வேதாகம வரலாறுகள்

மாற்கு எழுதின சுவிசேஷம்

தலைப்பு:

இந்த சுவிசேஷத்தை எழுதிய மாற்கின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது, மேலும், இவர் அப்போஸ்தலர் பேதுருவுடன் ஊழியம் செய்தவர்; இவருடைய பெயர் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் பல இடங்களில் ”மாற்கு என்னும் பேர்கொண்ட யோவான்” என்று வருவதைக் காணலாம் (அப்.12:12,25, 15:37,39). பேதுரு சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் (அப்.12:12), எருசலேமில் இருந்த மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானின் தாயாரின் வீட்டிற்கு சென்றார். பவுலின் முதல் ஊழிய பிரயாணத்தில் (அப்.12:25; 13:5) உடனிருந்த பர்னபா மாற்குவின் இனத்தார் என கொலோசேயர் 4:10-ல் காண்கிறோம். ஆனால் பெர்கே பட்டணத்தில் பவுலைவிட்டு பிரிந்து எருசலேமுக்கு திரும்பிவிட்டர் எனவும் அறிகிறோம் (அப்.13:13). பவுலின் இரண்டாவது ஊழிய பிரயாணத்தில்  மாற்குவையும் அழைத்துச் செல்லும்படி பர்னபா கேட்டுக்கொண்ட போது பவுல் மறுத்து விட்ட படியினால், பவுலுக்கும் பர்னபாஸுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர் எனவும் காண்கிறோம் (அப்.15:38-40). முன்பு மாற்குவிடத்தில் காணப்பட்ட உறுதியற்ற தன்மை, பின்நாட்களில் மிகுந்த பலமும் முதிர்ச்சியுமாக வெளிப்படையாக மாறி, அவர் பவுலுக்கும் கூட தன்னை நிரூபிப்பதைக் காண்கிறோம். பவுல் கொலோசேயருக்கு எழுதும் போது அவர்களிடத்தில் மாற்கு வந்தால் அங்கீகரித்துக் கொள்ளுங்கள் என கொலோ.4:10ல் எழுதுகிறார். பிலமோனுக்கு எழுதும் போது சீஷர்களின் வரிசைப்படியலில் மாற்குவையும் பவுல் சேர்த்துக் கொள்கிறார். பின்நாட்களில், 2தீமோத்தேயு 4:11ல் ”மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்” என்றுச் சொல்லும் அளவிற்கு ஒருபெரிய மாற்றம் பவுலுக்குள் ஏற்படுவதைக் காண்கிறோம். மாற்கு என்னும் பேர்கொண்ட யோவான் ஊழியத்தில் எனக்கு பிரயோஜனமுள்ளவன் என்று சொல்லுமளவிற்கு மாற்றம் ஏற்பட்டதற்கு பேதுருவின் ஊழியத்தின் தாக்கமும் ஒருகாரணமாக இருந்திருக்கலாம். மாற்கு பேதுருவுடன் நெருங்கிய ஓர் உறவு கொண்டிருந்தார் என்பதை “என் குமாரனாகிய மாற்கு” என்று 1பேதுரு 5:13ல் பேதுரு அழைப்பதில் இருந்து அறிகிறோம். உண்மையில், பேதுருவும் ஆரம்ப காலத்தில் தோல்விகளை சந்தித்தவராக இருந்த போதிலும், வாலிபனாகிய மாற்குவினிடத்தில் அவர் கொண்டிருந்த செல்வாக்கு மாற்கு தேவனிடத்தில் இருந்து பெற்றிருந்த ஊழிய அழைப்பை நிறைவேற்ற மாற்குவை பலசாலியாக, முதிர்ச்சியுற்றவராக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தது.  

