வேதாகம வரலாறுகள்

எபேசியருக்கு எழுதின  நிருபம்

தலைப்பு: 

இந்த நிருபம் ஆசியா கண்டத்தில் ரோம பேரரசின் கீழ் இருந்த எபேசு பட்டணத்தில் இருந்த சபைக்கு எழுதப்பட்டது (சின்ன ஆசியா, தற்கால துருக்கி தேசம்). ஆரம்ப கால கையெழுத்து பிரதிகளில் எபேசு என்ற பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. சில அறிஞர்கள் இந்த நிருபம் களஞ்சியமாக, ஆசியா கண்டத்தில் இருக்கும் அனைத்து சபைகளுக்கும் சுழற்சிமுறையில் அனுப்பபட்டு வாசிக்கப்படது என நம்புகின்றனர். அதில் எபேசுவில் இருந்த விசுவாசிகளுக்கு முதலில் அனுப்பப்பட்டது. 

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி 

பவுல் தான் இந்த நிருபத்தை எழுதினாரா என்று கேள்வி கேட்க எந்தவொரு காரணமும் இல்லை! அவர் தான் இந்நிருபத்தை எழுதினவர் என்பது ஆரம்ப வரிகளில் இருந்தே சுட்டிக்காட்டப்படுகிறது (1:1; 3:1). ரோம சிறைச்சாலையில் இருந்து கி.பி 60-62 நாட்களில் இந்த நிருபம் எழுதப்பட்டது (அப்.28:16-31). இதினால் சிறைச்சாலையில் இருந்து எழுதப்பட்ட நிருபங்கள் என அழைக்கப்படும் பிலிப்பியர், கொலோசேயர் மற்றும் பிலேமோன் ஆகிய நிருபங்களுடன் இதுவும் சேர்ந்து கொள்கிறது. கொலோசேயருக்கு எழுதின நிருபத்தின் சமகாலத்து நிருபம் இது, அத்துடன் பிலேமோன் நிருபத்துடன் தீகிக்கு கரங்களில் கொடுத்து அனுப்பபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது (எபே. 6:21, 22; கொலோ.4:7,8).

பின்னணி மற்றும் அமைப்பு

பவுல் தனது இரண்டாவது மிஷனரி பயணத்தின் போது எபேசுவில் விட்டு வந்திருந்த – விதிவிலக்கான வரங்களைப் பெற்றிருந்த ஆக்கிலா மற்றும் பிரிஸ்கில்லா தம்பதியினர்தான் (அப்.18:26 பார்க்க) எபேசு பட்டணத்திற்கு முதலில் சுவிசேஷத்தைக் கொண்டு வந்திருக்கலாம். காயிஸ்டர் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது எபேசுபட்டணம்; ஏஜியன் கடலின் கிழக்கு பகுதியில் பழங்கால ஏழு அதியங்களில் ஒன்றான அற்புதமான ஆர்டெமிஸ் அல்லது டயானா கோயில் இருந்ததால், பிரபலமானதாக இருந்தது. இது அரசியல், கல்வி மற்றும் வர்த்தகத்திற்கு முக்கியமான பட்டணமாக, எகிப்தில் இருந்த அலெக்சாந்திரியா பட்டணத்திற்கும் சின்ன ஆசியாவின் தென்பகுதிகளான பெஸ்தியாவின் அந்தியோகியா பட்டணத்திற்கும்  இணையானதாக இருந்தது. அனுபவமற்றவர்களான ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாளால் ஆரம்பிக்கப்பட்ட சபை, பின்னர் பவுலின் முன்றாம் மிஷனரி பயணத்தினால் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது (அப்.19); இதன் போதகராக 3 வருடங்கள் பவுல் பணியாற்றினார். பவுல் புறப்பட்டுச் சென்றபின் தீமோத்தேயு சபை மக்களுக்கு போதகராக எறக்குறைய ஒன்றரை வருடம் பணியாற்றி, மிகவும் செல்வாக்கு படைத்தவர்களாக இருந்த இமெனே, அலெக்சந்தர்  (இவர்கள் சபையில் மூப்பர்களாக இருந்திருக்க கூடும்) அவர்களின் கள்ள உபதேசங்களுக்கு பதிலளித்து வந்தார் (1தீமோ.1:3,20). இந்த மனிதர்களால் எபேசு சபையில் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளும் முடிவில்லாத வம்சவரலாறுகளும் நிறைந்திருந்தது (1தீமோ.1:4). உதாரணமாக, திருமணத்தை தடைசெய்தல்,  போஜன பதார்த்தங்களை விலக்குதல் (1தீமோ.4:3) போன்றவை வேதத்திற்கு புறம்பானவைகள். இந்த கள்ள உபதேசிகள் வேதவாக்கியங்களை சரியாக புரிந்துகொள்ளாது இருந்தது மட்டுமல்ல, அவர்களது தெய்வபக்தியற்ற விளக்கங்களை நம்பிக்கையுடன் முன்வைத்தனர் (1தீமோ.1:7). விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், சபையில் தர்க்கங்களுக்கு வழி உண்டாக்கியது (1தீமோ.1:4). ஏறக்குறைய முப்பது வருடங்களுக்குபின், அப்போஸ்தலர் யோவான் மூலமாக இயேசு – எபேசு சபைக்கு நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்கு குறை உண்டு என நிருபம் தந்து அனுப்புகிறார் (வெளி.2:1-7).

