வேதாகம வரலாறுகள்

கொரிந்தியருக்கு எழுதின இரண்டாம் நிருபம்

தலைப்பு: 

இது கொரிந்து பட்டணத்தில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு – பவுல் எழுதின இரண்டாம் நிருபம். (மேலும் விபரங்களுக்கு, 1கொரிந்தியர் புத்தக அறிமுகத்தை காணவும்).

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி 

அப்போஸ்தலர் பவுல் தான் இந்த இரண்டாம் நிருபத்தை எழுதினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படி தனிநபருக்குரிய, சுயசரிதையாக எழுதுவது பவுலால் தான் முடியும் என்பதால் இவரை விமர்சிக்கும் ஆராய்ச்சியாளர்கள் கூட பவுல் தான் இந்த நிருபத்தை எழுதினார் என உறுதி செய்கின்றனர். 

அனேக கருத்துக்கள் அலசிஆராயப்பட்டு இந்த நிருபம் எழுதப்பட்ட காலம் இதுதான் எனக் குறித்துள்ளனர். ஏகாதிபத்திய அதிகாரம் கொண்ட கல்லியோன் (அப். 18:12) அதிபதியாக பொறுப்பேற்றது கி.பி.51 ஜூலை ஆக இருக்கலாம் என்று வேதாகமத்திற்கு .வெளியில் இருந்து வரும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கொரிந்து பட்டணத்தில் பவுலை கல்லியோன் விசாரித்தல் அவன் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடனே சம்பவித்தது (அப்.18:12-17). கொரிந்துவை விட்டு சிரியா தேசத்திற்கு (தோராயமாக கி.பி.52) கடற்பிரயாணம் மேற்கொண்டு (அப்.18:18) தனது இரண்டாவது மிஷனரி பயணத்தை பவுல் முடித்துக் கொண்டார். தமது மூன்றவது மிஷனரி பயணத்தில் எபேசு பட்டணத்திற்கு (தோராயமாக கி.பி.52 ஆம் ஆண்டு) திரும்பினார். அங்கு ஏறக்குறைய 2½ வருடம் ஊழியம் செய்தார். எபேசுவில் இருந்து முதல் கொரிந்தியர் நிருபத்தை அங்கிருந்த காலத்தின் முடிவுநாட்களில் எழுதினார் (1கொரி.16:8), அது ஏறக்குறைய கி.பி.55 ஆம் ஆண்டு காலமாக இருந்திருக்கும். எபேசு பட்டணத்தை விட்டு அவர் புறப்பட்ட பின் கொரிந்தியர் இரண்டாவது நிருபத்தை அவர் எழுதினார் என்பதை வைத்துப் பார்க்கும் போது, இரண்டாவது கொரிந்தியர் நிருபம் எழுதப்பட்ட காலம் கி.பி. 56 ஆக  இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. 

பின்னணி மற்றும் அமைப்பு

முக்கிய வர்த்தக நகரமான கொரிந்து பட்டணத்துடன் பவுலின் தொடர்பு அவருடைய இரண்டாவது மிஷனரி பயணத்தின் போது நடைபெற்றது (அப்.18:1-18), அங்கு 18 மாதங்கள் ஊழியம் செய்தார் (அப். 18:11). கொரிந்து பட்டணத்தை விட்டு புறப்பட்டபின், பவுல் கொரிந்து பட்டணத்தில் காணப்பட்ட ஒழுக்ககேட்டினை கேள்விப்பட்டு, அந்த பாவத்தை எதிர்கொள்ள கொரிந்து பட்டணத்தாரைக் கேட்டு 1கொரி.5:9-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிருபத்தை எழுதினார்; அந்த நிருபம் தொலைந்து விட்டது. அவர் எபேசுவில் ஊழியம் செய்து கொண்டிருந்த போது, கொரிந்து சபையில் பிரிவினைகள் ஏற்பட்டு பிரச்சினை தோன்றியிருக்கிறது என கேள்விப்பட்டார் (1கொரி.1:11). உடன், கொரிந்து பட்டணத்தார் பவுலுக்கு ஒரு நிருபத்தை சில விளக்கங்கள் கேட்டு எழுதினர். பவுல் அந்த நிருபத்திற்கு பதில் அளிக்கும் வண்ணமாக கொரிந்தியர் முதலாம் நிருபத்தை எழுதினார். எபேசுவில் இன்னும் சில காலம் இருக்கலாம் என பவுலுக்கு தோன்றினபடியால் (1கொரி.16:8,9) தீமோத்தேயுவை கொரிந்து பட்டணத்திற்கு அனுப்பினார் (1கொரி.4:17; 16:10,11). அப்போஸ்தலர் பவுலுக்கு இன்னும் அதிக மனவருத்தத்தை அளிக்ககூடிய தங்கள் சுயத்தில் செயல்படும் சில கள்ள அப்போஸ்தலர்கள் கொரிந்து பட்டணத்தில் தோன்றியுள்ளனர் என்ற செய்தி – ஒருவேள தீமோத்தேயுவின் மூலமாக வந்து சேர்ந்திருக்கும்.  

