யோபுடைய சரித்திரம்
தலைப்பு:
பரிசுத்த வேதாகமத்தின் ஏனைய புத்தகங்களைப் போலவே, சொல்லப்படும் சம்பவத்தின் முக்கிய நாயகனின் பெயர் இப்புத்தகத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது. எபிரேய மொழியில் “துன்புறுத்தப்பட்ட” என்ற வார்த்தையில் இருந்து “துன்புறுத்தப்பட்டவன்” என்ற அர்த்தத்தை யோபு என்ற பெயர் பெற்றிருக்கிறது. அல்லது அராமிய மொழியில் “மனம்திரும்பு” என்பதற்குரிய வார்த்தையில் இருந்து “மனம்திரும்பியவன்” என்ற அர்த்தத்தை ஏற்றுக் கொண்டது. யோபுவின் வாழ்க்கையின் ஒரு சகாப்தத்தை ஆசிரியர் விவரிக்கிறார். இதில் அவர் சோதிக்கப்பட்டு தேவனுடைய குணாதிசயம் வெளிப்படுவதைக் காண்கிறோம். புதிய ஏற்பாட்டில் இரண்டு முறை நேரடியாக குறிப்பிடுவதில் இருந்தும் (ரோமர் 11:35; 1 கொரி.3:19), எசேக்கியேல் 14:14,20 மற்றும் யாக்கோபு 5:11 புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதிலும் இருந்து யோபு என்பவர் நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த ஒரு மனிதரை பற்றிய சரித்திரம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் தேதி
இந்த புத்தகம் அதன் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடவில்லை. யோபுவிற்கு பரலோகத்தில் அவருக்கு உண்டான கடும் சோதனை சம்பவங்கள் குறித்த அறியாமையை வைத்தே இந்த புத்தகம் அமைந்திருக்கிறபடியால், யோபு எழுதினார் என்று குறிப்பிட முடியாது. ஒரு தல்மூத் பாரம்பரியம் உஸ் இடம் மோசே 40 வருடங்கள் வசித்த மீதியான் தேசத்திற்கு சமீபத்தில் இருக்கிறபடியால், மோசே இந்த சம்பவங்கள் குறித்த பதிவுகளை பெற்றிருக்கலாம் என்கிறது. சாலமோன் ஆசிரியராக இருக்க வாய்ப்பு உண்டு; ஏனெனில், சாலமோன் ஏனைய ஞானப்புத்தகங்களை (சங்கீதபுத்தகம் 72,127 அதிகாரம் தவிர ஏனைய சங்கீதங்களை அவர் எழுதவில்லை) எழுதியுள்ளார். யோபு வாழ்ந்த வருடங்கள் பலவருடங்களுக்குப் பின் சாலமோன் வாழ்ந்திருந்தாலும், எப்படி ஆதாம் ஏவாள் குறித்து மோசே தேவனின் ஏவுதலால் எழுதினாரோ, அப்படி அவருடைய வாழ்நாட்களுக்கு முந்தைய சம்பவங்களை குறித்து எழுதியிருக்க கூடும் என்கின்றனர். எலிகூ, ஏசாயா, எசேக்கியா, எரேமியா மற்றும் எஸ்றா போன்றவர்களும் இப்புத்தகத்தை எழுதியிருக்கலாம் என கூறபடுகிறது, ஆனால் எந்த ஆதாரமும் இப்பெயர்களுக்கு இல்லை.
இந்த புத்தகம் எழுதப்பட்ட தேதி அதில் எழுதப்பட்டுள்ள சம்பவங்களுக்கு மிக அதிகமான நாட்களுக்குப்பின் எழுதப்பட்டிருக்கலாம். கீழ்க்காணும் காரணங்களினால் இந்த முடிவு எட்டப்படுகிறது.
