வேதப்பாதுகாவல் (apologetics)

WhatsApp Image 2025 02 25 at 16.03.48 5f40af3f

ஆசிரியர்: கே. வித்யாசாகர்

தமிழாக்கம்: ஜோசப் கோவிந்த்

இதற்கு முன்பு நான் எழுதிய கட்டுரையில் “தேவனுடைய வார்த்தை பிறமத வேதங்களில் எழுதப்பட்டதா? என்ற தலைப்பில் எழுதினேன்.

அதன் தொடர்ச்சியாகவே, தேவன் அவருடைய வார்த்தையை பிறமத வேதங்கள் எழுதப்படாவிட்டாலும் சிலர் அதை திரித்துக் கூறும் சந்தர்ப்பத்தை, சுவிசேஷம் பிரசங்கிக்கும் போது குறிப்பிடலாம் என்று சிலர் வேதத்தை தங்களுக்கு ஏற்றவாறு திருத்து சொல்லுகிறார்கள். இது வேதபூர்வமானதா? அல்லது முரணானதா? என்பதைக் குறித்து இந்த கட்டுரையில் நான் விளக்கப் போகிறேன்.

(அப்போஸ்தலர் 17:28) "ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்."

இந்த வசனத்தை அப்போஸ்தலனாகிய பவுல் ஏதென்ஸ் என்ற பட்டணத்தில் உள்ள மார்ஸ் மேடையில் பேசியதை நாம் கவனிக்கிறோம். "நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்" என்று அவர்கள் புலவர்களின் வார்த்தைகளாக இந்த வார்த்தைகளை அவர் குறிப்பிடுகிறார். இவற்றை நம்பியிருக்கும் சிலர், ஒருபுறம், மற்ற மத புத்தகளிலும் தேவனின் வார்த்தை எழுதப்பட்டுள்ளது என்று போதிக்கிறார்கள், மேலும் அப். பவுல் சுவிசேஷம் அறிவிக்க அது எழுதப்படாவிட்டாலும் அவற்றை அவர் குறிப்பிட்டுள்ளதால், மறுபுறம், நாம் பிரசங்கிக்கலாம். பிற மத புத்தகங்களில் உள்ள சுவிசேஷத்திற்கு சாதகமான காரியங்களைக் குறிப்பிடுவதன் மூலம் புறஜாதிகளுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க பயன்படுத்தலாம். ஆனால் அப். பவுல் அவர்கள் புலவர்களை குறிப்பிடும் சந்தர்ப்பத்தை பார்த்தால், இவ்விரு கருத்துக்களும் தவறானவை என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இங்கு முதலில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது, என்னவென்றால் அப். பவுல் ஏதென்ஸ் பட்டனத்தாரின் புலவர்கள் சொல்லிய வார்த்தைகளை அவர் குறிப்பிட்டாலும், அந்த வார்த்தைகள் தேவனால் எழுதப்பட்டவை என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை. இது சாத்தியமற்றது என்று வேதம் கூறுகிறது, எனவே அவர்களின் முதல் எண்ணம் அர்த்தமற்றதாய் ஆகிவிடுகிறது. அப். பவுல் குறிப்பிடும் இந்த புலவர்கள் யார்? அவர்கள் சொல்லிய மேற்கோள்கள் எதில் எழுதப்பட்டது? அதில் இன்னும் வேறு என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன், ஏதென்ஸ் பட்டணத்தைப் பற்றியும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும், அவர்கள் மத்தியில் பேசிய அப். பவுலின் நிலை பற்றியும் அறிந்து கொள்வோம்.

