தானியேலின் புத்தகம்
தலைப்பு:
எபிரேய வழக்கத்தின்படி, இந்த புத்தகம் – தேவனிடத்தில் இருந்து தொடர்ச்சியாக வெளிப்படுத்தல்களைப் பெற்று வந்த ஒரு தீர்க்கதரிசியின் பெயரையே தலைப்பாகப் பெற்றுள்ளது. பாபிலோன் தேசத்தில் சிறைப்பட்டிருந்த 70 ஆண்டு கால செயல்பாடுகள் முழுவதையும் பாலம் போல் தானியேல் ஒன்று சேர்த்துள்ளார் (கி.மு.605 -536; காண்க 1:1 மற்றும் 9:1-3). புத்தகத்தில் இருக்கும் 12 அதிகாரங்களில், 9 அதிகாரங்கள் தரிசங்னகள்/சொப்பனங்கள் மூலம் பெறப்பட்ட வெளிப்படுத்தல்களே நிறைந்துள்ளன. தானியேல், தேவனின் பேச்சாளராக – யூத மற்றும் புறஜாதியாருக்கு - தேவனின் தற்போதைய மற்றும் எதிர்காலத் திட்டங்களை அறிவித்தார். புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தல் புத்தகம் எப்படி இருக்கிறதோ அப்படியே பழைய ஏற்பாட்டிற்கு தானியேல் புத்தகம் தீர்க்கதரிசன வார்த்தைகள் மற்றும் தீமையை நன்மை வெல்லும் என்பதை எடுத்துச் சொல்லும் புத்தகமாக இருக்கின்றது.
புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி
”தேவன் என் நியாயாதிபதி” என்பதே தானியேல் என்னும் வார்த்தையின் அர்த்தம். அனேக வசனங்கள் தானியேல் தான் இப்புத்தகத்தின் ஆசிரியர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன (8:15,27; 9:2; 10:2,7; 12:4,5). வசனம் 7:2-லிருந்து தன் சுயசரிதையை முன்னிலையில் எழுதினார் – பழைய ஏற்பாட்டில் நாம் காணும் இதர 3 தானியேல்களைக் காட்டிலும் (1நாளா.3:1; எஸ்றா 8:2; நெகேமியா10:6) வேறுபட்டவராக நாம் இவரைக் காணவேண்டும். பதின்ம வயதில் இருக்கும்போதே தானியேல் தன்னுடைய உயர்குடியில் இருந்து பாபிலோனுக்கு கடத்தப்பட்டு, பாபிலோனுக்கு கொண்டுவரப்படும் யூதர்களுக்கு, பாபிலோனிய கலாச்சாரத்தை மனதில் புகட்ட வல்லவனாக தானியேல் விளங்க கொண்டு வரப்பட்டான். அங்கே தானியேல் தன் வாழ்நாளில் நீண்ட நெடுங்காலத்தை (85 வருடங்கள் அல்லது அதற்குமேல்) கழித்தார். நாடுகடத்தப்பட்டு வந்தவராக இருந்தாலும், தேவனை அவரது சொந்த குணாதிசயத்தாலும் சேவையினாலும் மகிமைப்படுத்தி அதிகமான நன்மைகளை அனுபவித்தவராக வாழ்ந்தார். ராஜா இவரை பதவியில் நியமித்தபடியால், சீக்கிரத்தில் ராஜ தந்திரி என்னும் அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டார், மாத்திரமல்ல அன்றைய உலகத்தில் இருந்த மா வல்லரசுகளான பாபிலோன் (2:48) மற்றும் மேதிய-பெர்சிய (6:12) தீர்க்கதரிசியாக சேவை செய்தபடியால், ராஜாக்களின் நம்பிக்கைக்குரியவராக வாழ்ந்தார். இந்த புத்தகத்தின் ஆசிரியர் தானியேல் தான் என கிறிஸ்துவும் மத்தேயு 24:15-ல் உறுதியாகச் சொல்கிறார்.