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

நிருபங்களைப் போல் இல்லாது, சுவிசேஷ புத்தகங்கள் அவற்றின் ஆசிரியரின் பெயரை குறிப்பிடுவதில்லை. ஆதிதிருச்சபையின் தலைவர்கள், இரண்டாவது சுவிசேஷ புத்தகம் மாற்குவினால் தான் எழுதப்பட்டது என ஏகமனதாக உறுதியாகச் சொல்கின்றனர். ஹைரோபோலிஸின் தலைமை ஆயர் பாபியாஸ், கி.பி.140 ல் எழுதும் போது இதனைக் குறிப்பிடுக்கிறார்:

திருச்சபை மூப்பர் (அப்போஸ்தலர் யோவான்) சொன்னார்: பேதுருவிற்கு உடன் சென்று மொழிபெயர்ப்பாளராக இருந்த மாற்கு, தனக்கு எவைகளெல்லாம் நினைவில் நின்றனவோ – அவைகளை துல்லியமாக எழுதி வைத்தார்; அதில் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகளை - வரிசைப்படி அப்படியே மாற்கு எழுதி வைக்கவில்லை. மாற்கு இயேசு பேச கேட்டவராகவோ அல்லது இயேசுவுடன் இருந்தவராக இல்லாதிருப்பினும், பின்நாட்களில் பேதுருவுடன் சேர்ந்து ஊழியத்தை செய்யும் போது பேதுரு [கேட்பவருக்கு] பிரயோஜனம் ஆகும் அவசியமான அறிவுறுத்தல்களை மாற்குவிற்கு தந்து வந்தார் – ஆனால்,  ஆண்டவரின் வார்த்தைகளை வரிசைக்கிரமமாக மாற்குவிற்குச் சொல்ல வேண்டும் என்ற உள்நோக்கம் பேதுருவுக்கிற்கு இல்லை. இதினால், மாற்கு தனக்கு நினைவில் எவை இருந்தனவோ அவற்றை எந்த பிழையும் இல்லாமல் எழுதினார் – இதனைச்செய்யும்போது அவர் கேட்டவற்றில் ஒன்றையும் தவறவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்; மட்டுமல்ல, எந்த ஒன்றையும் கற்பனையாகவும் அவர் சேர்க்கவில்லை. 

கி.மு.150ல் ஜஸ்டின் மார்டிர் மாற்கு சுவிசேஷத்தைக் குறித்து எழுதும் போது “பேதுருவின் நினைவுகள்” என்று குறிப்பிடுகிறார். இத்தாலியில் இருந்த போது மாற்கு அவரது சுவிசேஷத்தை எழுதியிருக்கக் கூடும் என்று யூகித்திருக்கிறார். இது முந்தைய நாட்களின் பாரம்பரிய கருத்தான, மாற்கு சுவிசேஷம் ரோமாபுரியில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு ரோமபுரியில் இருந்து எழுதப்பட்டது என்பதனை ஏற்றுக்கொள்கிறது. இரேனேயஸ் கி.பி185ல் எழுதும்போது, மாற்கு – ”பேதுருவின் சீஷர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்” என்று அழைக்கிறார் மேலும் ”இரண்டாவது சுவிசேஷ புத்தகம் கிறிஸ்துவை குறித்து பேதுரு என்ன பிரசங்கித்தாரோ அவைகள் மாற்கு சுவிசேஷ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன” என்றார். பேதுருவின் மரணத்திற்கு (கி.பி67-68) முன் அல்லது பின் மாற்கு சுவிசேஷம் எழுதப்பட்டது என்ற கருத்தில் ஆதித்திருச்சபை மூப்பர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு காணப்பட்டது.

சுவிசேஷ அறிஞர்கள், இயேசு மாற்கு 13:2ல் ஆலயத்தை குறித்துப் பேசுகிறபடியால், எருசலேமும் அதின் ஆலயமும் இடிக்கப்பட்டுப் போவதற்கு முன் மாற்கு சுவிசேஷம் கி.பி. 50 லிருந்து 70ஆம் ஆண்டிற்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர். லூக்கா சுவிசேஷம் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திற்கு முன் எழுதப்பட்டது (அப்.1:1-3) என்பது தெளிவாக காணப்படுகிறது. அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் எழுதப்பட்ட நாட்கள் கி.பி.63 என எடுத்துக்கொண்டால், அதற்கும் முன்பதாக மாற்கு சுவிசேஷம் அதாவது கி.பி.50 களில் எழுதப்பட்டிருக்கலாம் (இதனை உறுதியாகச் சொல்ல முடியாது).