தானியேல் புத்தகத்தில் குறிப்பிட்ட உலகை ஆளும் இரண்டாம் பேரரசாக நாம் பார்க்கும் மேதிய பாரசீக சாம்ராஜ்யத்தை அலெக்சாண்டர் தோற்கடித்து, மூன்றாவது இராஜ்யமாக கிரேக்க சாம்ராஜ்யத்தை நிறுவிய பிறகு, இந்த ஏதென்ஸ் பட்டணம் கிரேக்கப் பேரரசின் தலைநகராக இருந்தது. உலகப் புகழ்பெற்ற தத்துவவாதிகள்: அரிஸ்டாட்டில், பிளேட்டோ, சாக்ரடீஸ் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்." (1 கொரிந்தியர் 1:22) -ல் அப். பவுல் கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; எனவே ஞானத்தைப் பெறுவதற்கான கிரேக்கர்களின் விருப்பமும் அவர்களின் தேடுதலும் எவ்வளவு உயர்ந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால்தான் அவர்கள் உலகில் புதிதாக தோன்றிய எதுவாயினும் அதை அவர்கள் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். (அப்போஸ்தலர் 17:21). ஞானத்தைப் பெறுவதில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்திற்கு மேலதிகமாக, அவர்கள் பல கடவுள்களை வணங்குவதில் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களாக இருந்தார்கள். (அப்போஸ்தலர் 17:16 ). இவைகள் எல்லாம் அந்த பட்டணத்தின் வரலாறு.

சரி, இப்போது அந்த பட்டணத்துக்குள் நுழைந்த அப். பவுலின் நிலையை குறித்துப் பார்ப்போம். (அப்போஸ்தலர் 17:18) “அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம் பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள். அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா? எபிகூரியர் மற்றும் ஸ்டோயிக்குகளில் சில ஞானிகள் அவருடன் வாக்குவாதம் செய்தனர்.” இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், புறஜாதிகளுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது, ​​அவர்கள் தங்கள் மத நூல்களைப் பயன்படுத்தினார்.

அப். பவுலுக்கு அத்தகைய அடிப்படை மனப்பான்மை இருந்தால், அவர் ஏன் முன்னதாக ஏதென்ஸ் மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவில்லை? எப்பிக்கூர் மார்ஸ் மேடைக்கு அழைத்துச் செல்லும் வரை அந்த புலவர்களின் வார்த்தைகளை ஏன் குறிப்பிடவில்லை? அல்லது பவுல் புறஜாதிகளுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்போது இதற்கு முன்பு எப்போதாவது இதுப்போன்று பிரசங்கித்தாரா? என்பதை ஆராய்ந்தால் அப்படிப்பட்ட ஆதாரங்கள் நமக்கு வேறு எங்கும் இல்லை. அவர் சுவிசேஷத்தை எவ்வாறு பிரசங்கித்தார் என்பதை அவருடைய சொந்த வார்த்தைகளில் பாருங்கள்.

(அப்போஸ்தலர் 26:22,23) “கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுய ஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.

(அப்போஸ்தலர் 14:15-17) “மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.”

இந்த சந்தர்ப்பத்தின் படி, பவுல் பழைய ஏற்பாட்டு வேதத்தை புறஜாதியார் அல்லது யூதர்களிடம் குறிப்பிட்டார், ஏனென்றால் அவைகள் சில சமயங்களில் புறஜாதிகளால் புரிந்து கொள்ளப்படவில்லை, எனவே அவர் படைப்பில் தேவனின் குணாதிசயங்களின் அடிப்படையில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார், அவர் எங்கும் புறஜாதிகளின் மத நூல்களிலிருந்து ஒப்பிட்டு சுவிசேஷத்தை பிரசிங்கிக்க முயற்சிக்கவில்லை.

