பிலிப்பியருக்கு எழுதின நிருபம்
தலைப்பு:
பிலிப்பியர் என்ற தலைப்பு - கிரேக்க பட்டணத்தில் இருந்த எந்த சபைக்கு, இந்த நிருபம் எழுதப்பட்டதோ அதன் பெயரையே தலைப்பாக பெற்றுள்ளது. பிலிப்பு என்ற மக்கெதொனியா பட்டணத்தில் தான் பவுல் முதல் சபையை நிறுவினார்.
புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி
பிலிப்பியருக்கு அப்போஸ்தலர் பவுல் தான் நிருபத்தை எழுதினார் என்பது ஆதி திருச்சபையினரின் ஏகோபித்த சாட்சி. நிருபத்தில் இருக்கும் கருத்தில் எந்தவொரு கருத்தும் போலியான ஒருவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்கின்றன.
எப்பொழுது இந்த பிலிப்பியர் நிருபம் எழுதப்பட்டது என்பதையும் எங்கு இருந்து எழுதப்பட்டது என்பதையும் பிரிக்க முடியாது. பவுல் ரோமாபுரியில் சிறைச்சாலையில் இருந்து எழுதின இதர நிருபங்களைப் (எபேசியர், கொலோசியர், பிலேமோன்) போலவே, இந்த நிருபமும் சிறையில் இருந்த போது பவுல் எழுதினது என்பது பாரம்பரியமான கருத்து (கி.பி.60-62). அரண்மனையெங்குமுள்ளவர்கள் என 1:13-ல் குறிப்பிடுவதில் இருந்தும், பரிசுத்தவான்கள் விசேஷமாக இராயனுடைய அரண்மனையில் இருப்பவர்கள் என 4:22-ல் பவுல் குறிப்பிடுவதில் இருந்தும் ரோமாபுரி – ராஜாக்கள் வாழ்ந்த இடத்தில் இருந்து இந்நிருபத்தை பவுல் எழுதினார் என அறிகிறோம். அப்போஸ்தலர் நடபடிகள் மற்றும் இதர சிறைச்சாலையிலிருந்து எழுதப்பட்ட நிருபங்களில் பவுல் சிறைபிடிக்கப்பட்டிருந்ததின் விபரம் எவ்வாறு விவரிக்கப்பட்டிருக்கிறதோ, அவைகளுடனான ஒற்றுமை இந்த நிருபம் ரோமாபுரியில் இருந்து எழுதப்பட்டது என்பதை நிரூபிக்கின்றது (உதாரணமாக, பவுலை சேனைவீரர்கள் காவல் காத்துவந்தனர் (அப்.28:16; 1:13-14); பவுலை பார்வையாளர்கள் வந்து சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது (அப்.28-30; 4:18) மற்றும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க சந்தர்ப்பம் பவுலுக்கு அளிக்கப்பட்டிருந்தது (அப்.28:31; 1:12-14; எபே.6:18-20; கொலோ.4:2-4).