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

முதல் மூன்று அதிகாரங்கள் புதிய ஏற்பாட்டு உபதேசங்களை வலியுறுத்தும் இறையியல் தொடர்புடைய கருத்துக்கள் அடங்கியவை. கடைசி மூன்று அதிகாரங்கள் நடைமுறையில் அப்பியாசிக்ககூடியவை – அதிகமாக கிறிஸ்தவ குணாதிசயத்தில் கருத்து செலுத்துகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நிருபம் உற்சாகப்படுத்துவதும், விசுவாசிகளுக்கு கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் அளவில்லாத ஆசீர்வாதங்களை இருப்பதனை எடுத்துக்காட்டி, அந்த ஆசீர்வாதங்களுக்கு நன்றியுள்ளவர்களாக மட்டுமல்ல, அவைகளுக்கு தகுதியாகவும் வாழ அறிவுரை கூறுவதுமாக இருக்கிறது. இருந்தாலும், கிறிஸ்து இயேசுவுக்குள் அளவில்லாத ஆசீர்வாதங்கள் இருக்கின்ற காரணத்திற்காக, விசுவாசியை சாத்தான் சுயநிறைவு மற்றும் மனநிறைவு அடையும்படிக்கு நிச்சயமாக சோதிப்பான். இந்த காரணத்தினால்தான், கடைசி அதிகாரத்தில், தேவனுடைய வார்த்தையினாலும், அவருடைய ஆவியினாலும் இந்த ஆவிக்குரிய யுத்தத்தை மேற்கொள்ள எதிர்க்க போதுமான ஆயுதங்கள் விசுவாசிக்கு அளிக்கப்ட்டுள்ளது என்பதை நினைவுபடுத்துகிறார் (6:10-17). மேலும், எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி விழிப்புடன் காத்திருக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்கிறார் (6:18).

இந்த நிருபத்தின் கருப்பொருளில் திறவுகோலான விஷயம் – சபையின் ”இரகசியம்” (பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கு மறைக்கப்பட்டதாக இருந்த, வெளிப்படாத சத்தியம் (3:5,9) – அதுஎன்னவென்றால்,  சரீரமாகிய சபையில் புறஜாதியாரும் கிறிஸ்து இயேசுவின் மூலமாக  வாக்குத்தத்தம் பண்ணப்பட்டபடி உடன் சுதந்திரராக ஆகியிருக்கிறார்கள் என்பதே (3:6). மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் அனைத்து விசுவாசிகளும் கர்த்தருக்கு முன்பதாக அவருடைய பிள்ளைகள், அவருடைய நித்திய இராஜ்யத்தின் குடிமக்களாக சமமாக இருக்கின்றனர் – இது தற்கால விசுவாசிகள் மட்டும் பெற்றிருக்கும் அற்புதமான சிலாக்கியம்.  சபை கிறிஸ்துவின் மணவாட்டி என்ற இரகசியத்தை குறித்தும் பவுல் பேசுகிறார் (5:32; வெளி.21:9).