இப்போது எபிக்கூர் மார்ஸ் மேடைக்கு பவுலை அழைத்துச் சென்ற இரண்டு குழுக்களைப் பற்றி அறிந்து கொள்வோம். கி.மு. 300 -ம் ஆண்டுகளுக்கு முன்பு "எபிகூராஸ்" என்று அழைக்கப்படும் ஒரு இனம் அந்த நகரத்தில் தழைத்தோங்கியது, அவர்கள் தேவன் என்பது இல்லை என்றும், இந்த சிருஷ்டி திடீரென்று உண்டாகவில்லை என்றும், ஆத்துமா என்பது நித்தியமானது அல்ல என்றும், கடவுள்கள் மனிதனின் மீது செல்வாக்கு செலுத்துகிறார்கள். "ஸ்தோயிகூர்" என்பவர்களை பற்றி, பார்த்தால் குப்ராவைச் சேர்ந்த ஜீனோ என்ற மனிதரால் நிறுவப்பட்ட குழு தான் இந்த "ஸ்தோயிகூர்" என்று அழைக்கப்படுகிறார்கள். அவர் கிறிஸ்துவுக்கு முன் சுமார் 264 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார், இந்த ஜெனோ அதே ஏதென்ஸ் நகரத்தில் ஒரு மண்டபத்தில் 48 ஆண்டுகள் பிரசங்கித்தார். "ஸ்டோவா" என்ற வார்த்தையின் அர்த்தம் "புதிய முகப்பு". அதன் அடிப்படையில், அவரது போதனைகளைப் பின்பற்றியவர்கள் "ஸ்டோயிக்ஸ்" என்று பெயர் வந்தது. இவர்கள் கடவுள் இருக்கிறார் ஆனால் எல்லாமே விதி என்று நம்புகிறார்கள், அந்த விதியை மீறி கடவுளால் எதுவும் செய்ய முடியாது, மனிதன் வாழும் வரை அவன் ஆசைகளை அடக்கி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும், இறுதியாக உள்ளவை அனைத்தும் அழிந்துவிடும், அந்த நேரத்தில் ஆத்துமாவும் அழியும் என்று நம்புகிறார்கள்.

அத்தகைய மக்கள் மத்தியில் அப். பவுல் அவர்களின் நம்பிக்கைகளுக்கு மாறாக தனது போதனையைத் தொடர்கிறார். அங்குள்ள மக்களில், ஒரு பிரிவினர் கடவுள் இருக்கிறார் என்று நம்பினாலும், அந்த கடவுள் இருந்தபோதிலும் அவரால் விதியைக் கடக்க முடியாது, ஆத்துமாவும் அழிந்துவிடும் (உயிர்த்தெழுதல் இல்லை) என்று நம்புகிறார்கள். இவ்விரு பிரிவினருக்கும் நடுவில் நின்று கொண்டு, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பற்றிய சுவிசேஷத்தை, அவர்கள் நம்புவதற்கு முற்றிலும் எதிராக அப். பவுல் பிரசங்கிக்கிறார். பிறகு அவர்களின் பதில் என்ன என்று பாருங்கள்.

(அப்போஸ்தலர் 17:18,19) “அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம் பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள். அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?

இவ்வாறே, இந்த இரு குழுக்களைச் சேர்ந்த மக்களும் பவுல் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருந்த பகுதியிலிருந்து மார்ஸ் மேடைக்கு அழைத்துச் சென்றனர். அந்த மேடையைப் பற்றிச் சொன்னால், அது கிரேக்கர்களின் மேடை. நகரத்தின் செல்வந்தர்களும் மற்ற ஆளும் அதிகாரிகளும் சட்டசபை உறுப்பினர்களாகத் தொடர்ந்தனர். அந்த கூட்டத்தின் நோக்கம் தொடக்கத்தில் குற்றவாளிகளைத் தண்டிப்பதாக இருந்தபோதிலும், பின்னர் இது தத்துவஞானிகளால் ஆளுகை விஷயங்களைப் பற்றி விவாதிக்கவும் ஆன்மீக காரியங்களைப் பற்றி அறியவும் பயன்படுத்தப்பட்டது. அதுபோலவே மேலே நாம் பார்த்த இரண்டு கோத்திரங்களான தெய்வ பக்தி கொண்ட சிலை வழிபாடு செய்பவர்களும் மற்ற தத்துவ ஞானிகளும் மற்ற பிரிவினருக்கு எதிரான நம்பிக்கைகளைக் கொண்டிருந்ததால் அவர்களுக்குள் ஏதாவது தகராறு ஏற்பட்டால் அவர்கள் கூட்டத்தை நடத்தி சமாதானம் செய்வார்கள். குறிப்பாக அந்த ஊருக்கு யாராவது புதிய மதத்தையோ, போதனைகளையோ கொண்டு வந்தால் அதை அந்த மேடையில் விவாதித்து நிரூபிக்க வேண்டும்.

