ஆசிரியார்: ஜி. பிபு.
தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்.
இந்த தலைப்பை சார்ந்த கட்டுரை புதிதாக திருமணம் செய்துக் கொள்கிறவர்களுக்கு மட்டுமல்ல, திருமணம் ஆனவர்களுக்கும், இனி வரும்காலங்களில் திருமணம் செய்துக் கொள்பவர்களுக்கும் மிகவும் அவசியமானது. எனவே திருமணம் ஏன் கனமானது என்பதை விளக்குவதற்கு பத்து காரணத்தை வேதத்திலிருந்து மிகவும் சுருக்கமாக பார்ப்போம்.
முதலாவது காரணம்
திருமண பந்தத்தை அல்லது திருமண அமைப்பை ஏற்ப்படுத்தியது. தேவன் என்பதை நாம் வேதத்திலிருந்து பார்க்கிறோம். மனிதர்களாகிய நாம் அறிந்திக் கொள்ளவேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், திருமணம் என்பது மனித சிந்தனையில் & யோசனையில் தோன்றியது அல்ல. நான் திருமணம் செய்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்னுடைய நலன்களைக் குறித்து யோசிக்க யாராவது இருந்தால் நல்லது. என்று ஆதாம் தேவனிடம் கேட்டதாக நாம் வேதத்தில் பார்க்க முடிகிறதா? இல்லை, தேவனே ஆதாமை பார்த்து என்ன சொன்னார். (ஆதியாகமம் 2:18) "தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். இந்த வார்த்தை மனிதனின் நன்மைக்காக தேவனின் மனதிலிருந்து உண்டான திருமண அமைப்பு என்று வேத வசனத்தினால் நாம் புரித்துக்கொள்ள முடிகிறது. எனவேதான் திருமணம் என்பது மனிதனின் சொந்த யோசனை அல்ல, ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் இருந்து பார்த்தால் தேவன் படைத்த & ஏற்ப்படுத்திய அனைத்தும் இது நல்லது என்று தேவன் சொல்லுவதை பார்க்கிறோம். அதுபோல திருமணம் ஏன் கனமானது அல்லது ஏன் நல்லது என்றால் அது தேவன் ஏற்ப்படுத்தினார். அது மனிதனின் நன்மைக்காகவே தான் உள்ளது. இறுதியாக ஏன் திருமணத்தை கனமானதாக எண்ண வேண்டுமென்றால் அது தேவன் ஏற்படுத்தியது.
இரண்டாவது காரணம்
ஒவ்வொரு திருமணத்திலும் இருவரையும் இணைப்பது தேவனே, ஏனென்றால் ஒரு சந்தர்ப்பத்தில் சதுசேயர்களும், பரிசேயர்களும் இயேசு கிறிஸ்துவிடம் வந்து இவ்விதமாக கேட்டார்கள், “அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவு கொடுத்திருக்கிறார் என்றார்கள்.” (மாற்கு 10:5) அதற்கு அவருடைய வார்த்தையில் இவ்விதமாக சொல்லுகிறார். “ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.” (மாற்கு 10:9) இந்த வசனத்தில் யார் இணைத்தாதாக சொல்லுகிறார். மனிதன் ஏற்படுத்தவில்லை ஒவ்வொரு திருமணத்தையும் தேவனே எற்படுத்துகிறார், பொதுவாக திருமணம் எந்த முறையில் & எந்த இடத்தில் நடந்தாலும் சரி, உதாரணமாக கிறிஸ்துவ திருமணமா? முஸ்லிம் திருமணமா? இந்து திருமணமா? நாத்திக திருமணமா? என்பது முக்கியமல்ல அங்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அந்த தம்பதிகளை இணைத்த காரியத்தை செய்தது யாரென்றால் தேவன் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒவ்வொரு திருமணத்தையும் இணைப்பது தேவன் என்பதால் அது கனமானது.
