வேதாகம வரலாறுகள்

எஸ்றா

தலைப்பு

சிறைபிடித்துச் செல்லப்பட்ட யூதர்கள் மீண்டும் எருசலேமுக்கு திரும்பும் சம்பவத்தில் வசனம் 7:1 வரை எஸ்றாவின் பெயர் காணப்படவில்லை என்றாலும், எஸ்றாவின் (“யெகோவா உதவிசெய்கிறார்”) பெயரை இப்புத்தகம் பெற்றுள்ளது. ஏனென்றால், யூத மற்றும் கிறிஸ்த பாரம்பரியம் வேதபாரகரும்-ஆசாரியருமாக இருந்த இவர் தான் இதன் ஆசிரியர் எனக் கருதுகிறது. 

ஆகமத்தின் ஆசிரியர் மற்றும் தேதி

எஸ்றாதான் ஆரம்பநாட்களில் ஒன்றாக இருந்த எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்களின் ஆசிரியராக இருக்கக்கூடும். எஸ்றா 4:8 – 6:18 மற்றும் 7:12-26 பகுதிகள் அராமிக் மொழியில் எழுதப்பட்டுள்ளன. எஸ்றா தன்னைப்பற்றிக் கூறும்போது தான் இதன் ஆசிரியர் என்று எங்கும் கூறாவிட்டாலும் அனைத்து வாதங்களும் அவரே ஆசிரியர் என்பதற்கு உறுதுணையாக நிற்கின்றன. அவர் எருசலேமுக்கு திரும்பின உடன் (கி.மு. 458), மூன்றாம்நபர் (படர்க்கை) பேசுவது போல் எழுதியதை விட்டு விட்டு, (தன்மை) முதல்நபர் பேசுவது போன்ற எழுத்துநடையைக் கொண்டு செல்கிறார். முதல் பகுதிகளில் அவர் தன் நினைவுகளில் இருந்தனவற்றை எழுதுவதால் மூன்றாம்நபர் கூறுவது போல் எழுதுகிறார். நாளாகம புத்தகத்தை எழுதியதும் எஸ்றா-வாகத்தான் இருக்கலாம் என நம்பப்படுகிறது. பழையஏற்பாட்டின் முந்தினபுத்தகத்தை எழுதியவரே 70 வருட சிறையிருப்பிற்குப் பின் அவருடைய ஜனங்களைத் தங்கள் சொந்த தேசத்திற்கு திருப்பிக் கொண்டு வந்து, தேவன் தாம் அருளின வாக்குதத்தத்தை நிறைவேற்றுவதில் எவ்வளவு உண்மையுள்ளவராக இருந்தார் என எடுத்துக்காட்டியது இயற்கையாக நிகழக்கூடிய சம்பவமே. நாளாகம புத்தகத்தை நாம் வாசிக்கும்போது, அதில் ஆசாரியரின் தொனி அதிகமாக காணப்படுகிறது, இதில் எஸ்றா ஆரோன் வம்சத்தில் வந்த ஆசாரியர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் (7:1-5). 2நாளாகமத்தை நிறைவு செய்யும் (36:22,23) வசனங்கள் எஸ்றா புத்தகத்தின் ஆரம்ப வசனங்களுக்கு (1:1-3a) கிட்டத்தட்ட ஒன்றானதாகவே இருப்பதால், இவ்விரண்டு புத்தகங்களின் ஆசிரியர் - எஸ்றாதான் என உறுதிசெய்கின்றது. 

எஸ்றா ஆசிரியராக இருந்தபடியால் எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்களில், விசேஷமாக எஸ்றா புத்தகத்தில் காணும் எண்ணற்ற ஆவணங்களை அணுக கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தார். பெர்சிய சாம்ரஜ்ஜியத்தின் அரசுகாப்பகத்தினை அணுக அனுமதி ஒருசிலருக்கே இருந்தது, அதில் எஸ்றா விதிவிலக்காக இருந்தவர் (எஸ்றா1:2-4; 4:9-22; 5:7-17; 6:3-12). 

