கட்டுரைகள்
ஆசிரியர்: G.பிபு
தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்
 
எவ்வித பாகுபாடும் இன்றி எல்லோரும் பாவம் செய்கிறார்கள் என்பது உண்மை என்றால், பாவம் என்பது ஒரு பழக்கம் அல்ல, அது இயல்பான குணம் என்று சொல்லலாம். எல்லாரிடமும், எல்லா நேரங்களிலும் இருப்பது பாவ சுபாவமே! என்று யோனத்தன் எட்வர்ட் என்பவர் சொன்னது இதற்கு மிகவும் பொருத்தமானது. மனிதன் இயல்பாகவே பாவ சுபாவம் உள்ளவானாக இருப்பதை கிறிஸ்துவ பார்வையில் சொல்லுவது தான் “ஜென்மபாவம்” என்பதாகும். இந்த ஜென்மபாவம்  என்பது “நான் பிறந்ததே பாவம்” என்பதல்ல, “என் பிறப்போடு பாவம்” உள்ளது என்று பொருள். நாம் பாவம் செய்வதினால் பாவிகள் ஆவதில்லை, ஆனால் நாம் பாவிகளாய் இருப்பதினாலே பாவம் செய்கிறோம் என்பதே இந்த கோட்பாடு வேதவசனங்களை கொண்டு உறுதிப்படுத்துகிறது. ஜென்மபாவம் என்பது நமக்குள் இருக்கும் பாவத்திற்கு தொடக்க காரணமாக இருப்பதால் அதை “தொடக்க பாவம்” என்றும் அழைக்காலம். இன்று பலர் ஜென்மபாவம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது, தவறான புரிதல்களை உருவாக்கி வருவதைக் கருத்தில் கொண்டு, "மூலபாவம்" என்ற வார்த்தையை பயன்படுத்துவது மிக நல்லது. இதை தான் திருச்சபை வரலாற்றில் “Original Sin” என்று பயன்படுத்தினார்கள். அந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பு சரியானது.

“இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும், உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” ஆதாமின் பாவம் அவனையும், அவன் சந்ததியையும் வீழ்ச்சியடைய செய்தது. (ரோமர் 5:12-19). “அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன். (ரோமர் 5:14). “அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.” (எபேசியர் 2:3). “அன்றியும் நாம் பெலனற்றவர்களாய் இருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார். நாம் தேவனுக்குச் சத்துருக்களாய் இருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப் பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்ட பின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. (ரோமர் 5:6,8,10). “துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்.” (சங்கீதம் 58:3) “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். (எபேசியர் 2:1), “இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.” அதாவது மீண்டும் பிறக்கவேண்டும் (யோவான் 3:3-6), நாம் பாவத்தோடு இருப்பதால் தேவனுடைய ராஜ்யத்தில் நமக்கு பங்கில்லை. என்று  வேத வசனம் தெளிவாக சொல்லுகிறது.

இது சுவிசேஷத்துடன் தொடர்புடைய காரியம் என்றும், இதில் தவறு ஏற்ப்பட்டால் சத்தியத்தை, விட்டுவிலகும் ஆபத்து உள்ளது என்று தெளிவாகிறது.  ஒருவேளை மனிதன் நீதியுள்ளவனாகப் பிறக்கிறான், என்றும் அவனுடைய சுபாவம் பரிசுத்தமானது என்றும் அவன் சமுதாயத்துடனும் சாத்தானுடனும் தொடர்பு இல்லாமல் இருந்தால், இயேசு கிறிஸ்துவின் நீதி அவனுக்கு தேவையில்லாமல் சுயாதீனமாகவே அவன் நீதியுள்ளவன் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட யோசனை சுவிசேஷத்தையே குளறுபடி செய்யக்கூடிய அளவுக்கு ஆபத்தானது. இந்த முக்கியமான காரியத்தை தவறாகப் புரிந்து கொண்டவர்கள் அடிக்கடி கேட்கும் சில கேள்விகளை எழுப்பி அதற்கேற்ற பதிலளிக்க முயற்சிக்கிறேன். இந்த முயற்சி சிலருடைய தவறான எண்ணங்களை நீக்கி, “ஜென்மபாவம்” என்ற இந்த தலைப்பை விளக்குவதால் சிலராவது புரிந்துக் கொள்வர்கள் என்று நம்புகிறேன்.