பின்னணி மற்றும் அமைப்பு

மத்தேயு யூதர்களுக்காக எழுதப்பட்டது போல, மாற்கு ரோமாபுரியிலிருந்த விசுவாசிகள், குறிப்பாக புறஜாதியாரை கவனத்தில் வைத்து எழுதப்பட்டது. அராமிக் மொழி வார்த்தைகள் வரும்போது, அவற்றினை மாற்கு தனது வாசகர்களுக்காக மொழிபெயர்த்துள்ளார் (3:17; 5:41; 7:11,34; 10:46; 14:36; 15:22,34). மற்றொருபக்கம், சில இடங்களில் கிரேக்க பதங்களுக்கு பதிலாக லத்தீன் பதங்களை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார் (5:9; 6:27; 12:15,42; 15:16,39). ரோமர்கள் கால குறிப்புகளை வைத்து அவர் கணக்கிடுவதையும் காண்கிறோம் (6:48; 13:35) மற்றும் யூதர்களின் பழக்கவழக்கங்களுக்கு கவனமாக விளக்கம் அளிக்கிறார் (7:34; 14:12; 15:42). மாற்கு யூதர்களின் பழக்கங்களின் ஒருபகுதியான வம்ச வரலாற்றினை மத்தேயு, லூக்கா வைப்போல் எழுதாமல் தவிர்க்கிறார். இந்த சுவிசேஷம் பழையஏற்பாட்டு குறிப்புகள் ஒரு சிலவற்றை மட்டுமே பயன்படுத்துகிறது – அதைப்போலவே யூதர்களுக்கு விருப்பமான பகுதிகள் – சதுசேயர், பரிசேயர்கள்  பற்றிய குறிப்புகளைத் தவிர்க்கிறது (சதுசேயர் என்ற பெயர் 12:18ல் ஒரே ஒருமுறை மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது). சீரேனே ஊரார் சீமோனை 15:21ல் குறிப்பிடும்போது, மாற்கு அவரை ரோமாபுரியில் இருந்த சபையின் அங்கத்தினர் (ரோ.16:13) ரூப்புக்கும் தகப்பன் என்று குறிப்பிடுகிறார். மேற்சொன்ன யாவும் ரோமாபுரியில் இருந்த சபை மக்களுக்காக மாற்கு சுவிசேஷம் எழுதப்பட்டது என்ற  பாரம்பரிய நம்பிக்கையை ஆதரிப்பதாக இருக்கின்றன. 

வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

மனுஷகுமாரன்… அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என மாற்கு10:45ல் எழுதுகிறார். இயேசுவின் போதனைகளைக் காட்டிலும் அவருடைய செயல்பாடுகளில் மாற்கு அதிகம் கவனம் செலுத்தி, அவருடைய சேவை மற்றும் தியாகத்திற்கு முக்கியத்துவம் தருகிறார். மற்ற சுவிசேஷபுத்தகங்களில் நாம் காணும் சொற்பொழிவுகளை தவிர்த்து, மாற்கு அதிகமாக இயேசுவின் போதனைகளின் சுருக்கமான விபரங்களை சார்ந்து – இயேசுவின் போதனைகளின் சாராம்சங்களை எழுதுகிறார். மாற்கு இயேசுவின் பரம்பரை மற்றும் பிறப்பு போன்ற தகவல்களையும் தவிர்த்து, அவர் என்றைக்கு ஜனங்கள் மத்தியில் ஊழியம் செய்வதற்கென்று யோவான் ஸ்நானகனால் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் பெற்று ஆரம்பித்தாரோ அதில் இருந்து தன் புத்தகத்தை எழுத ஆரம்பிக்கிறார். 

மற்ற எந்த சுவிசேஷபுத்தக ஆசிரியரைக் காட்டிலும், மாற்கு இயேசு மனுவாக வெளிப்பட்டவர் என்பதை மிக அழகாக எடுத்துக்காட்டுகிறார், அதில் இயேசு வெளிப்படுத்திய மனுஷீக உணர்வுகளை அழுத்தமாகக் கூறுறார் (1:41; 3:5; 6:34; 8:12; 9:36), அவர் மனுஷராக வந்ததினால் அவருக்கு இருக்கும் வரம்பெல்லைகள் (4:38; 11:12; 13:32), மற்றும் இயேசு மனுஷகுமாரன் என்பதில் இவர் மனுஷராக வெளிப்பட்டவர் என்பதனைக்காட்டும் சிறு விபரங்களையும் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறார் (உதாரணமாக, 7:33,34; 8:12; 9:36; 10:13-16).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

