வேதாகம வரலாறுகள்

ஆபகூக்

தலைப்பு:

இப்புத்தகத்தை எழுதின  ஆசிரியரின் பெயரில் இருந்து, இந்த புத்தகம்-அதன் தலைப்பை பெறுகிறது. இப்பெயரின் அர்த்தம் “அரவணைப்பவர்” (1:1; 3:1) என்பது. இப்புத்தகத்தின் இறுதியில், தேவன் அவருடைய ஜனங்களுக்காக கொண்டிருக்கக்கூடிய திட்டங்களை குறித்து ஒரு குழப்பான சூழ்நிலை வரும் போது சூழ்நிலையைப் பொறுப்படுத்தாமல், தீர்க்கதரிசி தேவனை இறுகப்பற்றிக் கொள்வதைக் காணும்போது, இந்த புத்தகத்தின் பெயர் பொருத்தமானதே என்று தோன்றும்.

புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

மற்ற சிறிய தீர்க்கதரிசிகளைப் போலவே, இந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் தவிர வேறு எங்கும் தீர்க்கத்தரிசியைக் குறித்ததான தகவல்கள் இல்லை. ஆபகூக்கைப் பொறுத்தவரை, உள்ளே தகவல்கள் ஏதும் இல்லை, இதினால் இவரின் அடையாளம் மற்றும் வாழ்க்கையைக் குறித்ததான தகவல்கள் யூகமானவை. ”ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி” என்று இவர் எழுதும் ஆரம்பவரிகளில் இருந்து இவர் வாழ்ந்த நாட்களில் நன்கு அறியப்பட்டிருந்த ஒரு தீர்க்கதரிசி எனவும் இவருக்கு அறிமுகம் தேவையில்லை எனவும் அறிந்து கொள்கிறோம். ஆபகூக் - எரேமியா, எசேக்கியேல், தானியேல் மற்றும் செப்பனியா தீர்க்கதரிசிகளின் சமகாலத்தவர்.

கல்தேயர்கள் குறித்த குறிப்பு 1:6-ல் இருப்பதால், புத்தகம் எழுதிய காலம் ஏழாம் நூற்றாண்டின் கடைசி காலமாக இருக்கலாம் - நெபுகாத்நேச்சார்,  நினிவே (கி.மு.612) ஆரான் (கி.மு.609) மற்றும் கர்கேமிஸ் (கி.மு.605) - எருசலேமிற்குச் செல்லும் வழியில் கைப்பற்றிய காலத்திற்கு முன்பதாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆபகூக்கின் கசப்பான புலம்பல் (1:2-4) இருப்பது இப்புத்தகம் தேவனின் வழிநடத்துதலின்படி பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த யோசியா (கி.மு.605) மரித்த குறுகிய காலத்திற்குப் பின் இருக்கலாம் (2ராஜா.23) எனக் கருதப்படுகிறது. யோசியா கொண்டுவந்த சீர்திருத்தங்களை அவரைப் பின்பற்றி வந்த யோயாக்கீம் (எரே.22:13-19) தலைகீழாக மாற்றிப் போட்டான். 

பின்னணி மற்றும் அமைப்பு

அசீரிய பேரரசின் கடைசி நாட்கள் மற்றும் பாபிலோனியாவின் உலகம் முழுவதும் வியாபித்து இருந்த ஆட்சி நெபோபோலஷார் மற்றும் அவரது மகன் நெபுகாத்நேச்சாரின் ஆட்சிகாலத்தில் ஆபகூக் தீர்க்கதரிசனம் உரைத்தார். நபோல்பொலசார் கி.மு.626ல் பதவிக்கு வந்த உடனே, வடக்கேயும் மேற்கேயும் தன் அதிகாரத்தை விரிவாக்கத் தொடங்கினார். அவர் மகனின் தலைமையின் கீழ் கி.மு.612ல் நினிவேயை பாபிலோனிய சேனை மேற்கொண்டது. இது முதலில் ஆரானிலும் பின் கர்கேமிஸிலும் அசீரிய பிரபுக்கள் ஆட்சிசெய்ய வழிவகுத்தது. நெபுகாத்நேச்சார் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று ஆரானை கி.மு.609-லும் கர்கேமிஸ்  கி.மு.605லும் கைப்பற்றினார். 