1) கேள்வி: தேவனே நம்மை பாவிகளாக்குகிறார் என்று சொல்வது எவ்வளவு தவறான போதனை? தேவன் தான் பாவத்திற்கு காரணம் என்று சொல்கிறீர்களா?

பதில்: தேவன் மனிதனைப் படைத்தபோது மனிதனுக்குள் பாவம் இல்லை. “இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்;” (பிரசங்கி 7:29). தேவன் மனிதனைத் தன்னுடைய சாயலில் படைத்தார். “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.”  (ஆதியாகமம் 1:26-27). ஆனால், கீழ்ப்படியாமையின் மூலமாக மனிதன் பரிசுத்தமான தேவனுடைய சாயலை இழந்தான். தேவனுடைய சாயலை இழந்த ஆதாம் தன்னுடைய சாயலில் ஆதாவது பாவ சாயலில், பிள்ளைகளைப் பெற்றான். “ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று,” (ஆதியாகமம் 5:3). பாவம் பாவத்தை தான் பிறப்பிக்கும். எனவே, வீழ்ச்சியடைந்த முதல் தம்பதிகளான ஆதாம் ஏவாளின் பாவ சுபாவத்தையே! நாமும் பெற்றுள்ளோம். பிள்ளைகளை பிறக்க செய்வது தேவன் தான், “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.” (சங்கீதம் 127:3). ஆனால் அவர்களுக்குள் பாவ சுபாவத்தை வைத்தது அவரில்லை. ஏனெனில் அவர் ஆதாமைப் படைத்தது போலவே மற்ற அனைவரையும் படைக்கவில்லை.

பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் இயல்பான விதியை தேவன் மனிதனுக்குள் வைத்தார். “பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.” (ஆதி. 1:28). மரம் கெட்டது என்றால் அதன் தன்மையும் கெட்டதாக இருக்கும். “அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.” (யோபு 14:4). ஆதாமின் மீறுதல்கள் தான் அதற்குக் காரணம். அது தேவனின் தவறல்ல, தேவன் மிகவும் கிருபையுள்ளவராக இருப்பதால், தான் மனிதன் இழந்தபோன தேவனின் பரிசுத்த சாயலை திரும்பப் பெறுவதற்கான வழிமுறையை அவர் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு கொடுத்துள்ளார், “தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;”  என்பதை ரோமர் 8:29; எபேசியர் 2:10; எபேசியர் 4:21-24; கொலோசெயர் 3:10; 1யோவான் 3:2 ஆகிய வேத வசனங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. ஆதாமில் நாம் பெற்றுகொண்ட இயல்பான சுபாவத்தின் காரணமாக அல்ல, மாறாக கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் பெற்றுக்கொள்கிற புதிய பிறப்பால் மட்டுமே நாம் மீண்டும் தேவ சாயலைப் பெற்றுக்கொள்கிறோம்! அதை நான் பிறக்கும்போதே எனக்குக் கிடைக்காமல் கிறிஸ்து இயேசுக்குள் கிடைப்பதை எதிர்க்காதவன் பாக்கியவான்.

2) கேள்வி: பாவ சுபாவத்தினால் தான் நாம் பாவம் செய்கிறோம் என்று சொல்லுவது மனிதனின் பொறுப்பை தட்டிக்கழிக்கும் போக்கு அல்லவா? நான் பாவம் செய்வது என்னுடைய தவறல்ல, என்னில் இருக்கும் பாவ சுபாவத்தின் காரணமாகவே நான் செயல்படுகிறேன். என்ற இந்தக் கோட்பாடு பலருடைய இருதயங்களைக் கடினப்படுத்துமல்லவா?