- யோபுவின் வயது (42:16)
- அவனுடைய 200 வருட வாழ்நாட்கள் (42:16) – இது நம்முடைய முற்பிதாக்கள் காலத்தில் வாழக் கண்டது. ஆபிரகாம் 175 வருடங்கள் வாழ்ந்தார் ஆதி (25:7);
- முற்பிதாக்களில் நாம் காண்பதைப் போன்ற சமூக அமைப்பு;
- யோபின் வேலைக்காரரை கல்தேயர் பவுஞ்சாக வந்து அழித்துப்போட்டனர் (1:17) – கல்தேயர் நாடோடிகள் அவர்கள் பட்டணவாசிகள் அல்ல;
- யோபுவின் செல்வம் அவன் பெற்றிருந்த கால்நடைகளினால் அளக்கப்பட்டத்துவே அல்லாமல், பொன்னும் வெள்ளியினால் அல்ல (1:3; 42:12);
- யோபு ஆசாரிய அலுவல்களை அவனது வீட்டிற்குள் பார்த்துக் கொண்டது (1:4,5); மற்றும்
- ஆபிரகாமுடனான, இஸ்ரவேலுடனான உடன்படிக்கை, யாத்திராகமம், மற்றும் மோசேயின் பிரமாணங்கள் இவைகளைக் குறித்து இந்த புத்தகம் அமைதலாக இருக்கிறது. யோபு பெருங்காப்பியத்தில் காணப்படும் சம்பவங்கள் முற்பிதாக்களின் வாழ்வில் நடந்தவைப்போல் தோற்றம் அளிக்கின்றன. யோபுவை, மறுபுறத்தில் பார்க்கும் போது, ஆதாமைப் பற்றியும்(31:33), நோவாவின் வெள்ளத்தைக் குறித்தும் (12:15) அறிந்திருந்ததார். புத்தகத்தில் காணப்படும் கலாச்சார/வரலாற்று அம்சங்களை வைத்து காலவரிசைப்படுத்தினால், பாபேல்க்கு (ஆதி.11:1-9) பின்னும் ஆபிரகாமுக்கு (ஆதி.11:27) முன்னும் அல்லது அவருடன் சமகாலத்தவராக யோபு இருப்பவராக சம்பவங்களை வரிசைப்படுத்தலாம்.
பிண்ணனி மற்றும் அமைப்பு
இப்புத்தகத்தில் குறிப்பிட்ட காலத்தில் பரலோகத்தில் நடைபெறும் சம்பவங்களும் அதனைத் தொடர்ந்து யோபின் வாழ்க்கையில் வந்த துன்பங்கங்கள், அனைத்து காலங்களில் வாழும் விசுவாசிகளின் விசுவாசத்திற்கு முக்கியமான கேள்வியை எழுப்பி விடுகின்றன. யோபு தேவனை ஏன் உத்தமமாக சேவித்தான்? யோபு, நோவா, தானியேல் உடன் ஒப்பிட்டுப் பேசப்படுகிறார்; அவருடைய நீதி பறைசாற்றப்படுகிறது (எசே.14:14-20) மற்றும் யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; என யாக்கோபு 5:11-ல் பேசப்படுகிறார். யோபின் துன்பத்தைப் பார்த்து பல கேள்விகள் கேட்கப்படுகிறது. உதாரணமாக, நீதிமான்கள் ஏன் உபத்திரவப்படுகிறார்கள்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் முக்கியமானதாக இருந்த போதிலும் யோபின் சரித்திரம் எந்தவொரு பதிலையும் தரவில்லை. யோபிற்கோ அல்லது அவனது சிநேகிதர்களுக்கோ அவனது துன்பங்களுக்கான காரணம் தெரியவில்லை.
நீதியினிமித்தம் பாடுபட்ட அவருக்கு அவரது வேதனைகளுக்கான காரணம் தெய்வீக வழக்காடுமன்றத்தில் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் நடந்த வாதங்கள் எனத் தெரியாது. சர்வலோகத்தின் தேவனை பின்நாளில் எதிர்கொண்ட யோபு, தன் வாயின் மீது கை வைத்து ஒன்றும் பேசவில்லை. யோபுவின் அமைதலான பதில் எந்த விதத்திலும் அவர்பட்ட பாடுகள், வேதனகளை அற்பமானவைகளாக்கவில்லை. இச்செயல் பாடுகளின் மத்தியிலும் தேவனின் நோக்கங்களில் நம்பிக்கையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஏனெனில், பாடுகளும் மனுஷனுடைய ஏனைய அனுபவங்களைப் போலவே, தேவனின் பூரண ஞானத்தினால் வழிநடத்தப்படுகிறது. முடிவில், ஒருவரது பாடுகளுக்கான காரணம் தெரியாமல் இருக்கலாம்; ஆனால், சர்வவல்ல தேவனின் இறையாட்சியின் மீது பாடுகளின் ஊடாகச் செல்பவர் முழுமையான நம்பிக்கையை வைக்கவேண்டும் என்பதே இதில் இருந்து கற்றுக் கொள்ளும் பாடம். இது தான் பாடுகளுக்குரிய காரணத்திற்கான மெய்யான பதில்.
இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்
இரண்டு மிகப்பெரிய கருப்பொருட்களும் அனேக சிறிய கருப்பொருட்களும் இப்புத்தகத்தின் அறிமுக அதிகாரங்கள் (1,2), முடிவுரை (42:7-17) மற்றும் யோபின் பாடுகள் குறித்து இடையில் காணப்படும் கவிதைசார்ந்த அதிகாரங்களில் (3:1 - 42:6) காணப்படுகிறது. பரலோகத்தில் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் நடைபெறும் வாதம் எப்படியாக யோபுவும் அவனது சிநேகிதர்களும் பூலோகத்தில் நடத்திய மூன்று சுற்று வாதங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதே முதல் கருப்பொருளை புரிந்து கொள்வதற்குரிய ஒரு திறவுகோல். விசுவாசிகளுடைய குணாதிசயத்தை தேவன் சாத்தானுக்கும், அனைத்து பிசாசுகளுக்கும், தேவதூதர்களுக்கும் மற்றும் ஜனத்தாருக்கும் நிரூபிக்கும்படி விரும்பினார். சாத்தானின் குற்றச்சாட்டு - யோபு விருதாவாகவா பயந்து நடக்கிறான்; அவனது உத்தமத்தை நீர் சோதித்துப் பார்த்ததில்லை, உம்மிடத்தில் இருந்து அவன் பெற்றுக் கொள்வதினால் நீதிமானாக நடந்து கொள்கிறான் என்பது. சாத்தானின் கூற்றுப்படி, யோபு உண்மையான/சுத்தமான நோக்கத்துடன் தேவனைப் பின்பற்றவில்லை, தேவனுக்கும் அவனுக்கும் இடையில் காணப்படும் உறவு வெறும் பாசாங்கு என்பதே. சாத்தான் எப்படி ஒருகூட்ட தேவதூதர்களை கலகம் செய்யும்படி தன்பக்கமாக திருப்பிக் கொண்டானோ, அப்படியே தேவனுக்கு விரோதமாக யோபுவை திருப்பிவிட முடியும் என்பது சாத்தானின் எண்ணம்.
யோபுவிற்கு பாடுகளைக் கொண்டுவந்தால், யோபினிடத்தில் இருந்த தேவன் தன்னைப் பாதுகாக்கிறவர் என்ற விசுவாசத்தை நொறுக்கிப் போட்டுவிடலாம் என்பது சாத்தனின் எண்ணம். தேவன் சாத்தானை சோதிக்க அனுமதித்தார், ஆனால் அதில் அவன் தோற்றுப்போனான் – தேவனிடத்தில் கொண்டிருக்கும் விசுவாசம் மெய்யானதாக இருக்குமானால் அதனை அசைக்கமுடியாது. யோபுவின் மனைவி கூட தேவனை தூஷித்து… எனக் கூறினாள் (2:9), ஆனால் அதனை யோபு மறுதலித்துவிட்டான். இதனையே சாத்தான் பேதுருவினிடத்திலும் செய்யும்படி பிரயாசப்பட்டான் (லூக்கா22:31-34-ஐ பார்க்க) பேதுருவினிடத்தில் காணப்பட்ட விசுவாசத்தை தகர்ப்பதிலும் தோற்றுப் போனான் (யோவான் 21:15-19). சாத்தான் தேவனுடைய இரட்சிக்கும் விசுவாசத்தில் விசுவாசம் கொண்டிருப்பவர்களை - தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து பார்த்தாலும், அவர்கள் விசுவாசத்தில் உறுதியாக நின்றார்கள். ஒரு விசுவாசி எவ்வளவு பாடுகள் அனுபவித்தாலும், அல்லது அப்பாடுகள் புரிந்துகொள்ள முடியாததாகவும் தகுதியற்றதாகவும் இருந்தாலும் பரிசுத்தவான்கள் கொண்டிருக்கும் இரட்சிக்கும் விசுவாசத்தினை அழித்து விடமுடியாது என்பதை தேவன் முடிவில் சாத்தானுக்கு நிரூபித்தார்.
தேவன் தன் குணாதிசயத்தை மனுஷர்களுக்கு வழங்குவது இரண்டாவது கருப்பொருள் – முதலாவது கருப்பொருளுக்கும் தொடர்புடையது. தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் ஏற்பட்ட விவாதத்தினால் நீதிமானாகிய யோபு சோதிக்கப்பட்டதில் இருந்து, யோபுவினிடத்தில் தேவன் காட்டிய மனதுருக்கம் மற்றும் இரக்கம் குறைவுபட்டது என்று சொல்லமுடியுமா? இல்லை, ஒருபோதும் அப்படிச் சொல்லமுடியாது. யாக்கோபு தனது நிருபத்தில் 5:11-ல் மிகத்தெளிவாக “யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுள்ளவராயிருக்கிறாரே” என எழுதுகிறார். யோபு புத்தகம் 42:10,17 வசனங்களும் மேற்சொன்ன கூற்று தவறு என நிரூபிக்க யோபு 42:10-17ல் யோபு” தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ” என யோபு கூறுகிறார், தேவனுடைய ஊழியன் அவர் பாடு பட்டார் என்பதை மறுக்கவில்லை. அவனது பாடுகள் அவனது பாவத்தினால் விளைந்தவை என்பதையும் யோபு மறுக்கவில்லை. அவர் ஏன் பாடுகளுக்கும் துன்பத்திற்கும் உள்ளானார் என்ற காரணமும் புரியவில்லை.