எஸ்றா, தான் வேதபாரகர் என்ற அளவிலான பங்களிப்பு குறித்து 7:10-ல் இவ்வாறாக சொல்லப்பட்டுள்ளது “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும், நீதி நியாயங்களை உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்”. அவர் பலசாலியான, தெய்வீக மனிதர், நெகேமியாவின் காலத்தில் வாழ்ந்தவர் (நெகேமியா:8:1-9; 12:36). பழையஏற்பாட்டு புத்தகங்களின் வரிசையை (Canon) முதன்முதலில் ஏற்றுக்கொண்ட, பெரிய தேவாலயத்தின் நிறுவனர் இவரே என பாரம்பரியம் கூறுகிறது. 

பெர்சியாவில் இருந்து நாடு திரும்பிய இரண்டாவது நிகழ்விற்கு தலைமை ஏற்று நடத்திவந்தவர் - எஸ்றா (கி.மு. 485); ஆக, இந்த புத்தகத்தின் முழுபகுதியும் அடுத்து வந்த அனேக பத்தாண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம் (கி.மு. 457-444).

பிண்ணனி மற்றும் அமைப்பு

தேவன் இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து, வழிநடத்திக் கொண்டுவந்தார் (கி.மு. 1445) நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு பிறகு, எஸ்றாவின் சம்பவங்கள் நிகழ்வதற்குமுன், “அவர்கள் தேவனுடன் கொண்டிருக்கும் உடன்படிக்கையை மீறும் போது, அவர் மீண்டும் அந்நிய தேசத்தினர் இஸ்ரவேலரை அடிமைகளாக்கிச் செல்ல அனுமதித்து விடுவார்” என தேவன் அவருடைய ஜனங்களிடத்தில் எச்சரித்திருந்தார் (எரேமியா:2:14-25). தேவன் தீர்க்கதரிசிகளின் வாய்மூலமாக மீண்டும் மீண்டும் எச்சரிக்கை தந்திருந்த போதிலும், இஸ்ரவேல் மற்றும் யூதா மக்கள் தங்கள் கர்த்தரை நிராகரிப்பதையே தெரிந்து கொண்டனர். அந்நிய தேவர்களை வணங்குவதில் பங்கு பெற்றனர், விக்கிரகாரதனையுடன் உண்டான அருவருப்பான செயல்களிலும் ஈடுபட்டனர் (2ராஜா.17:7-18; எரேமியா 2:7-13). தேவன் தாம் சொல்லியிருந்தபடியே, வழிதவறிய இஸ்ரவேல் மற்றும் யூதா தேசத்தினர் திருத்தும்படி - அசீரியர்களையும் பாபிலோனியரையும் வரவழைத்து அவர்களை சிட்சித்தார். கி.மு.722-வில் வடதேசத்து பத்து கோத்திரத்தாரை நாடு கடத்தி அவர்களை தேசமெங்கும் சிதறடித்தனர் (2 ராஜா.17:24-41; ஏசா.7:8). பல நூற்றாண்டுகளுக்குப் பின், கி.மு. 605-586வில் பாபிலோனியர்களால் துரத்தப்படச் செய்து, எருசலேமின் மக்கள்தொகையை குறைத்தார். யூதா தொடர்ந்து உடன்படிக்கையை மீறி உண்மையில்லாது இருந்தபடியால், தேவன் 70 வருட சிறையிருப்புக்கு அனுமதித்து அவர்களை சிட்சித்தார் (எரேமியா 25:11). பின்னர் எஸ்றா மற்றும் நெகேமியா ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி அவர்கள் எருசலேமுக்கு திரும்பினார்கள்.  பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ், பாபிலோனியரை 539ல் தோற்கடித்தான். 

எஸ்றா புத்தகம் ஒருவருடம் கழித்து கோரேஸ் – ”யூத ஜனங்கள் எருசலேமுக்குப் போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்” என்ற ராஜாவின் ஆணையுடன் தொடங்குகிறது. யூதர்களின் தேசிய கால கணிப்பின்படியான பண்டிகைகளும் பலியிடுதலும் ஆசரிக்கப்படவும், இரண்டாம் தேவாலயம் கட்டப்படுதல் (கி.மு.536-ல் ஆரம்பித்து கி.மு.516வில் முடிந்தது) உள்ளிட்ட பணிகள் திரும்ப நடைபெறவும் ஆரம்பித்தது என்ற குறிப்பையும் எழுதுகிறது. 