கி.மு609ல் எகிப்திய ராஜா நேகோ, யூதாவின் வழியாக ஓடிப்போகும் அசீரிய ராஜாவிற்கு உதவும்படி பிரயாணம் செய்து வந்த போது, மெகிதோ என்னும் இடத்தில் யோசியா ராஜா அவனை எதிர்த்து யுத்தம் செய்ய புறப்பட்டார் (2நாளா.35:20-24). யோசியா இந்த யுத்தத்தில் மரித்துப் போனார், அது அவருக்குப் பின் அவருடைய மூன்று குமாரர்களும், அவருடைய பேரனும் அவரைத்தொடர்ந்து அரியணை ஏற வழி வகுத்தது. இதற்கு முன்பு, நியாயப்பிரமாண புத்தகம் தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட போது, யோசியா ராஜா யூதாவில் அவரது தகப்பன் ஆமோன் (2ராஜா.21:20-22) மற்றும் அவரது பாட்டன் மனாசே (2ராஜா.21:11-13) செய்து வந்த விக்கிரகாராதனை முறைகளை ஒழித்து, ஆவிக்குரிய வாழ்க்கையில் முக்கியமான சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார் (2ராஜா.22,23). அவருடைய மரணத்திற்குப்பின் தேசம் திரும்ப தன் பொல்லாத வழிகளுக்குத் திரும்பியது (எரே.22:13-19),  தேவன் நீர் ஏன் மௌனமாக இருக்கிறீர் எனவும் அவரது உடன்படிக்கையின் ஜனங்கள் சுத்திகரிக்கும்படி - வெளிப்படையாக ஏன் தண்டிக்கப்படவில்லை என்பதையும் ஆபகூக் கேள்வி கேட்கும்படி செய்தது. 

இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்

ஆமோஸ் மற்றும் மீகா தீர்க்கதரிசியின் காலத்தில் இருந்த வரலாற்றுச் சூழ்நிலை போன்ற ஒரு சூழ்நிலையை முதல் வரிகள் வெளிப்படுத்துகின்றன. தேசத்தில் இருந்து நியாயம் ஒழிந்து போயிருந்தது; கொடுமையும் பொல்லாப்பும் தேசத்தில் மலிந்து, ஒருவரும் கண்டிக்கப்படாது இருந்தது. இப்படிப்பட்ட இருள் சூழ்ந்த நாட்களில், தேவன் இடைபட வேண்டும் என தீர்க்கதரிசி வேண்டிக்கொள்கிறார் (1:2-4).  கல்தேயர்களை அனுப்பி, யூதா தேசத்தை நியாயம் விசாரிப்பேன் என்பதே தேவனுடைய பதில் (1:5-11). இது ஆபகூக்கிடம்: தேவன் ஏன் அவருடைய ஜனங்களை சிட்சித்து, அவர்களுடைய நீதியை துளிர்த்து எழச்செய்திருக்கலாமே? மாறாக, கல்தேயரைக்காட்டிலும் நீதியில் சிறந்த அவருடைய ஜனங்களிடத்தில் கல்தேயரை அனுப்பி நியாயம் விசாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்ற ஓர் இறையியல் கேள்வியை எழுப்பியது (1:12 -2:1). கல்தேயரையும் நியாயம் விசாரிப்பேன் என்ற தேவனின் பதில் தீர்க்கதரிசியின் இறையியல் கேள்விக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை. சொல்லப்போனால், இன்னும் அதிக கேள்விகளையே தீர்க்கதரிசியிடம் எழுப்பியது. பொல்லாப்பிற்கு தேவன் பதில் அளிக்கவேண்டும்  என்பது ஆபகூக்கின் சிந்தையில் இருந்த பிரச்சினை இல்லை,  தேவன் அவருடைய ஜனங்களுடன் கொண்டிருக்கும் உடன்படிக்கை மற்றும் தேவனின் குணாதிசயம் நியாயப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர் கேட்டுக்கொண்ட தீர்மானம் (1:13). யோபுவைப் போல - ஆபகூக் தீர்க்கதரிசி தேவனுடன்  வாதிட்டார்; ஆனால், அந்த அனுபவத்தின் முடிவில் - சகலத்தையும் ஆளுகை செய்யும் தேவனின் குணத்தை அறிந்து தேவனிடத்தில் மேலும் உறுதியான விசுவாசத்தைக் காட்டுகிறார் (யோபு 42:5,6; ஏசா.55:8,9). தற்காலிக ஆசீர்வாதத்திற்காக தேவனை ஆராதிக்காமல், அவர் யாராக இருக்கின்றாரோ அதற்காக அவரை நாம் ஆராதிக்கவேண்டும் என்னும் சத்தியத்தை  இறுதியில் ஆபகூக் உணர்ந்துகொண்டார் (3:17-19).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

