2 தெசலோனிக்கேயர்
ஆசிரியர்
1 தெசலோனிக்கேயரைப் போலவே இந்த கடிதமும் பவுல், சீலா தீமோத்தேயு ஆகியோரிடமிருந்து வந்தது. இந்த கடிதத்தின் எழுத்தாளர், பவுல் எழுதிய 1 தெசலோனிக்கேயர் மற்றும் பிற கடிதங்களில் உள்ள அதே எழுத்துநடையைப் பயன்படுத்துகிறார். பவுல் முக்கிய எழுத்தாளர் என்று இது காட்டுகிறது. சீலாவும் தீமோத்தேயும் வாழ்த்துக்களில் சேர்க்கப்படுகிறார்கள் (2 தெச 1: 1). பல வசனங்களில், நாங்கள் எழுதுகிறோம் என்ற வார்த்தைகள், மூன்று பேரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இறுதி வாழ்த்து மற்றும் ஜெபத்தை மட்டும் எழுதியதில் இருந்து பவுலின் கையெழுத்து அல்ல (2 தெச 3: 17). பவுல் இந்தக் கடிதத்தின் வார்த்தைகளை ஒருவேளை தீமோத்தேயுவிடமோ அல்லது சீலாவிடமோ கூறியிருக்கலாம்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி 51-52 க்கு இடையில் எழுதப்பட்டது.
1 தெசலோனிக்கேயர் எழுதியபோது இருந்த கொரிந்துவில் 2 தெசலோனிக்கேயர் நிருபத்தையும் பவுல் எழுதினார்.
யாருக்காக எழுதப்பட்டது
2 தெசலோனிக்கேயர் நிருபத்தின் உத்தேசிக்கப்பட்ட வாசகர்கள், தெசலோனிக்கேயர் சபையின் உறுப்பினர்கள் என 2 தெசலோனிக்கேயர் 1: 1 கூறுகிறது.
எழுதப்பட்ட நோக்கம்
கர்த்தருடைய நாள் பற்றிய உபதேசத்தில் இருந்த பிழைகளைச் சரிசெய்வதே இதன் நோக்கம் ஆகும். விசுவாசிகளை பாராட்டவும், விசுவாசத்தில் தங்களுடைய விடாமுயற்சியையும் ஊக்குவிப்பதற்காகவும், ஆண்டவரின் வருகையின் நாள் மிக விரைவிலேயே சம்பவிக்கும் என்று கடைசிக் காலத்தைக் குறித்து தங்களையே வஞ்சித்து, தங்கள் சொந்த ஆதாயத்திற்காக உபதேசத்தை கறைப்படுத்துபவர்களை கடிந்துகொள்வதற்காகவும் எழுதப்பட்டது.
மையக் கருத்து
நம்பிக்கையில் வாழ்தல்
பொருளடக்கம்
1. வாழ்த்துரை — 1:1, 2
2. துயரத்தில் ஆறுதல் — 1:3-12
3. கர்த்தரின் நாள் பற்றிய திருத்தம் — 2:1-12
4. அவர்களுடைய முடிவைக் குறித்து நினைவூட்டல் — 2:13-17
5. நடைமுறை விஷயங்களைப் பற்றி அறிவுரை — 3:1-15
6. இறுதி வாழ்த்துக்கள் — 3:16-18