கட்டுரைகள்
ஆசிரியர் : G. பிபு
தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்
 
ஒலி வடிவில் கேட்பதற்கு,
 

வாக்குத்தத்த அட்டைகள்...

அநேக திருச்சபைகளில் டிசம்பர் மாதம் 31-ம் தேதி மற்றும் ஜனவரி 1-ம் ஆகிய தேதிகளில் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஆசிர்வாதமான வசனங்களை மட்டும் சிறு சிறு வண்ண துண்டு சீட்டுகளில் அச்சடித்து வாக்குதத்தங்களாக கொடுப்பது வழக்கம், யாருக்கு என்ன வாக்குதத்தம் வருகிறதோரோ என்றும், தேவன் எனக்கு இந்த ஆண்டிற்கான வாக்குத்தத்த வசனத்தை கொடுத்தாரென்பது இன்றைய நவீன கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு காரணம். வருத்த படுகிறவர்களுக்கு மிகவும் ஆறுதலான இந்த ஊழியத்தையும் நீங்கள் விமர்சிக்கிறீர்களா? என்றும், அது தவறு, இது தவறு என சொல்வதை தவிர உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று இந்த பழக்கத்தை வேத வசன ஒளியில் பார்க்காமல் நிராகரிக்கிறது ஒரு கூட்டம், இதுபோன்ற வாக்குத்தத்த அட்டைகள் கொடுக்கும் முறையை இன்று வேத வசனத்தின் அடிப்படையில் நான் பதிலளிக்கிறேன், இப்படிபட்டவை திருச்சபைக்குள் மூடநம்பிக்கையை அழைத்துச் வருவது மட்டுமல்லாமல், தேவனுடைய வார்த்தையை வாசிக்க வேண்டிய முறைக்கு ஆபத்தை கொண்டுவருகிறது. இதில் உள்ள தவறை புரிந்துக்கொள்ள பின்வரும் விசயங்களை பகுப்பாய்வு செய்தால், உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். எனவே நீங்கள் இந்த கட்டுரையை நீங்கள் ஜெபத்துடன் ஆராயவேண்டும் என்பது எங்களின் விண்ணப்பம்.

1) வாக்குத்த அட்டைகளினால் அல்ல, கிறிஸ்து இயேசுவில் வாக்குத்தத்தங்களெல்லாம் அருளப்பட்டவை. (2கொரிந்தியர் 1:20)

பரிசுத்த வேதத்தில் உள்ள அனைத்து வாக்குத்தத்தங்களும் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு பொருந்தும். வாக்குத்தத்த அட்டையினால் வருவது போல் அனைவருக்கும் அனைத்து வசனங்களும் பொருந்தாது. வேதத்தில் எல்லா வாக்குத்தத்தங்களும் கிறிஸ்துவுக்குரியதாக இருக்கும்போது, ​​சூழ்நிலைக்கு ஏற்ற வசனத்தை வாக்குத்தத்தமாக நாம் எடுத்துக்கொண்டு ஜெபத்தில் தேவனை சார்ந்திருப்பது வேடிக்கையானது. ஆசீரவாதம் வாக்குத்தத்த அட்டைகளில் அல்ல, நாம் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து வாழ்வதால் கிடைக்கிறது! அவையே தேவனுடைய கிருபையின் சிங்காசனத்தை அணுகுவதற்கான தைரியத்தை நமக்குத் தருகிறது. தேவனுக்கு கீழ்ப்படிவதே வாக்குத்தத்தத்தின்படி ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள அடிப்படை என்பதை இந்த வாக்குத்தத்த அட்டைகள் நிராகரிப்பதால் இது தேவனால் அங்கீகரிக்கப்பட்ட முறையல்ல. “கிறிஸ்து இயேசுவில்” உள்ளதால் என்ற அடிப்படை காரணத்தை மாற்றி, வாக்குத்த அட்டை கிடைத்ததால் என்று ஏமாற்றுவது தேவனின் செயல் அல்ல. இரட்சிப்பில் மட்டும் கொடுக்கும் இந்த வாக்குதத்த மேன்மையை, வேறு எந்த வழியிலும் கொடுக்கும் அதிகாரத்தை தேவன் யாருக்கும் கொடுக்கவில்லை.