ஆளுகைசெய்யும் மற்றும் பூரண ஞானமுள்ள தேவனுக்கு பக்திநிறைந்த ஆராதனை ஏறெடுக்கும் இதயத்துடன் மற்றும் தாழ்மையுடன் (42:5,6) யோபு தன் துயரங்களைச் சந்திக்கிறார் – சாத்தானுடன் தனக்கு ஏற்பட்ட எதிர்ப்பில் இருந்து யோபு இதனைக் கற்றுக் கொள்ள வேண்டும் என தேவன் விரும்பினார். முடிவில், யோபுவை தேவன் மிக அதிக அளவில், யோபு முன் அறிந்திராத அளவில் ஆசீர்வாதங்களால் நிறைத்து, ஆசீர் மழையைப் பொழிந்தார்.
குற்றமற்றவர்களாக இருப்பவர்களும் அனுபவிக்கும் பாடுகள் ஏன் என்று புரியாத இரகசியம் வெளிப்படுவதே இந்த புத்தகத்தின் மிகப்பெரிய சத்தியம். தேவன் அவருடைய பிள்ளைகள் துக்கத்திலும் வேதனையிலும் நடக்கும்படி அனுமதி வழங்குகிறார் சிலவேளைகளில் அவர்களது பாவத்தினால் (எண்.12:10-12), சிலவேளைகளில் அவர்களை சிட்சிக்கும்படிக்கு (எபி.12:5-12), சிலவேளைகளில் அவர்களைப் பெலப்படுத்த (2 கொரி.12:7-10; 1பேதுரு 5:10), சிலவேளைகளில் அவரது ஆறுதல் மற்றும் கிருபையை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தைக் கொடுக்க (2கொரி.1:3-17) அனுமதி தருகிறார். ஆனால், பரிசுத்தவன்களின் பாடுகளுக்குப்பின் மறைந்து உள்ள அடிப்படைக் காரணத்தை பரிசுத்தவான்களால் அறியமுடியாததற்கு காரணம் பரலோக நோக்கம் – அதனை பூலோகத்தில் இருப்பவர்களால் பகுத்தறிய முடியாது (உறுதிபடுத்தும் வசனங்கள் யாத். 4:11; யோவான் 9:1-3).
யோபுவும் அவனது சிநேகிதர்களும் பாடுகளுக்கான காரணங்களையும், அதின் தீர்வுகளையும் கண்டறிய தேடி ஆராய்ச்சி செய்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஆழமான இறையியல் கருத்துக்கள் மற்றும் சூழ்நிலையக் குறித்ததான நுண்ணறிவைக் கொண்டு அவர்கள் பதில்களுக்காகத் தேடுகின்றனர், ஆனால், பயனற்ற மற்றும் தவறான கருத்துக்களைத் தான் கண்டுபிடிக்கின்றனர். இறுதியில், தேவன் அவர்களை கண்டிப்பதைப் பார்க்கிறோம் (42:7). அவர்களுக்கு பரலோகில் தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் இருந்ததால் யோபு ஏன் பாடுபட்டார் என்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை. அவர்களுக்கு அனைத்து பதில்களும் தெரியும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களது அறியாமையால் அவர்கள் தங்கள் சங்கடத்தை அதிகப்படுத்திக் கொள்ளவே செய்தார்கள்.
இந்த மகாபெரிய கருப்பொருளை விரிவாக்கிப் பார்க்கும் போது, யோபுவின் அனுபவத்தில் இருந்து கீழ்க்காணும் சத்தியங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும்.
- விசுவாசிகளும் ஒன்றும் அறியாதபடிக்கு, பரலோகத்தில் சில விஷயங்கள் தேவனுடன் இடைபட்டுக்கொண்டிருக்கின்றன, ஆனால் அவைகள் விசுவாசிகளின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
- நாம் நமக்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வளவு அதிக பிரயத்தனம் செய்து விளக்கம் அளித்தாலும் பிரயோஜனமில்லை.
- தேவனுடைய ஜனங்களும் பாடு அனுபவிக்கின்றனர். நல்ல மனுஷருக்கு கெட்ட விஷயங்கள் எல்லா வேளைகளிலும் சம்பவிக்கின்றன. அதினால், ஒருவர் கடந்து செல்லும் வேதனையான பாதையினைக் கண்டு அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையை ஒருவரும் எடை போடமுடியாது.
