ஆகாய்
தலைப்பு:
இந்த தீர்க்கதரிசனபுத்தகம் அதன் ஆசிரியரின் பெயரையே தலைப்பாகப் பெற்றுள்ளது. ஏனென்றால், அவருடைய பெயரின் அர்த்தம் ”விழா கொண்டாட்டம்” என்பது. இதனால் இவர் ஒரு பண்டிகை நாளில் பிறந்திருப்பார் எனக் கருதப்படுகிறது. பழையஏற்பாட்டில் ஆகாய் புத்தகம்தான் இரண்டாவது குறுகிய புத்தகம் (ஒபதியா முதல் புத்தகம்), புதிய ஏற்பாட்டில் ஒரே ஒருமுறை குறிப்பு எடுத்துப் பயன்பட்டிருக்கிறது.
புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி
சிறிய தீர்க்கதரிசன புத்தகம் – ஆகாய் குறித்து குறைந்த அளவே விபரங்கள் அறியமுடிகிறது. எஸ்றா 5:1; 6:14ல் இவரைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு இடங்களிலும் சகரியா தீர்க்கதரிசியினுடன் தொடர்புபடுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. எஸ்றாவில் காணப்படும் அகதிகளின் பட்டியலில் ஆகாயின் பெயர் இல்லை. இவர் ஒருவரே இந்த பெயரை பழைய ஏற்பாட்டில் பெற்றிருக்கிறார். ஆனால் இப்பெயருக்கு ஒத்த வேறு பெயர்கள் கொண்ட அனேகர் இருக்கின்றனர் (ஆதி.46:16; எண்.26:15; 2சாமு.3:4; 1நாளா.6:30). ஆகாய் 2:3, ஆசிரியர் சாலமோனின் தேவாலயம் இடிக்கப்படுவதற்குமுன் அதன் மகிமையைக் கண்டவர் எனக்கூறுகிறது. இத்தீர்க்கதரிசன புத்தகத்தை எழுதும் போது இவருக்கு குறைந்தது 70 வயது இருந்திருக்கலாம்.
எந்தவொரு குழப்பமோ, முரண்பாடோ இத்தீர்க்கதரிசன வார்த்தை வெளிப்பட்ட நாள் குறித்து இல்லை. இவரின் 4 தீர்க்கதரிசனங்கள் சூழ்நிலைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது (1:1; 2:1; 2:10; 2:20). பெர்சிய ராஜா தரியு ஹிஸ்டபெஸின் (கி.மு.521-486) இரண்டாம் வருடத்தின் 4 மாத கால இடைவெளியில் தீர்க்கதரிசனங்கள் யாவும் நிகழ்ந்தன (கி.மு 520). கி.மு.538-ல், 18 வருடங்களுக்கு முன் பாபிலோனில் இருந்து எருசலேமுக்கு செருபாபேலுடன் ஆகாய் திரும்பியிருக்க வேண்டும்.
பின்னணி மற்றும் அமைப்பு
கி.மு.538ல் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் (எஸ்றா1:1-4) பிரகடனத்தால், இஸ்ரவேலர் பாபிலோனில் இருந்து தங்கள் சொந்த தேசத்திற்கு சமூகத் தலைவர் செருபாபேலின் தலைமையிலும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவின் ஆவிக்குரிய வழிநடத்துதலின் கீழ் திரும்பினர் (எஸ்றா 3:2). ஏறக்குறைய 50,000 யூதர்கள் நாடு திரும்பினர். கி.மு.536ல் அவர்கள் ஆலயத்தை திரும்ப கட்ட ஆரம்பித்தனர் (எஸ்றா3:1 - 4:5). ஆனால் பக்கத்து தேசத்தாரின் எதிர்ப்பு மற்றும் யூதர்களின் அலட்சியத்தால் அந்த வேலை கைவிடப்பட்டது (எஸ்றா4:1-24). பதினாறு ஆண்டுகளுக்குப் பின் ஆகாய் மற்றும் சகரியா தீர்க்கதரிசிகள், தேவனின் கட்டளைகளான ஜனங்களை 1) தேவாலயத்தை திரும்பக்கட்ட மட்டுமல்ல, 2) ஜனங்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்வின் முன்னுரிமைகள் சீரமைக்கவும் அழைப்பை விடுத்தனர் (எஸ்றா 5:1 - 6:22). இதன் விளைவாக, தேவாலயம் 4 வருடங்கள் கழித்து கட்டி முடிக்கப்பட்டது (காலம் கி.மு.516; எஸ்றா 6:15).