இஸ்ரவேலில் இருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தப்படுதல் மூன்று கட்டங்களாக நடைபெற்றதால் (கி.மு605, கி.மு.597 மற்றும் கி.மு.586), ஒன்பது தலைமுறை இடைவெளிக்குள் (90 ஆண்டுகள்), எருசலேமுக்கு திரும்ப வருதலும் 3 பகுதிகளாக நிறைவேறினது. கிமு. 538ல் செருபாபேல் முதலில் திரும்பினது.  அவரைத் தொடர்ந்து எஸ்றா, அவர் இரண்டாவது எருசலேமுக்கு திரும்பிவருதலை கி.மு.485-வில் வழிநடத்தினார். அதற்கு 13 வருடங்களுக்குப் பின் நெகேமியா கி.மு.445-வில் வழிநடத்தி அழைத்து வந்தார். எந்த எதிர்ப்பும் இல்லாத அரசியல் தன்னாட்சி என்னவோ ஒருபோதும் திரும்ப ஏற்படவில்லை. செருபாபேலின் நாட்களில் கி.மு.520 மற்றும் அதற்கு அடுத்த ஆண்டுகளில் தீர்க்கதரிசிகள் ஆகாய் மற்றும் சகரியா பிரசங்கித்து வந்தனர்.

வரலாற்று கருப்பொருள் மற்றும் இறையியல் தொடர்புடைய கருப்பொருட்கள்

பாபிலோனிய சிறையிருப்பில் இருந்து யூதர்கள் திரும்பி வந்தது, எகிப்தியரின் அடிமைத்தனத்தில் இருந்து தேவன் தன் இறையாட்சியினால் விடுவித்து எப்படி அழைத்துவந்தாரோ அதேப்போல் இதுவும் இருப்பதால், இது இரண்டாம் யாத்திராகமம் போன்று காட்சியளிக்கிறது. அசல் யாத்திராகமத்தில் நிறைவேறின செயல்பாடுகளினை ஒத்த செயல்கள் பாபிலோனில் இருந்து திரும்பும் போதும் நிகழ்ந்தது. 1) தேவாலயமும் பட்டணத்தின் மதில்சுவர்களும் திரும்ப எடுத்துக் கட்டப்பட்டது; 2) நியாயப்பிரமாணம் திரும்ப நிலைநாட்டப்பட்டது – இச்செயல், செருபாபேல், எஸ்றா மற்றும் நெகேமியா இவர்களை ஒன்று சேர பார்க்கும் போது, பார்ப்பதற்கு இரண்டாவது மோசே போல் தோற்றமளித்தது; 3) உள்ளூர் சத்துருக்களின் சவால் 4) யூதர்கள் அல்லாதவர்களுடன் திருமண ஒப்பந்தத்தில் ஈடுபட சோதிக்கப்பட்டு, முடிவில் விக்கிரக ஆராதனையில் முடிவடைகிறது. அசலான யாத்திராகம நிழ்விலும், பாபிலோனில் இருந்து நாடு திரும்பிய போதும் ஏற்பட்ட இணையொத்த நிகழ்வு- திரும்பி வந்தவர்களுக்கு தேவன் திரும்ப ஓரு புதிய ஆரம்பத்தை தந்திருக்கிறார் என்ற உணர்வினை அவர்கள் அவசியம் பெற்றிருப்பார்கள் என்பதே.