அவர்களின் கள்ள உபதேசத்தை போதிக்க வழி ஏற்படுத்தும்படிக்கு, கள்ள- அப்போஸ்தலர்கள் பவுலின் நற்குணத்தை சீர்கெடச் செய்தனர். பிசாசின் உபதேசத்தை போதிப்பதில் வெற்றியடைய வேண்டுமானால் கொரிந்து பட்டணத்து மக்கள் பவுலை விட்டு விலக வேண்டும் என்று மக்களை நம்பவைத்தனர். இதினிமித்தம் எபேசுவில் மேற்கொண்டிருந்த ஊழியத்தை தற்காலிகமாக பவுல் கைவிட்டு விட்டு, கொரிந்து பட்டணத்திற்கு உடனடியாக புறப்பட்டுச் சென்றார். பவுலின் பார்வையில் இந்த பயணம் ஒரு வெற்றிப்பயணமாக காணப்பட்டாமல், வருத்தத்துடன் மேற்கொண்ட பயணமாகத் தோன்றியது. கொரிந்துவிலே (அனேகமாக கள்ள அப்போஸ்தலர் என்பவரில் ஒருவர்) பவுலை அவமானப்படுத்தினார் (2:5-8,10; 7:12). கொரிந்து பட்டணத்தார் பவுலை பாதுகாப்பதில் விசுவாசம் காட்டாதது பவுலுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. மேலும் அவர்களை கண்டனம் செய்வதற்கு பதிலாக, காலம்தான் அவர்களை உணரவைக்க வேண்டும் என்ற நிச்சயத்தோடு எபேசு பட்டணத்திற்கு பவுல் திரும்பிவிட்டார். எபேசுவில் இருந்து “அதிக கண்ணீருடன்” ஒரு கடிதத்தை எழுதினார். அதனை தீத்து மூலமாக கொரிந்து பட்டணத்திற்கு கொடுத்து அனுப்பினார் (7:5-16). தெமேத்திரியு     (அப்.19:23-20:1) ஆரம்பித்து வைத்த கலவரத்தினால் பவுல் எபேசு பட்டணத்தை விட்டு புறப்பட்டு, துரோவா பட்டணத்திற்கு தீத்துவை சந்திக்க வந்தார் (2:12,13). ஆனால், கர்த்தர் தாமே கொரிந்து பட்டணத்தில் பவுலுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்க திறந்த வாசலை வைத்திருந்தாலும் அங்கு ஊழியம் செய்ய முடியாமல் – அவர் கண்ணீரோடு எழுதி தந்தனுப்பிய நிருபத்திற்கு கொரிந்தியர்கள் எப்படியாக பதில் அளித்தனர் என்பதை அறியும்படிக்கு தீத்துவை சந்திக்க மக்கதொனியா தேசத்தை வந்தடைந்தார்(2:13). பவுலுக்கு மிக அதிக சந்தோஷம் மற்றும் ஆறுதல் அளிக்கும் வண்ணமாக தீத்து அளித்த பதில் இருந்தது; அதாவது, பவுலை எதிர்த்து கலகம் செய்தது குறித்து அதிக எண்ணிக்கையிலான கொரிந்தியர்கள் மனம் வருந்தினர் என்றார் (7:7). இன்னும் அவர்களுக்குள் கலக குணம் நீறு பூத்த நெருப்புபோல் இருக்கலாம் என்ற எண்ணத்தில் கொரிந்தியருக்கு  இந்த நிருபம் தான் இன்றைக்கு கொரிந்தியருக்கு எழுதின இரண்டாம் நிருபம் என அழைக்கப்படுகிறது (இந்த நிருபம் பிலிப்பு பட்டணத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கலாம்; 11:9; பிலேமோன் 4:15, மேலும் சில ஆரம்ப கால கையெழுத்துப் பிரதிகள் நிருபம் எழுதப்பட்ட இடம் ’பிலிப்பு’ எனக் குறிப்பிடுகின்றன). அவர்களது மனமாற்றத்தினால் அடைந்த சந்தோஷம் மற்றும் ஆறுதலை இந்நிருபத்தில் பவுல் குறிப்பிடுகிறார் (7:8-16). இந்நிருபத்தை எழுதும் போது பவுல் கருத்தில் கொண்டிருந்தது அவரது அப்போஸ்தலர் தன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதே (அதிகாரங்கள் 1-7). கொரிந்தியர்களை எருசலேமில் இருக்கும் ஏழைகளுக்காக தர்ம பணம் சேகரிக்க புத்தி சொல்கிறார் (அதிகாரங்கள் 8,9). கள்ள  அப்போஸ்தலர்களை நேரடியாக எதிர்க்கிறார் (அதிகாரங்கள் 10-13). அவர் எழுதியிருந்த வண்ணமாக கொரிந்து பட்டணத்திற்கு மீண்டும் செல்கிறார் (12:14; 13:1,2). எருசலேம் சபைமக்களுக்கென்று தர்ம பணத்தை கொரிந்தியர் சேகரித்து தந்திருந்தனர் என ரோமருக்கு எழுதும் நிருபத்தில் பவுல் குறிப்பிடுவதால், பவுல் கொரிந்து சபைக்கு மூன்றாவது முறை சென்ற பிரயாணம் வெற்றிகரமானது என அறிகிறோம். 