தேவனுடைய ஜனங்களை குறித்து முன்ஒருபோதும் வெளிப்படுத்தப்பட்டாத சத்தியம் தற்காலத்தில் கிறிஸ்துவின் ஆவிக்குரிய, பூமிக்குரிய சரீரமாக சபை இருக்கின்றது என்பது. இந்த உருவகம் சபையை ஒரு நிறுவனமாக அல்ல, தனக்குள் ஒன்றுக்கொன்று இணைப்பை பெற்றிருக்கும் அங்கமாக - ஜீவிக்கும் ஒரு சரீரம் – என சித்தரிக்கிறது. கிறிஸ்துவே இந்த சரீரத்தின் தலையாக இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் இதன் இரத்த ஓட்டமாக இருக்கின்றார். இந்த சரீரமாகிய சபை அதன் அங்கத்தினராகிய ஒவ்வொரு விசுவாசிக்கும் -பரிசுத்த ஆவியானவர்- இறையாண்மையுடனும் தனிசிறப்புடனும் அளிக்கும் பலவித ஆவிக்குரிய வரங்களை உறுதியுடன் எடுத்துப் பயன்படுத்துவதினால் செயல்படுகிறது. 

இந்நிருபத்தில் காணப்படும் ஏனைய மிகப்பெரிய கருப்பொருட்கள்- விசுவாசிகளுக்கு இருக்கும் செழிப்பான மற்றும் பூரணமான ஆசீர்வாதங்கள்: தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தை குறித்து பவுல் 1:7-ல் எழுதுகிறார்; 3:8-ல் கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியம் எனவும், 3:19-ல் அவர் தமது மகிமையின் ஐசுவரியத்தின்படியே எனவும் எழுதுகிறார்; 3:19-ல் தேவனுடைய சகல பரிபூரணத்தால் நிறையுங்கள் என வேண்டிக்கொள்கிறேன் என கேட்டுக்கொள்கிறார்; தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும் வரைக்கும் பரிபூரணத்தால் நிறையவேண்டும் என வேண்டிக் கொள்கிறார் (4:13); 5:18-ல் ஆவியினால் நிறையுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறார்; கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள் பெற்றிருக்கிற ஐசுவரியம், அவருடைய கிருபையை அடிப்படையாகக் கொண்டது (1:2,5,7;2:7). அவருடைய சமாதானம் (1:2), அவருடைய சித்தம் (1:5); அவருடைய தயவுள்ள சித்தம் (1:9); அவருடைய மகிமையை (1:12,14) குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.  1:18-ல் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும் அறிந்து கொள்ள வேண்டும் என எழுதுகிறார். அவருடைய வல்லமை மற்றும் வலிமை (1:19;4:10), அவருடைய அன்பு (2:4), அவருடைய செய்கைகள் (2:10), அவருடைய பரிசுத்த ஆவியானவர் (3:16), அவருடைய காணிக்கை மற்றும் பலி (5:2), அவருடைய சர்வாயுதவர்க்கம் (6:11,13) குறித்து அறிந்திருக்க வேண்டும் என எழுதுகிறார்.  ஐசுவரியம் என்ற வார்த்தை இந்த நிருபத்தில் 5 முறை, கிருபை 12 முறை, மகிமை 8 முறை, நிறைவு அல்லது நிறைந்து என 6 முறை பயன்பட்டிருக்கிறது திறவுகோலான வார்த்தை “கிறிஸ்துவுக்குள்” (அல்லது அவருக்குள்) என்பது 12 முறை பயன்பட்டுள்ளன. 