இக்கூட்டத்தில் பேசுபவர்கள் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்,
1. தாங்கள் அறிவிக்கும் புதிய மதம் அந்த போதனைகளைக் குறித்து அனைவரின் முன்பும் நிரூபிக்கப்பட வேண்டும்.
2. அப்படிச் செய்யாமல், அங்குள்ள மக்களைத் தூண்டிவிட்டு, அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளைத் தவறாகப் பேசும் வகையில் பேசினால், அந்த பட்டணத்து மக்களின் கையால் மரணம் நிகழும்.

"சாக்ரடீஸ்" என்ற பெயருடைய ஒரு தத்துவஞானி, சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதே மேடையில் அவர் அவர்களின் நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசினார் என்பதற்காக, விஷத்தை குடிக்க வைத்து அவர் கொல்லப்பட்டார், " மாரா பார் செராபியன்" என்ற ஒரு சீரியவை சேர்ந்தவர், சாக்ரடீஸ் இந்த மேடையில் கொல்லப்பட்டதை, முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் எழுதிய கடிதத்தில் தெளிவுபடுத்தினார். "சாக்ரடீஸைக் கொன்றதன் மூலம் ஏதென்ஸ் பட்டனத்தவர்கள் என்ன லாபம் அடைந்தார்கள்? ஒரு பயங்கரமான பஞ்சம் அவர்களைத் தொடர்ந்து அழித்தது" (பிரிட்டிஷ் அருங்காட்சியகம் - சிரியாக் கையெழுத்துப் பிரதிகள் 16,658).

இந்த கடிதத்தில் நாம் காணும் பஞ்சத்தைப் பற்றி இறுதியில் பேசுவோம்; தற்போது, ​​ எப்பிக்கூர் சபையில் நின்றிருந்த அப். பவுல் கவனக்குறைவாகப் பேசினாலும், அவர்களின் நம்பிக்கைகளை இழிவுபடுத்தினாலும் அல்லது அவர்களுடைய கூற்றை நிரூபிக்க முடியாமல் போனாலும், பவுல் நிச்சயமாக அவர்கள் கைகளில் இறந்துவிடுவார். அவர் எவ்வளவு புத்திசாலித்தனமாக தனது வாதத்தைத் தொடர்கிறார் என்பதைப் பாருங்கள்.

(அப்போஸ்தலர் 17:22-32) “அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன். எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.”

இதே வாதத்தையே அப். பவுல் எப்பிக்கூர் சபையில் முன்வைத்தார். இதன் விளக்கத்தைப் பார்க்கும் முன், இதே சந்தர்ப்பத்தில் பவுல் குறிப்பிடுவதை சிலர் திரிக்கிரார்கள். அதாவது, ஏதென்ஸ் பட்டணத்து மக்கள் தாங்கள் அறியப்படாத ஒரு தேவனுக்கு கட்டிய பலிபீடத்தைப் பற்றி நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன், "நீங்கள் அறியாமல் ஒரு பலிபீடத்தைக் கட்டி, நீங்கள் வழிப்படும் தேவனை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். "எனவே அவர்கள் நம்பும் கடவுள்களை அடிப்படையாக கொண்டு பிற மதத்தவர்களிடமும் நாங்கள் விசுவாசிக்கும் தேவனை அறிவிக்க முயல்கிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், நம்முடைய தேவனைப் போல் வேறொரு தேவன் இல்லை என்று வேதம் தெளிவாகச் சொல்கிறது. அப்படியானால், பிற மதத்தினர் நம்பும் கடவுள்களின் அடிப்படையில் நம்முடைய தேவனை அறிவித்தால், அது பெரும் பாவமாகும். எனவே, அப். பவுல் இங்கு குறிப்பிட்டுள்ள பலிபீடத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள முயற்சிப்போம்.