- தேவன் தூரத்தில் இருப்பது போல் காணப்பட்டாலும், விசுவாசத்தில் விடாமுயற்சியுடன் இருப்பது மிக உன்னதபண்பு. தேவன் நல்லவராக இருக்கின்றபடியால், ஒருவர் தன் ஜீவியத்தை தேவனின் கரங்களில் பாதுகாப்பாக இருந்திடும்படி தந்திடலாம்.
- விசுவாசி பாடுகளின் மத்தியில் தேவனை கைவிட்டுவிடக்கூடாது, மாறாக, அவருக்கு அருகில் கிட்டிச் சேரவேண்டும். அப்படிப்பட்ட ஐக்கியத்தில் ஆறுதல் வரும் – இதனை விவரிக்க முடியாது. மற்றும்
- பாடுகள் ஒருவேளை மிக கடினமானதாக இருக்கலாம், ஆனால் நீதிமானுக்கு அவை இறுதியில் முடிவுக்குவரும். மேலும் தேவன் பரிபூரணமாக ஆசீர்வதிப்பார்.
விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்
விளக்கம் அளிப்பதில் உள்ள மிகவும் நெருக்கடியான சவால் இப்புத்தகத்தில் இருக்கும் முதன்மையான செய்தி. இந்த புத்தகத்தின் அழுத்தமான பிரச்சினை இதுதான் என்றாலும், யோபுவின் பாடுகளுக்கான காரணம் வாசிப்பவர்களுக்கு தேவன் சாத்தானுக்கு ஒருகாரணத்தை நிரூபித்துக் கொண்டு இருக்கிறார் என்று தெரிந்திருந்த போதிலும், யோபுவிற்கு இதுதான் என்பது இறுதிவரை வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த விஷயம் யோபுவின் புரிந்துகொள்ளும் திறனை மிஞ்சுகிறது. யோபுவை குறித்து யாக்கோபு விளக்கம் அளிக்கும் போது (யாக் 5:11), தேவன் தம்முடைய மனதுருக்கத்தையும் இரக்கத்தையும் காட்ட என்ற காரணத்தை முடிவாகச் சொல்கிறார். ஆனால், யோபுவின் துன்பத்திற்கு இதுதான் காரணம் என குறிப்பிட்டு எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. இப்புத்தகத்தை வாசிப்பவர்கள் தங்கள் வாயில் தங்கள் கைகளை வைத்துக் கொண்டு, சர்வ ஞானம் நிறைந்த, சர்வ வல்லமையுள்ள சிருஷ்டிகரை கேள்விகேட்க அல்லது குற்றம் சொல்ல உரிமை இல்லை. தேவன் அவர் அவருக்கு விருப்பமானவற்றைச் செய்கிறார், அப்படியாகச் செய்யும் போது, ஆவிக்குரிய உலகின் தேவதூதர்களுக்கும் பிசாசுகளுக்கும் அவர் சொல்வதைச் சுட்டிக்காடுகிறது. அதேவேளையில் அவரது மனதுருக்கத்தையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. ”கடவுளையும் மீறி தீமை நேரிடல் என்ற தத்துவம் அதாவது, மனுஷனுடைய பேரிடர் மற்றும் துன்பத்தில் தேவனின் இடைபடுதல் குறித்து விளக்க மனுஷன் எடுக்கும் முயற்சி, இந்த வித சூழ்நிலைகளில் மிக பொருத்தமானதாகத் தான் தெரிகிறது, ஆனால் நாம் பார்க்கும் போது, தேவனுக்கு இடையில் எந்தவொரு மனுஷனும் ”நியாயவாதி/ வழக்காடுபவராக” வரத் தேவையில்லை என்பதே முடிவாகிறது. மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள் என்ற உபாகம் 29:29 கூற்றினையே யோபு புத்தகம் மனவேதனையோடு விவரிக்கிறது.
யோபுவின் குற்ற உணர்வும் அப்பாவித்தனமும் அனேக கேள்விகளை எழுப்புகின்றன. தேவன் யோபுவை, உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்கு பயந்தவன், பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் என்கிறார். யோபுவிற்கு ஆறுதல் சொல்ல வந்தவர்கள் அவன் அனுபவித்த துன்பத்தின் அடிப்படையில்: யோபு பாவம் செய்யவில்லையா? என இக்கட்டான கேள்வியைக் கேட்கின்றனர். அனேக இடங்களில் தான் பாவம் செய்தேன் என்று யோபு ஒப்புக்கொள்கிறார் (7:21; 13:26).
