யூதா
ஆசிரியர்
“இயேசு கிறிஸ்துவின் ஊழியனாகவும், யாக்கோபின் சகோதரனாகவும் இருக்கிற யூதா” (1: 1) என்று எழுத்தாளர் தன்னை அடையாளம் காட்டுகிறார். யூதா, யோவான் 14: 22 ல் “யூதாஸ்” என்று ஒருவேளை அப்போஸ்தலர்களில் ஒருவராக கூறப்பட்டுள்ளவராக இருக்கலாம். பொதுவாக அவர் இயேசுவின் சகோதரனாகவும் கருதப்படுகிறார். அவர் முன்னர் ஒரு அவிசுவாசியாக இருந்தார் (யோவான் 7: 5), பின்னர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பிறகு, அவர் மேல்வீட்டறையில் அவருடைய தாயார் மற்றும் பிற சீடர்களுடன் இருந்தார் (அப்போஸ்தலர் 1: 14).
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 60-80 காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம்.
அலெக்ஸாண்டிரியாவிலிருந்து ரோமாபுரி வரை எழுதப்பட்ட இடத்தின் ஊகங்களாக இருந்தன.
யாருக்காக எழுதப்பட்டது
“பிதாவாகிய தேவனால் பரிசுத்தமாக்கப்பட்டும், இயேசு கிறிஸ்துவை காத்துக்கொள்ளுகிறவர்களுக்கும், மற்றும் அழைக்கப்பட்டவர்களுக்கும்” என்ற பொதுவான சொற்றொடர் எல்லாக் கிறிஸ்தவர்களையும் குறிக்கிறது. இன்னும், தவறான ஆசிரியர்களிடம் தனது செய்தியை ஒரு குறிப்பிட்ட குழுவினரை விட அவர் தவறான ஆசிரியர்களைப் பேசுவதாக இருந்திருக்கலாம்.
எழுதப்பட்ட நோக்கம்
விசுவாசத்தில் உறுதியாய் இருப்பதற்கும் வீணான காரியங்களுக்கு எதிராக எதிர்ப்பதற்கும் தொடர்ந்து விழிப்புணர்வு தேவை என்று சபைக்கு ஞாபகப்படுத்த முயற்சிக்கும்படி இந்த கடிதத்தை யூதா எழுதினார். எல்லா இடங்களிலும் உள்ள கிறிஸ்தவர்கள் செயல்படவேண்டும் என்று தூண்டுதல் கொடுத்து அவர் எழுதினார். பொய்ப் போதனைகளின் ஆபத்தை அவர்கள் உணர்ந்துகொள்ளவும், தங்களைத் தாங்களே மற்றும் மற்ற விசுவாசிகளையும் காப்பாற்றவும், ஏற்கனவே வஞ்சிக்கப்பட்டவர்களை மீண்டும் மனந்திரும்பச்செய்யவும் அவர் விரும்பினார். தேவனுடைய தண்டனையைக் குறித்துப் பயப்படாமல், கிறிஸ்தவர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்ய முடியுமென்று கூறிக்கொண்டிருந்த தேவபயமற்ற போதகர்களுக்கு எதிராக யூதா எழுதினார்.
மையக் கருத்து
விசுவாசத்திற்காகப் போராடுவது
பொருளடக்கம்
1. அறிமுகம் — 1:1, 2
2. கள்ளப் போதகர்களின் விளக்கம் மற்றும் விதி — 1:3-16
3 கிறிஸ்துவில் விசுவாசிகளுக்கு ஊக்கமளித்தல் — 1:17-25