மாற்கு புத்தகத்திற்கு விளக்கம் அளிப்பவருக்கு எதிரில் -  மூன்று முக்கிய கேள்விகள் நிற்கின்றன 1) மாற்குவிற்கு – மத்தேயு, லூக்காவுடன் என்ன உறவு? 2) காலயியல் – அதாவது ஆத்துமாவின் மரணம் மற்றும் மறுவாழ்வு குறித்து வரும் பத்திகளுக்கு எப்படி பதில் அளிப்பது? மற்றும் 3) அதிகாரம் 16ன் கடைசி 12 வசனங்கள் மாற்கு சுவிசேஷ மூலமுதலான எழுத்துக்களா? என்பவை.

மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா சுவிசேஷ புத்தகங்களின் உள்ள ஒத்த-வாக்கியங்களில் காணப்படும் பிரச்சினைகள்: மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா சுவிசேஷ புத்தகங்களை மேலோட்டமாக வாசிக்கும் போது கூட ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகள் வெளிப்படும் (மாற்கு 2:3-12; மத்தேயு 9:2-8; லூக்கா 5:18-26) அத்துடன் ஒவ்வொரு ஆசிரியரும் இயேசுவின் வாழ்க்கை, ஊழியம் மற்றும் போதனைகளைப் பார்ப்பதில் வேறுபடுவதையும் காணலாம். இப்படிப்பட்ட ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை - “Syn-ஒன்றுசேர்த்து Optic-பார்ப்பதில் இருக்கும் பிரச்சினையை “சினாப்டிக் ப்ராப்ளம்” (Synoptic Problem) என்கின்றனர். இப்பிரச்சினைக்குரிய நாகரீக தீர்வு – சுவிசேஷகர்கள் மத்தியிலும் கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு – இந்த மூன்று சுவிசேஷக புத்தகங்களின் மத்தியில் ஒருவித இலக்கிய சார்பு இருக்கின்றது என ஏற்றுக்கொள்வது. ”இரண்டு ஆதாரங்கள்” என்னும் கொள்கையின் அடிப்படையில் இந்த தேற்றத்திற்கு விளக்கம் தரப்படுகிறது. இந்த கொள்கையின்படி, மாற்கு சுவிசேஷமே முதலில் எழுதப்பட்டது எனவும் மத்தேயுவும் லூக்காவும் மாற்குவின் புத்தகத்தினை அடிப்பட்டையாக கொண்டு தங்களது சுவிசேஷத்தை எழுதினார்கள் என்பது. இந்த கொள்கையை முன்வைப்பவர்கள், உலகில்இல்லாத, இரண்டாவது ஆதாரம்- பெயர் Q – இதுவே மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷகம் எழுதுவதற்கு ஆதாரம் எனவும் இது மாற்கு சுவிசேஷபுத்தகத்திற்கு இல்லை எனவும் கூறுகின்றனர். இந்த அவர்களது கருத்திற்கு ஆதாரமாக அனேக சான்றுகளை முன்வைக்கின்றனர். 

முதலில், மத்தேயு மற்றும் லூக்காவிற்கு இணையொத்ததாக மாற்கு சுவிசேஷம் இருக்கின்றது. மாற்கு புத்தகம் குறுகினதாக இருக்கின்றதால், மத்தேயுவும் லூக்காவும் மாற்குவின் விரிவாக்கம் செய்யப்பட்ட புத்தகங்கள். மூன்று சுவிசேஷ புத்தகங்களும் காலவரிசையைப் பின்பற்றுகின்றன. மத்தேயு அல்லது லூக்கா காலவரிசைபடுத்துதலில் விலகிச் சென்றாலும் மாற்கு புத்தக வரிசைக்கே திரும்ப வந்துவிடுகின்றன. வேறுவிதமாக சொல்லுவோமானால், மத்தேயு மற்றும் லூக்கா புத்தகமங்கள் இரண்டும் எந்தவொரு இடத்திலும் மாற்கு புத்தக காலவரிசைக்கு விலகிச்செல்வதில்லை. இதனிமித்தமே, சிலர் மத்தேயுவும் லூக்காவும் மாற்கு புத்தகத்தை தங்கள் வரலாற்று கட்டமைப்புக்கு அடிப்படையாக பயன்படுத்தினர் என்ற விவாதத்தை முன்வைக்கின்றனர். மூன்றாவது, மூன்று சுவிசேஷக புத்தகங்களுக்கும் பொதுவாக இருக்கும் சம்பவத்தை விவரிக்கும் போது அந்த சம்பவம் மாற்கு புத்தகத்தில் இருப்பதைக்காட்டிலும் வேறுபட்டதாக இருப்பின்,  மத்தேயு மற்றும் லூக்கா எழுதும் வார்த்தைகள் ஒத்துப்போவதே இல்லை. இச்செயல் ”இரண்டு ஆதாரங்கள்” கொள்கையை முன்வைக்கிறவர்கள் - “மாற்கு” புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே மத்தேயு மற்றும் லூக்கா எழுதினர் என்ற உண்மையை உறுதிபடுத்துகிறது என்கின்றனர்.