பதில்: சிலர் வேத வசனங்களை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சாக்குப்போக்கு சொல்லி குழப்பி கோட்பாடுகளை மாற்றுவது தவறு. உதாரணமாக, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9). மேலும், “மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.” (ரோமர் 5:20) மேற்குறிப்பிட்ட வசனங்களை சிலர் பாவம் செய்வதற்கு சாதகமாக பயன்படுத்துவார்கள். பாவத்தை அறிக்கையிட்டால் பாவத்தை மன்னிக்க வாய்ப்பு இருக்கும்போது பாவம் செய்வதை நிறுத்தி விடுவதை விட அறிக்கையிட்டு பாவம் செய்வதே பலருக்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த வசனத்தில் உள்ள சத்தியத்தை போதிக்காமல் நிறுத்து விடுவோமா? எல்லோரும் அந்த வசனத்தை சரியாக புரிந்துக் கொண்டார்களா? சிலர் தங்களின் சுயநலத்துக்காக திரித்துக்கொள்ளும் அபாத்து உள்ளதா? என்ற கேள்விகள், ஒரு கோட்பாடு உண்மையானாதா? அல்லது பொய்யானாதா? என்று தீர்ப்பதற்கு அடிப்படை ஆகாது. எல்லா கோட்பாடுகளையும் ஆராய்வது போலவே “ஜென்மபாவம்” என்ற கோட்பாட்டையும் வேத வசனத்தின் விஸ்த்தராமான வெளிச்சத்தில் கண்டறியப்பட வேண்டும். அவ்விதமாக வசனத்தின் மூலம் கற்பித்தால், அது சத்தியம். மாறாக வசனத்தின் உபதேசத்திற்கு வேறுபட்டால், அது தவறானது. எனவே, ஜென்மபாவம் என்ற உபதேசத்தை சரியாகப் புரிந்துகொள்பவர்கள் தேவனின் கிருபையை அதிகமாக சார்ந்துக்கொள்வார்கள். நமக்குள் இருக்கும் வீழ்ச்சியை சமாளிப்பது என்பது நம்முடைய திறமைக்கு அப்பாற்பட்ட காரியம். மனிதனுடைய குணத்தை மீறி யாரால் நடிக்க முடியும்? உடல்ரீதியான எண்ணம் கொண்ட நாம் தேவனுடைய நியாய பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய விருப்பமில்லாதவர்களும், முடியாதவர்களுமாக இருக்கிறோம். நாம், மனமாற்றம் அடைவது தேவனுடைய இலவசமான கிருபையின் ஈவு என்பதை அறிந்துக்கொண்டு நம்முடைய வீழ்ச்சியடைந்த நிலையை அதிகமாக புரிந்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.

3) கேள்வி: மனிதன் பாவியாக இருக்கிறான் என்றால், அவன் பாவத்தை செய்வதற்கு முன்பே அவன் பாவி என்று வேதத்தில் எங்கு கூறிப்பிடப் பட்டுள்ளது?

பதில்: மனிதர்கள் அனைவரும் அவரவரின் பேராசையின் காரணமாக பாவம் செய்யத் தூண்டப்படுகிறார்கள் என்று வேதம் சொல்கிறது. சாத்தானும், இந்த உலகத்தின் ஈர்ப்புகளும், மனிதனை சோதிக்கின்றன என்பது உண்மைதான், ஆனால் மனிதனின் இந்த ஈர்ப்பு கர்ப்பம் தரித்து பாவத்தை பிறப்பிக்கும் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது. (யாக்கோபு 1:13-14). சிறு பிள்ளைகள் முதல் வயதானவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் அவர்களின் வயதுக்கு ஏற்ப இந்த பாவத்தை செய்வதற்கான இயல்பு அவர்களில் உள்ளது. மறுபிறப்பு அடைந்தவர்களில் இந்த பாவத்தின் ஈர்ப்புக்கும், தேவன் கொடுத்த புதிய சுபாவத்துக்கும் இடையிலான போராட்டத்தை குறித்து ரோமர் 7-ம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் மிக தெளிவாக விளக்கியுள்ளார். எது நன்மை, எது தீமை என்று தெரிந்திருந்தும் நன்மை செய்ய விடாமல் தடுத்து தீமையை செய்வதற்கு தூண்டும்படியாக செய்யும் ஒரு பாவ நியமத்தை தனக்குள் இருப்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் உணர்ந்தார். இதைத்தான் பாவ சுபாவம் என்று சொல்கிறோம்.