2) வாக்குத்தத்தங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே (2 கொரிந்தியர் 1:20).

வாக்குதத்த அட்டைகள் என்பது பிள்ளைகளின் அப்பத்தை நாய்க்குட்டிகளுக்கு வீசுவதைப் போன்ற ஒரு தவறான வழி. கிறிஸ்து இயேசுவுக்குள் இல்லாமல், புறம்பே உள்ளவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்புக்கு உண்டு. (ரோமர் 8:1). அவர்களின் பங்கு தேவனின் கோபமே தவிர தேவனின் கொடுக்கும் வாக்குதத்தம் அல்ல. ஆனால் வாக்குத்தத்த அட்டையை வாங்கிக் கொண்டவர்கள் இரட்சிக்க படாதவர்களாய் இருந்தால் அவர்களுக்கு பொருந்தாத வாக்குத்தத்த அட்டையினால் பொய்யான நிச்சயத்திற்குள் அவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை அந்த பொய்யான உறுதியால் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியவர்களே அதற்கு பொறுப்பு. உதாரணமாக, இயேசு கிறிஸ்துவை தன்னுடைய சொந்த இரட்சகராக பெற்றுக் கொள்ளாத ஒருவர், "கர்த்தர் என் பாவங்களை நீக்கிவிட்டார்" என்ற வாக்குத்தத்த அட்டையை பெற்றால், அது சுவிசேஷத்திற்கு எவ்வளவு பெரிய தடையாக இருக்கும் என்று சிந்தியுங்கள்! ஒரு பாவியை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்வதுதான் அவருக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய நன்மையாக இருக்கும். அந்த பாவிக்குச் சொந்தமில்லாத அல்லது பொருந்தாத வாக்குத்த்தங்களினால் அவனுக்குள் இருக்கும் இருளை ஒளியாக காண்பித்து தவறான வழியில் நடத்துவது, அந்த பாவிக்கு நாம் செய்யும் மிகப் பெரிய தீமையாகும். யாருக்கு என்ன வாக்குத்தத்தங்கள் கிடைக்கும் என்பதை தேவனே தீர்மானிப்பதால், இரட்சிக்கப் படாதவர்களுக்கு அப்படிப்பட்ட வாக்குதத்தங்கள் வராமல், தேவன் பார்த்துக்கொள்வார் என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம். ஆனால், வாக்குத்தத்தங்கள் எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே! பொருந்தும் என்ற தேவ வசனத்தை மறைத்து, அனைவருக்கும் சாக்லேட் கொடுப்பதைப் போல கொடுத்து, தேவனே பார்த்துக் கொள்வார். என்று நினைப்பது எவ்வளவு முரண்பாடாக இருக்கும், சிந்தியுங்கள்! வாக்குத்தத்தங்களை கொடுக்கிறோம் என்ற போர்வையில் பாவியை ஏமாற்றாதீர்கள், தேவனுடைய வார்த்தைக்கு அநீதி இழைக்காதீர்கள்.

3) நிபந்தனைக் குட்பட்ட வாக்குத்தத்தங்கள் என்றால் என்ன?