தேசத்திற்கு திரும்பி வந்தபோது, எஸ்றா வேதபாரகராக இருந்தபடியால் பெர்சியாவில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த நிர்வாக ஆவணங்கள் அவரை ஈர்த்தது. ராஜரீக நிர்வாக ஆவணங்களும் “அவனுடைய தேவனாகிய கர்த்தரின் கரம் அவன் /என் மேல் இருந்ததினால்” (7:6,28) என்ற வார்த்தைகளும் ஒன்று சேரும் போது மிக வல்லமையான செய்தியை எடுத்துச் செல்கின்றன. கட்டளைகள், பிரகடனங்கள், நிருபங்கள், பட்டியல்கள், வம்சவரலாறுகள், நினைவு குறிப்புகள் என இப்படி - இதில் அதிகமானவை பெர்சிய அரசாங்கத்தினால் எழுதப்பட்டவை, இவை இஸ்ரவேலரை மறுசீரமைப்பதில் இறையாட்சி செய்யும் தேவனுடைய கரம் அவர்களுக்காக செயல்பட்டது என்பதற்கு சான்று அளிக்கின்றன.  அந்நிய தேவர்களை சேவிக்கும் ராஜா மற்றும் அவன் வழிவந்தவர்களப் பயன்படுத்தி ஓர் இசைபண் சுருதி சேர்க்க ஒன்றுசேர்வது போல் அனைத்து நிகழ்வுகளையும் காரணத்துடன் ஒன்று சேர்த்து கடந்தகால சோகமான சூழ்நிலையை (சிறைபிடிப்பை) மாற்றி யூதாவிற்கு ஓர் எதிர்கால நம்பிக்கையை (சொந்த தேசத்திற்கு திரும்புதல்) தந்தார். இந்த உலகத்தின் எந்தவொரு ராஜாவிற்கும் மேல்லோங்கி நிற்கும் தேவனுடைய நிர்வாகம், ஆகையால் “ஒட்டுமொத்தமாக, இஸ்ரவேலருக்கு தேவனுடைய உடன்படிக்கையின் இரக்கம் தொடர்ந்து  கிடைக்கப்பெறுகிறது” என்ற செய்தியே எஸ்றா புத்தகம். 

எஸ்றா புத்தகத்தின் முன்நிற்கும் மற்றொரு கருப்பொருள் - உள்ளூரில் இருந்த - அசீரியா தேசத்தில் இருந்து வந்து குடியமர்த்தப்பட்ட – சமாரியாவில் குடியிருந்தோரின் எதிர்ப்பு (எஸ்றா 4:2; உறுதிசெய்ய யோவான் 4:4-42 ஐப் பார்க்கவும்). ஆலய கட்டுமான பணிகளை தந்திரமாக தகர்க்க, இஸ்ரவேலரின் எதிரிகள் தேவாலயத்தை திரும்ப கட்டும் பணியில் தங்களையும் சேர்த்துக்கொள்ள கோரினர் (4:1,2). அவர்களின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட போது, அவர்கள் யூதர்களுக்கு விரோதமாக ஆலோசனைக்காருக்கு கைக்கூலிக்கட்டினார்கள் (4:4,5). ஆனால் கர்த்தர் தாமே, ஆகாய் மற்றும் சகரியா இருவரின் பிரசங்கத்தினால் ஜனங்களின் ஆவியை அனல் மூட்டி எழுப்பிவிட்டு அவ்ர்களின் தலைவர்களுக்கு - பெலன்கொண்டு, வேலையை நடப்பியுங்கள்; நான் உங்களுடன் இருக்கிறேன் என்ற வார்த்தைகளை தீர்க்கதரிசனமாகச் சொல்லி ஆலயத்தை திரும்ப கட்டச் செய்தார்கள் (ஆகாய் 2:4; உறுதிபடுத்தும் வசனம் எஸ்றா 4:24 – 5:2). தேவாலயம் கட்டுமானப்பணிகள் மீண்டும் தொடங்கி, தேவாலயம் கட்டும் வேலை நிறைவுற்றது, பிரதிஷ்டைச் செய்யப்பெற்றது, மீண்டும் தேவனுடைய சேவைக்கென்று பயன்பட்டது. (கி.மு516).