தானியேல்10:1ல் நாம் காணும் காலகட்டத்தைக் காட்டிலும் அதிகமான நாட்கள் தானியேல் வாழ்ந்தார் (கி.மு.536). இந்த நாட்களுக்கு பின்பாக மற்றும் கி.மு.530-க்கு முன்பாக தானியேல் இந்த புத்தகத்தை எழுதி இருக்க கூடும். தானியேல் வசனம்2:4-லின் பின்பகுதி, 7:28-ல் புறஜாதியாரின் உலக வரலாற்றைக் குறித்து தீர்க்கதரிசனமாக தானியேல் சொன்ன வார்த்தைகள், முதலில் அன்றைய சர்வதேச வர்த்தக மொழியாக இருந்த - அராமிக் மொழியில் எழுதப்பட்டிருந்தது. எசேக்கியேல், ஆபகூக், எரேமியா மற்றும் செப்பனியா தீர்க்கதரிசிகள், தானியேல் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த தீர்க்கதரிசிகள், சமகாலத்தவர்கள் எனலாம்.
பிண்ணனி மற்றும் அமைப்பு
பாபிலோன் (கல்தேயர்) எருசலேமை வெற்றிகொண்டு அங்கிருந்தோரை நாடு கடத்தின கி.மு.605 தான் இந்த புத்தகத்தின் ஆரம்பம். இந்த நாட்களில் தான் தானியேலும் அவரது 3 நண்பர்களும் அன்னிய தேசத்திற்கு அனுப்பபட்டனர். அதற்கு பின் தொடர்ச்சியாக கி.மு. 539 வரை பாபிலோனிய ராஜ்யத்தின் அழிவு காலம் எனலாம். மேதிய-பெர்சியர்களின் கைஓங்கி, பாபிலோனியரை தோற்கடித்திருந்தனர் (5:30,31), அதற்கும் பின்னான வருடங்கள் கி.மு.536 வரைகூட சரிவுற்றது என்பதை 10:1ஆம் வசனத்தில் காண்கிறோம். தானியேல் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதற்குப் பின், எருசலேமை பாபிலோனின் வெற்றியாளர்கள் இரண்டு கட்டங்களில் மேற்கொண்டனர் (கி.மு.597, மற்றும் கி.மு.586 ). இந்த இரண்டு வெற்றிகளிலும் அதிக அளவிலான யூதர்களை சிறைபிடித்து, தங்கள் தேசத்திற்கு கொண்டு சென்றனர். வசனம் 6:10-ல் “தன் வீட்டுக்குள்ளே போய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க” என நாம் வாசிப்பதில் இருந்து - எருசலேமில் இருந்து கொண்டு செல்லப்பட்டு 70 வருடங்களுக்கு மேலாகியும், எருசலேம் குறித்த தானியேலின் பேரார்வத்தைக் காண்கிறோம். தானியேலின் பின்னணி குறித்து எரேமியா குறிப்பிடும்போது யூதா சிறைபிடிக்கப்படுவதற்கு முன் யூதர்களை ஆட்சிசெய்த 5 ராஜாக்களைக் குறிப்பிடுவதற்கு பதிலாக 3 ராஜாக்கள் - யோசியா, யோயாக்கீம் மற்றும் சிதேக்கியா குறித்து மட்டுமே குறிப்பிடுவதால், தானியேல் குறித்து பகுதியளவில் மட்டுமே எரேமியா சொல்லியிருக்கிறார் எனலாம். எசேக்கியேல் தீர்க்கதரிசியும் தானியேலைக் குறித்து (14:14,20; 28:3) தானியேல் - நீதிமான் மற்றும் ஞானவான் எனக் குறிப்பிடுகிறார். எபிரேயருக்கு எழுதின நிருபத்தில் எபிரேயர் 11:33 ல் ”சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்” என எபிரேய ஆசிரியர் தானியேலை குறிப்பாக உணர்த்துகிறார். எரேமியா, ஆபகூக் மற்றும் செப்பனியா போன்ற தீர்க்கதரிசிகள் தொடர்ச்சியாக எச்சரிப்பு கொடுத்திருந்தும், தேசத்தில் மனந்திரும்புதல் இல்லாமல் - யூதா தேசம் நீண்டகாலம் பாவத்தில் நிலைத்து இருந்ததால், இறுதியில் தேவ கோபாக்கினைக்கு ஏதுவானது. ஆரம்ப நட்களில், தேவனின் உண்மையுள்ள தீர்க்கதரிசி – ஏசாயா - ஏனைய உடன் தீர்க்கதரிசிகள் - வரவிருக்கும் அபாயத்தை குறித்து எக்காளம் போல் - உரக்கச் சொல்லி வந்தார்கள். கி.மு.625-ல், அசீரியர்களின் பெலன் குன்றி வந்த வேளையில் புதிதாக வந்த பாபிலோனியர்கள் வெற்றி சிறக்க ஆரம்பித்தனர். அவர்கள் குவித்த வெற்றிகள்: 1. கி.மு.612-ல் அசீரியர்களை அவர்களது தலைநகரம் நினிவேயுடன் பிடித்தனர்; 2. எகிப்தை அதனைத் தொடர்ந்து வரும் வருடங்களில் கைப்பற்றினர்; 3. கி.மு.605-ல் யூதாவை, அவர்கள் எருசலேமை வெற்றி கொண்ட 3 வெற்றிகளின் முதல் வெற்றியின் போது கைப்பற்றினர், அடுத்த வெற்றி -கி.மு.597, கி.மு. 586 வருடங்களில்; 4. நாடு கடத்தப்பட்ட முதல்குழுவில் தானியேல் இருந்தார். எசேக்கியேல் தொடர்ந்து கி.மு.597-ல் நாடுகடத்தப்பட்டார்.