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

கொரிந்தியருடன் பவுல் எப்படி இடைபட்டார் என்பதை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் மற்றும் 1கொரிந்தியரில் எழுதியிருக்கிறார் – அவற்றினை பூர்த்தி செய்வதாக கொரிந்தியருக்கு எழுதின இரண்டாம் நிருபம் இருக்கிறது. இந்நிருபம் முழுவதும் பவுலின் சுயசரிதை விபரங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. பவுல் தன்னுடைய நம்பகத்தன்மையை நேரடியாக தாக்கினவர்களுக்கு பதில் அளிக்கும்படி, பவுல் எழுதின தனிநபர் நிருபமாக இது இருந்தாலும், 2கொரிந்தியர் அனேக இறையியல் கருப்பொருட்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்நிருபம் பிதாவாகிய தேவனை இரக்கமுள்ள தேற்றரவாளனாக (1:3, 7:6), சிருஷ்டிகர் (4:6), மரித்த கிறிஸ்துவை உயிருடன் எழுப்பியவர் (4:14; 13:4) மரித்த விசுவாசிகளையும் எழுப்புபவர்(1:9) என  எடுத்துக்காட்டுகிறது. 

இயேசு கிறிஸ்துவே நமக்காக பாடுபட்டவர் (1:5), தேவனுடைய வாக்குதத்தங்களை நிறைவேற்றினவர் (1:20), இரட்சகர் என்று முன்னறிவிக்கப்பட்டவர் (4:5), தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தினவர் (4:6), நமக்காக அவதரித்த தேவன், விசுவாசிகளுக்காக தரித்திரனார் (8:9; பிலிப்பியர் 2:5-8). இந்த நிருபம் பரித்த ஆவியாவரை தேவன் என எடுத்துகாட்டுகிறது (3:17,18), விசுவாசிகளின் இரட்சிப்பிற்கு உத்திரவாதம் அளிப்பவர் இவரே (1:22; 5:5). சாத்தானை “பிரபஞ்சத்தின் தேவன்” என அடையாளப்படுத்துகிறது  (2கொரி.4:4; 1யோவான் 5:19), வஞ்சிக்கிறவன் (11:14) வஞ்சிக்கும் மனுஷ மற்றும் தேவதூதர்களின் தலைவன் (11:15). உலகத்தின் கடைசிநாட்களில் விசுவாசிகள் மகிமையடைதல் (4:16-5:8) மற்றும் அவருடைய நியாயத்தீர்ப்பு (5:10). இரட்சிப்பின் தேவனின் சர்வவல்ல இறையாண்மையின் மகிமையான சத்தியம் தான் வசனங்கள் 5:14-21ன் கருப்பொருள். வசனங்கள் 7:9,10ல் தேவன் அளிக்கும் இரட்சிப்பிற்கு மனிதன் காட்டும் பதிலை - உண்மையான பதிலை காட்டுகிறது. கிறிஸ்து நமக்கு பதிலீடாக மரித்தார் என்பதனை மிக தெளிவாக, மிக துல்லியமாக வேதாகம வாக்கியங்களில் வேறு எங்கும் காணமுடியாத அளவிற்கு 2கொரிந்தியர் நமக்கு எடுத்துக்காட்டுகிறது (5:21; ஏசாயா53). ஒப்புரவாகுதலின் செய்தியை அறிவிக்கவேண்டியது, சபையின் பணி என்பதை விவரிக்கிறது (5:18-20). இறுதியாக, எபிரேயரை தவிர்த்து பார்க்கும் போது நாம் புதிய உடன்படிக்கையின் விளக்கத்தை இந்த நிருபத்தில் தான் மிக தெளிவாக பெற்றுக் கொள்கிறோம். 