விளக்கம் அளிப்பதில் உள்ள சவால்கள்

சொந்த தேசத்திற்கு திரும்பி வந்த பின் எஸ்றாவினால் எழுதப்பட்ட 1மற்றும்2 நாளாகமம் வரலாற்று புத்தகங்கள் - தேசம் திரும்பிய பின் எழும்பிய தீர்க்கதரிசிகளான ஆகாய், சகரியா மற்றும் மல்கியாவுடன் எப்படி தொடர்புபடுத்திக் கொள்கின்றன? நாளாகமத்தின் இரண்டு புத்தகங்களும் எஸ்றாவினால் வாக்குதத்தம் செய்யப்பட்ட தாவீதின் அரசாட்சியை, ஆரோனின் ஆசாரியத்துவத்தை, நினைவுக்கு கொண்டுவந்து தேவாலய ஆராதனையை பாராட்ட எழுதப்பட்டவை. தேவாலயம் திரும்ப எடுத்து கட்டப்பட்ட எஸ்றா (அதிகாரங்கள் 4-6) காலகட்டத்தில் ஆகாய், சகரியா இருவரும் தீர்க்கதரிசனம் உரைத்து வந்தனர். நெகேமியா பெர்சியா தேசத்திற்கு சென்றிருந்த போது மல்கியா எழுதினார் (நெகேமியா 13:6).

இரண்டாவது, இந்த புத்தகம் என்ன நோக்கத்தை நிறைவேற்றுகிறது? பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டுச் சென்று பின் அங்கிருந்து எருசலேம் திரும்பும் குறிப்பில் மூன்றில் இரண்டு பங்கு குறிப்பை எஸ்றா புத்தகம் பேசுகிறது. செருபாபேல் வழிநடத்துதலில் (கி.மு.538) வந்த முதல் திரும்பி வருதல் (அதிகாரங்கள் 1-6), எஸ்றாவின் தலைமையில் இரண்டாவது திரும்பி வருதல் (கி.மு.458) நிறைவேறியது (அதிகாரங்கள் 7-10). எஸ்றா தனது வம்சத்தின் மூலத்தை எலியேசர், பினேகாஸ் மற்றும் சாதோக் (எஸ்றா 7:1-5) வரை கண்டறிந்து ஆரோன் முறை ஆசாரியத்துவத்துவத்தின் முக்கியத்துவத்தை திரும்பவும் நிலைநாட்டுகின்றார். இரண்டாம் தேவாலயம் கட்டப்படுவதைக் குறித்து எழுதி உள்ளார் (அதிகாரங்கள் 3-6) அந்நிய தேசத்து பெண்களுடன் கலப்புமணத்தில் ஈடுபட்டதினால் வந்த பாவத்தை அவர் எப்படி கையாண்டார் என்பதைக் குறித்து அதிகாரம் 9,10ல் பேசுகிறார். அதிமுக்கியமாக, தேவனின் ஆளுகைசெய்யும் கரம் எப்படியாக ராஜாக்களை செயல்பட வைத்து எதிர்வந்த அத்தனை எதிர்ப்புகளையும் மேற்கொண்டு, இஸ்ரவேல் - ஆபிரகாமின் வித்து (வம்சவரலாற்றில்) தேசத்தின் வழியாகவும் தனிநபராகவும்   வந்தவர்கள் என்பதை ஆபிரகாம், தாவீது மற்றும் எரேமியாவுக்கு வாக்குதத்தம் செய்து தரப்பட்ட தேசத்தில் நிலைநாட்டுகிறார்.

மூன்றாவதாக, கோரேஸ் அரசாண்ட காலத்தில் தேவாலயம் கட்டப்பட்டது. அகாஸ்வேரு (4:6) மற்றும் அர்தஷ்டா (4:7-23) வின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால், அவர்களின் ஆட்சிகாலத்தில்கூட தேவாலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்ற முடிவிற்கும் ஒருவர் வரலாம். ஆனால், அப்படி முடிவு செய்வது வரலாற்றை மீறுவதாக ஆகிறது. எஸ்றா அகாஸ்வேரு மற்றும் அர்தஷ்டாவின் கட்டிட சாதனைகளக் குறித்து இங்கு பேசவில்லை. மாறாக, தேவாலயம் கட்டப்பட்ட பிறகு அவர்களின் எதிர்ப்பு – எஸ்றாவின் காலம் வரைக்கும் கூட நீடித்தது என்பதைக் குறித்து எழுதுகிறார். எஸ்றா 4:1-5 மற்றும் 4:24 – 5:2 செருபாபேல் காலத்தில் தேவாலயம் மறுபடியும் கட்டப்பட்டதைக் குறித்து பேசுகிறது; அடைப்புகுறிப்பில் இருக்கிற 4:6-23 எஸ்றா மற்றும் நெகேமியாவின் காலத்தில் வரலாற்றில் ஏற்பட்ட எதிர்ப்பை மீண்டும் கணக்கெடுத்துக் காட்டுகிறது) என்பதை இதிலிருந்து வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம். 

