கட்டுரைகள்
ஆசிரியர்: தம்மா ரெட்டி கிரண்
தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்

தேவன் மனிதர்களை மிகவும் நேசிக்கிறார். ஆனால் மனிதனால் பாவத்திலிருந்து தானாகவே விடுபட்டு ஜீவனுள்ள தேவனை நெருங்க முடியாதவனாய் இருக்கிறான். வேதம் சொல்கிறது, முதல் மனிதனான ஆதாமின் மூலம் மனிதர்களாகிய நாம் பாவ சுபாவத்தைப் பெற்றுள்ளோம், மற்றும் நாம் தனிப்பட்ட முறையில் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் தொடர்ந்து பாவம் செய்கிறவார்களாய் இருகிறோம். பாவத்தின் சம்பளம் மரணம் (உடல் ரீதியான மரணம் மற்றும் ஆத்துமா ரீதியான மரணம்) (ஆத்துமா ரீதியான மரணம் என்றால் மனிதன் எப்போதும் தேவனை நெருங்க முடியாமல் அவரை வெறுக்கிறவனாய் இருக்கிறான்.)

தேவன் எல்லையற்றவர், நித்தியமானவர், பரிசுத்தர், நல்லவர், இறையாண்மையுள்ளவர், சர்வ வல்லமையுள்ளவர், சர்வத்தையும் அறிந்தவர், சர்வத்தையும் படைத்தவர், எங்கும் நிறைந்தவர், தன்னிச்சையானவர், இப்படியாக தன்னுடைய எல்லா சிறப்பான பண்புகளிலும் பரிபூரணமானவர்.

தேவன் இந்த படைப்பு அனைத்தையும் தனது மகிமை நிறைந்த வார்த்தையால் உண்டாக்கினார், மனிதர்களை மட்டும் தனது சொந்த சாயலில் படைத்தார்.

தேவன் இந்த படைப்பை மிகவும் சிறப்பானதாக உருவாக்கினார், ஆனால் மனிதன் தனது பாவத்தால் இந்த படைப்புகள் அனைத்தையும் தீமையினால் நிறைய செய்கிறான்.

தேவன், மனிதனின் வீழ்ச்சியான நிலையைக் கண்டு, அவனை வெறுக்காமல் அவன் மீது அன்பு வைத்தபடியால் மிகவும் நேசித்தார், ஆகையால் அவர் தனது முதற்பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை ஒரு கன்னியின் வயிற்றின் மூலம் பாவமற்ற மனிதனாக இந் உலகத்திற்கு அனுப்பப்பட்டார்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவம் நிறைந்த இந்த உலகத்தில் நீதியாக வாழ்ந்து, தேவனுடைய நியாய பிரமாணத்தை கைகொண்டு பரிபூரணமாக கீழ்ப்படிந்து, நம்முடைய பாவத்திலிருந்து நம்மை இரட்சிக்க நம்முடைய பட்சத்தில் தேவனுடைய நீதியை நிறைவேற்றி, நம் பாவத்தினால் வரும் கோர தண்டனையை தான் ஏற்றுக்கொண்டு மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இதுவே சுவிசேஷம் மற்றும் நற்செய்தி.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார்: நான் மட்டுமே வழியும், நான் மட்டுமே சத்தியம், நான் மட்டுமே ஜீவன், என் மூலமாகத் தவிர வேறு ஒருவராலும் தேவனிடத்தில் அதாவது பரிசுத்தமான அவரிடத்தில் கிட்டிச் சேர முடியாது.

இந்த மகிமை நிறைந்த சுவிசேஷத்தை விசுவாசித்து, நம் பாவங்களை பரிசுத்தமான தேவனிடத்தில் அறிக்கையிட்டு, தன் பாவத்திற்காக அவரிடம் மன்றாடி ஜெபித்து கேட்கும் போது, நம்முடைய பாவங்களையெல்லாம் மன்னித்து, அவருடைய திருச்சபையில் நாம் சேர்க்கப்பட்டு, அவருடைய அனந்த கிருபையில் வளர்ந்தால், உலகத்தின் முடிவில் நாம் சரீர ரீதியாக, மகிமையான சரீரத்துடன் உயிர்த்தெழுப்பப் படுவோம், மேலும் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் போல மகிமை நிறைந்த தேவனுடைய சந்நிதியில் யுக யுகமாக இருப்போம்.  நம்முடைய கண்ணீரும், நம்முடைய துக்கமும் நீங்கும், சாபமான எதுவும் இனி இருக்காது, பாவமும் மரணமும் இனி எப்போதும் நமக்கு இல்லை.

தகப்பன்மார்களே, தாய்மார்களே, சகோதர சகோதரிகளே, தயவுசெய்து இந்த சுவிசேஷத்தை விசுவாசித்து, தேவனிடமாக திரும்புங்கள், உங்கள் பாவத்தை விட்டு தேவனை அண்டிக் கொள்ளுங்கள். ஏனெனில் மனிதனுடைய இறுதியான நம்பிக்கை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து...

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.