“மாற்கு” புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே மத்தேயு மற்றும் லூக்கா எழுதினர் என்பதை இப்படிப்பட்ட வாதங்கள் நிரூபிப்பதில்லை. சொல்லப்போனால், அவர்கள் காட்டும் சான்றுகள் அவர்களின் கொள்கைக்கு எதிரானவையாகவே இருக்கின்றன. 

1. மத்தேயு சுவிசேஷமே முதலில் எழுதப்பட்ட சுவிசேஷம் என திருச்சபையில் ஏகமனதாக பத்தொன்பதாவது நூற்றாண்டுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டது – இப்படி பல நூற்றாண்டுகள் நிலைத்த சான்றினை எளிதில் மறுக்க முடியாது. 

2. கிறிஸ்துவின் கண்கண்ட சாட்சியாக இருக்கும் மத்தேயு அவரது மன மாற்றம் குறித்தும் அவரது புத்தகத்தில் எழுதும் மத்தேயு, ஏன் மாற்குவின் புத்தகத்தை (மாற்கு கண்கண்ட சாட்சி இல்லை) சார்ந்திருக்க வேண்டும்?

3. மேற்கண்ட மூன்று சுவிசேஷ புத்தகங்களில் புள்ளிவிபரப்படி ஆராய்ச்சி செய்தததில் அவைகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகள் மிக குறைவே; வேறுபாடுகள் பொதுவாக இருக்கின்றது என ஏற்றுக்கொண்டதைக் காட்டிலும் வித்தியாசங்கள் மிகஅதிகம். இந்த வித்தியாசங்கள் சுவிசேஷ ஆசிரியர்கள் எழுதுவதற்கு ஒருவரையொருவர் சார்ந்திருந்தனர் என்பதற்கு விரோதமாகவே ஆதாரங்களை முன்வைக்கின்றன.

4.வரலாற்றில் நிறைவேறிய சம்பவங்களின் நிரல்களையே சுவிசேஷபுத்தகங்கள் எழுதுகின்றன; இப்படி இருக்கும் போது, ஒரு பொதுவான வரலாற்று வரிசையை ஆசிரியர்கள் பின்பற்றவில்லை என்றால் தான் நமக்கு ஆச்சரியத்தை தரும். உதாரணமாக, அமெரிக்க யுத்தங்களினை விவரிக்கும் மூன்று புத்தகங்களில் நாம் காணும் ஒரே மாதிரியான  வரிசை: புரட்சி யுத்தம், உள்நாட்டு யுத்தம், முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், வியட்நாம் யுத்தம், மற்றும் வளைகுடா யுத்தம் என்று காண்பதினால், மூன்று புத்தக ஆசிரியர்களும் ஒருவர் புத்தகத்தை பார்த்து மற்றவர் எழுதினார் என்று ஆகாது. பொதுவான வரிசை உள்ளடக்கங்களில் இருப்பதினால், எழுதுவதற்கு ஒன்றையொன்று சார்ந்திருந்தன என்று கூற முடியாது.

5. மாற்குவின் புத்தகத்தை பின்பற்றிதான் மத்தேயுவும் லூக்காவும் சுவிசேஷம் எழுதினார்கள் என்றால் – மத்தேயுவும் லூக்காவும் மாற்குவின் வார்த்தைகளை ஏன் அவ்வளவாக மாற்றி எழுதவேண்டும்?