சிசெரியா பட்டணத்தில் பவுல் இரண்டு வருடம் சிறை வைக்கப்பட்டிருந்த போது இந்த நிருபத்தை எழுதியிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர் (அப்.24:27). ஆனால், சிறைச்சாலையில் இருந்தபோது பார்வையாளர்களை சந்திக்க சந்தர்ப்பங்கள் குறைவாகவும், சுவிசேஷத்தை அறிவிக்க வாய்ப்புகள் மிக குறுகினதாகவும் இருந்தன (அப்.23:35). இந்த சிறைச்சாலை நிருபம் நல்ல தீர்ப்பு ஒன்று வர பவுல் நம்பிக்கையோடு இருந்ததை குறிப்பிடுகிறது (1:25; 2:24; பிலேமோன் 22). சிசெரியாவில் விடுதலையாக்கப்பட பவுலுக்கு முன்நின்றது - ஃபெலிக்ஸுக்கு கையூட்டு அளிப்ப்பது ஒருவழியாகவும் அல்லது பெஸ்துவின் விசாரணைக்கு எருசலேம் செல்லுதலும் ஒரு வழியாக இருந்தது (அப்.25:9). சிறைச்சாலையில் இருந்து எழுதப்பட்ட இந்த நிருபங்களில் அவனுடைய விசாரணைக்கு இறுதி தீர்ப்புக்காக காத்திருப்பதாக எழுதுகிறார், அது சிசெரியாவில் நிறைவேறியது, பவுல் இராயனுக்கு அபயமிட்டார். கொலோசேயர் நிருபத்தை பவுல் எழுதும்போது லூக்காவும் உடன் இருந்தார் (கொலோ.4:14). ஆனால், எபேசுவில் அப்போஸ்தலர் பவுலுடன் லூக்கா இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. எபெசுவில் பவுல் இருந்த நாட்களை அப்போஸ்தலர் நடபடிகள் 19-ஆம் அதிகாரம் பதிவுசெய்கிறது, ஆனால் அது “நாங்கள்” என்று எழுதப்படவில்லை என்பதை கவனியுங்கள். சிறையில் இருந்து எழுதப்பட்ட கடிதங்கள் எபேசுவில் இருந்து எழுதப்பட்டவை என்பதற்கு எதிராக வைக்கப்படும் கருத்து பவுல் எபேசு பட்டணத்தில் சிறை வைக்கப்பட்டதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பதே. சிசெரியாவில் இருந்து எழுதப்பட்டது அல்லது எபேசுவில் இருந்து எழுதப்பட்டது என்பதை நிரூபிப்பதற்கு கடினமானதாக இருக்கின்றபடியால் ரோமாபுரியில் இருந்தே சிறைச்சாலை நிருபங்கள் எழுதப்பட்டன – பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தையும் உள்ளடக்கி - என்ற பாரம்பரிய கருத்தை இறுதியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். ”என் காரியங்கள் இன்னபடி நடக்கும் - அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேனென்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன்” என்று பிலி.2:23,24-ல் பவுல் எழுதுவதில் இருந்து பிலிப்பியர் நிருபம் ரோம சிறையிருப்பின் இரண்டு ஆண்டுகள் முடிவடையும் தருவாயில் கி.பி 61-ல் பவுல் எழுதினார் என்ற முடிவிற்கும் வரலாம்.
பின்னணி மற்றும் அமைப்பு
அதிக எண்ணிக்கையில் நீரூற்றுக்கள் அருகில் இருந்ததால், ஆரம்ப காலத்தில் க்ரெனிதேஸ் (சிறிய நீரூற்றுக்கள்) என்றே பிலிப்பு பட்டணம் அழைக்கப்பட்டது. மக்கொதொனியாவை சேர்ந்த மகாசக்ரவர்த்தி அலெக்சாந்தரின் தகப்பனார் இரண்டாம் பிலிப்புவின் பெயரால் இப்பட்டணம் பின்நாட்களில் அழைக்கப்பட்டது. இதன் அருகில் இருந்த தங்க சுரங்கங்களால் கவரப்பட்டு இப்பட்டணத்தை கிபி நான்காம் நூற்றாண்டில் கைப்பற்றினர். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் மக்கொதொனியாவின் ரோம சாம்ராஜ்யத்தின் ஒருபகுதியாக பிலிப்பு பட்டணம் மாறியது. இந்த பட்டணத்தினை அங்கீகரிக்கும் மற்றும் விரிவாக்கும் சில சம்பவங்கள் நிகழும்வரை, அடுத்த இரண்டு நூற்றாண்டுகள் மட்டும், பட்டணம் மிகவும் தெளிவில்லாமல் இருந்தது. கி.பி.42-ல் அந்தோணி மற்றும் ஆக்டேவின படைகள் பிலிப்பு யுத்தத்தில் புரூட்டஸ் மற்றும் காசியஸ் படைகளை மேற்கொண்டன. இந்த யுத்தத்தினால் ரோம குடியரசு முடிவிற்கு வந்து ரோம பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. பிலிப்புவில் ரோம படையின் மூத்தவீரர்கள் பலர் குடியேறியதால் ரோம குடியேற்ற பட்டணமாக பிலிப்பு மாறியது (அப்.16:12). குடியேற்றபட்டணமானதால், பிலிப்பு பட்டணம் இத்தாலி பட்டணத்திற்கு வழங்கியிருந்தது போல தன்னாட்சி உரிமை அளிக்கப்பட்டிருந்தது. ரோம குடியுரிமை, ரோம சட்டங்கள் சிலவற்றுக்கு, வரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்ட பகுதியாக பிலிப்பு பட்டணம் இருந்தது. குடியேற்றப் பட்டணமானது பிலிப்புவாசிகளுக்கு பெருமைகொள்ள ஏதுவுண்டாக்கியது. மேலும், லத்தீன் மொழியை அலுவலக மொழியாக பயன்படுத்தினர், ரோம பழக்க வழக்கங்களை பின்பற்றினர். மேலும் அவர்களது அரசாங்கத்தை இத்தாலி பட்டண அரசாங்காங்களைப் மாதிரியாக வைத்து அமைத்துக் கொண்டனர். அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகமும் பிலிப்பியர் நிருபமும் ரோம குடியேற்ற பட்டணமாக பிலிப்பு இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டு பிரதிபலிக்கின்றன.