ஆனால், யோபு படும் பாடுகளின் வேதனையின் ஆழத்தை அவனது பாவங்களுடன் ஒப்பிட்டு யோபு கேள்வி எழுப்புகிறார். இறுதியில் யோபு அவனது சிநேகிதர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உரிமைகோரல்களுக்கு யோபு நிரபராதி என்று கூறி தேவன் முற்றுப்புள்ளி வைக்கிறார் (அதிகாரங்கள் 38-41). ஆனால் இதனையும் தேவன் சொன்னார், “யோபு பேசின வார்த்தைகள் சரி எனவும் ஆறுதல் தர வந்தவர்கள் பேசின வார்த்தைகள் தவறு எனவும்” என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை” என தேவன் அறிக்கையிடுகிறார் (42:7).
யோபுவின் கஷ்டங்களூக்கு யோபுவும் அவனுக்கு ஆறுதல் தரும்படி வந்தவர்களும் பேசிய ”முந்தைய புரிந்துகொள்ளுதல்களுக்கு” தனியாக கணக்கு வைப்பது ஒரு சவாலாக வருகிறது. வெளிப்படையாக, தேவன் பொல்லாப்பை தண்டிக்கிறார் என்றும், கீழ்ப்படிகிறவர்களுக்கு பலன் அளிக்கிறார் என்றும், இதற்கு விதிவிலக்கு இல்லை என எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். யோபு தான் குற்றமற்றவனாக இருந்தும் பாடுகள் பட்டதினால், நீதிமான்களும் தண்டிக்கப்படுகிறார்கள் – இது ஒரு விதிவிலக்கு எனக் கூறும்படியான நிலைக்கு வரும்படி கட்டாயப்படுத்தி தள்ளப்பட்டார். பொல்லாதோர் செழிப்படைகின்றனர் என்பதையும் அவர் கண்டார். இது விதிக்கு சிறிய விதிவிலக்குகளுக்கும் மேலாக இருப்பதால், யோபு – தேவனின் சர்வவல்ல இறையாட்சியில் - அவர் தம்முடைய ஜனத்தாருடன் இடைபடுவதினை குறித்து எளிமையாக என்ன நினைத்திருந்தாரோ அதனை திருப்பி யோசிக்க வைக்கும்படிசெய்தது. யோபு எப்படிப்பட்ட ஞானத்தை தழுவிக்கொள்ளும்படி விரும்பினாரோ, அது வெறும் பலன்பெற்றுத்தரும் அல்லது தண்டனையைக் கொண்டு வரும் என்ற வாக்குதத்ததை சார்ந்து இருக்கவில்லை. யோபுவிற்கும் அவனை குற்றம் சாட்டினவர்களுக்கும் இடையில் நடந்த நீளமான, வெறித்தனமான வாதங்கள், யோபின் அனுபவங்களில் தேவனது பழிவாங்குதல்கள் இவை என்று எண்ணிக்கொண்டிருந்து, உணரப்பட்ட சமத்துவமில்லாத தன்மையை சமரசம் செய்யும்படி நடந்தன. இப்படிப்பட்ட அனுபவ அணுகுமுறை அபாயகரமானது. இறுதியில், தேவன் யோபுவிற்கு விளக்கம் ஏதும் தரவில்லை; மாறாக, இதில் சம்பந்தப்பட்ட யாவருக்கும் சிருஷ்டிகரில் ஆழமான நம்பிக்கை வைக்கும்படிக்கு ஓர் அழைப்பை விடுத்தார். தேவன், பாவத்தால் குழம்பிப் போய் இருக்கும் உலகினை, ஞானம் மற்றும் இரக்கத்தினால் வழிநடத்தி, வல்லமை மற்றும் அதிகாரத்துடன் ஆளுகை செய்து வருபவர் என்பதை இதிலிருந்துக் கற்றுக் கொள்கிறோம்.
இந்த புத்தகத்தை புரிந்துகொள்வதற்கு தேவையானவை: 1) ஞானத்தில் இருக்கும் வேறுபாடு, விசேஷமாக, மனுஷனுடைய மற்றும் தேவனுடைய ஞானத்தில் இருக்கும் வேறுபாடு. மற்றும் 2) யோபுவும் அவனது சிநேகிதர்களும் சூழ்நிலைக்கு துல்லியமான முறையில் விளக்கம் தருவதற்குத் தேவையான தெய்வீக ஞானத்தைப் பெற்றிருக்கவில்லை. அவனது தோழர்கள் தொடர்ந்து முயன்ற போதிலும், யோபு தேவனுடைய சர்வவல்ல இறையாட்சியின்மீதும் தேவனின் இரக்கத்திலும் மனநிறைவுடன் இருக்க கற்றுக்கொண்டே வந்தார். இதற்குரிய தீர்வு அல்லது திருப்புமுனை யோபு 28-ஆம் அதிகாரத்தில் இருக்கிறது. அங்கே தேவனுடைய ஞானத்தின் தன்மைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது: தேவனுடைய ஞானம் அரிதானது மற்றும் விலையில்லாதது. மனிதன் விலைகொடுத்து அதை வாங்கிவிட முடியாது. முற்றிலும் தேவனே அதற்குச் சொந்தக்காரர்.