உள்ளார்ந்த பாவம் என்பது எதுவுமில்லை என்றால், மனிதன் தன்னுடைய சுயாதீனத்தை தவறாகப் பயன்படுத்தி பாவம் செய்கிறவனாக இருப்பான். ஆனால் பாவத்தின் நியமம் என்பது ஜென்ம சுபாவமானது என்று வேதம் சொல்லுகிறது. எனவே “ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப் படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.” (1 கொரிந்தியர் 2:14) “எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.” (ரோமர் 8:7). “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.” (யோவான் 6:44) “ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிற படியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.” (யோவான் 3:19-20).

மனிதனுக்கு சுயாதீன அதிராரம் இருந்தால், சாத்தானின் சூழ்ச்சியோ அல்லது வேறு சில வெளிப்புற சூழ்நிலைகள் மட்டுமே பாவம் செய்வதற்கு துண்டுவது உண்மையானால், இயேசு கிறிஸ்துவைத் தவிர அனைவரும் பாவத்தைத் தேர்ந்தெடுப்பதற்க்கான காரணம் என்ன? மனிதனுக்குள் இருக்கும் வீழ்ச்சியடைந்த பாவ சுபாவ நிலையை பற்றிய வேத விளக்கத்தை மறுப்பவர்களுக்கு மாற்று விளக்கம் என்ன? “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாக இருப்பது ஏன்? (ஆதியாகமாம் 6:6) “துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்.” இப்படிப்பட்ட நிலை ஏன்? (சங்கீதம் 58:3) “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனை விட்டு அகற்றும்.”இந்த நிலை ஏன்? (நீதிமொழிகள் 22:15) “மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,  களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். (மாற்கு 7:20-23) உலக ஈர்ப்பும், சாத்தனின் துண்டுதலும் என பல காரணங்கள் சொன்னாலும், “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9) என்று ஏன் கூறப்படுகிறது? இத்தகைய இருதயம், இயல்பு, சுபவாம், நியமம் அல்லது வேறு எந்த பெயர் வைத்தாலும், அது பாவம் செய்வதற்கு இருதயத்திற்குள் தூண்டுதலாக இருப்பதற்கும், அதுவே பாவத்திற்கு வேர் என்று சொல்லும் வேத வசன சத்தியற்கு முரணான எந்தக் கோட்பாட்டிலும் மேற்கண்ட கேள்விகளுக்கு சரியான விளக்கம் உள்ளதா? இது தரப்பு கேள்வி மட்டுமல்ல சவாலும் கூட.

4) கேள்வி: மனிதர்கள் பாவ சுபாவத்துடன் பிறக்கிறார்கள் என்பது உண்மையானால் மனிதனாக பிறந்த இயேசு கிறிஸ்துக்கும் பாவ சுபாவம் இருக்கிறதா?

பதில்: எல்லா மனிதரை போல தேவன் இயேசு கிறிஸ்துவை பிறக்க வைக்கவில்லை. “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால்,” (ரோமர் 5:12) “அவள் வித்து” அதவாவது “ஸ்திரியின் வித்து” அவர் மனித சந்ததியாக பிறக்கவில்லை, (ஆதியாகமம் 3:15) “காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும்” (கலாத்தியர் 4:4). எந்தவொரு மனித முயற்ச்சியும், தலையீடும் இல்லாமல், தேவனே பரிசுத்த ஆவியானவர் மூலமாக இயேசு கிறிஸ்துவை மரியாளின் கர்பத்தில் உருவாக்கினார். இவ்வாறு நித்திய தேவன், குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு சரீரத்தை கொடுத்தார். “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்;” (யோவான் 1:1,14,)

“ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;” (எபிரேயர் 10:5).” தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.” (லூக்கா 1:35). இவ்வாறாக, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும்,” (ரோமர் 8:4) பாவத்துக்கு விளகஈருந்தார். “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும்,” (எபிரெயர் 7:26). “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.” (பிலிப்பியர் 2:7) “அந்த வார்த்தை மாம்சமாகி,” (யோவான் 1:14) “எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.”  (எபிரெயர் 4:15). "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?" (யோவான் 8:46) ஆகிய வாத வசனங்கள் தெளிவாக நமக்கு சொல்லுகிறது.