பரிசுத்த வேதத்தில் உள்ள பல வாக்குத்தத்தங்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளன. அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுபவர்களுக்கு வெகுமதியாக வழங்கப்படுவது வாக்குத்தத்தங்கள், அவற்றைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கும், அதைப் பற்றி கவலைப்படாதவர்களுக்கும் குலுக்குசீட்டைப் போல வாக்குத்தத்தங்கள் வழங்கப்படுவது, தேவனின் வழி நடத்தல் இல்லை என்பதற்கு உறிதியான சான்றாகும். நிபந்தனைகளை நிறைவேற்றுபவர்களுக்கு வாக்குதத்தங்கள் உண்டு. ஆனாலும், இன்றைய நாட்களில் கொடுக்கும் வாக்குதத்த அட்டை போன்ற வாக்குதத்தங்கள் அல்ல. தேவனுடைய நிபந்தனைகளுக்கு முரணான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு ஆசிர்வாதமான வாக்குத்தத்த அட்டை கொடுப்பது கேலிக்கூத்தாகும். உதாரணமாக, "நீங்கள் பூமியில் நீண்ட ஆயுட்காலம் வாழலாம்" என்பது தாயையும், தந்தையையும்  கனம் பண்ணுகிறவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம். மாறாக தாயையும், தந்தையையும்  கனம் பண்ணாத ஒருவனுக்கு அப்படிப்பட்ட வாக்குத்தத்த அட்டை கிடைப்பதால் எந்த பலனும் இல்லை. அந்த நிபந்தனைக்குக் கீழ்ப்படிகிற எவருக்கும் வாக்குத்தத்த அட்டை இல்லாமல் அந்த வாக்குதத்தை அவர்களுடைய வாழ்வில் தேவன் நிறைவேற்றவார். வெறும் வாக்குத்தத்த அட்டையை பெற்றுக்கொண்டேன் என்பதால் மட்டுமே அதற்கு தகுதியானவன் என்று அர்த்தம் அல்ல,

4) வாக்குத்தத்தங்கள் என்பது கிளி ஜோதிடம் அல்ல.

கிறிஸ்து இயேசுவுக்குள் நிலைத்திருப்பதன் மூலமும், அந்தந்த நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிவதன் மூலமும் நாம் பெற்றுக்கொள்ளும்  வாக்குத்தத்தங்கள். ஆனால், வரவிருக்கும் புதிய ஆண்டில் தேவன் என்ன செய்யப் போகிறார் என்பதை கிளி ஜோதிட அட்டைகளாக வேத வசனத்தை பயன்படுத்தலாம் என்று நினைப்பது எவ்வளவு ஆபத்தான யோசனை. தேவனின் முன்குறித்த நோக்கத்திற்குப் புறம்பாக அவருடைய வார்த்தையைப் பயன்படுத்த தேவன் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. திருமணமானாலும், வேலையானாலும், குழந்தைக்கான எதிர்பார்ப்பானாலும், மேலும் மனதிற்குள் பல தேவைகளை எதிர் பார்க்கும் சிலருக்கு, "கர்த்தர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்" என்ற வாக்குத்தத்த அட்டை வந்தால், அவர்கள் எதிர்பார்த்தது எல்லாம் நடக்குமென்று, நினைப்பவர்களுக்கு அந்த வருடத்தில் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறவில்லை என்றால், தேவன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று விசுவாசம் இல்லாதவர்களின் சிலர் பேச்சை கேட்டிருக்கிறேன். வாக்குத்தத்த அட்டைகள் கொடுப்பது என்ற பழக்கம், தேவனுடைய வசனத்தின் மீது விசுவாசத்தை கொண்டுவருவதற்கு பதிலாக, அவிசுவாச விதைகளை விதைக்கிறதற்கு சமம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

5) இது வேத விளக்க விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது.