பரலோகத்தில் தொடர்ச்சியாக என்ன நடந்து கொண்டிருக்கிறது, அல்லது தேவனுடைய நோக்கங்கள் தான் என்ன என்பதும் நமக்குத் தெரியாது. ஆனாலும், நாம் அவரில் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும்.
இப்புத்தகத்தில் இருந்து – ”தேவனுடைய ஞானம் என்பதற்குப் பின்னே உள்ள இடத்தினை தான் - இக்காரணங்களினால் விசுவாசிகள் துயரப்படுகிறார்கள் என்பது எடுத்துக்கொள்கிறது” என அறிகிறோம்.
சுருக்கம்
1. தடுமாற்றம் (1:1-2:13)
அ. யோபு அறிமுகம் (1:1-5)
ஆ. சாத்தானுடன் உண்டான தெய்வீக விவாதங்கள் (1:6-2:10)
இ. சிநேகிதர்களின் வருகை (2:11-13)
2. விவாதங்கள் (3:1 – 37:24)
அ. முதல் சுற்று (3:1 -14:22)
1. யோபுவின் விரக்தியை வெளிப்படுத்தும் முதல் பேச்சு (3:1 -26)
2. எலிப்பாஸின் -அன்பான எதிர்ப்பை வெளிப்படுத்திய மற்றும் தாழ்மையையும் மனந்திரும்புதலையும் காட்ட - வேண்டிக்கொள்ளும் முதல் பேச்சு. (4:1 - 5:27)
3. யோபுவின் வேதனை நிறைந்த மற்றும் சோதனைகளைக் குறித்த கேள்விகள், அவனது வேதனையான வேளையில் அனுதாபம் காட்டக் கேட்டுக் கொண்ட பதில் (6:1-7:21)
4. தேவனை நீ தூண்டிவிட்டாய் என குற்றம் சாட்டி பில்தாத் பேசிய முதல் பேச்சு (8:1-22)
5. பில்தாத்தின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டவனாக யோபு, இதில் நியாயமில்லாததினால் அதற்காக எதிர்ப்பு தெரிவிப்பேன் என யோபு பேசிய பதில் (9:1-10:22).
6. சோபாரின் முதல் பேச்சு, “நீ தேவனுடன் உறவை சரிசெய்து கொள் என்பதே” (11:1-20).
7. அவனது சிநேகிதர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை தேவன் ஒருவரே அறிவார். மேலும் அவருடன் பேசுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி யோபு பேசின பதில் (12:1- 14:22).
ஆ. இரண்டாம் சுற்று (15:1-21:34)
- எலிப்பாஸ் இரண்டாம் சுற்றுப் பேச்சு: யோபு தன் சொந்த அனுமானத்தை எடுத்துக் கொண்டு, மூதாதையரின் ஞானத்தை நீ கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று பேசியது (15:1-35)
- எலிப்பாஸுக்கு யோபு பதில் அளித்தது – தேவனிடம் நியாயமில்லாமல் அவனைக் குற்றம் சாட்டுபவர்களைக் குறித்து மேல்முறையீடு செய்வதாக இருந்தது (16:1 – 17:16)
- அவன் அனுபவிக்க வேண்டியதைத் தான் யோபு அனுபவிக்கிறான் என யோபுவிடம் பில்தாத் பேசிய இரண்டாம் சுற்றுப் பேச்சு (18:1-21)
- பில்தாத்தின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்க்கும் விதமாக யோபு தேவனிடத்தில் இரக்கத்திற்காக மன்றாடும் மன்றாட்டுபதில் (19:1-29)
- தேவனுடைய நீதியை குறித்து நீ கேட்ட கேள்வியே தவறு - என சோபார் இரண்டாவது சுற்றில் சுட்டிக் காட்டுகிறார் (20:1-29)
- சோபாருக்கு யோபு பதில் அளித்தில் – மெய்யானவற்றுடன் தான் சிறிது காலம் தொடர்பில் இல்லை எனக் கூறுகிறார் (21:1-34)
இ. மூன்றாவது சுற்று (22:1-26:14)
1. எலிப்பாஸ் மூன்றாம் சுற்றுப் பேச்சு: யோபு தேவனின் நியாயத்தீர்ப்பைக் குறித்து விமர்சனம் செய்ததைக் கண்டிக்கிறது (22:1-30)
2. எலிப்பாஸுக்கு யோபு பதில் அளித்தது – யாவற்றையும் தேவன் அறிவார் தான் குற்றமற்றவன் என்பதையும், தேவன் ஒருவரே - சுத்திகரிக்க மற்றும் தேவைகளை சந்திப்பவர் என்பதால், பொல்லாதோருக்கு சிறிது காலம் தாற்காலிக வெற்றியை அனுமதிக்கிறார் என்கிறார். (23:1 -24:25)
3.பில்தாத்தின் மூன்றாம் சுற்றுப் பேச்சு – தேவனிடம் நேரடியாக யோபு முறையிட்டதை பரிகாசம் செய்கிறது (25:1-6)
4. யோபு பதில் அளித்தது: அவர்கள் நினக்கின்ற விதமாக தேவன் எளிமையானவர் அல்ல, மேலும் அவர் தமது பூரணமான ஞானத்தினால், பூரணமாக சர்வவல்ல இறையாட்சியைத் தந்துகொண்டிருக்கிறார் என்பது (26:1-14).