வடக்கு இராஜ்யமான இஸ்ரவேல் அசீரியர்களின் கைகளில் ஆரம்பத்திலேயே கி.மு.722-ல் வீழ்ந்தது. யூதா சிறைப்பட்டுச் சென்றதுடன் நியாயத்தீர்ப்பு பூரணமானது. நூற்றாண்டுகள் பலவற்றில் அடுத்தடுத்து வரும் காலகட்டங்களில் ஆளுகை செய்யும், அதனை மிகப்பெரிய வெற்றி சிறந்தவர், மேசியாவின் வருகையில் புறஜாதியாரின் ஆளுகை கவிழ்த்துப் போடப்படும் என்ற தேவனுடைய வார்த்தை பாபிலோனில் இருக்கும் போது தானியேலுக்கு வெளிப்பட்டது. பின் மேசியா, அனைத்து சத்துருக்களையும் தோற்கடித்து, அவருடைய உடன்படிக்கையின் ஜனங்களை அவரது மகிமை நிறைந்த ஆயிரம் வருஷ அரசாட்சியில் ஆசீர்வதித்து உயர்த்துவார் என்பதுவும் வெளிப்படுத்தப்பட்டது.
இறையியல் மற்றும் வரலாற்று கருப்பொருட்கள்
தேவன் அவர்களுக்காக எப்படிப்பட்ட தீர்மானத்தை வைத்திருக்கிறாரோ, அவைகளை அன்னிய தேசத்தில் இருந்த யூதர்களுக்கு தெரிவித்து, உலகத்தில் அன்னிய தேசத்தாரின் ஆதிக்கம் இருந்தபோது யூதர்களை உற்சாகப்படுத்தும்படிக்கே தானியேல் புத்தகம் எழுதப்பட்டது. தேவனுடைய இறையாட்சியே சர்வ தேசத்தினையும், ராஜாக்களின் செயல்களுக்கும் மேலோங்கி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்; இறுதியில் அவர்கள் ஆட்சிக்கெல்லாம் பதிலாக மெய் ராஜாவின் ஆட்சி அமையும் என்பதே இப்புத்தகத்தின் மற்ற எல்லா கருப்பொருளைக்காட்டிலும் முன்னணியில் நிற்கிறது. திறவுகோலான வசனங்கள் 2:20-22,44 ( 2:29,37;4:34-35; 6:25-27). தானியேல் 1ல் நாம் காணும் இஸ்ரவேலின் வீழ்ச்சியினை அனுமதித்ததால் தேவன் தோல்வியை சந்தித்ததாக அர்த்தம் அல்ல, அவருடைய உயர்த்தப்பட்ட கிறிஸ்து, அவருடைய ராஜாவினை உலகிற்கு பூரணமாக வெளிப்படுத்தும் அவரது நிச்சயமான நோக்கம் நிறைவேறுவதின் ஒரு பகுதியாகவே அது நிறைவேறியது.
