பிலேமோன்
ஆசிரியர்
பிலேமோன் புத்தகத்தை எழுதியவர் அப்போஸ்தலன் பவுல் (1: 1). பிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதத்தில் ஒநேசிமுவை பிலேமோனிடம் மீண்டும் அனுப்புகிறார், மற்றும் கொலோசெயர் 4: 9 ல் ஒநேசிமு தீகிக்குவுடன் கொலேசே பட்டணத்திற்கு வருபவராக அடையாளம் காணப்படுகிறார். (கொலோசெயர்களுக்கு நிருபத்தைக் கொடுக்கும் நபர்) பவுல் இந்த கடிதத்தை தனது சொந்தக் கையால் எழுதுவதன்மூலம் இது எவ்வளவு முக்கியமானது என்பதை காட்டுவது சுவராசியமான ஒன்றாகும்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 60 காலகட்டத்தில் எழுதப்பட்டது.
பவுல் ரோமில் பிலேமோன் நிருபத்தை எழுதினார், பிலேமோனுக்கு கடிதம் எழுதப்பட்ட சமயத்தில் பவுல் கைதியாக இருந்தார்.
யாருக்காக எழுதப்பட்டது
பிலேமோன், அப்பியாள், அர்க்கிப்பு மற்றும் அர்க்கிப்புவின் வீட்டில் கூடிவரும் சபைக்கு பவுல் கடிதம் எழுதினார். நிருபத்தின் உள்ளடக்கத்திலிருந்து, அது முதன்மையான உத்தேசிக்கப்பட்ட வாசகர் பிலேமோன் என்று தெளிவாக தெரிகிறது.
எழுதப்பட்ட நோக்கம்
பவுல் ஒநேசிமுவை திரும்பவும் தண்டனையின்றி சேர்த்துக்கொள்வதற்காக பிலேமோனை சம்மதிக்க செய்தல் (10-12, 17). (அடிமையாகிய ஒனேசிமு தன் எஜமான் பிலேமோனிடமிருந்து திருடிவிட்டு தப்பி ஓடிவிட்டார்) மேலும் ஒனேசிமுவை அடிமையாக அல்ல, ஒரு “பிரியமான சகோதரனாக” (15-16) பிலேமோன் ஏற்றுக்கொள்ளும்படி பவுல் விரும்பினார். ஒனேசிமு இன்னும் பிலேமோனுடைய சொத்தாக இருந்தான், மற்றும் ஒனேசிமு தனது எஜமானிடம் திரும்புவதற்கான வழியை சுமூகமாக்குவதற்காக பவுல் எழுதினார். பவுல் அவரிடம் சாட்சி கொடுத்ததால், ஒநேசிமு ஒரு கிறிஸ்தவராக மாறினார் (1: 10).
மையக் கருத்து
மன்னிப்பு
பொருளடக்கம்
1. வாழ்த்துரை — 1:1-3
2. நன்றிகூறுதல் — 1:4-7
3. ஒனேசிமுவுக்காக மன்றாடுதல் — 1:8-22
4. இறுதி வார்த்தைகள் — 1:23-25