மூன்றாவது காரணம்
(மல்கியா 2:14) “கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்;” இந்த வசனத்திலிருந்து நாம் பார்ப்பது ஒரு திருமணம் நடக்கிறது என்றால் அதற்கு யார் சாட்சி என்று இந்த வசனம் சொல்கிறது. தேவனே சாட்சி என்று சொல்கிறது. அரசாங்கம் சாட்சியல்ல, திருச்சபை சாட்சியல்ல, மனிதர்கள் சாட்சியல்ல அனால், இந்த வசனம் யார் சட்சியென்று சொல்கிறது தேவனே சட்சியென்று சொல்கிறது. பதிவு திருமணத்திற்காக கையெழுத்து அரசாங்கத்திற்கு தேவை, அனால் தேவனுடைய முன்னிலையாக ஒருவருக்கொருவர் உறுதியாளிகிறார்களோ அந்த திருமணத்திற்கு தேவனே சாட்சியாக இருக்கிறார். தேவன் எதற்கு சாட்சியாக இருக்கிறாரோ அதை நாம் கனமானதாக எண்ணவேண்டும், அதை உயர்ந்ததாக எண்ணவேண்டும். யாரவது அதை கனமானதாக எண்னாதவர்கள் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனாக இருப்பான். அப்படிப்பட்டவன் தேவனுடைய பார்வையில் குற்றவாளியாக இருப்பான். தேவனே சாட்சியாக இருப்பதினால் திருமணம் கனமானது என்பதை வேத வசனத்திலிருந்து பார்க்கிறோம்.
நான்காவது காரணம்
(ஆதியாகமம் 2:18-24) இந்த வசனப்பகுதியில் குறிப்பாக நாம் பார்ப்பது மனித உறவுகளில் அனைத்தையும் விட திருமணத்தையே மிக உயர்ந்ததாக தேவன் செய்தார். எனவே “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” அப்பா, அம்மா உறவை காட்டிலும் உயர்ந்ததாக தேவன் திருமணத்தை பார்க்கிறார். இந்த திருமண பந்தத்தை நாம் வசிக்கு இந்திய நாட்டில் முறையற்றதாக உள்ளது. ஏனென்றால், பெண்கள் மட்டுமே திருமணத்திற்கு பிறகு தங்களுடைய தாய், தந்தையை விட்டு வரவேண்டும், ஆனால் ஆண் அப்படி தாய் தந்தையை விட்டு வர அவசியமில்லை என்பதான முறை உள்ளது. ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது. (சங்கீதம் 45:10) வசனத்தில் “குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.” என்று சொல்லுகிறது. அவ்வாறே திருமண முறையை முதன் முதலில் ஏற்படுத்தும் போதே தேவன் என்ன சொல்லுகிறார். (ஆதியாகமம் 2:24) “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” தேவன் ஏற்படுத்திய திருமண பந்தம் எப்படிப்பட்டது என்றால் கணவன் மனைவி இருவரும் மட்டுமே இணைந்து இருக்கவேண்டும். மூன்றாவது நபருக்கு இடமில்லை. அவர்களுடைய தாய் தகப்பன்மார்களுக்கு கூட அவர்களுடைய வாழ்வில் இடமில்லை. எனவே மனித உறவில் அனைத்தை காட்டிலும் தேவன் திருமண பந்தத்தை உயர்வாக எண்ணுவதால் திருமணம் கனமானது.
ஐந்தாவது காரணம்
தேவன் தனக்கும் தன்னுடைய மக்களுக்கும் உள்ள உறவை அடையாளப் படுத்துவதற்கு திருமண பந்தத்துடன் ஒப்பிடுவதை நாம் பார்க்கிறோம். தேவன் தம்முடைய மக்களின் மீது வைத்திருக்கும் அன்பையும், அக்கறையும் அவர்களுக்கு விளக்குவதற்கும் & புரிய வைப்பதற்கும் உதாரணமாக திருமனத்தையே பயன்படுத்தினார். நாம் வேதத்தில் அனேக சந்தர்ப்பத்தில் பார்க்கிறோம். தேவனுக்கும், இஸ்ரவேல் மக்களுக்கும் மேலும் கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் உள்ள உறவை குறித்து சொல்லப்படும் போது திருமண உறவையே குறிப்பிடுகிறார் என்றால் அவருடைய பார்வையில் திருமணம் எவ்வளவு கனமானது என்பதை பார்க்கிறோம்.