6. மாற்கு முக்கியமானது எனக்கருதி எழுதியதை லூக்கா எழுதாமல் விட்டிருக்கிறார் என்பது – லூக்கா தன்புத்தகத்தை எழுதும்போது மாற்குவின் புத்தகத்தை பார்க்கவில்லை என்று ஆகிறது. மாற்குவின் புத்தகத்தை பார்த்து தான் லூக்கா எழுதினார் என்ற “இரண்டு ஆதாரங்கள்” கொள்கை தவறு என்பது இதனால் உறுதிப்படுகிறது. 

7. ஒவ்வொரு சுவிசேஷ புத்தக ஆசிரியர்களும் சார்ந்து எழுதினர் என்றால் அது ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் எப்படிப்பட்ட தொடர்பில் இருந்திருப்பர் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. மாற்குவும், லூக்காவும் பவுலின் உடன் ஊழியர்கள் (பிலமோன் 1:24). மாற்குவின் தாயார் வீட்டில்தான் (அப்.12:12) திருச்சபை ஆரம்ப நாட்களில் கூடிவந்தது (இதில் மத்தேயுவும் அடக்கம்). சிசெரியா பட்டணத்தில் பவுல் இரண்டுவருடங்கள் சிறையில் இருந்த போது லூக்கா நிச்சயமாக மத்தேயுவை சந்தித்து இருக்க வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட தொடர்புகள் “ஒருவரைபார்த்து ஒருவர்” சுவிசேஷத்தை எழுதினார் என்ற கருத்தை அர்த்தமற்ற கருத்தாக மாற்றிவிடுகிறது. 

மூன்று சுவிசேஷ புத்தகங்களும் ஒன்றை பார்த்து மற்றது எழுதப்பட்டது என்ற ஒரு பிரச்சினையே இல்லை! குற்றம் சாட்டுபவர்களால் தகுந்த ஆதாரங்கள் தரமுடியவில்லை என்பதால் இதனை குறித்து அவர்கள் விளக்கம் தர அவசியமே இல்லை.

பாரம்பரியமாக விசுவாசிக்கப்படும் மூன்று ஆசிரியர்களும் தனித்தனியே தேவனுடைய உந்துதலால் பரிசுத்த ஆவியானவரினால் ஏவப்பட்டு எழுதினார்கள் என்ற ஒரே தீர்வு தான் நிலைத்து நிற்கும் தீர்வு. 

வாசிப்போர், மேற்சொன்ன மூன்றுசுவிசேஷ பகுதிகளுக்குள் ஆசிரியர்களின் பார்வையை வெவ்வேறானவைகளாகக் காண்கின்றனர்; ஆனால், அவைகள் ஒவ்வொன்றும் எப்படி பொருந்தும்படி அமைந்து மேலும் பூரணமான ஒரே சம்பவம் அல்லது செய்தியினைக் கூறுகின்றன என்பதையே இறுதியில் காண்கிறோம். மேற்சொன்ன அம்சங்கள் யாவும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. மாறாக, ஒன்றுக்கு ஒன்று உதவுபவைகளாக இருக்கின்றன; இருந்து ஒன்றாக சேர்த்துப் பார்க்கும்போது, முழுமையான வெளிப்பாட்டை நமக்கு வெளிப்படுத்துகின்றன. 

சுருக்கம்

I. (முன்னுரை) வனாந்திரத்தில்  (1:13)
அ. யோவானின் செய்தி (1:1-8)
ஆ. யோவானின் ஞானஸ்நானம் (1:9-11) 
இ. இயேசு சோதிக்கப்படுதல் (1:12,13)
 