வேத வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்திலிருந்து அதாவது சொல்ல வருகின்ற செய்திலிருந்து மாற்றி, வேறோரு தொடர்பில்லாத புதிய செய்தியை, என் வாழ்க்கைக்கு கற்பிப்பது, தேவனுடைய வார்த்தைகளுக்கு புதிய அர்த்தங்கள் கொடுக்கின்றன. அந்த புதிய அர்த்தங்கள் அவருடைய வார்த்தைகள் அல்ல. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்திலிருந்து தேவன் சொல்லிய வார்த்தையின் உட்கருத்து மட்டுமே, உண்மையான தேவனுடைய வார்த்தை. அந்த உட்கருத்திலிருந்து பிறந்த விதிகள்தான் தேவன் நம்முடைய வாழ்கைக்கு காட்டும் சரியான பாதை. தேவன் இப்பேர்பட்ட வசன அர்த்தத்தில் பேசுவாரே தவிர, சந்தர்ப்பத்துக்கு தொடர்பில்லாமல் அவருடைய வசனத்தின் பாதி பகுதிகளை வாக்குத்தத்த அட்டைகளாகப் பிரித்து, நம்முடைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப பேசுகிறார் என்று நினைப்பது வேத வார்த்தையின் உண்மையை அழிப்பதாகும். வேத வசனத்தைப் புரிந்துக் கொள்வதற்கு ஒரு முறைபடுத்தப்பட்ட ஒழுங்கு உள்ளது, என்ற உண்மையை அறியாமலிருக்கிறார்கள் அல்லது தெரிந்துக்கொண்டே அதைப் புறக்கணிகிறார்கள். இந்த வாக்குத்தத்த அட்டையை வழங்குவதின் மூலம் தங்களின் திருச்சபைகளை அபாத்தான பாதையில் வழி நடத்துக்கிறார்கள்.

மேற்சொல்லப்பட்ட விசயங்களை ஆழமாக ஆராய்ந்து திருச்சபையை சரியான வழிமுறைகளினால் நடத்தவேண்டிய காரியத்தில் ஊக்குவிக்க வேண்டுமென்றும், மூடநம்பிக்கைகளுக்கு வழிவகுக்கும் எந்தப் பழக்க வழக்கங்களுக்கு ஒத்துழைக்காமல் இருக்குமாறு தேவனின் பெயரால் உங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். “நாங்கள் தான் தேவனுடைய ஊழியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும்” கூட இந்த வாக்குத்தத்த அட்டை  முறைகளை கடைபிடிப்பதும், அதை ஊக்குவிப்பதையும் நாம் அறிவோம். அப்படிப் பட்டவர்களால் நிறுவப்பட்ட “பெரிய திருச்சபைகளில்” இந்தப் பழக்கங்கள் இன்றும் தொடர்கின்றன. கிறிஸ்துவ சமுகத்திற்கு முன்பாக தன்னை எவ்வளவு மேன்மையானவர்களாக காட்டிக் கொள்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்களின் பொறுப்பும் பெரியதாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தேவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டிய அபாயத்தில் உள்ளனர். நாம் வேதத்திற்கு பொருந்தாத இந்த கிளி ஜோதிடத்திற்க்கு விலகி இருப்போம். முழு வேதப் புத்தகமும் எனக்குரியதாக இருக்கும் போது, ​​வேறு யாரோ ஒரு மனிதன் மூலமாக அச்சடித்த வாக்குத்தத்த அட்டைக்கு நாம் ஏன் அடிமைப்பட்டு இருக்கவேண்டும். கிறிஸ்து இயேசுவில் உள்ள வாக்குத்தத்தங்கள் அனைத்தும் எனக்கு வேண்டும் என்பதையும், நிபந்தனைகளோடு கூடிய வாக்குதத்தங்கள் என்னை வேத வசனத்திற்கு கீழ்ப்படிவதற்கு அதிகமாக ஊக்குவிக்க வேண்டும் என்றும், இப்படிப்பட்ட வேத வசன வாக்குதத்தத்தின் உறுதிகளை சொந்தமாக்கி கொள்வதற்கு இதுதான் ஒரே வழி என்பதை மறந்துவிடதிர்கள். அப்படிப்பட்ட வாக்குத்தத்த வழிமுறைகளை அவை தேவனால் கொடுக்கப்பட்ட விதமாகவே கடைபிடிப்பதற்கு தேவன் நம் அனைவருக்கும் கிருபை செய்வராக. ஆமென்...

Add comment


Security code
Refresh

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.