நான்காவது, எஸ்றாவின் காலவரிசையில் எஸ்தர் எந்த இடத்தில் பொருந்துகிறாள் என்பதை விளக்கம் தருபவர்தான் பொருத்திக் கொள்ள வேண்டும். கவனமாக சோதித்து பார்க்கும் போது, அதிகாரங்கள் 6 மற்றும் 7க்கும் இடையில் இச்சம்பவம் நடந்திருக்கும் எனக் குறிப்பிடுகிறது. 

ஐந்தாவது, எஸ்றா 10-ல் நாம் காணும் விவாகரத்து தேவன் விவாகரத்தை வெறுக்கிறார் (மல்கியா 2:16) என்ற உண்மையுடன் எப்படி சம்பந்தபட்டுள்ளது? எஸ்றா எந்தவொரு விதிமுறையையும் நிர்ணயிக்கவில்லை ஆனால் வரலாற்றில் நடைபெற உள்ள ஒரு விசேஷ நிகழ்ச்சியை மைய்யமாக வைத்து இதனுடன் இடைபடுகிறார். ஒருபெரிய தவற்றினை தவிர்ப்பதற்காக சிறிய தவறை செய்வதை தெரிந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற நியதியின்படி இது தீர்மானிக்கப்பட்டது. யூதர்குலம் அந்நியபெண்களுடன் கலப்புமணத்தில் ஈடுபட்டதால், தேசமும் தாவீதின் வம்சத்தில் மேசியா தோன்றுவார் என்ற வம்சவழி புறஜாதியாரினால் கலப்படம் ஆகி வம்சவழி முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்பதைக் கருத்தில் எடுத்துக் கொண்டனர். இப்படியாக-இந்த பிரச்சினையை தீர்த்துவைப்பது, தேவனின் இரக்கத்தை பெரிதுபடுத்துகிறது ஏனென்றால் இதற்கு மாற்று தீர்வு என்று பார்ப்போமானால், இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் (கணவன், மனைவிகள் மற்றும் குழந்தைகள்) யாத்திராகமத்தில் சித்தீம் என்ற இடத்தில் எப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அப்படி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் (எண்.25:1-9) இது தவிர்க்கப்பட்டது.

சுருக்கம்

I. சொந்த தேசத்திற்கு - செருபாபேலின் தலைமையில் முதலாம் திரும்பி வருதல் (1:1 -6:22)
அ. திரும்புவதற்கு கோரேஸ் ஆணையிடல் (1:1-4)
ஆ. தேவாலயத்தை திரும்பகட்டுவதற்கு பணக்குவியல் (1:5-11)
இ. திரும்பினவர்கள் (2:1-70)
ஈ. இரண்டாம் தேவாலயத்தைக் கட்டுதல் (3:1 -6:22)
    1. கட்டிடவேலை ஆரம்பித்தல் (3:1 - 6:22)
    2. எதிர்ப்பு எழும்புதல் (4:1-5)
    3. எதிர்கால எதிர்ப்பினை குறித்து விரிவான உரையாடல் (4:6-23)
    4. கட்டிட வேலை புதுப்பிக்கப்படல் (4:24 -5:2)
    5. எதிர்ப்பு புதிப்பிக்கப்படுதல் (5:3 -6:12)
    6. தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுதல் (6:13-22)
 
II. சொந்த தேசத்திற்கு - எஸ்றாவின் தலைமையில் வரும் - இரண்டாம் திரும்பி வருதல் (7:1 -10:44)
அ. எஸ்றா வின் வருகை (7:1 – 8:36)
ஆ. எஸ்றா எழுப்புதலை தலைமை ஏற்று நடத்துதல் (9:1 -10:44).

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.