ஈ. யோபு தன்னை இறுதியாக பாதுகாத்துக் கொள்ளுதல் (27:1-31:24)
1. யோபுவின் முதலாவது தனக்குத் தானே பேசிக்கொள்ளும் பேச்சில் - அவர் தனது நீதியை உறுதிசெய்கிறார்- மேலும் மனிதனால் தேவனுடைய ஞானத்தை கண்டறிய முடியாது என்கிறார் (27:1 – 28:28).
2.யோபு இரண்டாவது தனக்குத் தானே பேசிக்கொள்ளும் பேச்சில் – அவர் தனது பழைய காலத்தை நினைவுகூறுகிறார், இப்போது இருக்கும் நிலைமையை விளக்குகிறார். மேலும் தான் குற்றமற்றவன் என்பதை எடுத்துக் கூறி, தேவன் தனக்கு பாதுகாப்பு தரவேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறார் (29:1-31:40).
உ. எலிகூவின் பேச்சுக்கள் (32:1 -37:24)
1. எலிகூ முட்டுக்கட்டையை நீக்கும் விதமாக விவாதத்தில் எலிகூ நுழைகிறார் (32:1-22)
2. எலிகூ யோபு தேவனை குற்றம் காண்பதாக அனுமானித்து, யோபுவை பாடுகளின் ஊடாகச் செல்ல அனுமதிப்பதிலும் கூட, தேவன் ஓர் அன்பான நோக்கத்தை வைத்திருப்பார் என்பதை அங்கீகரிக்காமல் பேசுகிறார் (33:1-33)
3. யோபு தேவனுடைய உத்தமத்தை குறித்து குற்றம் சாட்டினார் என்பதைக் கண்டித்து அது தெய்வீக வாழ்க்கைக்கு வழிவகுக்காது என்கிறார் (34:1-37)
4. எலிகூ கர்த்தருக்கென்று பொறுமையாக காத்திருத்தல் அவசியம் என்கிறார் (35:1-16)
5. எலிகூ, தேவன் யோபுவிற்கு ஒழுக்கம் கற்றுத்தருகிறார் என நம்புகிறார் (36:1-21)
6. எலிகூ, தேவன் நியாயம்விசாரிக்கவும், இரக்கம் காட்டவும் செயல்படும்போது ஒருவருடன் இடைபடுவதை, மனுஷ பார்வையாளர்கள் கவனித்து போதுமான அளவு புரிந்துகொள்ள முடியாது என வாதிடுகிறார் (36:22-37:24)
3. விடுதலை (38:1-42:17)
அ. தேவன் யோபுவினிடம் கேள்வி கேட்கிறார் (38:1 – 41:34)
1. தேவன் யோபுவிற்கு அளித்த முதல் பதில் (38:1 -40:2)
2. யோபு தேவனுக்கு தந்த பதில் (40:3-5)
3. தேவன் யோபுவிற்கு அளித்த இரண்டாம் பதில் (40:6 -41:34)
ஆ. யோபு அறிக்கையிதல், ஆராதனை செய்கிறார் மேலும் அவர் சரி என தேவனால் நிலைநிறுத்தப்படுகிறார் (42:1-17)
1. யோபு தன்னைத்தான் நியாயம் தீர்த்துக்கொள்கிறார் (42:1-6)
2. யோபு, எலிப்பாஸ், பில்தாத் மற்றும் சோபாரை கண்டிக்கிறார் (42:7-9)
3. தேவன் யோபுவின் குடும்பம், செல்வம் மற்றும் தீர்க்காயுசை தந்து அவன் வாழ்க்கையினை மீட்டு தருகிறார் (42:10-17)