த உலகத்திற்கு தெரியப்படுத்துகிறார்கள். அனைத்து உடல் உறுப்புகளும், நல்ல விதமாக இருந்தும், சோம்பேறித்தனமாக வாழ்பவர்களுக்கு அவர்கள் நீதிபதிகளாக இருக்கப் போகிறவர்கள்.
யோவான் 9:39-41 “அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.
2கொரிந்தியர் 12:8,9 “அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.”
இறுதியாக, ஊனமுற்றோரைப் பற்றிய தேவனுடைய வேதத்தில் மற்றொரு வசனத்தை பாருங்கள்.
யாத்திராகமம் 4:11 “அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?”
இந்த சந்தர்ப்பத்தில், ஊனமுற்றோரையும், கூட அவரது சித்தத்தின்படி தேவன் பிறக்க வைக்கிறார் என்பதாக இந்த வசனம் தெரியப்படுத்துகிறது, எனவே அவர்களின் பிறப்புக்கு பின்னால் தேவனின் சித்தம் உள்ளது. இவ்வுலக வாழ்வு நித்தியமானது என்றும், மனிதன் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து ஒன்றுமில்லாத நிலைக்குச் செல்கிறான். என்று நம்பும் நாத்திகர்களுக்கு இது அநியாயமாகத் தோன்றலாம். இந்த உலகத்தில் மனிதனுடைய வாழ்க்கை சொற்பமே என்றும், மரணத்திற்குப் பிறகுதான் உண்மையான வாழ்க்கை தொடங்குகிறது என்று விசுவாசிக்கும் வேத பிரியர்களுக்கு இது அநியாயமாக தோன்றாது. தேவன் தனது சித்தத்தின்படி அனைத்து உறுப்புகளை உடையவர்களைப் பிரக்கவைப்பது போல, தனது சித்தத்தின்படி ஊனமுற்றோரையும் பிறக்க வைக்கிறார். இவ்வாறே தேவன் தனது சித்தத்தை அனைவரிடமும் நிறைவேற்றுகிறார். வேதாகமம் அறிவிக்கும் தேவன் இறையாண்மையுள்ளவர், அதாவது (சர்வ வல்லமையுள்ளவர்) மனிதர்களின் சுய விருப்பு வெறுப்பின் அடிப்படையில் அவர் முடிவெடுப்பதில்லை.
ரோமர் 9:20 “அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
ஊனமுற்றவர்களிடம் வேதத்தின் தேவன் பாகுபாடு காட்டினார் என்று நாம் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட வசனப்பகுதியை நாம் பார்த்தால், குருடரோ, முடவர்களோ இவர்களை வெறுப்பதற்கு தாவீதுக்கு அவர்கள் அருவருப்பானவர்களா? அல்லது ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று கிழே எழுதப்பட்ட வசனத்தை பாருங்கள்.
2சாமுவேல் 5:6,7 “தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடே கூட எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.”
இந்த சந்தர்ப்பத்தில் எபூசியர்கள் வசித்து வந்த சீயோன் கோட்டையை தாவீது ராஜா கைப்பற்றியபோது, அப்பகுதியில் இருந்த குருடர்களும், முடவர்களும் எபூசியர்களுடன் கைகோர்த்து தாவீதுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். எனவே, தான் போர் முறையின் படி தாவீது அவர்களைக் கொன்றார். இங்கு நாம் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் உண்டு;
1. தாவீது எபூசியர்கள் வசித்து வந்த அந்தப் பகுதியில் தனக்கு எதிராகக் கலகம் செய்த முடவர்களையும், குருடர்களையும் மட்டுமே வெறுத்தார், ஆனால், அந்த தேசத்திலுள்ள எல்லா குருடர்களையும், முடவர்களையும் அவர் வெறுக்கவில்லை. ஒருவேளை அவ்வாறாக இருந்திருந்தால் மற்றவர்களையும் கொன்றிருப்பார். இன்னும் தாவீதின் வரலாற்றை நாம் மேலும் ஆராய்ந்தால், முடவனாயிருந்த யோனத்தானின் மகனான மேவிபோசேத், என்பவனை தாவீது நேசித்து அவனது குடும்ப உறுப்பினராக நடத்தப்பட்டான். வேதத்தில் இந்த சந்தர்ப்பத்தை 2சாமுவேல் 9:1:13 வசனப்பகுதியில் பார்க்கிறோம்.
2. தாவீது அரசனின் நற்குணமும், பராக்கிரமம் அந்த தேசத்தில் சுற்றியுள்ள மக்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது. இதை அறிந்த குருடர்களும், முடவர்களும் எபூசியருடன் சேர்ந்து தாவீதுக்கு எதிராக அவர்கள் செய்த கலகம் மிகப்பெரிய தவறு. எனவே அந்த குருடர்களும், முடவர்களும் தாவீதை வெறுப்பதற்கும், கொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது தாவீது போர் முறையின் ஒழுக்கத்தின்படி செய்தது, யாருமே மறுக்க முடியாது.