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

எபேசியருக்கு எழுதின நிருபத்தின் இறையியல் நேரடியாக, நேரடிபொருள் கொண்டதாக இருக்கின்றது. தீவிரமான எதிர்மறை கருத்து கொண்டதாக எந்தவொரு கருத்தோ விளக்கமோ இந்த நிருபத்தில் இல்லை. ஆனாலும் சில வரிகளுக்கு நாம் கவனமாக விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் உதாரணமாக, 1) 2:8 வசனத்தில் ஒருவர் இரட்சிப்பா அல்லது விசுவாசமா எதனை பரிசாக நாம் பெற்றுக்கொள்கிறோம் எனத் தீர்மானிக்க வேண்டியவராக இருக்கின்றார். 2) 4:5-ஆம் வசனத்தில் ஞானஸ்நானத்தின் வகை அறியப்பட வேண்டும் மற்றும் 3) சங்கீதம் 68:18-க்கும், எபேசியர் 4:8-க்கும் உள்ள தொடர்பினை சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.

சுருக்கம்           

I. வணக்கம் தெரிவித்தல் (1:1,2)

II. சபையை குறித்த தேவனுடைய நோக்கம் (1:3:1 - 3:13)

 அ. கிறிஸ்துவுக்குள் நித்திய வாழ்விற்கென்று நியமிக்கப்பட்டுள்ள வாழ்வு (1:3-6)

 ஆ. கிறிஸ்துவுக்குள் இருக்கும் மீட்பு (1:6 -10)

 இ. கிறிஸ்துவுக்குள் இருக்கும் பாரம்பரிய சுதந்திரம் (1:11-14)

 ஈ. கிறிஸ்துவுக்குள் இருக்கும் வளங்கள் (1:15-23)

 உ. கிறிஸ்துவுக்குள் புதுவாழ்வு (2:1-10)

 ஊ. கிறிஸ்துவுக்குள் ஒற்றுமை (2:11-3:13)

III. சபையில் தேவனுடைய முழுநிறைவு (3:14-21) 

IV. சபைக்குள் விசுவாசத்தில் வாழ்வதற்கான தேவனுடைய திட்டம் (4:1-6)

V. தேவனுடைய குமாரன் கொடையாக அளித்து சபையை கட்டுதல் (4:7-16)

VI. சபையின் அங்கத்தினர்கள் பின்பற்ற தேவனுடைய மாதிரி மற்றும் கொள்கைகள் (4:17-32)

VII. சபையில் பற்றுறுதியாக இருப்பதற்கு தேவனுடைய தரநிலைகள் (5:1-21)

 அ. அன்பில் நடந்து கொள்ளுதல் (5:1-7)

 ஆ. வெளிச்சத்தில் வாழ்தல் (5:8-14)

 இ. ஞானத்துடனும் தெளிந்த புத்தியுடனும் நடந்து கொள்ளுதல் (5:15-18a)

 ஈ. தேவனுடைய ஆவியினால் நிறைந்திருத்தல் (5:18 பின்பாகம் -21)

VIII. சபையின் அதிகாரம் மற்றும் கீழ்ப்படிந்திருத்தலுக்கான தேவனுடைய தரநிலை (5:22 – 6:9)

IX. ஆவிக்குரிய யுத்தங்களை மேற்கொள்ள தேவன் அளித்திருக்கும் ஆயுதங்கள் (6:10-17)

அ. விசுவாசியின் எதிர்நோக்கும் யுத்தம் (6:10-13)

ஆ. விசுவாசியின் ஆயுதங்கள் (6:14-17)

X. சபையில் ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டி கேட்டுக்கொள்ளுதல் (6:18-20)

XI. வாழ்த்துதல் (6:21-24) 

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.