மேலும், எப்பிக்கூர் சபையில் தனக்கு முன்னால் இருந்த மக்களுடன் மிகவும் ஞானமாகவும் தெளிவாகவும் இருந்தார், தேவன் இல்லை, அவர் இந்த படைப்பை படைக்கவில்லை, மனிதனுக்கு தேவனிடமிருந்து நியாயதீர்ப்பு இல்லை, என்ற குழுவும், தேவன் இருக்கிறார். ஆனால் எல்லாம் விதிக்கு உட்பட்டது, மனிதனுடைய ஆத்துமா அழிந்துவிடும், என்ற குழுவையும், தேவன் இருப்பதாக நம்பி சிலைகளை உருவாக்கி வழிப்படும் மற்றொரு குழுவையும், மற்றும் தான் போதிக்கும் இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தார். எனவே, உயிர்த்தெழுதல் உண்டு என்றும், அதன்படி ஆத்துமா அழிந்துவிடாது என்றும், இயேசு கிறிஸ்து மூலம் உலகத்திற்கு நியாயதீர்ப்பு வரும் என்றும், அதை நியமித்தவர் தேவன் என்றும், அந்த தேவனே எல்லாவற்றையும் படைத்தார், எனவே தேவன் விக்கிரங்களில் அதாவது மனிதர்கள் கையால் செய்த சிலைகளில் வாசம் இருப்பதில்லை என்றும், அப். பவுல் தனது வாதத்தை தர்க்கரீதியாக நிரூபிக்கிறார். தேவன் எல்லா மக்களையும் ஒரே மனிதனிலிருந்து படைத்தார். அப். பவுலுக்கும் அங்குள்ள பல குழுவின் மக்களுக்கும் இடையே நடந்த விவாதம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்த வரிசையில் அந்த பட்டணத்து மக்கள் அனைவராலும் போற்றப்பட்ட புலவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு, "ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.” சொல்லபோனால் இந்த புலவர்கள் யார்? இந்த பட்டணத்துக்கும் அந்த புலவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று பார்ப்போம். இவர்கள் கிறிஸ்துவுக்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏதென்ஸ் நகரில் வாழ்ந்த தத்துவவாதிகள், அவர்களின் பெயர்கள் "அராடஸ், எபிமெனிடிஸ்", அவர்கள் தத்துவவாதிகளாக மட்டுமல்லாமல், கிரேக்கர்கள் கடவுளாக நம்பும் "ஜீயஸ்" பற்றி சில கவிதைகள் மற்றும் புத்தகங்களை எழுதிய புலவர்களாகவும் அங்கீகரிக்கப்பட்டனர். அவர்கள் இறந்த பிறகும், ஏதென்ஸ் மக்கள் அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். இவர்கள் எழுதிய கவிதைகளும், தத்துவங்களும், புத்தகங்களும் அக்கால மக்களிடையே மிகவும் முக்கியத்துவம் பெற்றன.

ஏதென்ஸ் பட்டணத்தில் அப். பவுல் குறிப்பிட்டுள்ள "அறியப்பாடாத தேவனுக்கு என்ற பலிபீடம்" "எபிமெனிடிஸ்" இன் ஆலோசனையின் பேரில் கட்டப்பட்டது. (அப்போஸ்தலர் 17:28) -ல் அப். பவுலின் வார்த்தைகள்; இந்த இரண்டு தத்துவ ஞானிகளின் கவிதை மற்றும் புத்தகத்திலிருந்து அவர் எடுத்தார். இப்போது அந்த இருவர் எழுதிய வசனம் மற்றும் புத்தகத்திலிருந்து பவுல் எடுத்த முழு வசனத்தையும் அர்த்தத்தையும் பார்ப்போம்.

(அப்போஸ்தலர் 17:28) "ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.”

"அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்;" என்று "எபிமெனிடிஸ்" எழுதிய "கிரெடிகா" கவிதையிலிருந்து அப். பவுல் மேற்கோள் காட்டுகிறார்.

முழுமையான கவிதையைப் பாருங்கள்;
அவர்கள் உனக்காக ஒரு கல்லறையை வடிவமைத்தார்கள், பரிசுத்தமும் உயர்ந்தவனும்,
கிரேட்டான்களும், எப்போதும் பொய்யர்களும், பொல்லாத மிருகங்களும், செயலற்ற வயிறுகளும்.
ஆனால் நீங்கள் சாகவில்லை: நீங்கள் என்றென்றும் வாழ்கிறீர்கள், நிலைத்திருக்கிறீர்கள்,
"உங்களில் நாங்கள் வாழ்கிறோம், நகர்கிறோம், இருக்கிறோம்"
இந்த வசனத்தில் உள்ள அதே வார்த்தைகள், அப். பவுல் முதலில் வசனம் 28 -ல் குறிப்பிட்டார்;

கி. பி. 9 ஆம் நூற்றாண்டில், "சிரியாக்" மொழியில் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தின் விளக்கத்தை எழுதிய வேத அறிஞர் "இஷோதாத் ஆஃப் மெர்வ்" இந்த முழு வசனத்தையும் குறிப்பிட்டார்;

மேலும் அதே வசனம் 28 இல், அப். பவுல் "அவருடைய சந்ததியார்" என்று குறிப்பிட்ட வார்த்தை "அரதுஸ்" என்பவரால் அவரது "மேனோ மினா" புத்தகத்தில் எழுதப்பட்டது , இந்த புத்தகம் இன்றும் நமக்கு கிடைக்கும் படி உள்ளது.

அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள முழு வாக்கியத்தையும் பாருங்கள்;
உலகத்தின் ஆரம்பம் நீயே, சட்டத்தால் எல்லாவற்றையும் ஆளுகிறாய்.
எல்லா மாம்சமும் உங்களிடம், "நாங்கள் உங்கள் சந்ததி" என்று பேசலாம்.
ஆதலால் நான் உமக்கு ஒரு பாடலைப் பாடுவேன், உமது வல்லமையைக் குறித்துப் பாடுவேன்.

இந்த வசனத்தில் பவுலின் வார்த்தைகள் "அவருடைய சந்ததியார்" என்பதாகும். அதே காலகட்டத்தைச் சேர்ந்த மற்றொரு கவிஞரான "கிளன்தஸ்" இந்த வார்த்தைகளையும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார், மேலும் நான் மேலே குறிப்பிட்டுள்ள "இஷோதாத் ஆஃப் மெர்வ்" என்ற வேத அறிஞர் தனது விளக்கத்தில் எழுதினார்.

இந்த புலவர்களின் வார்த்தைகளை அப். பவுல் ஏன் குறிப்பிட்டார், அது சுவிசேஷத்தின் அடிப்படையாக இருக்க முடியாது. அவர் எந்த அடிப்படையில் சுவிசேஷத்தை அறிவிக்கிறார் என்பதை நான் ஏற்கனவே ஆதாரங்களுடன் விளக்கினேன். ஆனால், எப்பிக்கூர் சபையில் நின்றபோது, ​​அங்கு குடியிருந்த மக்களோடு விவாதம் நடப்பதால், அவர்களுடைய புலவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டினார். நாம் மற்ற மதத்தினருடன் விவாதம் செய்யும்போது, ​​அவர்களின் தவறுகளை அவர்களின் வேதங்களிலிருந்து வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். இதைதான் அவர்களுடைய ஆயுதத்தைக் கொண்டு அவர்களையே அடிப்பது என்று அழைக்கப்படுகிறது.