வாழ்க்கை முழுவதிற்கும் உள்ள அடிப்படை கேள்விகளுக்கு தீர்க்கதரிசி கேட்ட கேள்விகள் பிரதிநித்துவம் செய்கின்றன. அக்கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்களைக் கொண்டு நாம் தேவனுடைய குணாதிசயம் மற்றும் வரலாற்றில் அவரின் சர்வவல்லமையுடன் ஆளுகைசெய்யும் தேவனின் இறையாட்சி குறித்து சரியான அடிப்படையைப் பெற்றுக் கொள்ள உதவுகின்றன. இவரின் செய்தியின் மைய்யம், ”தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று தேவனை விசுவாசிக்க விடுக்கும் அழைப்பில் இருக்கிறது (2:4). இறையியல் அடிப்படையில் புதியஏற்பாட்டு குறிப்புகள் வழக்கத்திற்கு மாறான முக்கியத்துவத்தை ஆபகூக் புத்தகத்திற்கு தந்துள்ளன. எபிரேயர் ஆசிரியர் - ஆபகூக் 2:4-ஐ எடுத்து பயன்படுத்தி விசுவாசி அவனுக்கு நேரிடும் சோதனைகள் மற்றும் துன்பங்களில் வலிமை வாய்ந்தவர்களாக, விசுவாசத்துடன் இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை எபிரேயர் 10:38ல் பேசுகிறார். அப்போஸ்தலனாகிய பவுல், இந்த வார்த்தைகளை இரண்டுமுறை - ரோமர் 1:17; கலாத்தியர் 3:17ல் - விசுவாசத்தினால் நீதிமான்கள் ஆகிறோம் என்ற உபதேசத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க எடுத்து பயன்படுத்துகிறார். 

இப்படி குறிப்புகளுக்கு விளக்கம் அளிப்பதில் எந்தவொரு முரண்பாடுகளும் இல்லை; புதிய ஏற்பாட்டு குறிப்புகள் விசுவாசம் என்ற செயலுக்கும் மேலாக விசுவாசத்தின் தொடர்ச்சியான நிலையையும் உள்ளடக்கி இருக்கின்றன. விசுவாசம் என்பது ஒரே ஒரு சமயத்தில் நடந்து கொள்ளும் செயல் அல்ல, அது வாழும் வழி. உண்மை விசுவாசி, தேவனால் நீதிமான் என பலர் அறிய அறிவிக்கப்பட்டவன் – விடாமுயற்சியுடன் பழக்கத்தினால் - தன் விசுவாசத்தில் தன் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருப்பான் (கொலோ.1:22,23; எபி.3:12-14). எப்பொழுதும் நன்மையானதை மட்டுமே செய்யும்- சர்வவல்லமையுடன் ஆளுகை செய்யும் தேவனை விசுவாசிப்பான்.

சுருக்கம்

I. மேல்எழுத்து (1:1)
 
II. தீர்க்கதரிசியின் குழப்பங்கள் (1:2–2:20)
அ. அவரின் முதல் குற்றச்சாட்டு (1:2-4)
ஆ. தேவனுடைய முதலாம் பதில் (1:5-11)
இ. அவரின் இரண்டாம் குற்றச்சாட்டு (1:12-2:1)
ஈ. தேவனுடைய இரண்டாவது பதில் (2:2-20)
 
III. தீர்க்கதரிசியின் ஜெபம்(3:1-19)
அ. தேவனுடைய இரக்கத்திற்காக மன்றாடுதல்(3:1,2)
ஆ. தேவனுடைய வல்லமையை துதித்தல் (3:3-15)
இ.  தேவன் போதுமானவர் என்ற வாக்குதத்தம்(3:16-19)

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.