5) கேள்வி: ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். (யாக்கோபு 1:14) இயேசு கிறிஸ்துவும் எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராய் இருக்கிறார். (எபிரெயர் 4:15). மேலும் அவர் மனிதனைப் போல சோதனைக்கு ஆளாக வேண்டுமானால், அவருக்குள்ளும் இச்சை இருக்கவேண்டும் என்று தானே பொருள்?

பதில்: எபிரெயர் 4:15-ம் வசனத்திலே “எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.” என்று தெளிவுப் படுத்தபட்டுள்ளது. ஆகையால், அவர் உள்ளத்தில் பாவ சுபாவத்தால் இழுக்கப்பட்டாலும், எல்லாவற்றிலும் நம்மைப் போலவே அவர் சோதிக்கப்பட்டாலும் அவருக்குள் இச்சை இருந்ததில்லை. ஒருவேளை அவருக்குள் பாவம் இருந்தால் “எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராய் இருக்கிறார்.” என்ற வேத வசனத்திற்கு அர்த்தமில்லாமல் போயிருக்கும். அவர் பாவம் செய்யாதவர் மட்டுமல்ல, பாவமற்றவர் என்பதை குறிப்பாக கவனியுங்கள். சாத்தான் இயேசு கிறிஸ்துவை சோதித்தான். என்பதை இந்த வசனப்பகுதியில் பார்க்கிறோம். (மத்தேயு 4:1-12). மேலும், இந்த உலகம் இயேசுகிறிஸ்துவை பல அழுத்தங்களுக்குள் தள்ளியது. ஆனால் அவர் பாவம் செய்யவில்லை, ஏனென்றால் அவர் பாவத்திற்கு உடன்படவோ, இணங்கவோ விருப்பியவர் இல்லை.

6) கேள்வி: இயேசுகிறிஸ்து பாவம் செய்யவில்லை என்று சொல்லுவதை விட, அவர் பாவம் செய்யமுடியும் ஆனாலும், அவ்வாறு செய்யாமல் பாவத்தை வென்றார் என்று சொல்வது சிறந்தது அல்லவா? பாவம் செய்ய முடியாத ஒருவரில் சோதிக்கப்படுவதால் என்ன மேன்மை இருக்கிறது?

பதில்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பூரண மனிதன் மட்டுமல்ல, பூரண தேவனும் கூட. தேவனாய் இருந்தவர் மாம்சத்தில் வருவதே அவருடைய மகத்துவம் “தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்,” (1தீமோத்தேயு 3:16). தேவன் பாவம் செய்யவில்லை “பொய்யுரையாத தேவன்” (தித்து 1:3) இயேசு கிறிஸ்துவால் பாவம் செய்யமுடியும் என்று சொல்லுவது அவருடைய தேவத்துவத்தை இழிவுபடுத்துவதாகும். அவர் பாவத்தை வென்று பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொண்டார். என்று சொல்வதை விட, சுயாதீனமாகவே அவர் பரிசுத்தர் என்று சொல்லும் போது, இயேசு கிறிஸ்துவின் தேவத்துவம் ஆயிரமடங்கு பெரியது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவருக்கு மகத்துவத்தை கொண்டு வரவேண்டும் என்று அவருடைய தேவத்துவத்திற்கு பதிலாக இடையூறு வாரமால் இருப்பதற்கு கவனமாக இருக்கவேண்டும்.

7) கேள்வி: இயேசுகிறிஸ்து நம்மைப் போன்ற பாவத்தில் விழுந்து அதை, வெற்றிக்கொண்டார் என்பது நமக்கு முன்மாதிரியாக இருக்கமுடியும். அவ்வாறு இல்லாமல், பாவத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்தால் அவரைப்போல நாமும் எப்படி பாவமில்லாமல் இருக்கமுடியும்?