இங்கே பவுல் குறிப்பிடும் புலவர்களின் வார்த்தைகளின்படி, தேவன் இல்லை என்ற எப்பிக்கூர் சித்தாந்தம் (தத்துவம்) தவறாகிறது. அதேபோல, தேவன் இருக்கிறார் என்று சிலைகளை வழிபடுபவர்களின் சித்தாந்தமும் தவறாகிறது. ஏனென்றால், “நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்” ஆகா! அப். ​​பவுல் கண்டனம் செய்யும் சிலை வழிபாட்டை எப்படி நியாயப்படுத்த முடியும்? அவர்கள் எப்படி பவுலின் வாதத்தை பொய்யாக்கி அவரைக் கொலை செய்ய முடியும்? எனவே இங்கே பவுல் அந்தக் புலவர்களின் வார்த்தைகளை ஒரு வாதமாக பயன்படுத்துகிறரே தவிர, சுவிசேஷத்திற்கு அது அடிப்படையாக இல்லை.

(அப்போஸ்தலர் 17:28,29) “ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.”

இதே முறையை அப். பவுல் மற்றொரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்தியதை நாம் பார்க்கிறோம்.

(தீத்து 1:12,13) “கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.” இந்த சாட்சியம் உண்மைதான் .

இங்கு அப். பவுல் குறிப்பிடும் கிரேத்தாதீவார் அவர்களின் சொந்த தீர்க்கதரிசி வேறு யாருமல்ல, நாம் மேலே பார்த்த தத்துவஞானி மற்றும் புலவரான "எபிமெனெடிஸ்" தான். இந்த விஷயத்திலும் அப். பவுல் அவர்கள் ஒரு காலத்தில் தீர்க்கதரிசி என்று நம்பியவரின் வார்த்தைகளில் இருந்து கிரேத்தாதீவார் அவர்களின் நடத்தையை விவாதிக்க முயற்சிக்கிறரே, தவிர கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கிக்க அல்ல. எனவே சிலர் சொல்வது போல் கிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க புறமத வேதங்களிலிருந்து ஒப்பீடுகளை மேற்கோள் காட்டுவது அப். பவுலின் வழி அல்ல. நம்முடைய தேவனை அறிவிக்க சாத்தான் அறிமுகப்படுத்திய பிறமத கோட்பாடுகள் நமக்குத் தேவையில்லை. பிசாசு அறிமுகப்படுத்திய அவதூறான முறைகளால் நம்முடைய தேவனை அறிவிக்க முயற்சிப்பது எப்படி சரியாகும் என்பதை சிந்தியுங்கள். வேறொரு நம்பிக்கை கொண்ட ஒருவருடன் வாதிடும்போது, ​​அவர் நம்பும் நம்பிக்கையின் அடிப்படையில் அவருடைய பிழைகளை அம்பலப்படுத்துவதற்கும், நாம் விசுவாசிக்கும் விசுவாசத்தை நிறுவுவதற்கும் மேற்கோள் காட்டுவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

இறுதியாக, அந்த பட்டனத்தில் அப். பவுல் குறிப்பிட்ட அறியப்படாத தேவனுக்கான பலிபீடத்தையும் அதன் மூலம் வேதகாமத்தின் தேவனை ஏன் அறிமுகப்படுத்தினார் என்பதையும் பார்ப்போம்.

(அப்போஸ்தலர் 17:22,23) “அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன். எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.”

இந்த வசனப் பகுதியை ஆராயந்து பார்த்தால், ஏதென்ஸ் மக்கள் பல கடவுள்களை மிகுந்த பக்தியுடன் வணங்கினாலும், அவர்கள் கொண்ட பக்தியை வேதத்தின் தேவனுக்குக் கூறவில்லை, ஆனால் அவர்கள் பலிபீடத்தைக் கட்டி அறியப்படாடாத தேவனுக்கு என்று வணங்கும் அவர்களுடைய பக்தியை மட்டுமே வேதத்தின் தேவனுக்கு உட்படுத்தி அவரையே உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று சொல்கிறார். அது மட்டும் அல்ல அறியப்படாடாத தேவனிடம் என்ன பக்தி வைத்தாலும் அது சரியான பக்தி என்று அப். பவுல் சொல்லவில்லை. அதனால்தான் “தேவதாபக்தி” என்கிறார். ஒருவேளை அந்த பக்தி சரியானதாக இருந்தால், அது அவர்களுக்கு ஏதேனும் நன்மையாக இருந்தால், அவர்களுக்கு அப். பவுலைப் போல கடினமாக சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டிய அவசியமில்லை.