இஸ்ரவேலை அன்னிய தேசத்தார் ஆளுகை செய்ய, அவருடைய இறையாண்மைக்கு உட்பட்டு அனுமதித்தார் – அதாவது, கி.மு.605-539 வரை பாபிலோன், 539-331 வரை மேதிய-பெர்சியா, 331-146 வரை கிரீஸ் தேசம், கி.மு.146-ல் இருந்து கி.பி. 476 வரை ரோமர் இஸ்ரவேலை ஆளுகை செய்ய அனுமதித்தார். அப்படியே இது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் உள்ள காலம் வரைத் தொடர்கிறது. அதிகாரம் 2 மற்றும் 7-ஐ காண்பீர்களானால், இந்த அன்னிய தேசத்தாரின் அதிகாரங்கள் இஸ்ரவேல் மேல் ஓங்கி இருந்த விபரங்கள் தெரிய வரும். இக்கருப்பொருள் இஸ்ரவேலுக்குண்டான தோல்வி அனுபவத்திலும், அதிகாரம் 8-12ல் நாம் காணும் தேவராஜ்யத்தின் ஆசீர்வாதத்திலும் அடங்கியிருக்கக் காண்கிறோம் (2:35,45; 7;27). சகல தேசத்தாரின் மீதும் மேசியா மகிமை பொருந்தினவராய் ஆட்சிசெய்வார் (2:35,45; 7:27). அந்நாளிலே தேவனின் ராஜரீக கட்டுப்பாடு வெளிப்படும் என்பதே இப்புத்தகத்தின் கருப்பொருளின் திறவுகோலான அம்சம். அவர் 2-ஆம் அதிகாரத்தில் ஒரு கல்லை போலவும், அதிகாரம் 7-ல் மனுஷனுடைய குமாரன் போலவும் ஒப்பிடப்பட்டிருக்கிறார். கூடுதலாக, 9:26 வசனத்தில் அவரே “அபிஷேக்கிக்கப்பட்டவர்” (மேசியா) எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். அதிகாரம் 9-ல் தானியேலின் காலத்தில் இருந்து கிறிஸ்துவின் ராஜ்யம் வரைக்குமான காலகட்டத்தின் கட்டமைப்பு விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.
தேவன் ஆட்சி செய்கிறார் என்பது உடன் அவருடைய வல்லமை அற்புதங்கள் மூலமாக வெளிப்படுகிறது என்பதே தானியேல் புத்தகத்தில் இழையோடி ஓடிக்கொண்டிருக்கும் இரண்டாவது கருப்பொருள். தேவன் தமது நோக்கத்தினை நிறைவேற்ற அற்புதங்களை பயன்படுத்துகிறார் என்ற கருப்பொருள் ஆறு பகுதிகளாக காணப்படுகிறது. அவற்றில் ஒரு பகுதி தானியேலில் காணப்படுகிறது. இதர காலங்கள் 1) சிருஷ்டிப்பும் வெள்ளமும் (ஆதி.1-11); 2) ஐந்து ஆகமங்களும் மோசேயும் (ஆதி.12-உபாகமம்) 3) எலியாவும் எலிசாவும் (1ராஜா.17 - 2ராஜா.13) 4) இயேசுவில் அப்போஸ்தலர்களும் (சுவிசேஷ புத்தகங்கள், அப்போஸ்தல நடபடிகள் புத்தகம்) மற்றும் இயேசுவின் இரண்டாம் வருகையின் காலம் (வெளிப்படுத்தல்). தேவன், நித்தியமாக ஆளுகை செய்கின்றவர் மாத்திரமல்ல, அவருடைய சித்தத்தின்படி எதையும் செய்ய வல்லவர் (4:34,35). அற்புதங்கள் செய்ய வல்லவர், ஆதியாகமம் 1-ஆம் அதிகாரத்தில் அவர் சிருஷ்டிகராக இருந்து வெளிப்படுத்திய வல்லமையோடு ஒப்பிட்டுபார்க்கும் போது, இங்கே சொல்பவை எல்லாம் அவரின் வல்லமையின் மிகச்சிறிய அளவினையே வெளிப்படுத்துகின்றன. தேவன் தாமே சொப்பனங்களை வெளிப்படுத்தி, விளக்கம் அளித்து, அவரது சித்தத்தை வெளிப்படுத்தினார் என தானியேல் வரிசைப்படுத்தி தன்புத்தகத்தில் எழுதுகிறார் (அதிகாரங்கள் 2,4,7). ஏனைய அற்புதங்களாக 1) தேவன் அவர் சுவற்றில் எழுதியது - தானியேல் அதற்கு விளக்கம் அளிக்க உதவிய அற்புதம் (அதி.5); 2) எரியும் அக்கினி சூளையில் இருந்து 3 பேர்களை காப்பாற்றிய அதிசயம் (அதி.3); 3) சிங்ககுகையில் தானியேலை சிங்கங்களின் வாயில் அகப்படாமல் தப்புவித்த அதிசயம் (அதி.6); மற்றும் 4) இயற்கைக்கு அப்பாற்பட்ட தீர்க்கதரிசனங்கள் (அதிகாரங்கள் 2,7,8; 9-24 – 12:13).