II. இயேசு தமது ஊழியத்தை கலிலேயாவிலும் அதனைச்சுற்றியிருந்த பகுதிகளிலும் ஆரம்பித்தல் (1:14,15)
அ. அவர் தமது செய்தியை அறிவிக்கிறார் (1:14,15)
ஆ, அவர் தமது சீஷர்களை அழைக்கிறார் (1:16-20)
இ. கப்பர்நகூமில் ஊழியத்தை நிறைவேற்றுகிறார் (1:21-34)
ஈ. கலிலேயா விற்கு சென்றடைகிறார் (1:35-45)
உ. அவர் அவரது ஊழியத்தை பாதுகாக்கிறார் (2:1-3:6)
ஊ. திரளான ஜனக்கூட்டத்திற்கு பிரசங்கிக்கிறார் (3:7-12)
எ. பன்னிரண்டு சீஷர்களை நியமிக்கிறார் (3:13-19)
ஏ. வேதபாரகரையும் பரிசேயர்களையும் அதட்டுகிறார் (3:20-30)
ஐ. அவரது ஆவிக்குரிய குடும்பத்தார் யார் என்பதை அடையாளம் காட்டுகிறார் (3:31-36)
ஒ. உவமைகளினால் பிரசங்கிக்கிறார் (4:1-34)
1. விதைக்கிறவன் (4:1-9)
2. உவமைகளுக்கான காரணம் (4:10-12)
3. விதைக்கிறவன் உவமைக்கு விளக்கம் தருகிறார் (4:13-20)
4. விளக்கு (4:21-25)
5. விதை (4:26-29)
6. கடுகு விதை (4:30-34)
 
ஓ. அவருடைய அதிகாரத்தை நிரூபிக்கிறார் (4:35-5:43)
1, கடல் அலைகளை அமைதிபடுத்துதல் (4:35-41)
2. பிசாசுகளை துரத்துதல் (5:1-20)
3. வியாதியஸ்தர்களை சுகப்படுத்துதல் (5:32-34)
4. மரித்தோரை உயிருடன் எழுப்புதல் (5:35-43)
 
ஔ. அவர் தம்முடைய சொந்த ஊருக்கு திரும்புதல் (6:1-6)
க.  அவருடைய சீஷர்களை அனுப்பி வைக்கிறார் (6:7-13)
ங. ஏரோது என்னும் எதிரியின் செயல்கள் (6:14-29)
ச.  அவருடைய சீஷர்களை திரும்ப ஒன்று சேர்த்தல் (6:20-32)
ஞ. ஐயாயிரம் பேரை போஷித்தல் (6:33-34)
ட.  தண்ணீரின் மீது நடக்கிறார் (6:45-52)
ண. அனேகரை சுகப்படுத்துதல் (6:53-56)
த.  பரிசேயருக்கு பதில் அளிக்கிறார் (7:1-23)
 
III அனேக புறஜாதியார் தேசங்களில் ஊழியத்தை விரிவுபடுத்துதல் (7:24-9:50)
அ. தீரு சீதோன் பட்டணத்தில் ஒரு புறஜாதிப் பெண்ணின் மகளை குணப்படுத்துதல் (7:24-30)
ஆ. தெக்கபோலியு: ஊமையும் காதுகேளாதவனுமாக இருந்த ஒருவனை சுகப்படுத்துதல் (7:31-37)
இ. கலிலேயா கடற்கரையின் கிழக்குபகுதியில் 4000 பேரை போஷித்தல் (9:1-9)
ஈ.தல்மனூத்தா: அவர் பரிசேயர்களுடன் விவாதிக்கிறார் (8:10-12)
உ. ஏரியின் மறுபக்கம்: அவருடைய சீஷர்களை அதட்டுகிறார் (8:13-21)
ஊ. பெத்சாயிதா: குருடனுக்கு பார்வை அளிக்கிறார் (8:22-26)
எ. கனசரேத்து, பிலிப்பி மற்றும் கப்பர்நகூம்: அவர் தமது சீஷர்களுக்கு கட்டளை தருகிறார் (8:27-9:50)
1. பேதுரு இயேசுவே கிறிஸ்து என்று அறிக்கையிடுகிறார் (8:27-30)
2. அவருடைய மரணத்தை முன்னறிவிக்கிறார் (8:31-33)
3. சீஷத்துவத்தின் கிரயத்தைக் குறித்து விளக்கம் தருகிறார் (8:34-38)
4. அவருடைய மகிமையை வெளிப்படுத்துகிறார் (9:1-10)
5. எலியாவின் பங்கு குறித்து விளக்கம் தருகிறார் (9:11-13)
6. பிடிவாத ஆவியை துரத்துகிறார் (9:14-29)
7. மீண்டும் அவருடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலைக் குறித்தும் முன்னறிவிக்கிறார் (9:30-32)
8. பரலோகராஜ்ஜியத்தில் யார் பெரியவனாக இருப்பான் என்பதை எடுத்துரைக்கிறார் (9:33-37)
9. மெய்யான ஆவிக்குரிய கனியை அடையாளம் காட்டுகிறார் (9:38-41)
10.தடுக்கல் ஆன கற்களை குறித்து எச்சரிக்கிறார் (9:42-50)
 