வரலாற்று மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்
கி.மு.586ல் நெபுகாத்நேச்சார் ராஜாவால் தகர்க்கப்பட்டு இடிக்கப்பட்ட தேவனுடைய ஆலயத்தை திரும்ப கட்டுதல் என்பதே முக்கியமான கருப்பொருள். கர்த்தரிடத்தில் இருந்து பெற்ற 5 செய்திகளின் வாயிலாக ஆகாய் கர்த்தருடைய வீட்டை திரும்ப கட்டுவதற்கான முயற்சிகளை ஜனங்கள் திரும்ப புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி வந்தார். தேசத்தில் வறட்சியும், தானியங்களின் விளைச்சலில் குறைச்சலும் உண்டாயிருக்கிதற்கான காரணம், ஜனங்கள் தங்கள் ஆவிக்குரிய முன்னுரிமைகள சீர் செய்யாதிருப்பதே; எனவே, சீர் செய்ய வேண்டுமென ஆகாய் ஜனங்களை ஊக்குவித்தார்(1:9-11). தேவனுடைய ஆலயத்தை திரும்ப எடுத்து கட்ட வேண்டும் என்பது மட்டும் ஆகாய் கொண்டிருந்த நோக்கத்தின் முடிவு அல்ல. தேவன் வாசம் செய்யும் இடம், அவர் தெரிந்தெடுத்த ஜனங்களிடம் அவரின் வெளிப்படுத்தும் பிரசன்னம் நிறைந்த இடம் இது என குறிப்பிட்டுக் காட்டும் இடமாக தேவாலயம் இருந்தது. நெபுகாத்நேச்சாரால் ஆலயம் இடிக்கப்பட்டது, தேவன் வாசம் செய்வதால் உண்டாகும் மகிமையை வெளியேறச் செய்தது. (எசே.8-11). தீர்க்கதரிசியைப் பொறுத்தவரை ஆலயத்தை திரும்ப கட்டுதல் என்பது அவர்கள் மத்தியில் தேவனுடைய பிரசன்னம் திரும்ப வந்ததாக அர்த்தப்படுத்தியது. நிலவிய வரலாற்றுச் சூழ்நிலையை ஆரம்ப நாளாக எடுத்துக்கொண்டு, இறுதியாக வரவிருக்கும் மேசியாவின் ஆலயத்தின் மகிமையை ஆகாய் வெளிபடாக அறிவித்தார் (2:7), அதினால் அவர்களுக்கு மேலான சமாதான நாட்கள், செழிப்பு (2:9) தெய்வீக உறவு (2:221,22) மற்றும் தேசிய ஆசீர்வாதத்தின் நாட்கள் ஆயிரம் வருட அரசாட்சியின் நாட்களில் இருக்கிறது என்ற வாக்குத்தத்தத்தை தந்து உற்சாகப்படுத்தினார்.
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்
சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் என்று 2:7-ல் இருக்கக்கூடிய வார்த்தைகள் தான் விளக்கம் அளிப்பதில் அதிக தெளிவில்லாததாக இருக்கிறது. இதற்கு மொழிபெயர்ப்புகள் அனேகம் இருந்தாலும் விளக்கம் என்னவோ இரண்டு மட்டுமே இருக்கின்றன. 2:8-ல் வருகிற வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்ற வார்த்தைகளையும், ஏசா.60:5 மற்றும் சகரியா 14:14 வசனங்களையும் மேற்கோள்காட்டி, சிலர் இவ்வார்த்தைகள் ஏனைய தேசங்களின் செல்வங்கள் எருசலேமுக்கு ஆயிரம்வருட அரசாட்சியின் போது கொண்டுவரப்படும் என கருத்தில் போட்டியிடுகின்றனர் (ஏசா.60:11,61:6). சகல ஜாதியாரும் எதிர்பார்த்திருக்கிற விடுவிப்பவர் – மேசியாவைக் குறித்து இங்கே குறிப்பாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறபடியால், இக்கருத்தை தெரிந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த விளக்கத்தினை பழங்காலத்து ரபீமார்கள் மற்றும் ஆதி திருச்சபையும் ஆதரித்தனர், வசனத்தின் பின்பகுதியில் காணும் “மகிமை” என்ற வார்த்தை மேசியாவை குறிக்கிறது என்றும் எடுத்துரைக்கிறது.
சுருக்கம்
வருடம் | மாதம் | நாள் | |
I. கீழ்ப்படியாமைக்காக கண்டித்தல் (1:1-11) | 2 | 6 | 1 |
II. மீந்திருந்தவர்கள் பதிலளித்தனர் மேலும் திரும்பகட்டினர் (1:12 –15) | 2 | 6 | 24 |
III. தேவனுடைய மகிமை திரும்ப வருதல் (2:1-9) | 2 | 7 | 2 |
IV. மதம் அடிப்படையிலான கேள்விகள் (2:10-19) | 2 | 9 | 24 |
V. கர்த்தரின் அரசாட்சி (2:20-23) | 2 | 9 | 24 |