பதில்: பாவத்தை வெற்றிக் கொள்ளும் காரியத்தில் நமக்கு ஏற்ற ஆலோசனை தருபவர் என்பதை முன்பு அறியவேண்டும். (எபிரெயர் 4:15). முன்மாதிரி என்ற இந்த விஷயத்தை பார்த்தால் சரீரம் இல்லாத பிதாவாகிய தேவனும் நமக்கு முன் மாதிரியாக இருக்கிறார். “ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.  (மத்தேயு 5:48), “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கை எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.”  (1பேதுரு 1:15-16), (லேவியராகமம் 11:44,19:2,20:7) தேவனுடைய முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்ற முடியும்? அதற்கு  நமக்குத் தேவை ஒரு வழிகாட்டி. அந்தப் பரிசுத்தமான தேவத்துவ தன்மைக்கு நம்மை மாற்றுவதற்கு, சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர் ஒருவர் தேவை. அவருடைய பரிபூரண முன்மாதிரியை நாம் பின்பற்றி, சுயமாக நாம் அந்த பரிசுத்தத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை ஒப்புக்கொள்ளும் போது தான், நாம் உண்மையாகவே அவருடைய கிருபையின் சிம்மாசனத்திற்கு வழி நடத்தப்படுவோம். மற்றும் நாமக்கு உதவி தேவையான ஏற்ற நேரத்தில் அவரைச் சார்ந்திருக்கிறோம். “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” (எபிரெயர் 4:16). “அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;” (ரோமர் 8:29), “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். (1யோவான் 3:2).

8) கேள்வி: ஜென்மபாவம் என்ற கோட்பாட்டை அறியாததால் நமக்கு ஏறப்படும் இழப்பு என்ன?

பதில்: ஜென்மபாவம் என்ற கோட்பாடு பாவத்தின் ஆழத்தை குறித்தும், அது மனு குலத்தின் மீது கொண்டு வந்த விழ்ச்சியை குறித்தும், அந்த விழ்ச்சியிலிருந்து கிறிஸ்துவுக்குள் மனுகுலம் இரட்சிக்கப் படுவதற்கான தேவனின் கிருபையான ஏற்பாட்டை குறித்தும், சுவிசேஷ புரிதலை விரிவாக விளக்குகிறது. இந்த அடிப்படையான பாடத்தை கற்றுக் கொள்ளாமல் சுவிசேஷத்தின் உண்மையைக் புரிந்துக்கொள்ள முடியாது. பார பட்சமில்லாமல் எல்லோரும் பாவம் செய்யவதற்கு காரணம் என்ன? இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாரையும் நீதிமான்களாக்க முடியாது என்பதற்கு என்ன காரணம்? மறுபிறப்பு அடைந்த கிறிஸ்தவனில் உள்ளுக்குள் நடக்கும் போராட்டத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? இத்தகைய முக்கியமான கேள்விகளுக்கு, ஜென்மபாவம் என்ற கோட்பாடு கொடுப்பது வேதத்தின்படியான விரிவான பதில், இந்தக் கோட்பாட்டை நம்பாதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. அது அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு தானே?

முடிவுரை:

ஆதாம் தன்னுடைய சுயாதீனத்தை தவறாக பயன்படுத்தியதால் பாவம் செய்தான். இதன் விளைவாகவே மனித இனத்தார் அனைவரும் ஆதாமைப் போலவே பாவிகளாய் மரணத்திற்கு உள்ளனார்கள். இந்த வீழ்ச்சியிலிருந்து பாவமில்லாத ஒருவன் உருவாகுவது சாத்தியமில்லை எனவே, தேவாதி தேவனே மனிதனாக இந்த பூமிக்கு வந்து பாவத்திற்குப் பரிகாரம் செய்தார். “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப் படுவார்கள். அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதி இருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.” (1 கொரிந்தியர் 15:22,45-47). இதுவே ஜென்மபாவம் என்ற கோட்பாட்டின் சாரம். “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். (கலாத்தியர் 1:8-9)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.