IV. அவருடைய ஊழியத்தினை முடிவுக்கு கொண்டுவருதல் (10:1-52)
அ. விவாகரத்து குறித்து போதித்தல் (10:1-12)
ஆ. சிறுபிள்ளைகளை ஆசீர்வதித்தல் (10:13-16)
இ. ஆளுகை செய்யும் வாலிப பிரபுவை சந்தித்தல் (10:17-27)
ஈ. சீஷர்களுக்கு பலனை உறுதிசெய்தல் (10:28-31)
உ. அவருடைய மரணத்திற்கு சீஷர்களை ஆயத்தப்படுத்துதல் (10:32-34)
ஊ. தாழ்மையான ஊழியத்தைச் செய்யும்படிக்கு சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்தல் (10:35-45)
எ. குருடன் ஒருவனை சுகப்படுத்துதல் (10:46-52)
 
V. அவருடைய ஊழியத்தை நிறைவாக்குதல்: எருசலேம் (11:1-16:20)
 
அ. வெற்றிகரமான பிரவேசம் (11:1-11)
 
ஆ. சுத்திகரிப்பு (11:12-19)
1. அத்திமரத்தை சபித்தல் (11:12-14)
2. ஆலயத்தை சுத்திகரித்தல் (11:15-19)
 
இ. வெளியரங்கமாகவும், இரகசியமாகவும் போதித்தல் (11:20-26)
1. தேவாலயத்தில் வெளியரங்கமாக (11:20-12:44)
அ. முகவுரை: சபிக்கப்பட்ட அத்திமரத்தில் இருந்து கற்றுக்கொள்ளுதல்(11:20-26)
ஆ. அவருடைய அதிகாரத்தைக் குறித்து (11:27-33)
இ. அவர் நிராகரிக்கப்படுவார் என்பது குறித்து (12:1-12)
ஈ. வரிசெலுத்துவதைக் குறித்து (12:13-17)
உ.உயிர்த்தெழுதல் குறித்து (12:18-27)
ஊ. பிரதானகட்டளை குறித்து (12:28-34)
எ. மேசியாவே மெய்யான குமாரன் என்பதைக்குறித்து (12:35-37)
ஏ. வேதபாரகர்களைக்குறித்து (12:38-40)
ஐ. கொடுத்தலைக் குறித்து (12:41-44)
 
2. இரகசியமாக: ஒலிவ மலையின் மீது (13:1-37)
அ. கடைசிகாலத்தினை குறித்து சீஷர்கள் கேள்விகேட்டல் (13:1)
ஆ. கர்த்தரின் பதில் (13:2-37)
 
ஈ.காட்டிக்கொடுக்க ஏற்பாடுகள் செய்தல் (14:1,2,10,11)
 
உ. தைலத்தை சிரசின் மேல் ஊற்றுதல், கர்த்தருடைய கடைசிபந்தி, காட்டிக்கொடுக்கப்படுதல், கைது செய்யப்படுதல்,விசாரணை (யூதர்களின் கட்டம்) (14:3-9; 12-72)
 
1. தைலத்தை சிரசின் மேல் ஊற்றுதல்: பெத்தானியா (14:3-9)
2. கடைசி பந்தி: எருசலேம் (14:12-31)
3. ஜெபம்: கெத்சமனே (14:32-42)
4. காட்டிக்கொடுக்கப்படுதல்: கெத்சமனே (14:43-52)
5. யூதர்களின் விசாரணை: காய்பா வின் வீடு (14:52-72)
 
ஊ. விசாரணை (ரோமர்களின் கட்டம்) சிலுவையிலறைதல் (15:1-41)
1. ரோமர்களின் விசாரணை ) பிலாத்துவின் தலைமையகம் (15:1-15)
சிலுவையிலறைதல்: கொல்கதா (15:16-41)
 
எ. அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பின் கல்லறையில் அடக்கம் செய்யப்படுதல் (15:42-47)
 
ஏ. உயிர்த்தெழுதல் (16:1-8)
 
ஐ. பின்குறிப்பு: (16:9-20)



பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.