இப்போது அந்த பலிபீடத்தை கட்டியது யார்? அது ஏன் கட்டப்பட்டது? அந்த மக்களின் பக்தியை வேதத்தின் தேவன் மீது அப். பவுல் ஏன் கூறுகிறார் என்று பார்ப்போம். அதற்கு முன், ஏதென்ஸ் மக்கள் பல பெயர்கள், வரலாறுகள் மற்றும் வடிவங்களில் வழிபடும் வேதத்தின் தேவன் மீதுள்ள பக்தியை அப். பவுல் கூறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படியானால், வெவ்வேறு பெயர்கள், வரலாறுகள் மற்றும் வடிவங்களை உருவாக்கிய தேவனுக்கு இந்த நாட்டில் உள்ள இந்துக்கள் காட்டும் பக்தியை வேதத்தின் தேவனுக்கு சிலர் எவ்வாறு கற்பிக்க முடியும்? ஒப்பீடுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன? அப். பவுலுக்கும் அவர்கள் செய்யும் காரியங்களுக்கும் என்ன சம்பந்தம்? இது அவர்களின் வேத புரட்டு என்பதாக நமக்கு புரிகிறது.

இனி சந்தர்ப்பத்திற்கு செல்வோம்; எப்பிக்கூர் என்ற ஏதென்ஸ் அவர்களின் சபையில் சாக்ரடீஸ் என்ற மனிதருக்கு விஷம் கொடுத்ததை முன்பு பார்த்தோம். அதன் பிறகு பயங்கரமான கொள்ளைநோய் மற்றும் வறட்சி ஏற்ப்பட்டு அந்த பட்டணம் பஞ்சம் தாக்கி பலர் இறந்தனர். "சாக்ரடீஸைக் கொன்றதால் ஏதென்ஸ் பட்டனத்தார்கள் என்ன லாபம் அடைந்தார்கள்? ஒரு பயங்கரமான பஞ்சம் அவர்களைத் தொடர்ந்து அழித்தது" (பிரிட்டிஷ் மியூசியம் - சிரியாக் கையெழுத்துப் பிரதிகள் 16,658)

அப்போது அந்த பட்டணத்து மக்கள் நாம் மேலே குறிப்பிட்டுள்ள புலவர்களை அணுகி, பேராபத்தில் இருந்து தப்பிக்க வழி சொல்லுமாறு வேண்டினார்கள். பின்னர் அந்த அறியப்படாத தேவனுக்கு என்று கட்டப்பட்ட பலிபீடம் அந்த புலவர்களின் ஆலோசனையின்படி கட்டப்பட்டது. இது "அக்னாஸ்டிக் தியோஸ்" என்று அழைக்கப்படுகிறது, இது இன்னும் ரோம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது, அதை நாங்கள் இணையதளத்தின் உதவியால் புகை படங்களாக பார்க்கலாம்.

இந்த படைப்பில் பேரிடர்களை ஏற்படுத்துபவர், அதிலிருந்து காப்பாற்றுபவர் உண்மையான தேவன் ஒருவரே, அவரே வேதம் போதிக்கும் “திருத்துவ தேவன்” அதனால்தான், அப். பவுல் நீங்கள் அறியாமல் எந்த தேவனை வணங்குகிறீர்களோ, அந்த தேவனை உங்களுக்கு போதிக்கிறேன் என்று அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷத்தை சொல்லி இருக்கிறார். எனவே அப்போஸ்தலனாகிய பவுல் செய்ததற்கும் இன்றைய கள்ளத்தீர்க்கதரிசிகளும், அவர்களின் இழிவான போதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன்.

Add comment


Security code
Refresh

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.