கிறிஸ்தவர்கள் பரலோகத்தின் குடிமக்கள் என்று 3:20ல் குறிப்பிடுவது சரியானதே, ஏனென்றால் பிலிப்பியர் தாங்கள் ரோம ராஜ்ய குடிமக்கள் என்பதில் பெருமை கொண்டிருந்தனர் (அப்.16:21). பிலிப்பு பட்டணத்தாருக்கு அரண்மனையில் இருப்போர் சிலரையும் (1:13) இராயனுடைய அரண்மனையில் உள்ளவர்களையும் (4:22) தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பவுலினால் முதன்முதலில் ஸ்தாபிக்கப்பட்ட சபை பிலிப்பு சபை; அப்போஸ்தலரின் இரண்டாம் மிஷனரி பயண காலநாட்களில் ஸ்தாபிக்கப்பட்டு (அப்.16:12-40) இருக்கிறது. பிலிப்பு பட்டணத்தில் சிறிய எண்ணிக்கையில் யூத ஜனங்கள் இருந்தனர் என்பது தெளிவாக தெரிகிறது. சிற்றாலயம் தொடங்க தேவையான போதுமான எண்ணிக்கையில் ஆண்களின் எண்ணிக்கை கூட இல்லை (10 யூத குடும்ப தலைவர்கள் தேவை) எனத் தெரிகிறது. சில வைராக்கிய வாஞ்சையுடைய பெண்கள் ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற ஓரிடத்தில் காங்கிடஸ் ஆற்றின் கரையில் கூடிவந்தனர் (அப்.16:13). பவுல் அவர்களுக்கும் இராத்தாம்பிரம் விற்கும் லீதியாள் என்னும் பெண்ணுக்கும் உபதேசித்து வந்தார் (அப்.16:14). அவள் விசுவாசி ஆனபடியால் அவளுடைய விஸ்தீரமான வீட்டில் முதல் பிலிப்பு சபை கூடியிருக்க வேண்டும். புதிய சபைக்கு சாத்தானின் எதிர்ப்பு உடனடியாக குறிசொல்லும் ஆவி பிடியில் இருந்த பெண் வடிவில் எழும்பியது (அப்.16:16,17). ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியாக அது இருந்தாலும், அதுபொல்லாத ஆவியினிடத்தில் இருந்து வருவதை பவுல் விரும்பவில்லை; “ நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்று அந்த ஆவியுடனே பவுல் சொன்னார்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று (அப்.16:18). அவளுடைய எஜமான்கள் அவர்களது ஆதாயம் அற்றுப்போனதால் (அப்.16:19) பவுலையும் சீலாவையும் அதிகாரிகளிடத்தில் கொண்டு சென்றார்கள். அங்கே பிலிப்பியர்கள்- தாங்கள் ரோமகுடிமக்கள் என்ற பெருமை கொண்டிருந்த – பெருமைக்கு விரோதமாக பேசுகிறார்கள் என குற்றம் சாட்டி கோபத்தை தூண்டிவிட்டனர் (அப்.16:20,21). இதன் விளைவாக, அதிகாரிகள் பவுல், சீலா இருவரையும் அடித்து பின் சிறையில் போட்டார்கள் (அப். 16:22-24). இந்த இரண்டு தேவ ஊழியர்களும் அற்புதமாக சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விடுவிக்கப்பட்ட போது, அங்கிருந்த சிறைச்சாலை அதிகாரி பதற்றமடைந்தவர்; பின்னர் தன் இருதயத்தை சுவிசேஷத்திற்கு திறந்து கொடுத்து, அவரும் அவர் வீட்டாரும் இரட்சிக்கப்பட்டனர் (அப்.16:25-34). நேற்றைய தினத்தில் ரோம குடிமக்கள் இருவரை சட்டத்திற்கு புறம்பாக, அடித்து சிறையிலிட்டு துன்புறுத்தினோம் என்று அறிய வந்த அதிகாரிகள் பிலிப்பு பட்டணத்தை விட்டு பவுலும் சீலாவையும் உடனே புறப்பட்டு போங்கள் எனக் கெஞ்சினர்.