ஆறாவது காரணம்
வேதத்தில் தேவனுக்கும், அவருடைய மக்களாகிய இஸ்ரவேலருக்கும் உள்ள உறவுகளை சொல்லுவதற்கு மட்டுமல்ல. கணவன் மனைவி மத்தியில் இணைப்பு & நெருக்கம் எவ்விதம் இருக்கவேண்டும். என்பதற்கு கிறிஸ்துவையும், திருச்சபையையும் முன்னிட்டு சொல்லப்பட்டுள்ளது. (எபேசியர் 5:21-29) “தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.” இந்த வசனபகுதியில் மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனவே திருமணம் கனமானது என்று ஆறாவது காரணத்தை பார்க்கிறோம்.
ஏழாவது காரணம்
இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த பூமியில் கன்னி மரியாளின் வயிற்றில் பிறந்தார். என்பதை அப்போதைய காலக்கட்டத்தில் அந்த மக்கள் புரிந்துக்கொள்ள முடிகிறதா? இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்ற விஷயம் யாருக்கு தெரியும்? மரியாளுக்கு மட்டுமே தெரியும் இந்த செய்தியை வேறு யாருக்காவது சொன்னால் நம்புவார்களா? மரியாளின் கணவனான யோசேப்புக்கு கூட தேவதூதன் வந்து சொன்ன பிறகு தான் நம்பினார். ஒருவேளை தேவதூதான் சொல்லாவிட்டால் யோசேப்பும் நம்ப வாய்ப்பில்லை. ஆதலால் தான் இரகசியமாய் அவளை தள்ளிவிட மனதை இருந்தானென்று வேதம் சொல்லுகிறது. கன்னியின் வயிற்றில் பிறந்த இயேசுவை இழிசொல்லுக்கு ஆளாகாமல் காப்பாற்ற தேவன் எதை பயன்படுத்தினார். திருமண பந்தத்தை பயன்படுத்தினார் என்பதை நாம் சிந்திக்கவேண்டும். (மத்தேயு 1:18-20) “அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.” இந்த வசனத்தில் யோசேப்புக்கு ஆறுதல் சொல்லி திருமணத்தை உக்குவித்ததாக பார்க்கிறோம். இயேசு வளர்ந்த பிறகு இயேசுவை பார்த்து இவன் தச்சனுடைய மகன் அல்லவா? என்று சொன்னார்களே தவிர வேறுவிதமாக சொல்லவில்லை. இதினிமித்தம் திருமணத்தை தேவன் கனமானதாக எண்ணுகிறார்.
எட்டாவது காரணம்
இயேசுகிறிஸ்து மனிதனாக இந்த பூமியில் இருந்தபோது முதல் அற்புதத்தை ஒரு திருமண வீட்டில் தான் செய்தார். (யோவான் 2:11) “இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்;” அவருடைய வல்லமையை பயன்படுத்தி அந்த திருமண வீட்டில் உள்ள குறையை தீர்த்தார். இதினிமித்தம் இயேசுகிறிஸ்து திருமணத்தை அங்கீகரிப்பதாக பார்க்கிறோம். ஆண்டவர் எதை கனப்படுத்தினாரோ, ஆண்டவர் எதை கௌரவித்தாரோ அதை கிறிஸ்தவர்களும் அதை கனப்படுத்த வேண்டும். இதுவே எட்டாவது காரணம்.