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

  அதிகாரங்கள் 10-13க்கும் அதிகாரம் 1-9 க்கும் உள்ள உறவிற்கு விளக்கம் அளிப்பதே முக்கிய சவாலாக இருக்கிறது. கொரிந்துவிற்கு தீத்து பிரயாணம் செய்த போது உடன் பயணம் செய்த சகோதரன் (8:18,22) போன்றவற்றுக்கு கொரிந்துவில் இருந்த பவுலின் எதிரிகள் பலவிதமான விளக்கங்களை தந்தனர். 2:5-8ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ”துக்கமுண்டாக்கினவன்” 1கொரிந்தியர் 5-ஆம் அதிகாரத்தில் நாம் காணும் உறவுமுறை மனுஷனும் ஒன்றா என்பது நிச்சயமற்றதாக இருக்கிறது. பவுலின் தரிசனம் (12:1-5), ”மாம்சத்தில் ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” என அவர் குறிப்பிடுவது, அது என்னை குட்டும் சாத்தானின் தூதனாயிருக்கிறது என்பவற்றினை அடையாளப்படுத்திப் பார்ப்பது கடினமானதாக உள்ளது.                    

சுருக்கம்

I. பவுலின் வாழ்த்துதல் (1:1-11)
 
II.பவுலின் ஊழியம் (1:10-4:21)
அ.பவுலின் திட்டங்கள் (1:12 -2:4)
ஆ. மீறுபவர்களின் தண்டனை (2:5-11)
இ. தீத்து வராதது (2:12,13)
ஈ. ஊழியத்தின் இயல்பு (2:14 -6:10)
 1. ஊழியத்தின் வெற்றி (2:14-17)
 2. ஊழியத்தின் கட்டளை (3:!-6)
 3. ஊழியத்தின் அடிப்படை (3:7-18)
 4. ஊழியத்தின் கருப்பொருள் (4:1-7)
 5. ஊழியத்தினால் வரும் சோதனைகள் (4:8-18)
 6. ஊழியத்தின் ஊக்கம் (5:1-10)
 7. ஊழியத்தின் செய்தி (5:11-21)
 8. ஊழியத்தின் செயல்பாடுகள் (6:1-10)
உ. கொரிந்தியருக்கு புத்தி சொல்லுதல் (6:11- 7:16)
1. பவுலுக்கு கொரிந்து மக்கள் தங்கள்  இருதயத்தை திறந்து கொடுக்க கேட்டுக்கொள்ளல் (6:11-13) 
2. அவர்கள் தங்களைத்தாங்களே அவிசுவாசிகளிடம் இருந்து வேறு பிரித்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளல் (6:14-7:1)
3. பவுலின் அன்பு நிச்சயம் உண்டு என்பதை தெரிவித்தல் (7:2-16)
 
III. பவுல் தேவையில் இருப்போருக்காக பணம் சேகரித்தல் (8:1-9:15)
அ. கொடுத்தலின் வகைகள் (8:1-9)
 1. மக்கதோனியா மக்கள் (8:1-7)
 2. இயேசு கிறிஸ்து (8:8,9)
ஆ. கொடுத்தலின் நோக்கம் (8:10-15)
இ. கொடுத்தலின் செயல்முறைகள் (8:16-9:5)
ஈ. கொடுத்தலின் வாக்குதத்தம் (9: 6-15)
 
IV. அப்போஸ்தலராக பவுல் (10:1-12:13)
அ. அப்போஸ்தல அதிகாரம் (10:1-18)
ஆ. அப்போஸ்தலரின் செயல்பாடுகள் (11:1-15)
இ. அப்போஸ்தலரின் பாடுகள் (11:6-33)
ஈ. அப்போஸ்தலரின் நற்சான்றுகள் ( 12:1-13)
 
V. பவுல் விஜயம் செய்தல் (12:14 -13:14)
அ. பவுலின் சுயநலமற்ற தன்மை (12:14-18)
ஆ. பவுலின் எச்சரிக்கைகள் (12:!9 – 13:10)
இ. பவுலின் ஆசி (13:11-14)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.