பவுல் தமது மூன்றாம் மிஷனரி பயணத்தின் ஆரம்ப நாட்களிலும் (2கொரி.8:1-15) பயணத்தின் இறுதி நாட்களிலும் பிலிப்பு பட்டணத்திற்கு விஜயம் செய்தார் (அப்.20:6) என அறிகிறோம். பிலிப்பு பட்டணத்திற்கு கடைசியாக பவுல் வந்து சென்ற நாட்களுக்கு பின் 4 அல்லது 5 வருடங்கள் கழித்து, ரோமாபுரியில் சிறைகைதியாக இருந்த போது பிலிப்பு பட்டணத்தில் இருந்து வந்த ஒரு குழுவை பவுல் சந்திக்கிறார். பிலிப்பு பட்டணத்தின் சபை உதாரத்துவமான காணிக்கையினால் பவுலின் தேவைகளை சந்தித்தது எருசலேமில் இருந்த தேவையுற்றோருக்கும் பரிபூரணமாக தேவைகளை சந்தித்தது (2கொரி.8:1-14). இப்பொழுது சிறையில் பவுல் இருக்கிறார் என கேள்விப்பட்டபோது, மேலும் அவருக்கு பங்களிப்பினை பிலிப்பு சபை அனுப்பியது (4:10), அத்துடன் எப்பாபிராதீத்துவையும் பவுலுக்கு சேவை செய்யும்படிக்கு அனுப்பியது. துரதிஷ்டவசமாக, எப்பாபிராதீத்து ரோமாபுரிக்கு வரும் கடல்பயணத்தின் போதோ அல்லது ரோமாபுரிக்கு வந்து சேர்ந்த பிறகோ சாவுக்கேதுவான வியாதிப்பட்டார். அதினால், பவுல் எப்பாபிரதீத்துவை பிலிப்புவிற்கு (2:25,26) திரும்ப அனுப்பிவிட தீர்மானித்தார். அப்பொழுது பிலிப்பியருக்கு எழுதின இந்த நிருபத்தை எப்பாபிரதீத்துவிடம் கொடுத்து அனுப்புகிறார். பவுல் இந்த நிருபத்தை எழுதுவதற்கு அனேக காரணங்கள் இருந்தது. முதலில், பிலிப்பியர் அனுப்பின கொடைகளுக்காக அவர் எழுத்துப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்பினார் (4:10-18). இரண்டாவது, அவர் எப்பாபிரதீத்துவை திரும்ப அனுப்பினது எப்பாபிரதீத்து பவுலுக்கு செய்த சேவையில் அதிருப்தி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது (2:25,26) என்பதினால், எப்பாபிரதீத்து அவர்களிடம் ஏன் திருப்பி அனுப்பினார் என்பதை அறிந்துகொள்ள எழுதினார். மூன்றாவது, ரோமாபுரியில் அவருடைய சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிவிக்க எழுதினார். நான்காவது, அவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என புத்திசொல்ல எழுதினார் (2:1,2; 4:2). இறுதியாக, கள்ள போதகர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று எச்சரிக்க - பவுல் இந்த நிருபத்தை எழுதினார் (3:1-4:1).
வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்
இந்த நிருபம் நடைமுறையில் பயன்படக்கூடிய நிருபம், பிலிப்பியர் நிருபத்தில் சிறிதளவே வரலாற்று கருப்பொருள் இருக்கின்றது. (3:4-7-ல் பவுலின் ஆவிக்குரிய சுயசரிதை சொல்லப்பட்டிருப்பதை தவிர, பழைய ஏற்பாட்டில் இருந்து எந்தவொரு மேற்கோளும் சொல்லப்படவில்லை). ஒரே ஒரு விதிவிலக்கை தவிர, இறையியல் கருப்பொருள் அறிவுறுத்தல்கள் ஏதும் இந்நிருபத்தில் இல்லை. முழுவேதாகமத்தில் வேறு எங்கும் காணமுடியாத, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய, ஆழமான மற்றும் முக்கியமான சத்தியம் 2:5-11 வசனங்களில் இருக்கின்றது.
உங்கள் பார்வைக்கு இங்கு எடுத்து எழுதியுள்ளோம்.
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார் (பிலிப்பியர்2 : 5-11).
கிறிஸ்துவைப் போலாகுங்கள் என்பது ஆவிக்குரிய வளர்ச்சியின் அம்சம் என்பது ஒரு கருப்பொருள், பவுல் அவருடைய வாழ்க்கையிலேயே மிகவும் விரும்பின கருப்பொருள் – வசனம் 3:12-14ல் காணப்படுகிறது. பவுல் சிறைச்சாலையில் இருந்த போதிலும், இந்த நிருபத்தின் மொத்த சத்தமும் மகிழ்வானதாகவே காணப்படுகிறது (1:4,18,25,26; 2:2,16-18,28; 3:1,2; 4:1,4,10).
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்
பிலிப்பியர் நிருபத்தை பொறுத்தவரை, விளக்கம் அளிப்பதில் உள்ள சவால் - எந்த இடத்தில் இருந்து இந்த நிருபம் எழுதப்பட்டது என்பதே; (புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி பகுதியைக் காண்க); ”கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞர்” என 3:18,19-ல் நாம் காணும் பகுதி, யாரை அடையாளப்படுத்துகிறது என்பதே வசனங்களில் விளக்கமளிப்பதில் இருக்கும் - ஒரே ஒரு சவால்.
சுருக்கம்
I. பவுலின் வாழ்த்துதல் (1:1-11)
II. பவுலின் சூழ்நிலைகள் (1:12-26)
III. பவுலின் உபதேசங்கள் (1:27-2:18)
அ. ஆக்கினைதீர்ப்பின் மத்தியிலு உறுதியாக நிற்றல் (1:27-30)
ஆ. தாழ்மையினால் ஒன்று சேர்ந்து இருத்தல் (2:1-4)
இ. கிறிஸ்துவின் முன்மாதிரிய நினைவுகூருதல் (2:5-11)
ஈ. இருள் நிறைந்த உலகில் வெளிச்சமாக இருத்தல் (2:12-18)
IV. பவுலின் உடன் ஊழியர்கள் (2:19-30)
அ. தீமோத்தேயு (2:19-24)
ஆ. எப்பாபிராதீத்து (2:25-30)
V. பவுலின் எச்சரிப்புக்கள் (3:1-4:1)
அ. சட்டவாதங்களுக்கு விரோதமான எச்சரிப்பு (3:1-16)
ஆ. நியாயப்பிரமாணம் இல்லாதிருத்தலுக்கு விரோதமாக (3:17-4:1)
VI. பவுலின் நம்பகமான கண்டிப்பு (4:2–9)
VII. பவுல் நன்றி நிறைந்து இருத்தல் (4:10 – 20)
VIII. பவுல் வாழ்த்துதல் சொல்லி வழியனுப்புதல் (5:21-23; 6:10-13)