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்
எதிர்காலத்தில் காத்திருக்கும் உபத்திரவம் மற்றும் ராஜ்யத்தின் வாக்குதத்தங்களுக்குரிய பகுதிகளுக்கு விளக்கம் அளிப்பது - விளக்கம் அளிப்பதில் உள்ள முக்கிய சவால்கள். அராமிக் மொழி ஆராய்ச்சி மற்றும் அகழ்வாராய்ச்சிகள் இப்புத்தகத்தில் எழுதியுள்ளவற்றின் நாட்களை உறுதிபடுத்தியிருந்தும், சில சந்தேகம் நிறைந்த (Skeptical) விளக்கம் அளிப்பவர்கள் – இந்த அற்புதங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் என்பதை அங்கீகரிக்க மனதில்லாமல் இருக்கின்றனர்; இரண்டு ஏற்பாடுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் பின்நாட்களின் இவற்றை கண்களால் கண்டவர் தன் கருத்தாக எழுதியுள்ளார் எனத் தெரிவிக்கின்றனர் - அவர்கள் அறிந்து கொள்ளவேண்டியது – தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டவைகள் - அதிகாரம் 11ல் உள்ளவற்றில் 100க்கும் மேலானவை ஏற்கெனவே நிறைவேறிவிட்டன. உண்மையில், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப் பின் உள்ள ஏழு வருட நியாயத்தீர்ப்பின் காலம் தானியேல் 7:21,22;11:36-45; 12:1 வசனங்களிலும், கிறிஸ்து இஸ்ரவேலரையும் புறஜாதியாரையும் சேர்த்து செய்யப்போகும் ஆயிரம் வருட அரசாட்சி குறித்து - வெளி.20லும் தானியேல் கற்றுத் தருகிறார். புதிய வானம், புதிய பூமி, புதிய தலைநகர்- எருசலேமில் இந்த யுகம் பரிபூரணமானதாக ஆயிரம் வருட அரசாட்சியில் இருக்கும். தானியேல் தீர்க்கதரிசனத்தையும் சேர்த்து, தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு நேரடியான அர்த்தம் பார்க்கும்போது நமக்கு ஆயிரம் வருட ஆட்சிக்கு முந்தைய நாட்களுக்குரிய விஷயங்கள் பல நமக்கு கிடைக்கின்றன.
வாசிப்பவர்களுக்கு முன் நிற்கக்கூடிய ஏனைய சவால்கள்: எண்களுக்கு விளக்கம் அளித்தல் (1:12,20; 3:19;9:24-27); ”மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர்” (7:13,14) என்று ஒருவரை அடையாளம் கண்டதில் உள்ள சவால்; 8:19-23-ல் சொல்லப்படும் உருவகத்தை வைத்து கடந்த காலத்தின் அந்தியோகஸ் என எடுத்துக்கொள்வதா அல்லது எதிர்காலத்தில் தோன்றவிருக்கிற அந்திகிறிஸ்து பற்றியதா? 9:24-27-ல் ”எழுபது வாரங்களுக்குரிய” விளக்கம் அளிப்பது ஒரு சவால்; 11:21-35-ல் சொல்லப்பட்ட அந்தியோகஸ் குறித்து தான் 11:36-45-லும் சொல்லப்பட்டுள்ளதா அல்லது எதிர்காலத்து அந்திக்கிறிஸ்துவை பற்றிய தீர்க்கதரிசன வார்த்தைகளா? போன்றவை.