வினாடி-வினா

புரிந்துகொள்ளுதல் - 4 (Comprehension)

கீழ்க்காணும் வேதப்பகுதியை வாசிக்கவும். பின்வரும் கேள்விகள் இந்த பத்தியில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.

மத்தேயு 7

1  நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
2  ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
3  நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
4  இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?
5  மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
6  பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.
கேள்விகளுக்கு பதிலளிக்கும்பொழுது இந்த வேதப்பகுதி தேவைப்படின், உங்கள் வேதாகமத்தை அருகில் வைத்துக்கொள்ளவும் அல்லது எமது தளத்தில் உள்ள வேதாகமத்தை புதிய உலாவியில் (New browser) பயன்படுத்தவும்.

பின் தொடர்

Please subscribe here to recieve e-mail notifications of our new publications.