ஒன்பதாவது காரணம்
திருமணமில்லாமல் இணைந்து வாழுதல் இதை ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமென்றால் “Living Together” என்று சொல்லுவார்கள். இதை வேதம் ஏற்றுக்கொள்கிறதா? & தேவன் அங்கிகரிக்கிறாரா? இல்லை, இதை வேதம் எதிர்க்கிறது. தண்டனைக் குறியதாக சொல்லுகிறது. பழைய ஏற்ப்பாட்டில் கல்லெறிந்து கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டளையும் இருந்தது. எனவே திருமணம் இல்லாமல் இணைந்திருப்பத்தையும், சுயஇன்பம் போன்றதை கூடாது என வேதத்தில் பல வசனங்களை பார்க்கிறோம். காலம் மேலும், அதை தேவன் வெறுக்கிறார். இந்த அருவெருப்புகளை இந்திய அரசலமைப்பு சட்டங்கள் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் வேதாகமம் ஏற்றுக்கொள்ளது. இதுப்போன்ற சட்டங்கள் நடப்பில் வந்தப்போது இந்து நவீன சாமியார்கள் பலர் இவ்விதமாக சொன்னார்கள். “நம்முடைய முன்னோர்கள் அவர்களுடைய காலத்தில் இதுப்போன்ற பழக்கத்திலே வாழ்ந்து வந்தவர்கள் என்றார். இந்த கிறிஸ்தவம் வந்த பிறகு அது குறைந்துவிட்டது என்ற அறிவிப்பை கொடுத்தார்கள். இறுதியாக இதுப்போன்ற அருவருப்புகளை தேவன் வெறுப்பதற்கு காரணம் என்னவென்றால் திருமணம் அவருடைய பார்வையில் கனமானது.
பத்தாவது காரணம்
திருமணத்திற்கு விரோதமாக செய்யக்கூடிய பாவத்தை முற்றிலுமாக வெறுக்கிறார். (எபிரெயர் 13:4) “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” அதேபோல இன்னொரு சந்தர்ப்பத்தில் இயேசுகிறிஸ்து சொல்லுகிறார், விபச்சாரம் என்கிற காரணத்தால் மட்டுமே தன்னுடைய மனைவியை தள்ளிவிட அனுமதி உண்டு மற்ற எந்த காரணத்தையும் வேதம் அனுமதிக்கவில்லை, (மல்கியா 2:15,16) “அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
முடிவுரை
எனவே திருமணம் ஏன் கனமானது என்பதற்கு இந்த பத்து காரணங்களின் நிமித்தமும் தேவனே திருமண முறையை ஏற்படுத்தினார் என்பதாலும், தேவனே ஒவ்வொரு திருமணத்தையும் இணைப்பதாலும், தேவனே ஒவ்வொரு திருமணத்திலும் சாட்சியாயிருப்பதினாலும், அனைத்தையும் உறவுகளில் திருமணத்தையே உயர்ந்ததாக என்னுவதினாலும், திருமண பந்தத்தை தேவனுக்கும், தேவனுடைய மக்களுக்கும் உள்ள இணைப்பை விவரிப்பதற்கு திருமணத்தை உதாரணமாக காட்டுவதினாலும், கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் மத்தியில் இருக்கும் ஐக்கியத்தை காட்டி கணவன் மனைவிக்கு முன்மாதிரியை காண்பிக்கிறதினாலும், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு திருமணத்தை ஒரு சாதனமாக பயன்படுத்தினார். என்பதாலும், அதேபோல இயேசுகிறிஸ்து சரீரத்தில் இருக்கும்போது முதல் அற்புதத்தை செய்ததினாலும், திருமணம் செய்யாமல் இணைந்தை கண்டிப்பதினாலும், திருமணத்திற்கு விரோதமாக செய்யக்கூடிய பாவத்தை தண்டிப்பதினாலும், திருமணம் (விவாகம்) யாவருக்குள்ளும் (அனைத்து காரியங்களிலும்) கனமானது. எனவே தேவனுடைய பார்வையில் இவ்வளவு உயர்ந்ததான இந்த திருமணத்தை தேவனுடைய பிள்ளைகளும் கனமானதாக எண்ணவேண்டும். தேவனுடைய பிள்ளைகளின் குணம் எப்படியிருக்க வேண்டுமென்றால், தேவன் விரும்புவதை அவர்களும் விரும்புவார்கள், தேவன் வெறுப்பதை அவர்களும் வெறுப்பார்கள். அதேப்போல புதிதாக திருமணம் செய்துக் கொள்கிறவர்களும், திருமணம் ஆனவர்களும், இனி புதிதாக திருமணம் செய்துக் கொள்பவர்களும் திருமணத்தை கனமுள்ளதாக எண்ணவேண்டும்.