உதாரணமாக, இன்று நம்முடைய நாட்டில் ஊனமுற்ற ஒருவர் தீவரவாதிகளோடு கைகோர்த்து, தேசத்துரோகம் செய்தார் என்று வைத்துக்கொள்வோம். நமது சட்டம் ஊனமுற்றோர் என்ற அடிப்படையில் அவரை விடுவிக்குமா? அல்லது அவரை தண்டிக்குமா? கண்டிப்பாக தண்டிக்கும், தாவீது இப்படிப்பட்ட பாகுபாட்டை செய்தார் என்று காரணம் காட்டுபவர்கள், சட்டம் எடுக்கும் நடவடிக்கையை குறைகூறி பாகுபாடு என்று சொல்வார்களா? ஒருவேளை சட்டத்திடம் மன்னிப்பு கேட்பவர்களுக்கு தண்டனையில் விடுதலை கொடுக்கலாம், ஆனால் தேவனின் இருதயத்திற்கு ஏற்ற தாவீது நீதியில் சமரசம் செய்து அவர்களை மன்னிக்க வேண்டிய அவசியமில்லை. நீதியான தேவனின் பார்வையில், யார் தவறு செய்தாலும் அது தவறுதான். ஒருவேளை ஏதோ ஒரு காரணத்திற்காக குற்றவாளியை விட்டு விட்டால், அது தவறை ஊக்குவிப்பதாகும்.
ஊனமுற்றோரை தேவனுடைய ஆலயத்தில் பலி செலுத்துவதை தேவன் ஏன் தடை செய்தார் என்றால்? தேவனுடைய ஆலயத்தில் லேவியர்கள் முலமாக செய்யப்படும் பலிமுறைகள் எவ்வளவு கடினமானது என்பதை லேவிராகம புத்தகத்தை நாம் வாசிக்கும்போது தெளிவாக புரிந்துக்கொள்லாம். அத்தகைய பலிகளை ஊனமுற்றவர்கள் செய்வது கடினமாக இருக்கும், மேலும் அந்த பலிமுறைகளில் அவர்களால் ஏதேனும் தவறு ஏற்பட்டால் அது அசுத்தமாகிவிடும். அதனால் தான் தேவன் அவர்களுக்கு இரக்கம் காட்டி அந்த கடினமான பலிமுறைகளிலிருந்து தேவன் அவர்களுக்கு விலக்கு அளித்தார்.
இதன் நிமித்தம் தேவனுக்கு ஊனமுற்றோர் மீது பாரபட்சம் உள்ளது என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி? எந்தவொரு முதலாளியும் தனது ஊழியர்களில் ஒருவர் ஊனமுற்றவர் என்பதால் அவருக்கு வேலையிலிருந்து விலக்கு அளித்து, மற்றவர்களுக்கு தருகிற அதே சம்பளத்தைக் கொடுத்தால், அந்த முதலாளியை பாராட்டுவிற்களா? அல்லது பாரபட்சமாக செய்கிறார் என்று விமர்சிப்பிர்களா?
வேதத்தின் தேவன், ஊனமுற்றோர்களுக்கு அவர்களின் இயலாமை காரணமாக தேவனுடைய ஆலயத்தில் செய்ய வேண்டிய வேலையிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளித்தாரே தவிர, அவர்களின் கூலியை குறைக்கவில்லை. பின்வரும் வேத வசனம் நமக்கு தெளிவாக அந்த உண்மையை விளக்குகிறது.
“அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம்.” லேவியராகமம் 21:22
இப்போது சொல்லுங்கள், அவர்களின் வரம்புகளின் அடிப்படையில் வேலையில் விலக்கு அளித்து, மற்றவர்ளுக்கு இணையான ஊதியத்தை கொடுக்கும் தேவன், அவர்களிடம் பாகுபாடு காட்டுக்கிறார் என்று சொல்லுவது சரியா? இதைப்பற்றி யாரேனும் இன்னும் வாதிடுபவர்கள் என்றால், ஊனமுற்றவர்களுக்கு பலி விசயத்தில் விலக்கு கொடுக்காமல், அவர்கள் கொடுக்கும் பலி முறைகளை எளிதாக்கினால் நல்லது தானே என்பார்கள், அந்த பலி முறைகளை அவர்கள் செய்யாமல் கூலி கொடுப்பதில் இவர்களுக்கு (வெறுப்பு விமர்சகர்களுக்கு) இருக்கும் பிரச்சனை என்னவென்று முதலில் அவர்கள் விவரிக்க வேண்டும், மோசேயின் நியாபிரமானத்தில் தேவன் கொடுத்த பலிகளுக்கும், சடங்குகளுக்கும் மிக முக்கியமான நோக்கம் உள்ளது. அவைகள் எல்லாம் கிறிஸ்துவின் சிலுவைக்கு நிழலாக இருக்கிறது. எனவே அவைகளின் நியமத்தை யாருக்காகவும் மாற்ற முடியாது.